Sunday, February 24, 2013

ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார்





Lankamuslim.org
One World One Ummah
ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார் 

Comment by NizamHM1944

ஹலால் முத்திரை பொறிப்பது ஆபத்தானது. முத்திரையைப் பார்த்து உண்பது பிழையான நடைமுறை. அது ஊழல்களுக்கு இடமளிக்கும். அதனை அரசு செய்தாலும் அதே நிலைதான். ஹலால் என்ற ”முத்திரை” எவரும் உண்ணலாம் என்பதை வெளிப்படுத்துமே தவிர, முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்பதை வெளிப்படுத்தாது.


பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் வெளிவருவது, நீதிமன்றத்தால்கூட தடைக்குள்ளாக்கப்படவோ, தண்டிக்கப்படவோ, வா‌டிக்கையாளரை ஏமாற்றியதாகவோ கருத முடியாது. ஆங்கிலச் சொல் ஒன்றைப் பாவிப்பதற்குக் கொடுக்கப்படும் அதே உரிமைதான் அரபுச் சொல்லைப் பாவிப்பதற்கும் கொடுக்கப்படும். ஆதலால் ஹலால் முத்திரை பொறிப்பது நிறுத்தப்பட வேண்டியதே!

எனவே, அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் , உணவுப் பொதியின் மேலுறையில், அதனுள் அடக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொருட்களையும் பட்டியலிடுவதற்கு மேலதிகமாக, சுவையூட்டிகள், வர்ணங்கள், பழுதுபடாது பாதுகாக்கும் பண்டங்கள் அல்லது இரசாயனக் கலவைகள் (Preservatives) போன்றவற்றையும் துல்லியமாகப் பெயர் குறிப்பிட்டு வெளியிட வேண்டும் எனச் சட்டமியற்றினால், அது பின்பற்றப்பட்டால், அதுவே பானையாளர் அனைவரும் தமக்கு ஆகாததைத் தவிர்த்துக் கொள்ளப் பேருதவி செய்யும். எவருக்கும் எவ்வகையான பிரச்சினைகளும் எழ இடமுமில்லை. அனைவருக்கும் பயன்படும் முறை.




மேற்கண்ட எனது பதிவுக்கு மேலதிகமாக, விற்பனைக்கு விடப்படும் உணவுப் பொதிகளின் மேலுறைகளில், தற்போது Fat Free, Alcohol Free, Sugar Free எனப் போடுவது போல் Pork Free அல்லது அதையொத்த வேறு ஏதாவது சொற்றொடர்களைப் பிரசுரிக்கலாம்.

அதனை அரசும் உறுதிப்படுத்தலாம். இது யாருக்கும் மேலதிகச் செலவினங்களையோ, எதிர்க்கருத்துக்களையோ, மதசார்பானது என்ற கருத்தையோ வெளிப்படுததாது. பாவனையாளர் பாதுகாப்பு என்ற சட்டத்துள் சங்கமமாகிவிடும்.

No comments: