Wednesday, October 30, 2013

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kh9hgun

Beru News

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!


// மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து விடுவித்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொடுத்துள்ளது.//

மக்களைப் பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்ததை மக்கள் நன்றியுடன் எப்போதும் நினைவு கூருகின்றார்கள். அது பலம் வாய்ந்த ஜேஆர், பிரேமதாஸ, சந்திரிகா முதலியோராலேயே செய்ய முடியாமற் போன் ஒன்று ! ஏன் அண்டை நாடான இந்தியாவின் அமைதி காக்கும் படை கூட அந்தப் புலிகளிடம் மண்ணைக் கவ்விச் சென்றது.

ஒன்றைக் கூறாமல் இருக்க முடியவில்லை.  உண்மையில் பயங்கரவாதப் பிடியில் இருந்த மக்கள் வடக்கு மக்கள்தான். ஆனால் அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவதை மட்டும் ஏற்க முடியாதுள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர்.  உண்மையும் அதுவே! போர் முடிந்தது என்பதனால், புலிகள் அழி்நததனால் மக்கள் மத்தியில் நிம்மதி வந்துவிட்டது என நினைப்பது பிழையான கணிப்பீடே! சமன்பாடே !!

எதற்காக மக்கள் இத்தனை தொல்லைகளுக்கும் முகங் கொடுக்க வேண்டி வந்ததோ அது களையப்படல் வேண்டும். அதன் பின்னரே மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்படும் சூழல் உருவாகும்.

வடக்கு முஸ்லிம்களின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வெறும் அறிக்கைகள் மட்டும் எதனையும் அவர்களுக்கு நல்வாழ்வைக் கொடுத்து விடாது. அவர்களது இழப்புகள் அனைத்தும் சீர் செய்யப்படல் மிக மிக முக்கியம்.  அதுவே மனிதாபிமானதும், நீதியானதும், நியாயமானதும், வேண்டப்படுவதும் கூட !

புலிகளால் வெறுங்கையோடு விரட்டி அடிக்கப்பட்டவர்களை, அரசும் வெறுங்கையோடு மீள் குடியறே்றம் செய்து விடலாம் என நினைத்தால், அது புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் எவ்வித வித்தியாசத்தையும் காட்டப் போவதில்லை. 

Tuesday, October 29, 2013

‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’

Commented by nizamhm1944 on : http://tinyurl.com/l5lmtfj

Lankamuslim.org


‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’



புனித பூமி என்ற வார்த்தை விவஸ்தை அற்றுப் போய்விட்டது.  எவரும் ஒரு இடத்தைப் புனித பூமி என்று கூறுவதன் மூலம் அது புனித பூமி ஆகிவிடப் போவதி்ல்லை!

கோயிலை இடித்து ஒரு புனித பூமியா! கோமாளித்தனமாக இருக்கிறது! புனித ‌பூமியில் கோவில்  இருக்கக் கூடாதா! இந்துக்கோவிலுக்குப் போய் கும்பிடாத பௌத்தர்கள் எத்தனை பேர் இந்நாட்டில் உள்ளனர் என விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இது அராஜகம் தவிர்த்து இல்லை.  

புனித பூமியில்தான் புத்த பெருமான் இருக்க வேண்டும் என்றால்,  புனிதமற்ற தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் புத்த பெருமான் சிலைகள் எப்படி வைக்கப்படுகின்றன !

Saturday, October 26, 2013

கீழை இளையவன் பக்கம்: ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரை...

கீழை இளையவன் பக்கம்: ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரை...: மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S யில் வந்து நிற்கும் இந்த காலம் வரை தொடர்ந்து மனித நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாய்  ...

Thursday, October 24, 2013

நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/n97m5yy

Lankamuslim.org

நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா

1990இல் வடக்கு முஸ்லிம்கள் காரணமின்றி புலிகளால் வெளியேற்றப்பட்டமை, புலிகள் செய்த பாரி பிழை (BLUNDER) என புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அது தமது பிழைதான் என்பதை புலிகளின் தலைவர் பிரபாகரனும், தமது இயக்கம் முழுப்பலத்துடன் இருந்த காலத்தில் எவருடைய அழுத்தமும் இன்றி, அப்பிழையின் தாக்கத்தையும், தமது பின்னடைவின் காரணத்தையும், அதாவது, முஸ்லிம்களற்று வடக்கு கிழக்குக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது என்ற யதார்த்தத்தை நன்குணர்ந்து, முதலும் கடைசியுமாக அவர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஊடக மாநாட்டில் ஏற்றுக் கொண்டமை சர்வதேச ரீதியாக பதிவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவே! தமது அடைவுக்கு தேவையாயிருந்த சர்வதேசத்தின் பங்களிப்பு கிடைக்கத் தடையாகவிருந்த மறைமுக உண்மை. 

மேற்கண்ட உண்மையை எவரது மறுப்பும் இல்லாதாக்ககிவிடப் போவதில்லை.  இதனை மறுப்பவர்கள், புலிகளையும் மறுப்பவர்களே ! மட்டுமல்ல தமிழர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களே! முஸ்லிம்களின் பங்களிப்பற்ற ஒரு தீர்வு சிறுபான்மையினருக்கு என்றும் கிடைக்கப் போவதில்லை. அது குதிரைக் கொம்பே ! இந்நிலை இரு இனங்களுக்கும் பாதிப்பையே தரும்.

புலிகளின் போராட்டத்துக்கு முழுமையான சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் முட்டுக்கட்டையாக இருந்தது, தமிழ் பேசும் சிறுபான்மையினராக வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்தவர்களை ஆயுத முனையில் வெளியேற்றி இன அழிப்பைச் செய்தமையே.  மட்டுமல்ல சிறுபான்மையினருக்கான புலிகளின் உரிமைப் போராட்டத்த‌ை  மலினப்படுத்தியதுடன், நலிவடையவும் செய்திருந்தது அச்செய்கை. அதுவே அவர்களாலேயே அதனை ஓர் Great Blunder of the Tigers என்ற விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. 

Wednesday, October 23, 2013

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது

Commented by nizamhm1944 on :   http://tinyurl.com/qazgtu3

Lankamuslim.org

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது


முஸ்லிம்களுக்கு எதிரா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மதவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதை முதலில் செய்வதுவதுதான், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்  என்ற நல்லெண்ணம் கொண்டோரின் முதற்கட்ட செயற்பாடாக இருக்கும். 

அதன் பின்னரே அடுத்த கட்டமாக ஏன் இவ்வாறான அராஜகங்கள் நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிந்து, அப்படி பிரச்சினைகள் ஏதுமிருந்தால் அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். 

அதைவிடுத்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாகி சட்டத்தைத் தனது கையில் எடுத்து, யாப்பைக் காலால் மிதித்துக் காட்டுமிராண்டித் தனமாக அடுத்வர் மீது தாக்குதலை நடத்துவதும், அதையே நியாயப்படுத்துவதாக, அப்படி நடப்பதற்குக் காரணங்கள் இருக்கும் அதனால்தான் இவ்வாறான மிலேச்சத்தனமான காரியங்கள் நடக்கின்றன, எல்லா நாடுகளிலும் இவ்வாறு நடக்கின்றன என்றெல்லாம் கூறி நியாயப்படுத்துவதும், சட்டமும் ஒழுங்கும் நிலவுவதாகக் கூறும் ஒரு நாட்டில் நடைபெறுவதா?  

பொறுப்புள்ள தலைவர்களாக இருந்தால் அவர்களிடமிருந்து இவ்வாறான ஊக்குவிக்கும் கருத்துக்கள் வெளிவராது ! இவை அழிவின் தொடக்கமாகவே மக்கள் கருதுகின்றனர்.

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு

Commented by nizamhm1944 on http://tinyurl.com/llqbj2w

Lankamuslim.org

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு


ரூபா 154 ஆயிரத்துக்கும் அதிகமான கோடிகள் அடுத்த ஆண்டு பாதுகாப்புக்காகச் செலவிட ஒதுக்கப்பட்டுள்ளது.  இது ஏறத்தாழ நாளொன்றிற்கு 422 கோடிக்கு மேல். 

உண்மையில், எந்த நாடும் இந்த நாட்டைப் பிடித்துவிடப் போகின்றது என்ற நிலையிலோ, வல்லரசாக வேண்டும் எ்னற நிலையிலோ இந்நாடு இருக்கவில்லை.  இந்நாட்டின் சிறுபான்மையினர் பிரச்சினை மனிதாபிமானமாகத் தீர்த்து வைக்கத் தவறியதாலும், அவர்களது உரிமைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி அழித்து விடலாமென நினைத்ததாலும் உருவானதே  தமிழர்களின் ஆயுதப் போராட்டம். அதனைத் தொடர்ந்த பயங்கரவாதமும், உயிரழப்புக்களும். 

அதன் காரணமாகவே பாதுகாப்புக்காக் இவ்வளவு பெருஞ்சுமை மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. இதில் கோடிகளை கொள்ளை கொள்ளும் கேடிகளும் இலாபமடைகின்றனர். ஆனால் மக்கள் தினந்தினம் வெந்து வேகுகின்றனர், வாழ்ககையை ஓட்டிக் கொள்ள முடியாமல்.   

தமிழர்களின் பிரச்சினை தாராள மனங் கொண்டு தீர்க்கப்பட்டு விட்டால் இப்பணம் அப்படியே மிச்சமாகிவிடும். இதனால் மீதப்படுத்தப்படும் 150, 000 கோடி ரூபாய்களை, இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதாயின், ஒரு மாவட்டத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாய்கள் சென்றடையும். ஒரு வருடத்திலேயே இந்நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிடலாம். 

வேண்டியதெல்லாம் நல்லெண்ணமும், தமிழரும் இந்நாட்டவர்களே, அவர்களுக்கும் சரிசமாமாக வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே! 

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS

Commented by nizamhm1944 on  http://tinyurl.com/m2j9ta9

Lankamuslim.org

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS


// அல்லாஹ்வுக்கு  அர்ப்பனிக்கப்பட்ட உணவு வகைகளை மற்ற மதத்தினருக்கு  சாப்பிட முடியாது. //

இந்த தேரர் ஒரு ”ஞான சூன்யம்” . தனக்குத் தெரியாத விடயங்களை, பிழையாக விளங்கி வைத்திருப்பவற்றை, தனது காவியுடைக்குள் இருந்து மக்கள்மயப்படுத்துகின்றார்.  அதனால், அப்பாவிச் சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து, நாட்டின் அமைதியை, சமாதானத்தை அழிக்கும் வேலைகளைச்  செய்கிறார்.

பொய் சொல்லக் கூடாது என்ற பௌத் தர்மக் கோட்பர்டை மீறுகிறார். முன்னொரு போது, முஸ்லிம் கடைகளில் முஸ்லிம் அல்லாதவர்களு்க்கு விற்கப்படும் உணவுப் பண்டங்களில், மூன்று முறை எசசிலைத் துப்பிவிட்டுக் கொடுக்க  வேண்டும் என்று புனித குர்ஆனில் கூறியிருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். அதனை நிரூபிக்குமாறு விடுக்கப்பட்ட சவாலை அவரால் நிறைவேற்ற முடியாத பொய்யனாக ஆகிவிட்டார். இவரை இன்னும் மக்கள் பொறுமையாக அங்கீகரிப்பது பௌத்த தர்மத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பது போன்று, ஒவ்வொரு மதமாக தாக்கிவிட்டு, தற்போது அவர் தாம் பின்பற்றும் புத்த தர்மத்தையே தாக்க முனைந்து விட்டார். 

Tuesday, October 15, 2013

இதய சுத்தியுடன் செயற்பட்டால் இல்லையென்று எதுவுமில்லை-ஜனாதிபதி

Commented by nizamhm1944 on      http://tinyurl.com/q6boeqp

Beru News

இதய சுத்தியுடன் செயற்பட்டால் இல்லையென்று எதுவுமில்லை-ஜனாதிபதி


மாகாண சபைகள் மத்திய அரசுடன் ஒத்துழைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள், அம்மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அது அரசின் தார்மீகக் கடமை.

அரசியல் காரணங்கள் எதுவும், எவ்விதத்திலும் நாட்டின் எப்பகுதி மக்களையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது. மக்களது வரிப்பணத்திலேயே அரசு இயங்குகின்றது. அச்சீரிய பணியை நிறைவேற்றுவதற்காக அரசிடம் மக்கள் பொறுப்பைக் கையளித்துள்ளனர். அப்பொறுப்பு நம்பிக்கையின் மத்தியில் அளிக்கப்பட்டுள்ள அமானிதம்.

Thursday, October 10, 2013

Shocking news of Zakir Naik questioned in Sri Lanka & he fails to prove ...



It is Dr. Zakir Naik\s duty to reveal the 25 verses in the Holy Quran which rejects Wasela, which he told that the Quran contains the verses.

If not he becomes a liar and get Allah's curse and punishment.  Or he should withdraw what he said on this. Also ask pardon from Almighty Allah.

Tuesday, October 8, 2013

குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!

Commented by nizamhm1944 on  http://tinyurl.com/ns4kg2r

Lankamuslim.org

குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!


தமிழில் ஒரு அழகான பழமொழியுண்டு, அது இந்த முஸ்லிம் அரசியல் விபச்சாரிகளுக்கு நன்றாகவே பொருந்தும்  ”நக்குகின்ற நாய் செக்கிலும் நக்கும், சிவலிங்கத்திலும் நக்கும்’ ஆக இவர்கள் தொழி்ல் நக்கிப் பிழைப்பது என்பதை தாங்களே வெளிப்படுத்தி வருகின்றார்கள். தேங்காய் நெய் வாசம் வந்தால் போதும் அங்கெல்லாம் தமது நக்கும் தொழிலைச் செய்வோம் என வரிந்து கட்டி வாழ்க்கையை நடத்துகின்றார்கள். 

இன்னொரு அழகான சம்பவம் கூறுவது இவர்களது செயலை நன்கு படம் பிடித்துக் காட்டுவது. தமிழர்களில் கூலிக்கு மாரடிக்கும் பழக்கம் உள்ளது. அதாவது மரண வீட்டில் கூலி பெற்றுக் கொண்டு மார்பில் அடித்துக் கதறுவது.  ஒரு செத்த வீட்டிற்கு கூலிக்கு மாரடிக்கும் இருவர் சென்றுள்ளனர்.  அந்த வீட்டில் பந்தலில் நன்கு முற்றிய பாகற்காய்கள் கிடந்ததை வந்தவளில் ஒருத்தி அவதானித்து, ’பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற் காய்’ என்று ஒப்பாரியின் நடுவே கூற, மற்றவளும் நான் என்ன காணவில்லை என நினைக்கிறாயா என்ற தோரணையில், ’போகைக்க பாத்துக்கலாம், போகைக்க பாத்துக்கலாம்” என்ற கூற, கணவனைப் பறிகொடுத்த அந்த வீட்டுக்காரி, நான் ஒன்றும் சும்மா இருக்கவில்லை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதைக் காட்ட, ”அது விதைக்கலலோ விட்டிருக்கு, விதைக்கல்லோ விடடிருக்கு” எ்னறாளாம்.  இதுதான் முஸ்லிம்களின் பிரச்சினையில் நடக்கும் மாரடிப்புகளில் நடப்பது.

இது முஸ்லிம் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவே தாம் அரசியல் பிரவேசம் செய்ததாகவும், பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருப்பதாகவும், இனியும் பெற்றுக் கொடுப்போம் என வீராவேசம் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை.

உண்மையில் அக்கரைப்பற்றில் அந்த விழாவில் நடந்த அந்த அசிங்கமான பாராட்டு நிகழ்வைப் பார்த்தபோது எத்தனை முஸ்லிம்கள் இரத்தம் கொதிப்படைந்திருப்பார்களோ!  கொதிப்படையாதிருந்தால் அது ஆச்சரியமே ! 

ஆங்கிலத்தில், இன்னொரு சிறந்த கருத்து கூறப்படுகின்றது. " Benefitting out of others distress" மற்றவனுடைய துன்ப துயரத்தை சந்தைப்படுத்தி, அதிலும் இலாபம் சம்பாதிப்பது.  

இதுதான் தற்போதை முஸ்லிம் அரசியலில் நடைபெறும் மிகச் சிறந்த வருவாய் தரும் தொழிலாகக் கருதப்படுகின்றது.  உண்மையில் உலகில் நடைபெறும் குற்றச் செயல்களில் மிக மோசமான குற்றச் செயல் இதுவே! இதற்கான கேள்வி அதிகமாக உள்ளதால், இதனைச் செய்வதற்கு முன்வர சிலரே இருப்பதால், அவர்களுக்கு கிராக்கி அதிகம், அதனால் வருவாயின் அளவும் எதிர்பார்ப்பதைவிடக் கூடவே கிடைக்கின்றது.   

Monday, October 7, 2013

முற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

Commented by nizamhm1944 on:    http://tinyurl.com/paxxlma

Voice of Mannar

முற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

முதலமைச்சரின் அறிக்கை எழுந்தமானமாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டது போன்று தோற்றினாலும், என்னைப் பொறுத்து அது உண்மையை மட்டுமே சுமந்து கொண்டுள்ளது என்றுதான் கருதுகிறேன்.  

காரணம், புலிகள் வடக்கு முஸ்லிம்களை விரட்டி அடித்திருந்தாலும், தமிழர்கள் அதற்கு ஆதரவானவர்கள் அல்லர் என்பது அனைத்து முஸ்லிம்களும் அறிந்த உண்மை. விசேடமாக வடக்கைப் பொறுத்து முஸ்லிம்களும் தமிழர்களும் மிகவும் சிறப்பான உறவையே பேணி வந்தவர்கள் என்பது, நான் அந்த நாட்டவன் என்ற முறையிலும், தமிழர்களோடும், சமூக சேவைகளோடும் தொடர்புபட்டிருநத காலங்களில் என்னால் அறிய முடிந்தவை.  ‌

மேலும், தமிழர் முஸ்லிம்களுக்கு இடையே எப்போதும் மோதல்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கவில்லை.  தேர்தல் காலங்களில் கூட தமிழரை ஆதரித்த முஸ்லிம்களும், முஸ்லிம்களை ஆதரித்த தமிழரும் இருந்திருக் கிறார்கள். அக்காலங்களில் இட்ம் பெற்ற சிறு சச்சரவுகள் கூட தமிழருக் குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் இடம் பெற்றனவே தவிர, தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம் பெற்றவை எனக் குறிப்பிடுமளவுக்கு நடந்ததில்லை.  

ஆதலால், விக்னேஸ்வரன் அவர்கள், ”என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக!” எனக் கூறியிருப்பது, தெளிவாக பிரிந்து நிற்கும் தமிழரையும் சிங்களவரையும் குறிப்பிடுவதோடு, இணைந்து வாழும் தமிழரும், தமிழைத் தம் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும்   ( அவர்கள் மொழிவாரியாக தமிழர்கள் என்ற வரைவுக்குள் அடக்கப்படக் கூடியவர்கள்,) பிரச்சினை இன்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதையும், எங்களுக்குள் பிரிவினை இல்லை என்பதையும் பூடகமாகவே வெளிப்படுத்தியதாக இருக்கலாம்.   

அப்படியில்லாது, கட்டுரையில் கூறியிருப்பதுதான் அவர்கள் நிலை என்றால், நிச்சயமாக அவர்களது பயணம் வெற்றி அளிக்கப் போவதில்லை என்பதே உண்மை ! முஸ்லிம்களைப் புறந்தள்ளிய எவ்வித போராட்டங்களும், சிறுபான்மைப் போராட்டம் என்ற வரைவுள் அடங்கா.  முஸ்லிம்கள் என்றொரு இனம் இல்லை என நினைப்பார்களாயின்,  மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி , ”சிறுபான்மை“ எ்னறு எவரும் இல்லை எனக் கூறி வருவதை ஏற்பதாகவே இருக்கும். 

மேலும், இலங்கையில், தமிழரும் சிங்களவரும்தான் இரு இனங்கள் என்ற ரீதியில், அவர் சிந்திருக்க முடியாது. காரணம், முஸ்லிம்கள் என்றொரு இனம் இருக்கின்றது என்பதை அறிந்திருந்தனால்தான், அவர்கள் முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூடச் செய்தும்,  முஸ்லிம் ஒருவருக்கு போனஸ் ஆசனம் ஒன்றையும் வழங்கி இருக்கின்றார்கள்.  

அடிக்கடி அரசியல்வாதிகள் தெற்கில் மூவினங்களின் ஒற்றுமை பற்றிக் கூறுவது வெறும் பித்தலாட்டமே தவிர இல்லை. உண்மையில் மூவினங்களுக்கும் இடையில் ஒற்றுமை நிலவியே வருகின்றது. அதனை பெரும்பான்மை கிராமங்களில்கூட சிங்ளவரும், தமிழரும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்ந்தேு வருகின்றனர்.  

அரசியல்வாதிகளும், மதவாதக் குழுக்களும்தான் உண்மையில் மக்களைக் கூறு போட்டு தம் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். 

புலிகளின் வீழ்ச்சிக்குரிய காரணங்களில் பிரதானமான ஒன்று, சிறுபான்மை இனத்தவருக்காகப் போராடுவதாகக் கூறி, இன்னொரு சிறுபான்மை இனத்தை வெளியேற்றிய முட்டாள்தனமே என்பதை அவர்களும் உணர்நதிருந்தார்கள் என்பதை அவர்களின் பின்னாட்களின் செயற்பாடுகள் உணர்த்தும்.  அதனால், அந்த இமாலயப் பிழையை நன்கு தெரிந்த தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள், மீண்டும் செய்து தமக்கே வினையை விதைக்க மு‌ற்பட மாட்டார்கள் என்று திடமாகக் கூறலாம். 

அதனை, ”தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது.” என்ற வரிகளின் மூலம் அறியலாம். 

Friday, October 4, 2013

Daily Interesting Facts !

Did You Know? “Amygdala” is the part of the human brain that controls fear. If you remove it, you would lose any sense of fear.

Posted: 03 Oct 2013 05:02 PM PDT

 


Did You Know? When looking at stars, you’re possibly looking into the past. Many of the stars we see at night have already died.

Posted: 02 Oct 2013 05:02 PM PDT


Wednesday, October 2, 2013

முஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்கின்றோம்: SLTJ

Commented by nizamhm1944 on http://tinyurl.com/mbolv29

Lankamuslim.org

முஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்கின்றோம்: SLTJ

இவர்கள் அல்லாஹ்வால் வழிகெடுக்கப்ட்டவர்கள். இன்னும் சில முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்கள தமது  அமைச்சர் பதவிக்காக முஸ்லிம்களைக் காட்டிக் கொடுப்பதில் நான் முந்தி, நீ முந்தி எனச் செயல்பட்டு ஆட்சியாளரிடம் நல்ல பெயர் பெற்றுக் கொள்ளப் பாடுபடுபவர்கள்.  

முஸ்லிம்களு்க்கு இந்நாட்டில் நடப்பது பொய்ப் பிரசாரம் என நாக்கூசாமல், அல்லாஹ்வின் அச்சமின்றி, மறுமைப் பயமுமின்றிப் பகிரங்கமாகக் கூறுகின்றனர்.  இன்னும் சிலர், முஸ்லிம் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன என்ற கூற்றை நம்ப வேண்டாம் என மேடைகளில் கூறும் பொழுது கைகட்டி, வாய்பொத்தி அதனை ஆமோதிக்கின்றனர்.  இன்னும் சிலர், பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை எதிர்த்தால், நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எல்லாம் உடைக்கப்பட்டு விடும். அதனால் அந்நிலையில் இருந்து முஸ்லிம்களைக் காக்கவே மெளனமாக பிரச்சினை யைப் பெரிதுபடுத்தாமல் விடுகிறோம் என கப்சா விட்டு நம்மை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள்.  

இதுதான் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரகிருதிகள் செய்து கொண்டிருப்பது.  சரி அதுதான் போகட்டும் எனப் பார்த்தால், முஸ்லிம் களுக்காகப் பாராளுமன்றிலும், ஊடகங்களின் மேடைகளிலும் குரல் கொடுக்கும், சிங்கள, தமிழ் சகோதரர்களையும் சாடுகிறார்கள்.  உண்மையை வெளிப்படுத்தத் தடையாயுள்ளார்கள். 

வெளிநாட்டு முஸ்லிம் இராஜதந்திரிகளன் வருகையின் போது அவர்களைச் சந்தித்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் சகல சௌபாக்கியங்களுடனும் சுதந்திரமாக, எவ்வித அச்சமுமின்றி வாழ்கின்றார்கள் எனக் கூறி வைக்கிறார்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக் கப்பட்டதாகக் கூறுப்படுவனவற்றுள் எவ்வித உண்மையுமில்லை என நிலைமையைத் தலைகீழாக மாற்றி விடுகிறார்கள். துரோகிகள்.

இங்கு முஸ்லிம்களுக்கு நடக்கும் பிரச்சினை, ஐநா மனித உரிமைக்கான ஆணையாளரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது ஓர் இறை செயல் என்‌றே கூற வேண்டியுள்ளது. எவருடைய பங்களிப்புமின்றி தானாக நடைபெற்றது.  இந்த சுயநல, நக்கி வாழும் முஸ்லிம் அரசியல்வாதி களால் மேற்கண்ட நவின் அம்மையாரின் குற்றச்சாட்டுக்கூட பொயயாகிவிடும் நிலையே தோன்றியுள்ளது.  

முஸ்லிம மக்கள் இந்த தறுதலைகளுக்கு எதிராக பகிரங்கமாக ஆர்பாட்டங்களை நடத்தி இவர்களின் தோலை உரித்து, உண்மை உருவை உலகுக்குக் காட்ட வேண்டும். 

அத்தோடு இவர்களின் தீங்குகளிலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்றுமாறு வல்ல நாயன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும். இவை காலத்தின் கட்டாயம். தவற விடுவோமாயின் பின்னர் வருந்த வேண்டி வரும்.