Sunday, June 23, 2013

புற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி

புற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி

மனித உடல் கலங்களால் ஆக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும்,  நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங் களுக்கு  முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன்களே. இவைகளுள்ளே நாமறியாமலே நம்மனைவரது உடலிலும் புற்று நோயை உருவாக்கக் கூடிய கலன்களும் உண்டு. இவை நமக்குத் தெரிவதில்லை. தரமான வைத்திய பரிசோதனைகளின் போதுகூட இவை தெரிய வருவதில்லை. இக்கலன்கள் பல பில்லியன்களாக பெருகும் வரை அவை கண்டு பிடிக்கப்படுவதில்லை. மேலும் இந்நோயால் தாக்கப்பட்டோரைச் சிகிச்சையின் பின்னர் பார்வை யிடும் வைத்தியர், நடைபெற்ற வைத்திய பரிசோதனை அறிக்கைகளின்படி இனி அந்நோயாளிக்குப் புற்று நோய் வராது. அதற்கான கலன்கள் எதுவு மில்லை என்று கூறுவர். ஆனால் அது உண்மையுமல்ல. அந்த வைத்தியர் கூறியது பொய்யுமல்ல. ஆக வைத்திய பரிசோதனையில் கண்களுக்கு அகப்படாத கலன்கள் நம்முடலுள் இருக்கும் என்பது யதார்ததம். அத்தகு கலன்கள் பல்கிப் பெருகியோ அன்றி வளர்ச்சியடைந்தோ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கக்கூடிய அளவை அடைந்த பின்னரே இந்நோய்க் கலன்கள் நம்முடலில் இருப்பது தெரிய வருகிறது. 

நம்மை அறியாமலே நம்மைத் தாக்கி இறுதிவரை வெளிக்காட்டாமலும், அன்றி இறுதி நிலையில் வெளிக்காட்டியும் துன்பத்தில் துவளவைப்பவை இக்கலன்கள். இந்நோயைக் கட்டுப்படுத்த அல்லது சுகப்படுத்த தற்போது Chemotheraphy  எனப்படும் மருந்தூட்டல் முறையும்  Radiotheraphy எனப்படும் கதிர் வீச்சுக்களைப் பயன்படுத்தி அவ்வாறான கலன்களை அழிக்கும் சிகிச்சை யும் மேற்கொள்ளப்படுகிறது. இவையிரண்டோடு அறுவை சிகிச்சை தவிர தற்போதைக்கு வேறு வைத்திய வசதிகள் இல்லை. இந்த முதல் இரண்டு வகைச் சிகிச்சை முறைகளும் புற்று நோய்க் கலன்களை அழித் தொழிக்கும் முறையே. இம்முறையிலான சிகிச்சைகளின் போது நமதுடலில் காணப் படும் நோய் எதிர்ப்புச் சக்திகளைக் கொண்ட கலன்களும் கூடவே அழிந்து போகின்றன. இத்தாக்கங்கள் மேற்கண்ட சிகிச்சைகளின் போது தவிர்க்க முடியாமல் நடைபெறுவது. இது நம்முடலின் இயற்கையான நோய் எதிர்ப் புக் கலன்களின் அழிவை உண்டுபண்ணுவதால், ஒவ்வோர் ஷணமும் எந்த நோயாலும் பாதிக்கப்படும் நிலையை நோயாளி அடைகிறான். அதனால் புற்று நோய் கண்ட நோயாளி தொடர்ச்சியாக ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்கங்களுக்கும் இலகுவாக ஆளாகித் துன்பத்திலுழலுகின்றான்.  இந்நிலை யைப் போக்கு வதற்குத் தற்போது இயற்கையோடு ஒட்டிய உணவுப் பழக்கங் களையும், சுகாதாரப் பழக்கங்களையும், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை யும் நன்மை தருவனவாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது நமது உடலை  உணவு, காற்று, உடற்பயிற்சி போன்றவை வளர்க்கின்றன. அப்படி வளர்க்கப் படும் போது புற்று நோய்க் கலன்களும் நம்முணவுகளிற் சிலவால் வளர்க்கப்படுகின்றன. ஏற்கனவே நமதுடலில் காணப்படும் தீய கலன்களை அழித்தொழிக்கும் நல்ல கலன்கள் பலம் பெற்றிருந்தால் அப்புற்று நோய்க் கலன்கள் அழிவைச் சந்திக்கின்றன. இதற்கு மாறான நிலையில், புற்று நோய்க் கலன்கள் பல பில்லியன்களாகப் பெருகியும், வளர்ச்சி அடைந்தும் வந்துள்ளமையை வெளிப்படுத்தும். அதாவது புற்றுநோய்த் தாக்கத்துக்கு ஆளாகிறோம்.  எப்போது நமதுடலை புற்று நோய் தாக்கிற்றோ அப்போது நமதுடலில் காணப்பட்ட எதிர்ப்புத் தன்மையின் குறைவு பல மடங்காகப் பெருகி உள்ளமையை வெளிப் படுத்தும். போஷனைக்குறைவால் இந்நிலை ஏற்படுவதால் இக்குறை விலிருந்து நம்மை காப்பாற்றுவது முக்கியமாகின்றது. அதற்கான உணவு வகைகளை அறிவதையும், அத்தகு உணவுப் பழக்கத்தையும் மேற்கொள்ளும் அதே வேளை, புற்று நோயை வளர்க்கும் உணவுகள் பற்றிய அறிவும் இன்றியமையாததாகின்றது. இவ்வறிவு அந்த நோய்க் கலன்களை அழிக்கும் நடவடிக்கைக்கு உதவும் என நம்பலாம். இதனால் இந்நோயின் தாக்கத்தைக் குறைக்கவும், இயற்கை வழியிலே இதனை அழித்தொழிக்கும் வேலையை யும் செய்யலாம். அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள இருவகை சிகிச்சை முறைகளினால் நமதுடலின் நன்மை பயக்கும் கலன்கள் அழிக்கப்படுவதிலிருந்தும் தப்பிக்க லாம். அதன் மூலம் நம்வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளலாம். எதிர்ப்புச் சக்தி குறைவதால் ஏற்படும் நோய்களிலிருந்தும் அதன் துன்பங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்ளலாம். 

நமது உணவில் அதிக பங்கை வகிக்கும் சீனி புற்றுநோய்க் கலன்களை வளர்ப்பதில் பெரும் பணியாற்று கிறது. ஆதலின் சீனிப் பாவனையைத் தவிர்த்து கருப்பஞ் சாறு அருந்துவதும், Manuka Honey எனப்படும், நியூஸிலாந் தில் காணப்படும் ஓர்வகை வாசனைத் தன்மையான இலைகளைக் கொண்ட மரங்களின் சாறை அருந்துவதும் அதன் இலைகளை தேநீராகப் பருகுவதும் விதந்துரைக்கப்படுகிறது. தொற்று நோய்க் கலன்களின்  வளர்ச்சியில் முக்கிய பங்கை ஏற்பவைகளில் பாலும் ஒன்று. பால் நமதுடலில் பாதுகாப்புக் கருதி, கணையங்கள், Mucus எனப்படும் ஓர் வகைப் பசைத்தன்மை கொண்ட சளிபோன்ற திரவப்பொருளைச் சுரந்து உதவுகிறது. இந்த Mucus புற்றுநோய்க் கலன்களை ஊட்டி வளர்ப்பன. ஆகவே பாலருந்துவதைத் தவிர்ப்பது இப்பயங்கர நோய்க் கலன்களை பட்டினி நிலைக்குக் கொண்டுபோய் அழிவைச் சந்திக்க வைக்கும். நமதுடலுக்குத் தேவையான பாலை நாம்  சோயாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துவதன் மூலம் மாற்றீடாகப் பெற்றுக்கொள்ளலாம். 

அமிலங்கள் புற்றுநோய்க் கலன்களுக் குத் தீனி போட்டு வளர்ப்பன.  அதனால் புற்றுநோய்க் கலன்கள் துரிதமாக உருவாகும். அந்த அமிலங்கள் நமதுடலில் அதிகம் உருவாக வழிசமைப்பவை மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன் றவை. அதனால் இந்த இறைச்சி வகைகளை முற்றாகத் தவிர்த்து சிறிய அளவில் கோழி இறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனைத் தவிர்க்க  அமிலமற்ற உணவான  மீனை முடிந்த அளவில் உண்பது மிகவும் நன்று. இந்நோய் கண்டவர்கள் தமது உணவின் 80%  பச்சைக் காய்கறிகளின் மூலமும் சாறுகள் (Juice) மூலமும் நிறைவு செய்யலாம். மிகுதி 20% சமைத்த உணவாக அமைவதை நிர்ணயப்படுத்திக் கொள்ளலாம். தினமும் பச்சைக் காய்கறிகளையும், அவற்றின் சாற்றையும் இரண்டு மூன்று வேளை அருந்து வது நன்மை பயக்கும். அதன் மூலம் புற்று நோய்க் கலன்கள் பரவுவதற்கேது வான அமிலத் தன்மையை உடலில் குறைக்கலாம். காய்கறிகளினால் தயாரிக்கப்படும் சாறை அருந்துவதன் மூலம் பதினைந்தே நிமிடங்களில் உறிஞ்சப்பட்டு நமதுடலின் நுண்ணிய பகுதிகளுக்கும் ஒட்சிசனை கொண்டு சென்று போஷிக்கிறது எனவும் இத்துறை சார்ந்த நிபுணர்களால்  தற்போது கண்டறியப்பட்டு, சிபார்சு செய்யப்பட்டுள்ளது. மேசை உப்பு இரசாயன மாற்றங்களுக்கு உட்படுவதால் கடலுப்பைப் பாவிப்பது சிறந்தது. 

உடலில் நல்ல கலன்களை உருவாக்கக்கூடிய என்சைம்ஸ் enzymes  என்ற ஓர்வகை பொருளை அதிகரிக்கக் கூடியதான பச்சை காய்கறிகளின் சாற்றைப் பருகுவது சிறந்த பலனைக் கொடுக்கும். அதற்காக Beans எனப்படும் மொச்சை இனம் பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை முளைவிட்ட மொச்சை இனம் உட்பட்ட பச்சைக்காய்கறிச்சாறு அருந்துவது சிறப்பானது. சமையலின்போது 104 பாகை வெப்பத்தில் மேற்கூறிய என்சைம்ஸ் அழிந்து போய்விடும் என்பது ஞாபகத்தில் இருத்தப்பட வேண்டியது. 

புற்றுநோய்க் கலன்களின் மேற்பகுதி பலம் மிகுந்த புரதத்தினால் ஆனதென் பதால் அதனை அழிப்பதற்கு அதிக அளவில் என்சைம்ஸ் தேவைப்படும். அதனால் அந்நிலையைத் தவிர்க்க இறைச்சி வகையை நீக்குவதால்  என்சைம்ஸ் விரயத்தைத் தவிர்க்கலாம்.  மேலும் கோப்பி, தேநீர், சொக்க லேற்று போன்ற வைகளை முற்றாக விலக்கலாம். இவற்றுக்கு மாற்றீடாக Green Tea எனப்படும் தேநீரை அருந்தலாம். இதில் புற்றுநோய்க் கலன்களை அழிக்கும் சக்தி காணப்படுகின்றது. சுத்தமான நீரை அதிகம் அருந்துவது நன்று. அமிலத் தன்மை வாய்ந்த Distilled Water எனப்படும் வடிகட்டிய நீரைத் தவிர்க்க வேண்டும். இறைச்சிப் புரதம் எளிதில் சமிபாடடைவதில்லை. அத்தோடு அதன் சமிபாட்டுக்கு அதிக அளவிலான என்சைம்ஸ் தேவைப் படுகின்றது. சமிபாடடையாத இறைச்சி பழுதடைவதுடன் குடலில் தங்கி தேவையற்ற நச்சுத்தன்மையை உருவாக்கும்.

அடுத்தது நல்ல தேகப்பயிற்சிகளை மேற்கொள்வது. அத்தோடு சுத்தமான நல்ல ஒட்சிசன் மிகுந்த காற்றைச் சுவாசிப்பது. ஆழ்ந்த  சுவாசத்தினால் னுநநி டீசநயவாiபெ உடலின் நுண்ணிய பகுதிகட்கெல் லாம் ஒட்சிசன் இலகுவாகச் சென்றடைவதனால் நுண்ணிய பகுதிகளில் காணப்படும் புற்றுநோய்க் கலன் களை அழிக்கக் கூடியதாகவுள்ளது. ஒட்சிசன் தெரபியும் புற்றுநோய்க் கலன்களை ஒழிக்கும் சாதனமே. 

புற்றுநோய் பரம்பரை, சூழல், உணவு, வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படுவது. கீமோதெரபி புற்றுநோய்க் கலன்களை அழிப்பதுடன்,  எலும்பு மச்சை, சமிபாட்டுறுப்புக்கள் போன்றவற்றிலுள்ள ஆரோக்கியமான கலன் களையும்  அழித்துவிடுகிறது. அத்தோடு உடல் உள்ளுறுப்புக்களான ஈரல், கிட்ணி, இதயம், சுவாசாசயம் போன்றவற்றையும் சேதப்படுத்திவிடுகிறது. கதிர் வீச்சு முறையும் இது போன்றே புற்றுநோய்க் கலன்களை அழிப்பதுடன், ஆரோக்கியமான, ஆபத்தை விளைவிக்காத கலன்களையும், மென்சவ்வு களையும், உள்ளுறுப்புக்களையும் சேதப்படுத்திவிடுகிறது. ஆரம்பத்தில் இவ்விரு சிகிச்சைகளும்  புற்றுநோய்க் கட்டிகளை (Tumor) அழித்தாலும், அதே சிகிச்சை தொடர்ச்சியாகச் செய்யப்படும் போது எதிர்பார்த்த அளவு பலனைத் தருவதில்லை. இவ்விரு சிகிச்சைகளினால் உடலில் அதிகரித்துள்ள நச்சுத் தன்மை (Toxic burden)  உடலின் எதிர்ப்புச் சக்தியை இணக்கத்திற்கு  (Compromise) கொணர்ந்து ஒத்துப் போகும் தன்மைக்குப் பழக்கப்படுத்தி விடும், அதாவது எதிர்ப்புச் சக்கியை இயக்கமறச் செய்துவிடும், அல்லது அழித்துவிடும். அதனால் இந்நோய் கண்டவர் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாவார். அத்தோடு இவ்விரு சிகிச்சைகளுக்கும் ஈடுகொடுக்கும் வண்ணம் புற்று நோய்க் கலன்கள் தாம் மாறுபட்டு அழிக்க முடியாத தன்மையை அடைந்து விடுகின்றன. சத்திர சிகிச்சைகூட மற்றைய பகுதிகளில் இக்கலன்கள் வளரும் வாய்ப்பை உருவாக்கிவிடுகின்றன. ஆக புற்றுநோய்க் கலன்களை பட்டினி போட்டுக் கொல்லும் வகையே மிகச் சிறந்ததாகக் காணப்படுகின்றது. அதாவது  புற்றுநோய்க் கலன்களை வளர்க்கும் உணவு வகைகளை முற்றாகத் தவிர்த்தல். 

மேலும் உடலும், மனமும், ஆத்மாவும் சம்பந்தப்பட்டதாகப் புற்றுநோய் காணப்படுவதால் அதிக கோபம், மன்னிகாத தன்மை, கசப்புணர்வு போன்றவை உடலில் திரவத் தன்மையை (Acid) உருவாக்குவதால், அதுவே புற்றுநோய்க் கலன்களை வளர்ப்பதில் பெரும்பங்கேற்பதால்  அதனைத் தவிர்க்க அன்பு செலுத்தல், மன்னித்தல் போன்ற நற்பண்புகளை வளர்த்தும் புற்றுநோய் வராது  காத்துக் கொள்ளலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.                   

– நிஹா- 


No comments: