Tuesday, April 30, 2013

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினையை தெறிக்க நடமாடும் சேவையாம்



Lankamuslim.org
One World One Ummah

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினையை தெறிக்க                   நடமாடும் சேவையாம்



வடக்கில் இருந்து 1990இல் பயங்கரவாதப் புலிகளால், கொள்ளையிடப்பட்ட பின்னர் கொலைப் பயமுறுத்தலுடன் வெற்றுக் கையினராக விரட்டி அடிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிமகள், தக்க முறையில் நிவாரணம் கொடுக்கப்படாமல், மீள்குடியேற்ற நினைக்கும் எவராயினும் இறை தண்டனைக்கு ஆளாகவே செய்வர். 

அம்முஸ்லிம்கள் சொத்துக்களை, சுகங்களை, வீடுகளை, விளைநிலங்களை, அரிய பெரிய பொக்கிஷங்களை, ஆவணங்களை, தொழில்களை, தொழில் ஸ்தாபனங்களை, கல்வியை, புலமைப் பரிசில்களை, உத்தியோகங்களை, வருவாய்களை, உடல், மன நலத்தைப் போன்ற எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். இது அவர்கள் விரும்பிப் பெற்றுக் கொண்டதல்ல. வேண்டுமென்றே சுமத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பால் இழைக்கப்பட்ட அநீதி,  இதில் கணிசமான பொறுப்பு அரசுக்கும் உண்டு. 

ஆதலால், அவர்களின் அனைத்து இழப்புகளும் மதிப்பீட்டின் அடிப்படையில் மீள வழங்கப்பட வேண்டும். இன்றேல், அவர்களின் சாபமும், இறைசாபமும் இவ்வநியாயத் துக்குக் காரணமான அனைவரையும் சுற்றிப் பிடிக்கவே செய்யும். புலிகள் சந்தித்த அழிவு நினைகூரப்பட வேண்டியதே!

Friday, April 26, 2013

முஸ்லிம் விரோத நடவடிக்கைகளும், சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும்


Commented by nizamhm194 on:

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம் விரோத நடவடிக்கைகளும், சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும்


// மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் மக்கள் மீது ஒருவித அவநம்பிக்கை இவர்களுக்கு இருந்து வந்துள்ளது. இதற்கு முஸ்லிம் சமூகத்தின் பக்கத்தில் இழைக்கப்பட்ட சில மேலோட்டமான தவறுகளும் காரணமாய் அமைந் துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். //

தங்களின் மேற்கண்ட கருத்தை ஆதரிப்பவன் நான். ஆயினும், இத்தவறில் முஸ்லிம் பொதுமக்களின் பங்களிப்பு மிக அற்பமானதே. உண்மையாகக் கூறப் போனால், இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு, இயக்கங் களாக, தமக்குள் யார் பெரியவர், யார் கூறுவது சரி என்ற அடிப்படையில், தமது செயற்பாடுகளைப் பெரிதுபடுத்தி, தமக்குள் குழப்பங்களையும் செய்து கொண்டிருந்தவர்களின் பங்களிப்பே, சிங்கள பௌத்த மக்களில் ஒரு பிரிவினரின் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி, பிழையான கணிப்பீடு ஒன்றைச் செய்ய வைத்துள்ளது. 

இன்னும், தாம் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படையில், முஸ்லிம் களின் பெயரைப் பயன்படுத்தி, தமது நலன்களைக் காத்தமையால், சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட எரிச்சலை, ஆத்திரத்தை ஊட்டும் தவறு களைச் செய்து கொண்டிருந்த அரசியல்வாதிகளும் காரணர்களே! 

இறுதியாக, யாருடையவோ விருப்புக்களையும், இலாபங்களையும், நன்மை களையும் நிறைவேற்றி வைப்பதற்காக, இஸ்லாத்தின் பெயரால் தொடங்கப் பட்ட தவறும், சிங்களவர் மத்தியில் பாரிய தாக்கத்தை உருவாக்கக் கூடிய சாதனமாக பௌத்த கடும போக்காளர் களால் பாவிக்கப்பட வழிவகுத்துக் கொடுத்திருந்தது. 

மேலும், இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட அழைப்புப் பணியை, எத்தி வைத்தலை பிழையான முறையில் கையாண்டதனாலோ என்னவோ, முஸ்லிம்கள், பௌத்தர்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற சந்தேகத் தையும், அச்சத்தையும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களிடம் ஏற்படுத்தி யுள்ளனர். அவற்றில் ஒன்றாக, யாரோ எங்கோ ஒருவர் மதமாறி யிருந்தால், அதனைப் பெரிதுபடுத்தி, அதனையே பெரும் விளம்பரமாகப் பாவிக்கத் தொடங்கியமை. 

இஸ்லாத்தின் காவலர்களாகத் தங்களை வரிந்து கட்டிக்கொண்டு திரிந்தமை, அரபியரின் உடைகளை இங்கு அணியத் தொடங்கியமை, பெண்களின் முகத்திரை போன்ற பல விடயங்கள் இந்நிலைக்குக் காரணமாக அமைந் திருந்தன என்பதை நடுநிலையில் சிந்திப்போர் உணர்ந்து கொள்வர். இவற்றில் பெரும்பாலானவை குர்ஆனுக்கு மாற்றமானவை என்பது கசப்பான உண்மை. இவை இறை சோதனையாகக் கூட இருக்கலாம்.

அரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம்


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

அரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே                        நாங்கள் தற்போது இருக்கின்றோம்


//அத்துடன் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு தென்னிலங்கையில் நடைபெற்ற இனக்கலவரம் ஒரு மாறாத வடுவாக இருப்பதைப் போல 1990ஆம் ஆண்டு யாழில் இருந்து வெளியேற்றப்பட்டமை என்றைக்கும் மாறாத வடுவாகவே இருக்கின்றது.//

1983 ஜூலை கலவரத்தோடு, வடக்கில் பாசிஸப் புலிகளால் அரங்கேற்றப்பட்ட  ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை ஒப்பிடுவது பாரிய தவறு.

மேலும், யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற கூற்றை மாற்ற வேண்டும். யாழ் உட்பட ஐந்து மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.ஆகக் குறைந்தது வடக்கில் இருந்து வெளியேற்றப் பட்டனர் என்றாவது கூற வேண்டும். யாழ்ப்பாணமும்,  மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போல ஒரு மாவட்டமே என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

// அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ‘தந்தை செல்வா அனைத்து இனங்களையும் அரவணைத்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார் சாத்தியமான வற்றை சாதித்துக்காட்ட வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார்.//

 ‘தந்தை செல்வா அனைத்து இனங்களையும் அரவணைத்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார்“  இக்கருத்து முற்று முழுதாக உண்மைக்குப் புறம்பானது.

இனம் என்ற ரீதியில் முஸ்லிம்களை இணைத்திருக்கவில்லை. பிரதேசம் என்ற ரீதியில், வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழரை‌யோ, இந்திய வம்சாவழித் தமிழரையோ, முஸ்லிம்களையோ  இணைத்திருக்கவில்லை. கட்சி என்ற அடிப்படையில், தமிழர் விடுதலைக் கூட்டணயில் அங்கமாகவும், பங்குதாரர்களாகவும் இருந்த இ.தொ.கா, வையோ, தமிழ் காங்கிரஸையோ இணைத்து தனிநாடு கோரிக்கை விடவில்லை.

தேர்தலில் வெற்றியை மையமாக வைத்தே தனிநாடு கோரிக்கை விடப்பட்டது என்பதை, அவர்களின் தேர்தல் வெற்றியின் பின்னர், இலங்கைச் சரித்திரத்தில் முதலும் கடைசி யுமாகத் தமிழ்க் கட்சி ஒன்று பிரதான எதிர்க்கட்சியாக மாறியதன் பின்னரான செயற்பாடு கள் வெளிப்படுத்தவில்லை.

தாம் தனிநாடு போராட்டம் தொடராமல் பாராளுமன்றில் தொடர்ந்து இருப்பதற் கான ஆணையை,அவர்கள் தமது பதவிகளை வறிதாக்கிவிட்டு மக்களின் தீர்ப்புக்கு விட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

தனிநாடு கோரிக்கையை முன்வைத்துப் பெற்ற அமோக வெற்றியை, தமது சுயநலத் துக்காகவே கட்சி பாவித்தது. சரியான கொள்கை இருந்திருந்தால், ஆகக் குறைந்தது, 1978 ஆம் ஆண்டு ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பை எதிர்த்தாவது பாராளுமன்றை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.  ஆனால், தவிர்க்க முடியா நிலையில் ஆறாவது திருத்தத்தை எதிர்த்தே பாராளுமன்றை விட்டு வெளியேறினர்.

டெலோ இயக்க சிவாஜிலிங்கம், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலைபோட முடியுமென்றால், டக்ளஸ் தேவானந்தவும், கருணாவும் ஏன் அக்கூட்டத்திற்கு அழைக்கப்படக் கூடாது!  யேசு நாதர் கூறியது போல் குற்றம் செய்யாதவர் முதற் கல்லை எறிய வேண்டும். அந்த வகையில், குற்றஞ்சாட்ட முனைபவர்கள் முதலில் இரத்தக்கறை யற்றவர்களாக இருக்க வேண்டும்.

Wednesday, April 24, 2013

இலங்கை மனித உரிமை பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டுச் செல்லத் தேவையில்லையாம்



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

இலங்கை மனித உரிமை பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டுச் செல்லத் தேவையில்லையாம்



இஸ்லாமிய நாடுகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் சில முஸ்லிம் தலைவர்கள், மக்கள் யதார்த்தத்தை உணர வேண்டும். எவர் எக்கேடு கெட்டாலும் லெப்பைக்கு நாலு பணம் என்ற ரீதியில், முஸ்லிம் நாடுகள் தமது ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பர் என்பதே உண்மை.  அதைவிட்டு இங்குள்ள முஸ்லிம்களுக்காக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கனவுலகில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் விடுபட வேண்டும். 

இதிலிருந்து, நமது வாழும் உரிமை எதனோடும் சம்பந்தப்படுத்திப் பெறப்படவோ, சலுகைகளின் அடிப்படையில் பெறப்படுவதாகவோ இருக்கக் கூடாது என்பது தெளிவாகின்றது. 

வடக்கிலிருந்து அப்பாவி முஸ்லிம்கள் காரணமின்றி அராஜகப் புலிகளால், வெற்றுக் கையினராக விரட்டி அடிக்கப்பட்டதை எத்தனை முஸ்லிம் நாடுகள் கண்டித்தன? அம்முஸ்லிம்களுக்கு எத்தனை நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டின? எத்தனை நாடுகள் அவர்கள் துன்பங்கள் களையப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வலியுறுத்தின? 

அவர்கள் 23ஆவது வருடமாகவும் “அகதி“ என்ற அந்தஸ்தில்லாத அகதிகளாக, IDP என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தற்போது வடக்கில் தேர்தல் நடக்கவிருப்பதால், அம்முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதாகக் கூறி, அவர்கள் எவ்வித நட்ட ஈடுமின்றி நட்டாற்றில் விடப்படும் நிலையே அரங்கேற்றப்படுகின்றது. அல்லாஹ்தான் இந்த முஸ்லிம்களுக்கு வழிகாட்ட  வேண்டும்.  

இவர்களின் பத்தொன்பது வருடப் பொறுமை எப்படி புலிகளின் அழிவுக்கு வித்திட்டதோ, அப்படியே அவர்கள் உரிய முறையில் குடியேற்றப்படாமல் விடப்படுவதற்குப் பொறுப்பானவர்கள் அழிந்து போவார்கள் என்பதே உண்மை! 

இவர்களின் மீள் குடியேற்றம் நிரந்தரமாக அவர்கள் சீரான வாழ்வை மேற்கொள்ளும் விதமாக, உரிய நட்டஈட்டுடனும், மற்றும் ஏனைய உரிமைகளுடனும், கௌரவத்துடனும், எவரிலும் தங்கியிராத வகையில் வாழ்வதற்கான முறையில் நடைபெறல் வேண்டும். இன்றேல் அவர்கள் தற்போது எப்படி வாழ்கின்றார்களோஅப்படியே அவர்களை விட்டுவிடுவது மிகச் சிறப்பாக இருக்கும். 

அனைவரிடமும் வேண்டிக் கொள்வது. Please do not try to benefit out of others' distress. 

Tuesday, April 23, 2013

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும்


இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும்
ஓர் போஸ்ட்மோட்டம் ( post-mortem)

இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் சிந்தனையில் மாற்றம் தேவைநாமும் இந்நாட்டுப் பிரஜைகளே! இந்நாட்டின் பெரும்பான்மையினருக் குள்ள அதேயளவு உரிமைகள் நமக்கும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், மற்றைய இனங்களை விட நாம் இந்நாட்டுக்கு விஸ்வாசமாக நடந்துள்ளோம்.

சிங்களவரும், தமிழரும் கூட இந்நாட்டில் புரட்சி, உரிமை என்ற பெயர் களில் இரத்த ஆறை ஓட வி்ட்டுள்ளனர். ஆனால் நாம் என்றும் இந்நாட்டின் அரசியல் யாப்புக்கெதிராக கிளர்ந்தெழுந்த தில்லை. நமக்குப் பிரச்சினை கள் ஏற்பட்ட போதெல்லாம் பேச்சு வார்த்தை மூலமும், நீதிமன்றின் மூலமும் அவற்றைத் தீர்த்துக் கொண்டு சிங்கள, தமிழ் மக்களோடு சகஜீவன வாழ்வை மேற்கொண்டு வந்துள்ளோம்.

நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம் நாம் மற்றைய இனங்களைக் குற்றம் கூறவோ, திட்டித் தீர்க்கவோ இல்லைமாறாக அதில் ஈடுபட்டவர்களின் செயல்களை மட்டும் நியாயமான முறையில் கண்டித்துள்ளோம். அவர்களுடன் அதற்காக என்றும் பகைமை பாராட்டிய தில்லைஇது இந்நாட்டு முஸ்லிம்களின் பாரம்பரியம்.

ஆனால் அண்மையில் நமக்கும், நமது வழிபாட்டு நிலையங்களுக்கும், சில மத அனுஷ்டானங்களுக்கும் சில மதவிரோத சக்திகளால் பல் வகையில் பிரச்சினைகள் உருவாக்கப்பட்ட போது, சிறந்த முறையில் அதனை அணுகவில்லை என்றே கூற வேண்டியுள்ளதுஅல்லது அணுகும் சந்தர்ப்பங்கள் அற்றுப் போயிருந்ததாகவே நினைக்க வேண்டியுள்ளது

1. பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம் என்ற பொறிமுறையைக் கையாள நம்மிடம் சரியான தலைமைத்துவம் இருக்கவில்லை.

2. பேசக்கூடிய நிலையில் ஸ்தாபன ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் முத்திரை என்ற பொறியில் தள்ளப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருந்தது. அதனால், அச்சபைக்கு முஸ்லிம்களின் பிரச்சினையில் தலையிடுவதற்கு மேலாக, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பாரிய பொறுப்பை நிறைவு செய்யும் வழிவகைகளில் நியாயங்களைத் தேட வேண்டிய நிலையில் இருந்தது. அத்துடன்  அது பேச்சுவார்த்தை நடத்தும் சக்தியை இழந் திருந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எப்படி ஒரு இனத்துக்காகப் பேச முடியும்? அதனால்இறுதியில் யாருடைய வேண்டுகோளுக்காகவோ ஆரம்பிக்கப்பட்டது என்ற உண்மையை மொட்டையாகப் போட்டுடைத்து, மிகுதியை நம்மீது பாரத்தைப் போட்டு, நமக்கு சில ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் தன்னைக் காத்துக் கொண்டது.

3.  அடுத்து, மேற்கண்ட அஇஜஉ வுக்கெதிரான குற்றச்சாட்டு, இஸ்லாத்துக் கெதிரான, முஸ்லிம்களுக் கெதிரான குற்றச்சாட்டாக திரிபுபடுத்தப்பட்டு விட்டதால், முஸ்லிம்கள் கூட பேசும் சக்தியை இழந்து, தம்மை இந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழியில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

4. அடுத்து முஸ்லிம்கள், தமது முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பினர். அவர்கள் பாவம், அவர்களால் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வேலைகளைச் செய்ய வேண்டிய நிலையில் இரண்டாவது இடத்தையே முஸ்லிம்களின் பிரச்சினைக்கு வழங்கினர். அல்லது தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நம்மைப் பலிக்கடாவாக் கினர். சிலர் நடைபெற்ற அக்கிரமங்களை மறைத்தும் வேறு வகைகளி லும் வெளிப்படையாகவே வக்காலத்து வாங்கி நியாயப்படுத்த முனைந் தனர். சிலர் தடிக்கும் நோகாமல் பாம்பும் சாகாமல் தமது சாணக்கியத்தை வெளிப்படுத்தினர்.

5.  இறுதியாக கட்சி பேதமின்றி  மேதகு ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், இனிமேல் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடைபெறு மானால், அது சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்ற உறுதி மொழியைப் பெற்றனர். இதன் மூலம் நடந்தவைகள் அனைத்தும் தண்ட னைகளில் இருந்து விலக்கப்பட்டன. நடந்தவைகட்கு  சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம் தலைவர்கள் வாளாவிருந்ததை மிக நுட்பமாக ஜனாதிபதி வெளிப்படுத்தினாரா?

6. எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம்களும், அஇஜஉவும், அரசியல் வாதிகளும், ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக சில முஸ்லிம் நாடுகள் வாக்களித்ததையும், தாம் இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை களையும் கூறி, எம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட னர்இதுதான் புரியாத புதிர்இந்நாட்டுக்கு ஜெனிவா பிரச்சினை ஏற்படா திருந்தால் என்ன காரணத்தைக் கூறி இருப்பர்? நமக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை வெளிப்படுத்த, நீதி கேட்க, முஸ்லிம் நாடுகள் இந்நாட்டை ஆதரித்திருக்க வேண்டுமா? அடுத்து, ஜெனிவாவில் அரபு நாடுகள் இலங் கைக்கு எதிராக வாக்களித் திருந்தால் என்ன செய்திருப்பர்?
7. மேற்கண்ட நடவடிக்கை  மூலம், முஸ்லிம்களின் பிறப்புரிமை கேள்விக் கிடமாக்கப்பட்டுஉரிமைகளைக் கைநழுவவிட்டுபிச்சைக்காக ஏங்கும் நிலையை ஏற்படுத்திய புதிய பாரம்பரியம் ஒன்று உருவாக்கப்பட்டிருந் ததுஇன்னும், நாளை அரபு நாடு இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுமாயின், அவர்களை நாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை, இந்நாட்டு அரசின் மூலமாகவே நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடலாகாது. இது களநிலவரம்.

நாம், நமக்கும், நமது மார்க்கத்துக்கும் பிரச்சினை வரும்போது,   முதலில் நம்மை, நமது செயற்பாடுகளை  நிதர்சனமாக அணுகி, ஆக்கபூர்வ விமர் சனத்தைச் செய்து, உண்மை நிலையைக் கண்டறிந்து, நம்மிடமுள்ள குறைகளை அகற்ற முனைய வேண்டும். இதில் வெட்கப்படவோ, இழிவாக நினைக்கவோ, தோல்வியாக எண்ணவோ இடமில்லை. இது நமது நிலையை அந்நியர் மத்தியில் உயர்த்தவே செய்யும். இதுவே பெரிய எத்தி வைத்தலாகும். வீரம் என்பதே விவேகம்தான்.

நமது பக்கத்தில் குறைகள் இல்லாத போது, நமக்கேற்பட்ட பிரச்சினைகள் ஏன் தற்போது ஏற்பட்டன என்பதை குர்ஆனிய அடிப்படையில் அணுகி அறிய முயல வேண்டும். நாம் குர்ஆனின் அடிப்படையில் வாழாதபோது அல்லாஹ்வின் சோதனை இவ்வாறெல்லாம் வர இடமுண்டு.

நம்மீது அந்நியருக்கு ஏதாவது காரணங்களால் அச்சமோ, அசௌகரி யமோ, பாதிப்புக்களோ ஏற்பட்டிருந்தால் அவைகளைக் களையும் வழி வகையில் செயற்பட வேண்டும்.

புத்திஜீவிகள் கூடி, பிரச்சினைகளை எப்படி தடுக்கலாம் என்ற வழிவகை களைக் கண்டறிந்து. நீதியின் மூலமாகவோ, அன்றி பேச்சுவார்த்தையின் மூலமாகவோ தீர்ப்பதற்கான பொறிமுறைகளைப் பாவித்து, பிரச்சினை யை ஒழிக்க வேண்டும்.

நாம், நமது பிறப்புரிமைகளையும், நமக்கு,நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த உரிமைகளையும், விட்டுச் சென்ற  நிலவுரிமையையும்நற்பெயரையும், கௌரவத்தையும் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும்

 நாம் சரியான வழியில், நின்று கொண்டு. அல்லாஹ்விடம்  பிரார்த்திக்க வேண்டும்.                      
                                                                                                                           - நிஹா -

அறிவுகளும் உயிரினங்களும்


அறிவுகளும் உயிரினங்களும்

புல்லும் மரமும் ஓரறிவாம் ஸ்பரிசம்
வல்லோன் வகுத்த விதி

நத்தை சிப்பிசங்கு நலமாம் ஸ்பரிசத்துடன்
மெத்தவும் ருசியறியும் ஈரறிவு

எறும்பு கறையான் இதமாய் ஈரறிவுடன்
நாற்ற மறிவதே மூவறிவு

வண்டுதும்பி தொடரும் மூவறிவுடன் ரூபம்
கண்டிடும் வி்ந்தை நாலறிவு

பறவை மிருகம் பாங்காய் நாலறிவுடன்
அரவம் கேட்கும் ஐந்தறிவு

விந்தைகள் செய்யுமே ‌ஐயறிவுசேர் மனிதனில்
குந்தகமில்லா ஆறாமறிவு பகுத்தறிவு

ஆக்கியோன்: நிஸாம் ஹா.மு.

Monday, April 22, 2013

கொஞ்சமாவது உண்மை உண்டா ?



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org

One World One Ummah

கொஞ்சமாவது உண்மை உண்டா ?


நான் இது போன்ற தரங்கெட்ட, அசிங்கமான, ஆத்திரத்தை ஏற்படுத்தக்கூடிய  கருத்துரைகளை எழுதுவோர் சிலரைச் சில தளங்களில் காண்கின்றேன். இந்த மலக்குழிகளின் பக்கல் சென்றாலே நமக்கு அதன் துர்நாற்றம் சகிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். எனக்கும் அவ்வாறான அசிங்கமான அனுபவம் உண்டு. அதனோடு கருத்துப் பரிமாறப் போனால் அதன் அடிமட்டத்திலிருக் கும் நாற்றம்கூட வெளிப்படவே செய்யும். 

தரங்கெட்டவர்களுடன் தர்க்கம் செய்யப் போனால் அங்கு கருத்துக்கள் வெளிப்படாது,  அவர்களின் மலம் அவர்தம் வாயினால் வெளியேறத் தொடங்கி விடும்.   இவற்றைத் தவிர்த்துக் கொள்ளல், இவ்வாறான தளங் களைப் பார்க்காமல் விடல், பதில் எழுதாமல் விடல் ஒன்றே அல்லாஹ் கூறும், அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக என்பதனால் நன்மை பெறும் வழி.  நம்மவர் சிலரில் கூட இவ்வாறான போக்குக‌ளைக் காண முடிகின்றது.  

நாய்கள் குரைக்கின்றன என நாமும் குரைத்துக் கொண்டிருப்பதில்லை. குரைக்காவிட்டால் அவை நாய்களல்ல என்பதை நாம் உணருவோமாயின் நமக்குக் கொஞ்சமும் அந்த நாய்களின் குரைத்தல் துன்பத்தைத் தராது. 

உணவளிப்பது தொடக்கம் அனைத்தையும் நமக்கு அளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வினுடை‌யதே! அதனைக் கூட்டவோ குறைக்கவோ எவராலும் முடியாது என்பதில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்வோமானால், இவர்கள் நமது பொருளாதாரத்துக்குப் பங்கம் விளைத்திடுவர், நமது வணிகத்தை முடக்கிடுவர், அல்லது அழித்திடுவர் எனப் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை.  

நான் அனைவருக்கும் கூறுவது:  PLEASE DO NOT TRY TO BENEFIT OUT OF OTHERS' DISTRESS. 

Commented by nizamhm1944 on: Voice Of Mannar மதவாச்சி – மடு வரையான ரயில் பாதை அமைப்பு பணி பூர்த்தியடையும் நிலையில்



Commented by nizamhm1944 on:

Voice Of Mannar

மதவாச்சி – மடு வரையான ரயில் பாதை அமைப்பு பணி பூர்த்தியடையும் நிலையில்



இத்தரைவழிப் போக்குவரத்து வசதியான தொடரூர்ந்துச் சேவை முழுமை யாகப் பூர்த்தியடையும் போது மன்னார் மாவடட மக்கள் மட்டுமல்ல, இலங்கை மக்களுட்பட இந்திய மக்கள் கூட பயனடைவர். நிறுத்தப்பட்ட தலைமன்னார்- இராமேஸ்வரம் படகுச் சேவை (Ferry Service) கூட வழமைக்குத் திரும்பிவிடும்.அவர்களது நாளாந்த வாழ்வு இலகுபடுத்தப் படும். போக்கு வரத்துச் செலவுக்காகத் தற்போது செலவிடப்படும் அதிகளவு பணம் மீதப்படும். காலவிரயம், தேவையற்ற கெடுபிடிகள் நீக்கப்படும். மக்கள் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பும். 

புலிகளால் அழிக்கப்பட்ட  மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கான பொது வசதிகளில் இதுவும் ஒன்று. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின்னராவது இவ்வரப்பிரசாதம் மக்களுக்குக் கிடைப்பதற்காக செயல்பட்ட அரசும், சம்பந்தப்பட்டவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே! 

Sunday, April 21, 2013

வடக்கில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளல்ல – ஹூனைஸ் பாரூக்



Commented by nizamhm1944 on:

Voice Of Mannar

        வடக்கில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளல்ல                                – ஹூனைஸ் பாரூக்


// புலிகள் அவர்களது போராட்டத்தை முன்னெடுத்தமை சரியா? பிழையா?என்பது பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.இருந்தாலும் அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.தற்போதைய நிலையில் வெளியேற்றப்பட்ட அந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்தளவிலான உணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் மனித நேயம். //

”அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.” .  இப்படிக் கூறுவதற்கான எவ்வித சூழலும் அன்று, முஸ்லிம்களைப் புலிகள் பலாத்காரமாக  வெளி‌‌யேற்றுவதற்கு ஆதாரமாகக் காணப்படவிலலை.  அன்று நடந்தது, முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட, நியாயப்படுத்தப்பட முடியாத ஒரு இனச் சுத்திகரிப்பே தவிர வேறெதுவுமில்லை.

மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் அல்லது செய்யப்பட வேண்டும் என்பது மனித ‌நேயத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டியதில்லை. மீள்குடியேறுவது வடக்கு முஸ்லிம்களின் பிறப்புரிமை, அடிப்படை மனித உரிமை. அதில் எவரும் தலையிட முடியாது. அதற்கு யாருடைய அனுதாபமோ, அனுமதியோ, தயவோ தேவையில்லை.

ஆனால் அரசுக்கு ஒரு கடமையுள்ளது. அது அவர்களை, அவர்கள் வாழ்ந்த பூமியில், காலங்காலமாக அவர்கள் அனுபவித்து வந்த அனைத்து சௌபாக்கியங்களோடும்,  உரிமைகளோடும், கௌரவமாக வாழ்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுவது.


// புலிகள் அவர்களது போராட்டத்தை முன்னெடுத்தமை சரியா? பிழையா?என்பது பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.இருந்தாலும் அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.தற்போதைய நிலையில் வெளியேற்றப்பட்ட அந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்தளவிலான உணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் மனித நேயம். //

”அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.” .  இப்படிக் கூறுவதற்கான எவ்வித சூழலும் அன்று, முஸ்லிம்களைப் புலிகள் பலாத்காரமாக  வெளி‌‌யேற்றுவதற்கு ஆதாரமாகக் காணப்படவிலலை.  அன்று நடந்தது, முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட, நியாயப்படுத்தப்பட முடியாத ஒரு இனச் சுத்திகரிப்பே தவிர வேறெதுவு மில்லை.

மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் அல்லது செய்யப்பட வேண்டும் என்பது மனித ‌நேயத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டியதில்லை. மீள்குடியேறுவது வடக்கு முஸ்லிம்களின் பிறப்புரிமை, அடிப்படை மனித உரிமை. அதில் எவரும் தலையிட முடியாது. அதற்கு யாருடைய அனுதாபமோ, அனுமதியோ, தயவோ தேவையில்லை.

ஆனால் அரசுக்கு ஒரு கடமையுள்ளது. அது அவர்களை, அவர்கள் வாழ்ந்த பூமியில், காலங்காலமாக அவர்கள் அனுபவித்து வந்த அனைத்து சௌபாக்கியங்களோடும்,  உரிமைகளோடும், கௌரவமாக வாழ்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுவது.

Friday, April 19, 2013

இலங்கையில் ‘அல்-கைதா’ இருக்கிறது , இல்லை



Lankamuslim.org
One World One Ummah


இலங்கையில் ‘அல்-கைதா’ இருக்கிறது , இல்லை


ஒரு நாட்டினுள் சட்டபூர்வமாக அத்துமீறி நுழைய வேண்டுமாயின் அதற்கான ஒரு காரணத்தை அமெரிக்கா கூறுவது ஒன்றும் இன்று புதிதல்ல.  

ஈராக்கினுள் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ் சுமத்தி, அந்நாட் டினுள் புகுந்து, தனது அராஜகங்கள் அனைத்தையும் புரிந்து விட்டு, ஒன்றும் இல்லாத நிலையில் அந்நாடடின் தலைவர் மேல் புதிதாக ஒரு குற்றத்தைச் சுமத்தி அவரைக் ‌கைது செய்து, தனது கையாட்களை வைத்து அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துக் கொன்றது.

தாங்களே அமெரிக்க இரட்டைக் கோபுரத்தைக் Controlled Demolition முறையில் தகர்த்து, அக்கணமே அல்கைதாதான் அதனைச் செய்தது, அதன் தலைவர் பின்லாடன் ஆப்கனிஸ்தானில் இருப்பதாக்க கூறி அந்நாட்டில் அத்துமீறி நுழைந்து, அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அவர்களது வளத்தைக் கொள்ளையடித்து, இறுதியில் பாகிஸ்தானில் அவரைப் பிடித்ததாகக் கதை யளந்து, கொன்று கடலில் போட்டுவிட்டதாக தன் புளுகு மூட்டையை அவிழ்த்து உலகை நம்புங்கள் எனக் கூறுகிறது.

இப்படி ஒவ்வொரு நாடாகத் தனது எண்ணெய் பசியைப் போக்கிக் கொள்ள இரையாக்கிவிட்டு, தற்போது இந்நாட்டுக் கெதிராக மனிஉரிமை மீறல் என்ற சாக்கில் தனது காலைப் பதிப்பதை நோக்காகச் செயல்பட்டுக்கொண்டி ருக்கின்றது. அண்மையில் மின்சாரம் சம்பந்தமாக தலையிட்டு தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த காரணங்கள் தேடியது. 

அதே வேளை தற்போது இலங்கையில் அல்கைதா என ஒரு புதிய குண்ட‌ையும் போட்டு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது ஆக்கிரப்பை நடத்துவதற்குத் தயாராகிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.   அரசு அப்படி ஒரு இயக்கம் இங்கிருப்பதாகத் தெரியவில்லை என்றதும், தனது எண்ணம்  நிறைவேறா நிலையில், உதவு தொகையில் இருபது வீதத்தைக் குறைத்தது.

ஏற்கனவே பயங்கரவாதத்துக்கு எதிராக உதவுவதாக திருகோணமலையில் தனது காலைப் பதித்துள்ளது. அதற்கு முன்னோடியாக இஸ்ரேலை இங்கு வைத்துள்ளது.  

நாங்கள் அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்க முயற்சிப் பதுமில்லை.


Lankamuslim.org
One World One Ummah

நாங்கள் அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்க முயற்சிப் பதுமில்லை.


நிராயுதபாணிகளான, குற்றமற்ற, அப்பாவி, வடக்கு முஸ்லிம்களைப் பாசிஷப் புலிகள் அவர்தம் தாயகத்தை விட்டு, அநாகரிமாக, வெற்றுக்கையினராக, வெந்த மனத்தினராக விரட்டியடித்த போது, நடந்த ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே! அச்சமயம் தற்போது முஸ்லிம் சமூகத்துக்கே அவமானத்தைப் பாதிப்பை விளைவித்துக் கொண்டிருக்கும் சிலர், அக்கட்சியின் ஆட்சியில் பங்குதாரர்களாக, அமைச்சர்களாகக் கூட இருந்தவர்களே! 

அப்பொழுதும், இப்பொழுது செய்த வேலையைத்தான் செய்து வந்தனர். இன்றேல், வடக்கு முஸ்லிம்கள் அவ்வேளை பகிரங்கமாக கூற முடியாத நிலையில் இரகசியமாகத் தம்மைப் புலிகளின் மிலேச்சத்தனத்திலிருந்து காப்பாற்றும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் வியர்த்தமாக விட்டிருக்க மாட்டார்கள். அரசுக்கு அழுத்தம் கொடுததிருப்பர். இன்று அவர்கள் அகதிகளாக அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்க மாட்டார்க்ள. அதை வைத்தே சிலர் இன்றும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.  

ஒக்டோபர் 30ஆந் திகதி முஸ்லிம்கள் விரட்டப்பட்டு, அநாதைகள் ஆக்கப் பட்டதன் பின்னர், அரசின் ஆயுதப்படைகள் நொவெம்பர் முதலாந் திகதியே மன்னார்ப் பட்டினத்தைத் தமது ஆளுகைக்குள் கொண்டு வர முடிந்திருந்த தென்றால், அதற்கு இரு நாட்களுக்கு முன்னர் ஏன் அந்நடவடிக்கையை எடுத்திருக்கவில்லை? உடனடியாக அம்முஸ்லிம்களை மீள் குடியேற்றி இருக்கவில்லை?

அப்போது புலிகளுக்கெதிரான பிரச்சாரத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவது, அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அரசு மௌனம் சாதித்தது. அதனால், இந்த தூக்குத்தூக்கிகள் அனைவரும் தலைவருக்கு வெண்சாமாரம் வீசி, பாத பூஜை செய்து கொண்டிருந்தனர். 

அன்று அரசு நினைத்திருந்தால், அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த அந்‌த வேளையில், உடனடியாக (Curfew order ) ஊரடங்குச் சட்டத்தையாவது போட்டி ருந்தால், முஸ்லிம்கள் அதனைச் சாட்டாக வைத்தாவது வெளியேறாமல் சாக்குப் போக்குக் கூறி, அங்கேயே இருந்திருக்கலாம்.  

அடுத்த ஒரு நாள் அவகாசத்தில் புலிகள், படை யினரால் தீபத்தை விட்டே வெளியேற்றப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இந்த நகர்வின் போது உயிர்ச் சேதங்கள் கூட ஏற்பட்டிருக்க வில்லை என்பது சிந்திப்பதற்கு, உணர்வதற்கு தேவையானது. 

இதிலிருந்து, அன்றைய முஸ்லிம்களின் வெளியேற்றம் அரசின் ஆசிர்வாதத் துடனேயே நடைபெற்றது என்பதும், இப்போது இவ்வரசில் அங்கம் வகிக்கும் சிலர், அப்போது அவ்வரசிலும் அங்க வகித்திருந்தனர் என்பதும், இவர்கள் யாரென்பதை விளங்கிக் கொள்ளப் போதுமானது

Thursday, April 18, 2013

இலங்கை நாடு பூர்வீக இந்து நாடு. அதன் பூர்வீக சமயம் இந்து சமயம்: யோகேஸ்வரன்


Commented by nizamhm1944 on
Lankamuslim.org
One World One Ummah  

இலங்கை நாடு பூர்வீக இந்து நாடு.                                                     அதன் பூர்வீக சமயம்  இந்து சமயம்: யோகேஸ்வரன்




முதல் மனிதனான ஆதம் அவர்களில் இருந்தே ஏகதெய்வக் கொள்கை தோன்றியுள்ளது. அவர் செய்த சிறு பிழை, இறை சந்திதானத்திலிருந்து அவரையும் மனைவியையும் அப்புறப்படுத்தியுள்ளது.. அப்படி இறக்கப்படட இடம் ஆதம் மலை என அழைக்கப்படுகிறது.

பின்னர், நோவா என்றழைக்கப்படும் நூஹ் நபி, மோஸே என்ற மூஸா நபி, ஏபிரஹாம் என்றழைக்கப்படும் இபுறாஹீம் நபி, ‌தாவீது என்ற தாவூது, லூர்து என்ற லூத் நபி, ஏபிரஹாம் அவர்களின் பிள்ளைகளான இஸ்மயேல் என்ற இஸ்மாயில் நபி, ஐசேக் என்ற இஸ்ஹாக் நபி, ஜேக்கப் என்ற யஹ்கூப் நபி, கன்னி மேரியின் புதல்வரான யேசு நாதர் என்ற ஈஸா நபி, இறுதியாக முஹம்மது நபி என பட்டியல் வளர்ந்து வந்திருக்கின்றன.

மேற்கண்டவர்கள் அனைவரும் ஏக தெய்வக் கொள்கையைப் போதித்தவர்களே.  மதங்கள் என்ற பெயரில் எடுத்துக் கொண்டால், பிரதான மதங்களான தாவீது அவர்களின் ஸபூர் என்ற வேதமும், மோஸே அவர்களின் டோரா என்ற தௌறாத் என்ற வேதமும், யேசு அவர்களின் கிறிஸ்தவம் என அழைக்கப்படும் இஞ்சீல் வேதங்களுமாகும்.  முன்னையது தனக்குப் பின்னர் வரவுள்ள வேதத்தையும், அதனைக் கொணர்பவரையும், அப்படிப் பிந்தி வந்த வேதம் தனக்கு முன்னர் வந்த வேததத்தை மெய்ப்படுத்துவது என்ற அடிப்படையில் இவைகள் ஒரு சங்கிலி தொடராக வந்துள்ளமை தெரிகின்றது.

இடையில் இந்தியாவில் பரம்பொருள் பற்றிப் பேசும் யசூர், றிக், அதர்வன, சாம போன்ற வேதங்களும் வந்தே இருக்கின்றன. ஏபிரஹாமின்  சந்ததிகளில் இருந்து பிரஹ்மணியம் தோன்றியதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இங்கேயே சித்தார்த்தரின் புத்த தர்மமும் தோன்றி இருக்கின்றது. அங்கிருந்து இலங்கைக்கும் வந்துள்ளது.

ஆதம் மலையில் காணப்படும் மனிதனுடைய பெரிய காலடிச்சுவடு, இலங்கையில் மனித வாழ்வு தொடங்கியதை வெளிப்படுத்துகின்றது.  அந்தப் பெருமை இந்த நாட்டுக்கு உரியது.

ஆதி மனிதர்கள்,  நம்மைப் போன்றில்லாமல் இராட்சஷ உருவங்களாகவே இருந்துள்ளனர் என்பதை,  அம்மலையில் காணப்படும் இராட்சஷ காலடிகள் உணர்த்துகின்றன. இவரின் பரம்பரை இந்நாட்டில் தொடர்ந்துள்ளதை, இந்நாட்டின் சில இடங்களில் காணப்படும் நாற்பது முழ நீளமான - 60அடி- மனிதர்களின் அடக்க ஸ்தலங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.  இவை மன்னார், தலைமன்னார், கீரி, திருகோணமலை, சிலாபம், குதிரை மலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

இவர்கள் அனைவரும் குர்ஆன் கூறும் “அவ்லியா“  க்கள் என்ற “இறைநேசர்“ களாகவே காணப்படுகின்றனர். இவர்களது பெயர்கள் அதிகமாக காரணப் பெயர்களாகவே காணப்படுகின்றன.  இதிலிருந்து உணரப்படுவது, இவர்கள் ஏகதெய்வ கொள்கையைப் பின்பற்றியவர்கள் என்பது.  இன்றேல், “அவ்லியா“க்கள் என்ற “இறைநேசர் “என்ற பட்டம் அவர்களுக் குக் கிடைத்திருக்க நியாயமில்லை. இப்பட்டம், இறைவனால் பதவி உயர்த்தப்பட்ட மனிதப் புனிதர்களுக்கு,  இறைவனாலேயே கொடுக்கப்படுவது. அல்லாஹ் பதவிகளை உயர்த்துபவன் எனத் தன்னைக் கூறுகிறான்.

இந்த நாற்பது முழ மனிதர்களின் அடக்க ஸ்தலங்கள் இதுகால வரை  முஸ்லிம்களாலேயே அவ்லியாக்கள் எனக் கொண்டாடப்படுகின்றன. இவர்களின் அடக்க ஸ்தலங்களை வேறு மதத்தவர்கள் உரிமை கோரவும் இல்லை.  இஸ்லாம் அறிமுகமாக முன்பு இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேறு மதங்களைப் பின்பற்றியவர்களின் சமாதிகளாகவே இவை இருக்க வேண்டும்.

ஆயினும், இவர்கள் சார்ந்த மற்றைய மதங்கள் மனித கையாடலுக்கு உட்பட்டமையால் இவர்களை உரிமை கொண்டாட முடியாமற் போயிருக்கலாம். அந்த வகையில் முன்னை மதங்களைக் கொண்ட, அவற்றை மெய்ப்படுதத வந்த இறுதி மதமான இஸ்லாத்தை ஏற்ற,  இங்கு வாழ்ந்தவர்கள், அவர்களை அவ்லியாக்கள் என்று கொண்டாடி வருவதிலிருந்து அப்பெரியார்களின் பரம்பரையினராகவே முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

கலாநிதி சு.வித்தியானந்தன், “இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கட்டுரைக் கோவை” யில்  தனது ”இஸ்லாமிய கலையும் பண்பும்” என்ற கட்டுரையில், ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கடற்கரைப் பட்டினமாகிய கன்ரன் வரை இஸ்லாமியரின் கப்பல்கள் சென்றன.  ஈழத்துத் துறைமுகங்களுக்கும், மேற்கு இந்தியத் துறைமுகங்களுக்கும் இஸ்லாமிய கப்பல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன“ எனக் கூறியுள்ளார். மேலும், கிபி 673இல் முஸ்லிம்களால்
minaret என அரபு மொழியில் அழைக்கப்படும், மினாரா என்ற நெடிய அழகிய மாட ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன எனவும்
கூறியுள்ளார். அவைகளில் ஒன்று  இன்றும் மன்னாரில் வடகடல் கரையில் காணப்படுகின்றது.

இதன்படி இஸ்லாம் தோன்றிப் பூரணமாகிய கிபி 634  காலத்திலிருந்து நாற்பது வருடங்களுக்கு உள்ளேயே அராபிய முஸ்லிம்கள் இலங்கைக்கு வருகை தந்து இங்குள்ள பெண்களை மணந்துள்ளனர்.  அவர்களில் பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுவோராகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர்களின் தொடர்பாடலுக்கு ஒரு புதிய மொழியின் தேவையை உணர்ந்து, “அரபுத் தமிழ்“ என்ற ‌புதிய மொழியை Transliteration என்ற அடிப்படை யில் அமைத்துள்ளனர்.

அரபு மொழியினாலான குர்ஆன் என்ற வேத நூல் மூலம் அரபைத் தெரிந்திருந்த இங்கு வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்களுக்கு இது இலகுவாக இருந்துள்ளது. அத்தோடு அரபியர்களும் தமது தமிழ் பேசும் மனைவியர் மூலம் தெரிந்து வைத்திருந்த பேச்சுத் தமிழை அரபிய லிபியில் எழுதியிருக்கின்றனர். தெற்கிற்குச் சென்ற சிலர் சிங்களம் பேசும் பெண்களை மணந்திருப்பர்.

இஸ்லாம் இறுதி மார்க்கமாக, இதற்கு முன்னர் இறைவனால் இறக்கி அருளப்பட்ட அனைத்து மதங்களையும் மெய்ப் படுத்துவதற்காக அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்பதைப் புரிந்து, ஏற்றுக்கொள்வோர், இதில் உள்ள உண்மைத் தன்மையை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இப்படி உணர்ந்து, ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே அந்த அறுபதி அடி நீள மனிதர்களின் வணக்க ஸ்தலங்களை, முஸ்லிம்கள் இறைநேசர்கள் எனக் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் இந்த அறுபது அடி நீள மனிதரின் வழித் தோன்றல்களே! அந்த வகையில் அவர்களது வரலாறு ஆதி மனிதனில் இருந்து தொடர்கின்றது. அதற்குக் காரணமாயமைந்ததும், உரிமையைக் கொடுத்ததும் ஏகதெய்வ வணக்க வழிபாடே!

அதர்வன வேதம்,  முகம்மது நபியவர்களின் வ‌ரவை முன்னறிவிப்புச் செய்ததில் இருந்து அதுவும் இறைவனால் இறக்கியருளப்பட்டதாகவே தெரிகின்றது.

வியாசரின் பவிஷ்ய புராணம் கூட  முகம்மது நபியவர்களின் வரவை முன்னறிவிப்புச் செய்ததி்ல  இருந்து அவரும் ஏக தெய்வ கொள்கையைப் பினபற்றியமை புரிகிறது. இன்னும் இந்துக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பத்தாவதும் இறுதி அவதாரமுமாகிய ” கல்கி “,  இஸ்லாத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பாலைவனவாசியான முகம்மது தான் என்பதை, பகவத் கீதையில் காணப்படும் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இந்து சமய ஆய்வாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதிலிருந்து விளங்குவது, மனிதர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பமும், ஏற்றுக்கொள்ள விருப்பமில்லா மனநிலையும், அகம்பாவமும், மனோஇச்சையும்,  இனறு மனிதர்களை வெவ்வேறாகப் பிரிந்து தத்தமது மார்க்கம் பற்றிய் புகழைப் பாடி வேற்றுமையை வளர்க்க வைத்துள்ளது.

வேற்றுமையை வளர்ப்பதை தமது சீவனோபாயத்துக்கான இலகு மார்ரக்கமாகச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.  இறைவன் பற்றிய  உண்மைகளை  அகஸ்தியர், சிவவாக்கியார், திருமூலர், ஔவையார் உட்பட பலர் பேசிச் சென்றுள்ளனர்.

திருநாவுக்கரசர் கூட இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக, ”அவனருளே கண்ணாகக் காணினல்லால், இப்படியான, இந்நிறத்தான், இவவ்ண்ணததான், இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனாதே!  இதுவே அனைத்து மதங்களினதும்
கோட்பாடுமாகும்.

பார்வைகள் தன்னை வந்தடைவதில்லை, எல்லோருடைய பார்வைகளையும் தான் அடைகின்றேன் என அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில் கூறியிருப்பதும் இதுவே! உய்த்துணர்வோர் அறிந்து கொள்வர்.

மேலும், ஏகதெய்வ வணக்க வழிபாட்டைக் கொண்டவர்களே இந்நாட்டின் ஆதிக்குடிகள் என்பதை நிரூபிப்பதாகவே நாற்பது முழ நீள மனிதர்களின் அடக்க ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

Tuesday, April 16, 2013

அப்பாஸ் ஜிலானியுடனான முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு பற்றி விசாரித்த ஜனாதிபதி


Commented by nizamhm1944 on
Lankamuslim.org
One World One Ummah

அப்பாஸ் ஜிலானியுடனான முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு பற்றி விசாரித்த ஜனாதிபதி

// அங்கு கருத்துரைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமாதானமாக வாழ்வதாகவும் முஸ்லிம்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது வெறும்  வதந்திகள்  என்று   தெரிவித்துள்ளார் .//

செய்தி உண்மையாயின், அஸ்வர் அவர்கள், அல்லாஹ் கண்டிக்கும் உண்மையுடன் பொய்யைக் கலப்பவர் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமாதானமாக வாழ்வது என்னமோ நியாயமான அளவு உண்மையே!  நடக்கும் குழப்பங்கள் மக்களிப்புடன் நடப்பதில்லை.

சிலர் அதனை மக்களின போராட்டமாக சித்தரிக்கிறார்கிறார்கள். யாரோ சிலர் எங்கோ நின்று குழப்பங்களைச் செய்து விட்டு அதனை மக்கள் மேல் போடு கின்றனர்.  தாம் எழுத வேண்டியதை எழுதிவி்ட்டு மக்கள் இப்படி நினைக்கின் றார்கள் என எழுதி தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ( நல்ல விடயங்களா யின் அதில் நானும் அப்படித்தான்) அரசு, எதிர்கட்சி அனைத்தும், சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகள் உட்பட அதைத்தான் செய்கின்றன. ஏன் மதத் தலை வர்கள் என்போர்கூட விதிவிலக்கல்ல. புலிகளும் தாங்கள் செய்ய வேண்டிய அக்கிரமங்கள் அனைத்தையும் மக்களின் பெயராலேயே செய்தனர். அழிவைத் தமது மூலதமாக்கிக் கொண்டனர்.

ஆனால் பாவம் அப்பாவி மக்களின் பெயர் அநியாயமாகப் பாவிக்கப்பட்டு,  பாதிப்படை ய வைக்கப்படுபவர்களும் அந்த மக்களே!

விடயத்துக்கு வந்தால், “முஸ்லிம்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது வெறும்  வதந்திகள்“ என்று கூறியதன் மூலம் அஸ்வர் பொய்யைக் கலந்துவிட்டார். இம்மாதிரியானவர்கள்தான் குழப்பக்காரர்.

 குர்ஆன் குழப்பக்காரர்கள் விடயத்தில் இப்படிக் கூறுகிறது:

5:32 - இதன் காரணமாகவே, ”நிச்சயமாக எவரொருவர் ஒரு ஆத்மாவுக்குப் பகரமாக, அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்திற்காகவோ அல்லாமல் மற்றோர் ஆத்மாவைக் கொலை செய்வாரோ, அப்பொழுது அவர் மனிதர்கள் அனைவரையும் கொன்றவர் போன்றாவார்.  மேலும், எவரொருவர் அதனை உயிருடன் வாழவிடுவாரோ, அப்பொழுது அவர் மனிதர் அனைவரையும் உயிர் வாழவிட்டவர் போன்றவராவார்.” என்று இஸ்ராயீல் சந்ததிகள் மீது விதியாக்கினோம்.  .....

5:33 - அல்லாஹ்வுடனும், அவனுடைய  தூதருடனும் போர் தொடுத்து இப் பூமியில் குழப்பத்தைச்செய்துகொண்டு திரிபவர்களுக்குரிய தண்டனை யானது, அவர்கள் கொல்லப்படுவது, அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுவது, அல்லது அவர்கள் மாறுகால், மாறு கை துண்டிக்கப்படுவது. அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவது. இது அவர்களுக்கு இவ்வுலகில் உள்ள இழிவு ஆகும். மறுமையில் அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு.



// அங்கு கருத்துரைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமாதானமாக வாழ்வதாகவும் முஸ்லிம்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது வெறும்  வதந்திகள்  என்று   தெரிவித்துள்ளார் .//

செய்தி உண்மையாயின், அஸ்வர் அவர்கள், அல்லாஹ் கண்டிக்கும் உண்மையுடன் பொய்யைக் கலப்பவர் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

நக்குண்டார் நாவிழக்கலாம். அதிலும் மிகச் சிறு நியாயமுண்டு. ஆனால்,  அஸ்வர் நடந்ததை, உலகறிந்ததை, நிரூபணமானதை, மாண்புமிகு ஜனாதிபதி கூட தனக்கு தெரியாது என்றோ, அப்படி நடக்கவில்லை எ்னறு கூறாததை, பாதுகாப்புச் செயலாளர் கூட நடந்தவைகளுக்கு தாம் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை எனக் கூறியதன் மூலம், இங்கு முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இடம் பெற்றுள்ளது என்பதை மறுக்காததை, வேறு யாரும் மறுத்ததாகவும் தெரிய வில்லை, பொது பல சேனா கூட இதில் தாம் சம்பந்தப்பட்டிருக்க வில்லை எனக் கூறி, நடந்த அக்கிரமங்களை ஒத்துக்கொண்டுள்ளதை வதந்தி எனலாமா?  ஆனால், உலகில் அவை ”வெறும் வதந்திகள்” எனக் கூறிய ஒருவர் அஸ்வர் அவர்களே.

இவரை உலகின் மிகப் பெரிய பொய்யைக் கூறியவர் என்பதற்காக, அவரது பெயரை கின்னஸில் பதிவு செய்வதற்காக சிபாரிசு செய்யலாம்.

Monday, April 15, 2013

இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org

இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவில் 
20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு

நிதியுதவிகள் என்ற சொற்றொடர் மறைமுகமாக, பெறப்படும் நாடு தமது கட்டுப்பாட்டுள் இருக்கின்றது என்பதைக் கூறுவதே! எப்போது இவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ, அப்போது முன்னைய கருத்துக்கு மாறான போக்கை  வெளிப்படுத்தும்.

இன்றேல் உதவி பெற்ற நாடு தன்னளவில் தன்னிறைவு பெற்று, இனி எவருடைய உதவியும் தேவை இல்லை என்ற நிலையை அடைவது. அப்போது அது சுயமாக இயங்கும் நிலையை அடைகின்றது.

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க முன்னணி பௌத்த தேரர்கள் முயற்சி

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க 
முன்னணி பௌத்த தேரர்கள் முயற்சி

உண்மையான, நேர்மையான கருத்துக்களுடனான விமர்சனங்களை பிரசுரியாமல் விடுவது குர்ஆனின் அடிப்படையில் குற்றமே!

4:105 – அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்.

நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டாம் இது இறைகூற்றே!

33:39 – அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வின் தூதுச் செய்தியை எடுத்துரைப்பார்கள். மேலும், அவனையே அஞ்சுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த ஒருவருக்கும் அஞ்ச மாட்டார்கள். கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

லங்கா முஸ்லிம் என்ற பெயருடன் இயங்கும் தாங்கள் குர்ஆன் வழியில் உங்கள் கடமையைச்செய்வதே நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கு சரியான செய்திகள் சென்றடையச் செய்வது உங்கள் பொறுப்பே!

பொது பல சேனாவுக்கு அமெரிக்க பெளத்த விகாரை கடும் எதிர்ப்பு



Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

பொது பல சேனாவுக்கு அமெரிக்க பெளத்த விகாரை கடும் எதிர்ப்பு

// Therefore, the Management Committee requests our devotees not to participate in any of these activities and not to support this extremist group now or in the future.//

This clearly shows the status-core of the BBS.  Its time to the BBS to do a self criticism on their past activities and their policies!


பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டித்த அமைதி ஊர்வலம் தடுக்கப்பட்டுள்ளது



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டித்த அமைதி ஊர்வலம் தடுக்கப்பட்டுள்ளது


The pictures and videos are self explanatory and need no clarification.

Those who came with the candles were peace lovers and their motive was to register their views in the public.

The police men could have handle the peaceful protesters in a better way.  They have the right to protest peacefully and Police has the duty to allow them to exercise their due rights..

// All while Dilantha Withanage (member of the BBS), charges that those who’d attended the vigil were trying to change the National Anthem, and that it is a criminal offence because it is against the Constitution. //

Do they know that there is a constitution in this country to follow by everyone in all the time.

Sunday, April 14, 2013

முஸ்லிம்களை புண்படுத்தும் செயற்பாடுகள், கருத்துக்கள் குறித்து நிதானம் தேவை


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்களை புண்படுத்தும் செயற்பாடுகள், கருத்துக்கள் குறித்து நிதானம் தேவை

பன்றி இறைச்சியை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது அசுத்தமென்பதால் அதனைத் தடை செய்துள்ளதாகக் கூறியுள்ளான். இது உண்பதற்கான தடையே தவிர, வேறல்ல. இதற்குக் கூட விதிவிலக்குகளும் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டுள்ளது என்பது நமது உணர்வினுள் வரும்போது அல்லாஹ் வின் கருணையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்தான் பன்றியையும் படைத்தவன் என்பதை நாம் ஏற்றுக் கொள்வோ மோயின், பன்றி உருவத்தில் வரும் பொருட்கள் நமது உள்ளத்தைப் புண்படுத்த முடியாது. அப்படியென்றால் அல்லாஹ் பன்றியைப் படைத்ததன் மூலம் நமது உள்ளத்தைப் புண்படுத்துவதான கருத்தியலை ஏற்படுத்தும்.

அனைத்து உயிரினங்களும் ஒரு ஆத்மாவில் இருந்து படைக்கப்பட்டுள்ளன என்ற அல்லாஹ்வின் கூற்றை முஸ்லிம்களாகிய நாம் அறிவோமானால், நம்மிடம் காணப்படும் வெறுபபுணரச்சி நம்மை விட்டு அகன்றுவிடும். அசுத்த மென்பதால் உண்பதற்கு மட்டும் தடைவிதித்துள்ளானே தவிர, அவ்வுரு வத்தைப் பார்க்கக் கூடாது, அப்பெயரைக் கூறக் கூடாது என்பதல்ல.  அவ்வுரு வத்தில் எதனையும் செய்யக் கூடாது என்பதல்ல. மார்க்கம் பிழையாக விளங்கிக் கொள்ளப் படும் இடமிது. ஊர்வனவற்றில் மிக மோசமானது விளங்கிக் கொள்ளாத மனிதர் என்பது அல்லாஹ்வின் வார்த்தை. அத்தோடு விடாமல், விளங்காதவர்கள் மீது வேதனையை ஏற்படுத்தி விடுவதாகவும் கூறுகிறான்.

நாம் பிழையாக விளங்கிக் கொண்டு, இம்மாதிரி தேவையற்ற விடயங் களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, இஸ்லாமியனாக இருப்பதற்குத் தேவையான ஈமான் என்ற நம்பிக்கைக்குக் கொடுப்பதில்லை. அதனை ஸ்டீரியோ டைப் என்பார்களே அப்படி வைத்துக் கொண்டுள்ளோம்.  நமது ஈமானை, புர்கான் என அல்லாஹ்வால் பரிந்துரைக்கப்பட்ட குர்ஆன் என்ற உரைகல்லில் உரைத்துப் பார்ப்பதில்லை. ஈமான் கொண்டு நற்செயல் செய்பவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தையே பரிசாகக் கொடுக்கிறான். அவர்களை வெற்றியாளர்கள் என்கின்றான். அனேகமான இடங்களில் ஈமானையும் நற்செயலையும் இணைத்துப் பேசுகிறான்.

சிலர் இந்த நற்செயல் என்பதற்குக் கூட, அவை இஸ்லாமிய கடமைகள் என விளக்கம் கொடுத்து, அல்லாஹ்வின் பரந்துபட்ட நோக்கத்தை குறுகிய எல்லைக்குள் அடக்கி விடுகின்றனர்.

என்னை நினைவு கூருங்கள் நான் உங்களை நினைவு கூருவேன் என்கின் றான். அதனை அறிய முற்படுவதில்லை.  நினைவு கூருதலைப் பிழையாக விளக்கம் கொடுத்து, அவனது படைப்புக்களில் அல்லாஹ்வை நினைவு கூர்தல் என்கின்றனர்.  இது பிற மதத்தவர்கள் செய்வது.  மேற்கண்ட வசனத் தின்படி, நாம் அல்லாஹ்வை அவனது படைப்புக்களின் மூலம் நினைவு கூர்ந்தால், அவனும் உங்களை நினைவு கூர, அவனது படைப்புக்களையே நினைவு கூரவேண்டும். இது அல்லாஹ்வின் கண்ணியத்தையே களங்கப் படுத்துவது.

தொழுகையே அல்லாஹ்‌வை நினைவு கூர்வதென்பதை 20:14ல் அறிந்து,  ஏற்று,  நினைவு கூர முயற்சிப்போமாயின், அச்சமயத்தில் அவனது படைப் புக்களை அறிந்து நினைவு கூரல் என்ற மனோஇச்சையுள், அவனை மட்டுமே நினைவுகூர்வதென்ற நிலை மாறி, அவனுக்காகவே செய்யப்படும் தொழுகை தனது பண்பை இழந்து, தொழுகையாளிகளுக்குக் கேடுதான், அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே தொழுகிறார்கள். தன்னை நினைவு கூரவல்ல என்ற நிலையை உருவாக்கும்.

மேலும். அல்லாஹ் படைப்பை அறிவதன் மூலம் அவனது அத்தாட்சிகளை அறியலாம“, படிப்பினைகள் பெறலாம் எனத்தான் கூறியுள்ளான். உங்களுக் குள்ளும் கவனித்துப் பார்க்க வேண்டாமா என்பது அவனது இருப்பை ஊர்ஜிதம் செய்வதே. ஆம் அவன் பிடரி நரம்புக்கும் அருகாமையிலும் இருக்கிறான்.

அவனை   நினைவு கூர்வதற்கு அவனைப் பார்த்திருக்க வேண்டும். பார்க்காத ஒன்றை ஒருவர் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் நம்மால் நினைவு கூர முடியாது. வேண்டுமானால் யூகிக்கலாம். யூகங்களை அல்லாஹ் அனுமதிக்க வில்லை. தகப்பனை நினைவுகூர அவர் கட்டித் தந்த வீட்டை நினைவு கூரலாமா?

யாரிடமாவது. ஏன் கற்றறிந்த பலரிடம் நான் அல்லாஹ்வைப் பார்ததிருக் கிறீர்களா எனக் கேட்டால், இல்லை எனவும், அவனைப் பார்க்க முடியாதே எனவும் கூறுகின்றனர்.  அல்லாஹ்வை நமது பார்வைகள் அடைய முடியாது எனக் கூறி, தனது பார்வை எல்லோரையும் அடைவதாகக் கூறுகிறான். இதற்குக் கூட பிழையான விளக்கங்களைக் கொடுக்க முனைகின்றனர். இவர்களே தாமும் அறியாமல் பிறரையும் வழிகெடுப்பவர்கள் என அல்லாஹ் வால் கூறப்படுபவர்கள்.

எவர் இவ்வுலகில் குருடராக இருந்தாரோ, அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் அவர் பாதையால் மிகத் தவறியவர் என்ற வசனம் 18:72, நம்மால் பார்க்க முடியாது என்றதைக் கூறுகிறதா? பார்வைகள் தன்னை வந்தடைவ தில்லை, தான் பார்வைக்குள் வந்து விடுவேன் என்றுதானே கூறியிருக்கிறான். ஆக நாம் இவைகளை ஈமான் கொள்வதில்லை.  விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். வீணாக எதனையும் அல்லாஹ் கூறுவதில்லை என்பதை நம்புவ தில்லை.

அதனை நம்பியவர்கள் சொர்க்கம் சென்றார்களோ என்னவோ (இணைவைக் காதிருந்தால் செல்வர்.) தொலைக் காட்சியைப் படைத்து, நம்மையெல்லாம் நம்மால் கண்டு கொள்கொள்ட  முடியாதவைகளை, நமது பார்வைகள் சென்றடைய முடியாதவைகளை, நமது பார்வைக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் கூட நாம், அல்லாஹ்வின் வசனத்தை ஏற்று அதன்படி நடக்க முற்படுவதில்லை.

தான் பொறுப்பேற்பவன் வக்கீலு என்பதை, பொறுப்பேற்பதில் நல்லவன் எனக் கூறியதை நாமும் கூறிக் கொள்வோம், அதனைப் பேச்சளவில் நம்புவோம், தவிர அவனிடம் காரியங்களை ஒப்படையோம். நிறைவேற்றி வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர இல்லை என்போம், ஆனால் இதுவும் முன்னையதைப் போன்றதே! இதனால்தான் அல்லாஹ் முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் என்கின்றான். நமது ஈமான் இப்படித்தான் உள்ளது.

முன்னர் அல்லாஹ்வை நாம் கண்டிருக்கவில்லை என்ற நமது பிழையான கருத்தியலை, குர்ஆனில் உரைத்துப் பார்த்த போது அங்கு 7:172 மிகத் தெளிவாக நாம் அல்லாஹ்வைக் கண்டு சாட்சியம் கூறியது வெளிப்படுத்து கிறது. அதனைத்தான் நம்மை நினைவு கூரும்படி அழைப்பு விடுக்கின்றது.  நாம் மறதியாளர்களாக இருக்கின்றோம். பின்னர் மறுமையில் வந்து நாம் மறநது விட்டோம் என்பதற்கு புகல் கூறாமல் இருப்பதற்காக தற்போது நமக்கு ஞாபகமூட்டி எச்சரிக்கை செய்கிறது.

அதனால் சிறு சிறு  தேவையற்ற விடயங்களில் முஸ்லிம்களின் கவனத்தை செலுத்த வைப்பதை விடுத்து,  அவர்கள் எதனைச் செய்யாமல், அறியாமல், அறிந்தாலும் முயற்சிக்காமல் இருக்கிறார்களோ அவற்றை எத்தி வைக்க முனையுங்கள். இவைதான் மக்களைச் சென்றடைய வேண்டியவை. இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரவிருப்பவை. மற்ற அனேகமானவை கவனச் சிதைவைத் தவிர, இறைநோக்கை நிறைவு செய்யா!


مصر ترفض الإعلان الأممي الجديد بشأن المرأة

مصر ترفض الإعلان الأممي الجديد بشأن المرأة

இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?


அறிவீனரைப் புறக்கணித்து விடுவீராக என்பது குர்ஆனிய அறிவுரை, அறவுரை. ஆனால் திட்மிட்டு ஒரு மதத்துக்கு எதிராக சட்டமியற்றி, சர்வாதிகாரமாக, அவர்களது புதிய மதத்தைப் பின்பற்றும்படி கேட்பது அநியாயம், மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் வேண்டுமானால் ஒரு புதிய மதத்தையே உருவாக்கி காட்டுமிராண்டிகளாக வாழட்டும். ஆனால், தமது பலத்தால், தமது காட்டுமிராண்டிச் சட்டங்களை மக்களுக்கு்ப் புகுத்தக் கூடாது. அடுத்த மதச் சட்டங்களை நீக்கும்படி கூற முடியாது. 

ஐக்கிய நாடுகள் சபையில்
இருக்க வேண்டியது ஐக்கியமே!
இல்லாமல் அங்கு
இருப்பதும் ஐக்கியமே !

எப்போது மேற்கண்ட சபையில் ஐக்கியம் இல்லை என்பது நிரூபண மாகின்றதோ, அப்போதே அது தனது இயங்கும் தகுதியை இழந்துவிட்டது என்பதே உண்மை! அந்த வகையில் அச்சபை ஓர் சட்ட விரோதமாக நடத்தப்ப்ட்டுக் கொண்டிருக்கும் சபையே!

ஐக்கியம் இருந்திருந்தால், தமது சட்டங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டியதில்லை.  ஆனால் அங்கு ஒரு சட்டமும் வாக்களிப்பின்றி நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. அதற்கான செயலாளர் நாயகம்கூட போட்டியின் அடிப்படையில் நடைபெறுவதே போதும் அது “ஐக்கியம்“ என்ற சொல்லைப் பாவிக்கத் தகுதியற்றது என்பது. அது ஏமாற்றிக் கொணடிருக்கும் குற்றமும் கூட. 

சில வேளை அவர்கள், தாம் தமது யாப்பின்படி நடந்து வருகின்றோம் எனக் கூறுவார்களாயின், அவர்கள் யாப்பியற்றலிலேயே பிழையை விட்டு,  பெயருக்கு மாறான யாப்பை உருவாக்கியுள்ளனர் என்பதே. உண்மை. ஆதலால், பிழையான ஒரு சட்ட விரோத சபை எடுக்கும் தீர்மானங்களை உலகம் பின்பற்ற வேணடும் எ்னபதல்ல. 

அவர்களது முட்டாள் தனத்தையும், அராஜகத்தையும், அத்துமீறலையும் வெளிப்படுத்துகிறது இச்சட்டவாக்கத்தில் உள்ள சில: 

 7. திருமணத்தைப் பொறுத்தவரை, பலதார மணம், ‘இத்தா’ மேற்கொள்ளல், ‘வலீ’யை ஏற்படுத்தல், ‘மஹ்ர்’ அளித்தல், ஆண் குடும்பத்தின் செலவுகளை ஏற்றல் ஆகிய நடைமுறைகளை அகற்ற வேண்டும்; ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணை மணமுடிக்க அனுமதிக்க வேண்டும்.

8. மணவிலக்கு (தலாக்) அளிக்கும் அதிகாரத்தைக் கணவனிடமிருந்து பறித்து, நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். ‘தலாக்’ ஆனபின் எல்லா சொத்து களையும் இருவரிடையே பங்கிட வேண்டும்.

மற்றைய சட்டங்களும், இயற்கையையும், இறைநியதியையும், மனித வாழ்வையும் சீரழிக்கும் சட்டங்களாக இருந்ததாலும்,   மேற்கண்ட இரு சட்டங் களும் ஒரு மதத்துக்கு எதிரான தன்மையைக் கொண்டுள்ளதுடன், தனது சர்வாதிகாரத் தன்மையை வெளிப்படுத்தி, குர்ஆனிய சட்டத்தை மாற்றும்படி கூறுகிறது.  இது அவர்களின் அயோக்கியத் தனத்தை வெளிப் படுத்துகிறது. 

ஆதலால், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் உடனடியாக இந்த ஐக்கியமற்ற சபையைவிட்டு விலக வேண்டும். அதற்கு அளிக்கும் நிதியை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடணம் செய்ய வேண்டும். 

குறிப்பு: இதுவரை இஸ்லாமிய நாடுகளைக் குறிவைத்து, பொய்க் காரணங் களைக் கூறி, ஒவ்வொன்றாக அழித்து வெற்றி கண்ட மமதையில், தற்போது இஸ்லாத்தையே அளிக்கும் வகையில், குர்ஆனிய சட்டத்தையே மாற்ற வேண்டும் எனக் கேட்கின்றது. இது அதன் அழிவை பிரகடணப்படுததுகின்றது. அல்லாஹ்வை யாரும் இயலாமல் ஆக்க முடியாது. ஒரு சத்தமே ஐநா சபையையே இருந்த இடம் தெரியாது அழித்துவிடும். அதற்கு முன்னர் அவர்கள் உடனடியாக இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். அல்லாஹ்விடம் மன்னிப்பும் கோர வேண்டும்.

Saturday, April 13, 2013

உரிமை


உரிமை

உரிமை கேட்போர், முதலில் உரிமை என தாம் நினைத்துக் கேட்பது,  கேட்கக் கூடிய உரிமைதானா ? அவ்வுரிமை தமக்கு உள்ளதா? என்பதைப் பகுப்பாய்வு செய்து அறிய வேண்டும்

அடுத்து அது, யாரிடம்? எப்படி? எப்போது? கேட்பவருக்கு அதனைத் தரும் தகுதி, அதிகாரம், அந்தஸ்து, மனம், தரக்கூடிய நிலை, சூழல், தந்தாலும் செல்லுபடியாகும் தன்மை,  நீடித்து நிலைக்கும் பண்பு  உள்ளனவா  போன்ற இன்னோரன்ன வற்றைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்னும், இவை எல்லாம் சரியாக உள்ளன, இப்போது நமது உரிமையைக் கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது, யார் கேட்பது, அவர் தகுதி, யோக்கியதை, திறமை, வழி நடத்தும் பண்பு, பொறுமை, விளக்கம், நிலை களங்கா உள்ளம், சரியான தேர்வு. தீர்மானம் எடுக்கும் சமயோசிதம், முன்பின் முரணற்ற தன்மை, ஆத்திரமடையாத உயர் பண்பு போன்றவைகள் உள்ளவராக,  உண்மை, நேர்‌மை, சுயநலமின்மை, எதிர்பார்ப்பின்மை அல்லது அத்த‌னை பண்புகளையும் கொண்ட சிறு குழுவாவது ஒன்றிணைந்து, ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்து கொளள வேண்டும்.

தர்ம் தேர்ந்தெடுத்த உரிமையைப் பெற்றுக் கொள்ளும், சாத்வீகமான வழிமுறை, எச்சந்தர்ப்பத்திலும் திசை திரும்பாது, வன்முறையாக மாறாது, அல்லது வன்முறைக்கு வித்திடாது, திசைதிருப்பப்படும் தந்திரங்களுக்குள் சிக்காமை ஆகிய மிக உயர்ந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.

நமது போராட்ட முறையைக் கண்டு சம்பந்தப்பட்டவர்களை உள்ளம் உருக வைத்து, கடின மனத்தையும் ஆட்டங்காண வைத்து, அடக்கு முறையால் இவர்களை வெல்ல முடியாது, இவர்களது பிரச்சினையைத் தீர்த்து, அவர்களது உரிமையைக் கொடுப்பதே ஓரே சிறந்த வழி என்பதை உரியவர்களை விளங்க வைத்து, நமது உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பொது மக்கள் நாம் கேட்கும் உரிமை

 நியாயமானதே, அதனை அவர்களுக்கு வழங்கவே வேண்டும், அப்படி வழங்குவதனால் நமது பண்பும் மரியாதையும் மேலோங்கும் போன்ற நிலையில் பெறப்பட வேண்டும். அப்படிப்  பெற்றுக் கொள்ளப்பட்ட உரிமையே நிலைத்து நிற்கும், அமைதியை உருவாக்கும். புரிந்துணர்வை ஏற்படுத்தும், ஒருவரை ஒருவர் மதிக்கவும், அவர்களது உரிமைகளை பாதுக்காக்கவும் கூடியதான நல்லெண்ண நிலையை ஏற்படுத்தும். நிஸாம்

குரோதத்தையும், கடும்போக்கையும் பரப்பும் நடவடிக்கைகளுக்கு தடை கோருவேன்


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

குரோதத்தையும், கடும்போக்கையும் பரப்பும் நடவடிக்கைகளுக்கு தடை கோருவேன்


தனது கையில் தடி ஒன்றை வைத்துக்கொள்ளும் உரிமையை யாரும் தடுத்திட முடியாதுதான், ஆனால், அதே தடி அருகில் இருப்பவன் தலையை அடிக்கடி பதம் பார்க்கின்றது எ்னறால், தடி வைத்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தடியை வைத்திருந்தவரே தண்டனைக்கு உட்பட வேண்டியவர்.

சட்டத்தின் முன் யாவரும் சமன் என்பதை வாசுதேவ கூட மறந்து விட்டார் என்ப‌ைத நினைக்கும் போது வருத்தமாகவே உள்ளது.

பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலாளருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் பல மணிநேரம் சந்திப்பு





Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலாளருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் பல மணிநேரம் சந்திப்பு


வழமையாக இலங்கைக்கு வரும் இராஜதந்திரகளிடம் அரசுக்கு ஆதரவான கருத்துக்க்ளை கூறுவதை தம் மரபாக ஆக்கிக் கொண்டவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்.  தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்ட போதுகூட இப்பா‌ரம்பரியம் மீறப்படவில்லை என்பது எம்மவர் பக்தியைக் காட்டுகிறது.

அண்மையில் கூட, பங்களாதேஸ் இராஜதந்திரியாக இருக்க வே்ணடும், அவர் இந்நாட்டில் மதங்கள் பற்றிய நல்ல கருத்தையே வெளியிட்டுச் சென்றார் என்பதில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கே உரித்தான  ஒழுக்க சீலத்திலிருந்து சிறிதும் வழுகியிருக்க வில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆயினும் கூட, இவை எவரினதும் கருத்தைக்கூட தொட்டிருக்கவில்லை என்பதே அவர்கள் நிலையை உணர்த்தும். இந்நிலை  நன்மையைத் தரப்போவதில்லை என்பதை இடித் துரைக்கும்.

கொடுக்கப்பட்டவைக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டதனால் தற்போது கொடுப்பதற்கு எதுவுமில்லை என்கின்றதா! இவைகளுக்காகத் தானே அனைத்தும் கொடுக்கப்பட்டன என்பதைப் புலப்படுத்துகின்றதா?

ஆதலால், தற்போது மட்டும் சிறப்பாக என்ன நடந்துவிடப் போகிறது? தமது பதவிகளைக் காப்பாற்றும் பணியை நன்றாகவே நிகழ்த்தியிருப்பர்.

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் சில இந்நாட்டுக்கு ஆதரவளித்ததைப் பற்றி வாய்கிழியப் பேசி, அதனால் முஸ்லிம்களை துன்புறுத்தாதீர்கள் என்று கூறுவதிலிருந்தும் உண்மைகள் தெளிவாகின்றன.  அடிமைத்தனம் வெளிப்படுகின்றது. சலுகை பெறும் மனப்பான்மை மிகைத்து நிற்கின்றது. உரிமை பற்றிப் பேசும் பண்பின் இல்லாமை  எட்டிப்பார்க்கின்றது.

பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளருடனான கூட்டத்தில் அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது: காதர்


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளருடனான கூட்டத்தில் அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது: காதர்

கூட்டத்துக்கு அழைக்கப்படாமலே அவதூறு கற்பிக்க முனையும் நீங்கள், கூட்டததிற்குப் போயிருந்தால் என்னென் கற்பனைக் குதிரைகளை ஓடவிட்டு, எரிகிற வீட்டில் பொறுக்கியது இலாபம் என உங்கள் பதவியை உயர்த்திக் கொண்டிருப்பீர்களோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

 குற்றவாளிகளை இனம் காட்டுவதற்காக அல்லாஹ் எப்போதும் அவர்களிலே ஒரு தடயத்தை ஏற்படுத்தி விடுகிறான். அப்படியான தடயம்தான் தாங்கள், யாரையோ குற்றஞ்சாட்டப் போய் அந்த வலையிலே நீங்கள் சிக்கிக்கொண்டுள்ளது.

// இதற்கு நான் அழைக்கப்பட்டிருக்கவில்லை.//

பல காரணங்களால் ஒருவரைப் புறக்கணிப்பது மரபு.  அவற்றுள் முக்கியமான இரு வகைகளில், ஒன்று, அநியாயக்காரர்களால் நடத்தப்படும் நிகழ்வில், நியாயமாகச்செயல்படும் ஒருவரது எதிர்ப்புக்களைத் தவிர்ப்பதற்காக அவரைக் கூப்பிடாமல் விடுவது,

இரண்டாவது, நியாயவாதிகளின் சபையில அல்லது  நல்லதை, உண்மையைப்  பேச வேண்டிய சபையில், சுயநலத்துக்காக உண்மைக்கு மாறானவைகளைப் பேசிக் காரியத்தைக் கெடுப்பவர்களை தவிர்ப்பதற்காக விடடுவிடுவது.

இதில், எந்த வகைத்துள் தாங்கள் அடங்குவீர்கள் எனபதை உங்கள் மனசாட்சி சொல்லும். இதற்கு முன்னர் தாங்கள் இம்மாதிரியான விடயங்களில் வெளியிட்ட கருத்துக்கள் விளங்க வைக்கும்

// அங்கு அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது //   தாங்கள் இப்படிப் பேசியதன் மூலம், உங்களை அறியாமலேயே அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியுள்ளீர்கள். உங்கள் கூற்றான “அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது” எ்னற வசனம் அரசு குற்றம் செய்துள்ளதாக மறைமுகமாகக் கூறுகிறதா? முஸ்லிம்களுக் கெதிராக இந்நாட்டில் முன்னெடுக்கபட்ட நிகழ்வுகள் பகிரங்கமாக மேளதாளத்துடன் அரங்கேற்றப்பட்டவை என்பதால், குற்றம் செய்தோர் யார் என்பதை அரசு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உங்கள் கருத்து வெளிப்படுத்துகின்றதா?

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும், அரசுக்கு எதிராகப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என உங்‌களைக் கேட்கத் தவறிவிட்டாதாகவே நான் கருதுகிறேன். அப்படிக் கேட்டிருந்தால் உங்கள் வேஷம் களைந்திருக்குமா?

// ஆளும் கட்சியில் 16 பேர் இருக்க ஒரு சிலரை அழைப்பதேன் //  இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டியவர்கள், அழைப்பாளர், அல்லது அமைப்பாளர், ஒழுங்குபடுத்தியவர்கள். அதைவிடுத்து, உங்கள் கேள்வியை பாராளுமன்றில், அதுவும் ஜனாதிபதியிடம் கேட்டதிலிருந்து நீங்கள் யாரென்று வெளிப்படுத்தி விட்டீர்கள்.  நீங்கள் கஃபத்துல்லாவில் கூட உங்கள் வேட்கையை தீர்த்துக் கொள்பவராயிற்றே என்பதை ஏற்கனவே நீங்களே வெளிப்படுத்திய செய்திகளும் உண்டே!

Friday, April 12, 2013

சுரேஷ் பிரேமசந்திரன் கூற்று வன்மையான கண்டனத்தை உருவாக்கியுள்ளது


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

சுரேஷ் பிரேமசந்திரன் கூற்று வன்மையான கண்டனத்தை உருவாக்கியுள்ளது


கோழி கூவி விடிவதில்லை.  இவர்கள் எல்லாம் யார் முஸ்லிம்கள் பற்றிப் பேச. அவர்களுக்கு வன்னியில் என்ன உரிமை உண்டு? குழப்ப சூழலில் உறுப்புரிமை கிடைத்துவிட்டால் எதையும் பேசிவடலாம் என்ற நினைப்பா?  உங்கள் உரிமைகளை வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களின் உரிமை பற்றித் தீர்மானிக்கும் வேலைகளில் இறங்கி விடாதீர்கள்.

அப்பாவி முஸ்லிம்களை காரணமி்ன்றி விரட்டிய புலிகள் இப்போது உலகிலேயே இல்லை. இப்படித்தான் அநியாயம் செய்ய முற்படுவோர் இறைவனால் தண்டிக்கப்படுவர்.

தண்டனை வருமுன் தவறை உணர்ந்து திருந்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த அநியாயங்களுக்குப் பரிகாரமாக நல்லதை எண்ணுங்கள். நல்லதைச் செய்யுங்கள். நீங்க்ள மன்னிக்கப் படலாம். இன்றேல் மனித சாபத்துக்கும், இறைசாபத்துக்கும் உள்ளாவீர்கள்.

முஸ்லிம் சமூகம் ஹலால் பற்றி பேசாமல் இருக்க முடியாது


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம் சமூகம் ஹலால் பற்றி பேசாமல் இருக்க முடியாது


ஹலால் என்ற சொல் உணவில் மட்டும் பெரிதும் பாவிக்கப்படுகின்றதுஆகுமான அனைத்தும் ஹலால் தான், குர்ஆனில் கூறியதை மட்டும் செய்வதும் ஹலால்தான். தவிர்க்க வேண்டியதைக் கூறியிருந்தால் அதனைத் தவிர்ப்பதும் ஹறாம் தான்

ஹலால் பின்பற்றப்படுவதற்கு ஹறாம் பற்றிய பூரண அறிவே வேண்டப் படுவது. இதனை எத்திவைத்தலே ஒவ்வொருவரினதும் கடமைஅதனைப் பின்பற்றுவதும் ஒவ்வொரு தனி நபரினதும் கடமை. அந்த வகையில் அல்லாஹ் கூறாதைச் செய்ய முற்படுவதும் ஹறாமையும் தாண்டி ஷிர்க் கிலும் தள்ளிவிடுகிறது.

42:21 - “ மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்கவில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர் களுக்கு இருக்கிறார்களா? தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக் காரர்கள் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.“

உணவைப் பொறுத்து, அல்லாஹ் தடுக்காத ஹலால் உண்பதை உலகில் எவராலும் தடுத்துவிட முடியாதுஅப்படியாயின் அனைவரும் ஹலால் அல்லாததான செத்ததையும், இரத்தத்தையும் (அதுவும் அறுக்காமல் கிடைக்காது) பன்றி இறைச்சியையும்தான் உட்கொள்ள வேண்டும்

மேலும், அல்லாஹ்வோ, நபிகளாரோ காட்டித்தராத ஒரு நடைமுறை யான, ஹலால் சான்றிதழ் வழங்கியதும், ஹலால் முத்திரை குத்திய பிழையான நடைமுறையும்தான் தடைக்குள்ளாகி உள்ளது. தவிர ஹலால் உணவோ, ஹலால் உணவு உண்பதோவல்ல. அல்லாஹ்வை யாரும் இயலாமலாக்கிட முடியாதுஅது மதகுருமார்களோ, முஸ்லிம் அறிஞர் களெனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரியே! அல்லாஹ் மிக நுடபமாக தனது காரியங்களைச் செயற்படுத்துபவன் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஹலால் முத்திரை குத்தும் நடவடிக்கை தொடருமாயின், அப்பாவி முஸ்லிம்கள் முத்திரை பார்த்து தமது உணவைத் தீர்மானிக்கும் பண்பு வளர்ந்து, ஹலால் முத்திரை குத்தப்படும் ஹறாமான உணவுகளையும அறியாமல் வாங்கி அருந்தும் அபாயம் உருவாகும். அடுத்து அல்லாஹ் கூறிய ஹஹாமைத் தவிர்த்தல் என்ற குற்றத்துக்கும் நிராகரிப்புக்கும் ஆளாவர். இறைசட்டம் புறக்கணிக்கப்பட்டு, மனித சட்டங்கள் அமுல் நடத்தப்படும் அபாயம். வழிகேடே!

2:168 மூலம் அனைத்தையும் உண்பதற்கு ஆகுமாக்கி, 2:172, 173, 5:3, 5:87, 5:88,6:119, 6:145,6:146,148, 16:114,115,116, 10:59 ஆகியவற்றின் மிகவும் விரிவாக தடை செய்யப்பட்டவைகளைக் கூறி, அவற்றுக்குக்கூட விதிவிலக்கு களையும் முன்வைத்து தனது கருணையை மனிதர் மீது முழுமையாக்கி வைத்துள்ளான். விதிவிலக்கு கூட அவனது கருணையின் பாற்பட்டது என்பதால், அவனது விதிவிலக்கை மக்கள் அனுபவிக்க எவரும், எதுவும் தடையாயிருப்பதும் ஓர் வரம்பு மீறலே, அவனது கருணை மனிதரைச் சென்றடைய தடையாயிருப்பதே, நிராகரிப்பே!

மேற்கண்ட அல்லாஹ்வின் வசனங்களை வைத்துதற்போது பொதி செய்யப்படும் உணவு வகைகளை முஸ்லிம்கள் கண்டறிய முடியாது என யாராவது கூற முற்படுவார்களாயின் அது நிராகரிப்பு மட்டுமல்ல, அல்லாஹ் இயலாமல் ஆகிவிட்ட பயங்கரத்தை உருவாக்கி அவனது கண்ணியத்தையே கேள்விக்குள்ளாக்கியதாக மாறிவிடுகிறது,

குர்ஆன் வழிகாட்டி என்பதும், அல்லாஹ் வழிகாட்டுபவன்,  பாதுகாவலன் என்பதும் மாறி, உலமாக்களும், ஹலால் முத்திரைகளும்தான் வழிகாட்டி,  பாதுகாவலர் என்றாகிவிடும்