Paristamil Tamil News - மீண்டுமொரு பிரிவினைவாதத்தை உருவாக்கும் முயிற்சியில் மஹிந்தர்
போராட்டத்தில் ஈடுபடுவோர் தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொல்லவும் முடியாது. போராட்டம் நமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் களமாக மட்டுமே இருக்க வேண்டும். வன்முறைகளின் களமாக ஆகிவிடக் கூடாது. அண்டை நாடான இந்திய உபகண்டத்தில் வெள்ளையருக்கு எதிரான போராட்டம் காந்திஜி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போது, ஒரு கொலையைக்கூட அவர் செய்யத் தூண்டவில்லை. அங்கிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது கூட ஜின்னா ஒரு கொலையையும் தூண்டிட வில்லை. வெள்ளையர் ஆயிரக் கணக்கான போராட்ட தியாகிகளைக் கொன்று குவித்தனர், சிறையில் அடைத்தனர். ஆயினும், போராட்ட வீரர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டனரே தவிர, மாறறு நடவடிக்கையாக வன்முறையில் இறங்கவில்லை.
அதனால்தான் பிரித்தாணிய பேரரசின் யுத்த அமைச்சர் வினஸன் சேர்ச்சில் இப்படிக் கூறினார். காந்தியுடன் தன்னால் போரிட்டு வெல் முடியாமல் இரு்ப்பதற்கான காரணம், அவர் நிராயுதபாணியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிப்பதே எனவும், இதற்கான மாற்று வழிகள் தம்மிடம் இருக்கவில்லை என்றும் பகிரங்கமாக் கூறினார். அப்படியில்லாமல் அவர்கள் ஆயுதமேந்திப் போராடி இருந்தால் தான் சில மணிகளிலேயே அவர்களைத் துவம்சம் செய்திருக்க முடியும் என்றும் கூறியதில் இருந்து, உரிமைப் போராட்டம், விடுதலைப் போராடடம் என்பது என்வென்று படித்துக் கொள்ள வேண்டும்.
அரச அங்கீகாரமின்றி, எவர் கையில் ஆயுதத்தை எடுத்தாலும் அவர் ஒரு பயங்கரவாதியே! அவர் எதற்காகப் போராடினும் சரியே!
ஆயுதங்களை அரச படைகள் வைத்திருப்பது கூட மக்களையும், நாட்டையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றவே தவிர, மக்களையே கொல்வதற்காகவல்ல. பயங்கரவாதமே, நாட்டு மக்களையே எதிரிகளாகப் பார்க்க வைக்கும் சந்தர்ப்பத்தை அரசுக்குக் கொடுக்கின்றது
No comments:
Post a Comment