Friday, February 22, 2013

ஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன




Lankamuslim.org
One World One Ummah ,

இல் வெளியான

ஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன



Comment of Nizam HM.1944

உண்மையில் ஹலால் சான்றிதழ் வழங்கலும், ஹலால் முத்திரை பொறிக்கும் வழமையும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கியதல்ல, அது வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று ஆரம்பிக்கப்பட்டது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாயவுடனான சந்திப்பில், அஇஜஉ தலைவர் றிஸ்வி முபதி அவர்கள் கூறியதாக, BBC யுடனான செவ்வியில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் அவர்கள் தெரிவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ். இது நாள் வரை, “ஹலால் முத்திரை பொறித்தல்“ இஸ்லாமியருக்காக, விஞ்ஞான வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய ‌உலகத்தில், முஸ்லிம்கள் ஹலால் உணவை‌க் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதால், அந்நிலையை மாற்றியமைப் பதற்கான நடவடிக்கையாகவே, அஇஜஉ வின் ஹலால் பிரிவால், இங்கு உற்பத்தியாகும் சகல உணவுகளையும், தம் பரிசீலனைக்கு உள்ளாக்கி, அதன் புனிதத் தன்மை தங்களால் ஏற்கப்பட்டு, அது தம்மால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே, உண்ணத் தகுந்தது எனக் கூறி சான்றிதழ் வழங்கி வந்தமை, மேற்கண்ட, அஇஜஉ தலைவரின் கூற்றுடன் முற்றுப் புள்ளி வைக்கப்படுகின்றது.

இது, இஸ்லாமிய நடவடிக்கை அல்ல என்பதும், அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல, அது வியாபாரிகளின் வேண்டு கோளை நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்பாடே என்பதும் மிகவும் தெளிவு.  அதனால், இஸ்லாம் நவீன காலத்துக்கு செல்லுபடியாகாத மார்க்கம், அதற்கு வேறு யாருடையவோ பங்களிப்பு இன்றி அதனைச் செயற்படுத்துவது கஷ்டம், அதற்காகவே அஇஜஉ அக்கைங்கரியத்தைச் செய்து வந்தது என்ற மாயை ஒழிந்தது.

இதன் மூலம், இஸ்லாம் முழுமையானது, தெளிவானது, இலகுவானது, எக்காலத்துக்கும் பொருத்தமானது, யாராலும் பங்களிப்பு்ச் செய்யப்பட முடியாதது, அது காலதேய வர்த்தமானங் களுக்கு, மாற்றங்களுக்கு ஏற்ப விரிவடைந்து முழு உலகையும் வியாபித்து நிற்கும் மார்க்கம் என்ற குர்ஆனிய கருத்தை அஇஜஉ தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் ஊர்ஜிதப்படுத்தி யுள்ளார்கள்.

ஆம், உலகின் எந்த மாற்றமும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்கிவிட முடியாது என்பதும், அவனுடைய ஹறாமைத் தவிர்த்துக் கொள்ளும் அறிவும், நடை முறையுமே எக்காலத்துக்கும், எவருக்கும், எவ்வித இடையூறுமின்றி, படித்தவன் முதல் பாமரன் வரை இலகுவாக, குறுகிய நேரத்தில், சிக்கனமாக அறிந்து பின்பற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. 1400 வருடங்களுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்ட ஹறாமைத் தவிர்த்தல் என்ற குர்ஆனிய நடைமுறை முஸ்லிம்களால், உலக அங்கீகாரத்துடன் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும், பல் வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், முக்கியமாக பன்றி இறைச்சி போன்ற ஹறாமான உணவுகள் ”ஹலால் முத்திரை” யுடன் விற்பனை செய்யப்பட்டு, அதனை முஸ்லிம்கள் வாங்கி உண்ணும் அபாயமும் தவிர்க்கப்படும். மக்களுக்குத் தேவையான அறிவு ஹறாம் பற்றியதே. அதனை அறிந்தால் தானாக ஹலால் எதுவென்பது தெரிந்து விடும்.

இஸ்லாமிய விரோத சக்திகளால், காலத்துக்குக் காலம், இஸ்லாத்தை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சில திட்டமிட்ட சூழ்ச்சிகள், இஸ்லாமிய போர்வையில் வெளியிடப்பட்டன. இவை அடுத்துக் கெடுக்கும் தந்திரம். அவற்றில் ஒன்றே ஹலால் முத்திரை பொறித்தல் என்ற செயற்பாடு. இது எங்கு, எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டியது. நிறுத்தப்பட வேண்டியது.  அல்லது புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டியது.

இந்த நடைமுறை, நாளாவட்டத்தில் முஸ்லிம்கள் ஹறாம் எதுவென்று அறியாது, ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை எவ்வித சந்தேகமுமின்றி வாங்கி அருந்தும் பயங்கர நிலை ஏற்பட வேண்டும் என்பதனை எதிர்பார்த்துச் செய்யப்பட்டதே!

அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக்கொல்லாம் சூழ்ச்சிக்காரன் என்பதால், அவர்களது விரலை எடுத்து அவர்களின் கண்ணில் குத்தி, இரும்பால் வரும் ஆபத்தை இரும்பைக் கொண்டே தடுத்துக் கொள்ளும் பாணியில், அவர்களின் ஹலால் முத்திரையைக் கொண்டே, அவற்றில் ஹறாமான பன்றி இறைச்சியை பொதியிட்டு, அதனை மக்கள் அறிய வைத்து, அதிலுள்ள தீமையை அம்பலப்படுத்திவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: