Saturday, April 13, 2013

பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலாளருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் பல மணிநேரம் சந்திப்பு





Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலாளருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் பல மணிநேரம் சந்திப்பு


வழமையாக இலங்கைக்கு வரும் இராஜதந்திரகளிடம் அரசுக்கு ஆதரவான கருத்துக்க்ளை கூறுவதை தம் மரபாக ஆக்கிக் கொண்டவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்.  தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்ட போதுகூட இப்பா‌ரம்பரியம் மீறப்படவில்லை என்பது எம்மவர் பக்தியைக் காட்டுகிறது.

அண்மையில் கூட, பங்களாதேஸ் இராஜதந்திரியாக இருக்க வே்ணடும், அவர் இந்நாட்டில் மதங்கள் பற்றிய நல்ல கருத்தையே வெளியிட்டுச் சென்றார் என்பதில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கே உரித்தான  ஒழுக்க சீலத்திலிருந்து சிறிதும் வழுகியிருக்க வில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆயினும் கூட, இவை எவரினதும் கருத்தைக்கூட தொட்டிருக்கவில்லை என்பதே அவர்கள் நிலையை உணர்த்தும். இந்நிலை  நன்மையைத் தரப்போவதில்லை என்பதை இடித் துரைக்கும்.

கொடுக்கப்பட்டவைக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டதனால் தற்போது கொடுப்பதற்கு எதுவுமில்லை என்கின்றதா! இவைகளுக்காகத் தானே அனைத்தும் கொடுக்கப்பட்டன என்பதைப் புலப்படுத்துகின்றதா?

ஆதலால், தற்போது மட்டும் சிறப்பாக என்ன நடந்துவிடப் போகிறது? தமது பதவிகளைக் காப்பாற்றும் பணியை நன்றாகவே நிகழ்த்தியிருப்பர்.

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் சில இந்நாட்டுக்கு ஆதரவளித்ததைப் பற்றி வாய்கிழியப் பேசி, அதனால் முஸ்லிம்களை துன்புறுத்தாதீர்கள் என்று கூறுவதிலிருந்தும் உண்மைகள் தெளிவாகின்றன.  அடிமைத்தனம் வெளிப்படுகின்றது. சலுகை பெறும் மனப்பான்மை மிகைத்து நிற்கின்றது. உரிமை பற்றிப் பேசும் பண்பின் இல்லாமை  எட்டிப்பார்க்கின்றது.

No comments: