Friday, February 22, 2013

ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய சூடான உரை




Lankamuslim.org
One World One Ummah இல்  Comment on

ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய சூடான உரை

by NizamHM1944



பாராளுமன்றில் முஸ்லிம்களுக்காக பேச முஸ்லிம் பிரதிநிதிகள் எவருமே இல்லையென்ற நிலையில் எதையாவது, மிகவும் குறைந்த பாராளுமன்ற அனுபவத்தைக் கொண்ட வன்னி பா.உ. ஹுனைஸ் பாறூக் அவர்கள் அவ்வப்போது துணிந்து சில உண்மைகளையும் வெளியிடுகிறார்.

புலிப்பயங்கரவாதிகளால் இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டு,கடந்த இருபத்திரண்டு வருடங்களாக அல்லலுறும் வடக்கு முஸ்லிம்கள் பற்றி எவரும் சிந்திக்காத நிலையில், அவர் வெளிப்படுத்தும் சில கருத்துக்கள் NGOO கூட முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சம், கண்டுங்காணா மன்ப்போக்கை அம்பப்படுத்தியுள்ளன.

1990 முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட போது, அவர்களுக்கு ஒரு போத்தல் தண்ணீரோ, அவர் தம் பாலகருக்கு ஒரு பால் மா பைக்கற்றோகூட கொடுத்திருக்கவில்லை என்பது மிகவும் கசப்பான செய்தியே! அப்போதைய அரசுகூட அவர்கள் விடயத்தில் இதே மனப்போக்கைக் கொண்டிருந்தமை என்பது வரலாறு.

தற்போது அந்த முஸ்லிம்களை மீள்குடியேற்ற முனையும் சந்தர்ப்பத்தில் நடப்பவைகளைப் பார்த்தால் ஆகக் குறைந்த மனித நேயம்கூட அவற்றை எதிர்ப்பவர்களிடம் காணப்படவில்லை என்பதே தெரிகிறது.

நடைபெறும் மீள்குடியேற்றம்கூட, வடக்கு முஸ்லிம்களை எப்படியாவது அங்கு கொண்டு போய்ச் சேர்த்து இந்நாட்டில் முஸ்லிம்கள் அகதிகளாக இல்லை என்ற அடிப்படையில் செய்யப்படுவதாகவே தெரிகிறது.

அவர்கள் 1990 இல் வெளியேற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட போது அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில், வெற்றுக் கையினராக வெளியேறினார்கள். அவர்களது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. அவர்கள் பொருளாதாரம் முழுமையாகச் சூறையாடப்பட்டது. வர்த்தகம் பறிக்கப்பட்டது. கல்வி பாழடிக்கப்பட்டது. அவர்களது வருவாய் முற்றுமுழுதான அழிவுக்கு உள்ளாக்கப்பட்டது. அவர்கள் பஞ்சை, பராரியாக்கப்பட்டார்கள்.

அவர்களுக்கு அரசு கொடுத்த நிவாரணமோ ஒருவருக்கு மாதம் ரூபா 260/- மட்டுமே. அதனைப் பெறுவதற்கும் அதே அளவு பணத்தைச் அதிகமான வேளைகளில் பல்வேறு வகையில் செலவழித்தேயுள்ளனர். வருடமொரு முறை அவர்கள் வெளி‌யேற்றம் நினைவு கூரப்பட்டது, அரசியல்வாதிகளின் இருப்பைக் காத்துக்கொள்ள. ஊடகங்கள் எந்த அளவுக்கு இருட்டடிப்புச் செய்ய வேண்டுமோ அதைவிடக் கூடுதலாகவே அக்கைங்கரியத்தைச் செய்தனர், செய்து வருகின்னறர்.

ஆதலால், வெறுமனே மீள் குடியேற்றத்தோடு அம்மக்களை அம்போ என விட்டுவிடாது, அவர்களது அனைத்து இழப்பீடுகளும் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுந்த நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உ்ணமை நிலையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். அவர்கள் இந்நாட்டுப் பிரஜைகள், மனிதர்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments: