Paristamil Tamil News - இறுதிக்கட்ட போரில் கொடூரமான இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிறிலங்கா படையினர்
வன்னியில் காயத்துக்கு மருந்திடத் தாமதித்ததால் உயிரிழந்த ஒரு மதகுருவின் நிலை, தனது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாயாரின் மரணத்தின் இறுதி நிமிடங்கள் என்பவற்றையும் இந்த நிகழ்வில் பிரான்செஸ் ஹாரிசன் விவரித்திருந்தார்.
ா
ஆசிரியரின் மேற்கண்ட செய்தி ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நடந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. இவ்வாறாகப் பல நூறு மக்கள் இறவாமல் இருந்ததே ஆச்சரியம் . அதற்காக இறைவனுக்கு நன்றி.
உண்மையைக்கண்டறியும் விடயத்தில் போரின்போது காணமைடைந்த சிலரின் செவ்விகள் அங்கு நடைபெற்றதாகக் குறிப்படப்படும் விடயங்களை நிரூபிக்கப் போதுமானவையாக இருக்க முடியாது. இதுவரை இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. இது இவ்வாசிரியரின் புதிய குற்றச்சாட்டு.
// போர் இறப்பு குறித்து, ஐ.நா. வெளியிட்ட முதல் தகவலில், 40 ஆயிரம் பேர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்தவாரம் வெளியான ஐ.நாவின் இன்னொரு அறிக்கையில், 70 ஆயிரம் பேர் பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் வன்னியில் காணாமல் போயுள்ளனர். இதுவரை இவர்களுக்கு என்னவா யிற்று என்றும் தெரியவில்லை. //
மேற்கண்ட பந்தி, பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ள குளறுபடிககளைக் காட்டுகின்றது. உலக வங்கிக் கணிப்பீடு நான்கு வருடங்களில் ஒரு இலட்சம்இ பேர் வன்னியில் காணாமற் போயுள்ளனர் எனக் கூறுகின்றது. இதன்படி, உக்கிரமமாகப் போர் நடந்த 130 நாட்களில் இலட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என பகிரங்கப்படுத்தப்படும் விவரம் மறுக்கப்படுகின்றது. அல்லது மிகைப்படுத்தப்பட்ட் தகவலாகத் தெரிகின்றது.
ஆக உண்மை நிலையைக் கண்டறிய குடிசன மதிப்பு ஒன்றே வழி செய்யும். அந்த வகையில் இந்நாட்டில் சென்ற வருடம் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பை ஆராய்வோர் ஓரளவாவது உண்மை நிலையை அறிவர். மற்றும், ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் இக்கால கட்டத்தில் இறந்து, காணமற் போயுள்ளனர் என்ற தகவலைப் பெறலாம். இவர்களில் வெளிநாடுகளுக்குச் சென்றோர், புலிகள் இயக்கம் சார்ந்தோர் உள்ளடங்குவர். இவர்களை இறந்த அப்பாவி மக்கள் வரிசையில் சேர்க்க முடியாது.
மேலும் புலிகளாலும், இறுதிப் போரின் போதும், அதற்கு முன்னரும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற குற்றமும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment