Thursday, June 6, 2013

மாகாண சபை முறையில் புதிய மாற்றம் கொண்டுவர அரசாங்கம் முனைப்பு

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

மாகாண சபை முறையில் புதிய மாற்றம் கொண்டுவர அரசாங்கம் முனைப்பு


இந்த நாடடில் நடப்பதைப் பார்த்தால் புத்த மதம்கூட பெயரளவில்தான் இருக்கும் என்பதாகவே தெரிகிறது. அதுவும் யாருடை யவோ பாட்டுக்கு ஆமாம் போடுபவர்களாக அல்லது கூ த்துப் போடுபவர்களாகவே இருக்கப் போகிறார்கள். 

காசு பறிக்கும் கஷினோக்களும், றேஸ் கிளப்புகளும், மது, மாது, சூது நிலையங்களும் தான் தமது ஆதிக்கத்தைச் செலுத்தப் போகின்றன. பொழுது போக்குத் தலமாவும், வெளிநாட்டார் இன்புறவும், களி தீர்க்கவும், கொள்ளை கொள்ளவுமான உல்லாச, சல்லாப புரியாகப் போவதென்னவோ உண்மையென சமூக ஆர்வலர்கள் நினைப்பதில் உண்மை இல்லாமலும் இல்லை.

மதம் நச்சுக் குளிகைகளுக்கு மேல் பூசப்படும் இனிப்பாக மாறி தனது கைவிங்கரியத்தைக் காட்டத் தொங்கி விட்டது போன்று தெரிகிறது.   மருந்தாக அருந்தும் மக்கள் எதற்கோ விருந்தாகப் போகின்றனர்! மதவாதங்களுக்குப் பின்னால் மறைந்து கிடப்பனவற்றை மக்கள் அறியாத வரை இது நீளவே செய்யும். 

அழிவுப் பயணம்கூட ஒரு புள்ளியில்தான் தொடங்குகின்றது என்பது யதார்த்தம். நாம் விடும் சிறு பிழைகள்கூட ஈற்றில் பூதாகரமாக, விஸ்வரூபம் எடுத்து நம்மையே அழிக்கும் போதுதான் நாம் உணர்கிறோம். அப்படித்தான் அழிந்தன முப்பது வருடங்கள்.  அது தற்போது மறக்கப்பட்டுவிட்டதோ என நினைக்க வைக்கின்றது தற்போதைய செயற்பாடுகள். பிளஸ மைனஸாகின்றது. இதுவே ( multiple ) பெருக்கல் ஆகி (division ) பிரித்தல் ஆகாமல் இருந்தால் சரியே!

No comments: