Tuesday, June 18, 2013

இறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெளிப்பாடுகளும்

இறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெளிப்பாடுகளும்


இப்பேரண்டத்தைப் வடிவமைத்து, படைத்து, விரிவுபடுத்தி, இற்றைவரை பரிபாலித்துவரும் வல்ல இறைவன் நாம் வாழும் இப்புவியை அமைத்துள்ள விதம் அவனது இருப்புக்குச் சான்று தருவனவற்றுள் முதன்மையானது. 2:117. வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி, தானே உண்டாக் கினான்;. 27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனி டையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? இது சம்பந்தமாக விளக்கங்கள் தரப்புகின் அது தொடர் ஆகிவிடும். அதனால் சிலவற்றைக் கூறுகிறேன்.  

ஆரம்பத்தில் எல்லாம் புகைமண்டமாகவே இருந்தன. 41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்.  புவியின் அளவமைப்பு செம்மையானது அல்லது பரிபூரணமானது. குர்ஆன் 87:2. அவனே படைத்துச் செவ்வையாக்கினான்.. அதற்கென்றே உள்ள ஈர்ப்பு சக்தி, நைட்ரஜன், ஹைட்ரஜன் இரண்டு வாயுக்களையும் பெருமளவில் அடக்கியுள்ள ஓர் படையைத் தன்னைச் சூழவைத்துக் கொண்டுள்ளது.  தனக்கு மேலான விண்பரப்பில் ஐம்பது மைல் அளவிலான தொலைவு வரை  இந்தப் படையை விரித்துக் கொண்டுள்ளது. 15:85. நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. 

இப்புவிக்கோள் தற்போதைய அளவைவிட சிறிதாக இருந்திருந்தால், வெள்ளிக்கிரகம் போன்று, உயிரின வாழ்வுக்குத் தேவையான ஓர் சூழலைக் கொண்டிருக்க முடியாமல் ஆகியிருக்கும். மாறாகப் பெரிதாக  இருந்திருந்தால், ஜுபிட்டரைப் போன்று ஹைட்ரஜன் வாயுவை அதிகமாகக் கொண்டு உயிர்கள் வாழ இயலாக் கிரகமாகிருக்கும். ஆக பூமி மட்டுமே மனிதர், உயிரினங்கள், தாவரங்கள் வாழக்கூடிய தன்மைக்கேற்ற விதமான சரியான விகிதப்படியான வாயுக்களின் கலவையைக்  கொண்டுள்ள கிரகமாகும். 

 பூமி சூரியனிலிருந்து சரியான தூரத்தில் அமைந்துள்ளது. அதனால் இதற்கு -30 பாகை முதல்  120 பாகை வரையான வெப்பத்தைப் பெறுகிறது. சூரியனிலிருந்து தற்போதைய தூரத்தைவிடக்கூடிய தூரத்தில் அமைந் திருக்குமாயின், இக்கிரகம் உறைவு நிலையை அடைந்திருக்கும்.  இன்னும் நெருக்கமாக அமைந்து இருந்திருந்தால் அனைத்தும் எரிந்து சாம்பராகி இருக்கும். தற்போதைய அமைவிலிருந்து ஒரு சிறு பிறழ்வு அதாவது கூடியோ குறைந்தோ மாற்றம் ஏற்படின் இது வாழமுடியாக் கிரகமாகிவிடும். 27:61. இந்தப் புமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும்,  இப்படி அமைந்துள்ள இக்கிரகமானது சூரியனைச் 67,000 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டிருப்பினும்,  தனக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும் இது தன்னைத்தானே ஓர் அச்சில் சுழற்றிக் கொண்டு இருப்பதன் மூலம் தன்னை எப்போதும் சூடாகவும் குளிராகவும் வைத்திருக்கும் பாங்கை உருவாக்கிக் கொண்டுள்ளது. 32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்து கிறான். இரவு பகல் மாறிமாறி வரும் பண்பைக் கொண்டுள்ளது. 10:6. நிச்சயமாக இரவும், பகலும் மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ளதிலும் பயபக்தியுள்ள மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. இதனால் நாட்களைக் கணித்து வருடங்களைக் கண்டு கொள்ள உதவுகிறது. அத்தோடு இப்பூமி சரியான அளவிலும், தூரத்திலும் அமைந்த சந்திரனைத் தனது துணைக் கிரகமாகக் கொண்டு உயிர்க் கிரகமாக உள்ளது. அதனால், சந்திரன் தனது ஈர்ப்பு சக்தியால், சமுத்திரங்கள் கண்டங்களை நீர் மூடிவிடாது கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. மேலும் அது மாதங்களைக் கணக்கிடும் தன்மையையும் பெற்றுத் தருகிறது. சூரிய மறைவின் போது உலகுக்கு சூரியனது வெளிச்சத்தைப் பெற்றுத் தருகிறது. - புவியின் சுழற்சியால் சந்திரனில் ஏற்படுத்தப்படும் உருவ மாற்றம் நாட்களை மிகத் துல்லியமாக கணித்து மாதங்களைக் கணித்துக் கொள்ள உதவுகிறது. 10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை..

நீர், நிறம், நாற்றம், சுவையற்றது என்பதை நாம் அறிவோம். அது இன்றேல் எந்த உயிரினமும் உயிர் வாழமுடியாது என்பது புதுமையும் அன்று. இறைவன் சகல உயிரினங்களையும் நீரிலிருந்தே படைத்துள்ளான் என்பதை அனைத்து உயிரினங்களிலும் தாவரங்களிலும் நீர் அமைந்துள்ள அளவால் அறியலாம். நீரிலிருந்தே சகல உயிரினங்களையும் தான் படைத்துள்ளதாகக் கூறும் இறைவன் ஆரம்பத்தில் தனது ஆட்சி நீரில் இருந்ததாக எடுத்தியம்பு கின்றான்.  24:45. மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்;.  மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு நீரைக் கொண்டு இருப்பது அதை உறுதி செய்யும்.  நீரின் தன்மை எந்தளவுக்கு வாழ்வுக்கு பொருத்தமாக உள்ளது என்பதைப் பார்ப்போம். 

அது உயர் வெப்ப எல்லையையும், உறையும் தன்மையையும் கொண்டது. நீரே வெப்ப மாற்றங்களை ஏற்படுத்தும் பிரதான காரணியாகின்றது. மேலும் அதுவே நமது உடற் சூட்டை 98.6 பாகையாகக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. நீரே பேரண்டத்துக்கும் தீர்வாக உள்ளது. இத்தீர்வுத்  தன்மையானது  ஆயிரக்கணக்கான இரசாயனங்கள், கனிப் பொருட்கள், ஊட்டச் சத்துக்கள் போன்றவற்றைச் சுமந்து  சென்று உடலினுள் அமைந்துள்ள மிகச்சிறிய நரம்புகளுக்குக் கூட வழங்குகிறது. நீர் இரசாயனச் சார்பற்றதும்கூட. அது தான் சுமந்த செல்லும் உணவு, மருந்து, கனியுப்புக்கள் போன்ற  பொருட்களின் தன்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது, நமது உடல் அதன் அப்பொருட்களின் தன்மையிலேயே உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 43:11. அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். 

நீர் 100 பாகைக்கு மேல் கொதிப்படைந்தால் ஆவியாகும் தன்மையைக் கொண்டிராவிடில் நமக்கு ஆரம்பத்தில் தரப்பட்ட நீரே இன்று வரை இருந்திருக்கும். உபயோகிக்க முடியாத அளவுக்கு தன்மையில் மாற்றத்தைக் கொண்டிருக்கும். அதுவே நோய்களைப் பரப்பி உயிர்களைக் காவு கொள்ளும் முதன்மைக் காரணியாக இருந்திருக்கும். நீர் ஆவியாவதன் மூலம் தன்னைத் தானே சுத்திகரிக்கும் ஆற்றலை வழங்கியவன் இறைவனே. 32:27. அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாகத் தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் நோட்டமிட வேண்டாமா?

நீரின் இயங்கும் தன்மைகள் மிகப் பெறுமதி வாய்ந்தவை மட்டும்ல அளவிலாதது. அதன் தன்மையால் அது தாவரங்களில், ஈர்ப்பு விசைக் கெதிரான வழியில் கீழிருந்து மேல் நோக்கிச் சென்று போஷிக்கின்றது. மிக உயர்ந்த மரங்களுக்குக் கூட அதன் உச்சிவரை சென்று தன் வேலையைச் செய்கிறது. 39:21. நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப் படுத்துகிறான்.  மேலும், குளிர் காலத்தில் தனது உறைவு நிலையில் கூட அது,  நீர்மட்டத்தின் மேற் பகுதியில் இருந்து உறைந்து, அதன் மிதக்கும்  தன்மையால் நீரின் மேலேயே மிதந்து, தன் அடிப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் வாழும் நிலையை உருவாக்குகிறது. 

ஒளியை உள்வாங்கும் தன்மை போன்ற இன்னோரன்னவையும் இவ்வகைத்தே. மேலும், கடல்களில் பல்வேறு தன்மை, சுவை, ஒன்றினுள் ஒன்று நுழைந்து விடாதபடி கண்ணுக்குத் தெரியாத தடுப்பு ஒன்று ஏற்படுத் தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதை குர்ஆன் கூறுவதும், இதை அந்தகார இருளில் ஆழ்ந்திருந்த கிபி ஆறாம் நூற்றாண்டில் ஓர் மனிதன் கூறி இருக்க முடியாது. அதனால் மனித அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஒன்றே கூறி இருக்கவேண்டும் எனவும் அதனை இறைவன் என்ற பதத்தால், அப்படி ஒன்று இருக்கவே வேண்டும் எனவும் ஒத்துக் கொண்டுள்ளனர். 25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது. மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

23:18. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தி உடையோம்.  இப்புவியில் காணப்படும் நீரில் 97 சதவீதம் சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றது.  87:3. மேலும், அவனே அளவுபட நிர்ணயித்து நேர்வழி காட்டினான். ஆனாலும், நமது புவி அந்த நீரில் காணப்படும் உப்பைத் தான் உறிஞ்சிக் கொண்டு உயிரினங்கள் உட்கொண்டு வாழ்வதற்கேற்ற நீராக மாற்றி வழங்குவதற்கான ஓர் அமைப்பைத் தன்னில் கொண்டுள்ளது.  நீரை ஆவியாக்கும் தன்மை நீரின் உப்புச் சுவையை சமுத்திரத்திலேயே விட்டு வைத்து, அதனை மேகமாக்கி, காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு பூமிக்கு வழங்கி அதன் வரட்சியைக் போக்கி,  மனிதர், மிருகங்கள் ஆதியாம் அனைத்தும் வாழச் செய்கிறது. நீரின் இச்சுழற்சி முறை மூலம் நீர் தூய்மைப்படுத்தப்படுவதுடன், மீண்டும் நீர் பிரயோகத்துக்கு ஏதுவாக மாற்றப்பட்டு இங்கு உயிர் வாழும் சூழலை ஏற்படுத்தி நமது இருப்புக்கு உதவுகிறது. 56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? 56:70. நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்.

மனிதருக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்வாழக் காற்றே இன்றியமையாத தேவையாகிறது. அதுவே உயிர்நாடியாகும். இவ்வத்தியா வசியம் கருதியே இறைவனும் இவ்வைம்பூதங்களையும் பொதுவுடமை ஆக்கியுள்ளான்.  எனினும் மனிதன் நினைத்தால் காற்றைத் தவிர மற்றைய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். ஆனால் எந்தச் சக்தியாலும் எப்போதும் காற்றை மட்டும், சிறு அளவில் தவிர, தமது கட்டுப்பாட்டுக்குள் கொணரமுடியாது, அல்லாஹ்வைத் தவிர. '42:33. அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான்.' மேகத்திற்கு நீரை இழுத்துச் சென்று கருவுற்ற மேகங்களாக மாற்றுவதும், 15:22. இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்;..... அவைகளை நினைத்த இடத்துக்கு இழுத்துச் சென்று மழையாகப் பெய்விப்பதும் காற்றுத்தான் என்பதை அறிய விஞ்ஞானிகளின் உதவி தேவை இல்லை. 32:27. அவர்கள் கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று.... இச்செயலைச் செய்பவன் இறைவன் என்பதை அவனே கூறுகின்றான். மறுப்பாருண்டா? 45:5.... வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுக்களை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.' ''27:63...மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? 

மனித மூளை ஓரே சமயத்தில் பல விடயங்களைச் செயற்படுத்தும் தன்மை கொண்டது. மூளையே நாம் அனைத்துப் பொருட்களையும் வர்ணங் களையும் அப்படியே எடுப்பதுடன், நம்மைச் சுற்றியுள்ள உஷ்ணம், ஒலி, நிலத்தில் நமது காலின் அழுத்தம், வாயில் ஏற்படும் வரட்சி,  நாம் பாவிக்கும் இவ்விசைப் பலகையின் கட்டமைப்பு போன்றவற்றையும் அறிந்து கொள்கிறது. மேலும், நமது மூளையானது உணர்வுகள், சிந்தனைகள், நினைவுகள் போன்றவற்றைத் தன்னகத்தே தக்க வைத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை உருவாக்குகிறது. அது 15000 ட்ரில்லியன் தகவல்களை தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்ளுகிறது.  இதே வேளை நமதுடலின் அனைத்துச் செயற்பாடுகளையும், சுவாசிக்கும் முறை, கண் இமைகளின் அசைவு, பசி, கைளின் தசைகளின் இயக்கம் போன்றவற்றையும், தனது செயற்பாட்டில் வைத்துக்கொள்கிறது. மனித மூளை ஒரு வினாடியில் பத்து இலட்சம் தகவல்களை ஒழுங்கமைக்கும் ஆற்றல் பொருந்தியது. நமது மூளை தனக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றில் முக்கியமற்றவற்;றை  வடிகட்டிவிடுகிறது.  இந்த வடிகட்டும் முறையே நாம் எமது வேலைகளில் மனத்தைக் குவித்து சீராகவும், திறமையாகவும் செயற்பட உதவுகிறது. மற்றைய உடல் உறுப்புக்களைப் போன்றல்லாது முற்றிலும் வித்தியாசமான தொழிற்பாட்டைக் கொண்டது மூளை. 

16:78 . உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப் படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வை களையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு -  அவனே அமைத்தான். அங்கே நுண்ணறிவு உண்டு, அதில் காரண காரியங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் திறன் உளது, உணர்வுகளை உண்டாக்கும் தன்மை உள்ளது, கனவு காணல், திட்டமிடல், நடவடிக்கை எடுத்தல், பிறரோடு தொடர்புபடல் போன்ற தன்மைகளுமுண்டு. மனித உற்பத்தி X, Y எனும் இருபத்தி மூன்று (23) சோடி குறோமோசம்களால் உருவாகின்றது. 36:36. பூமி முளைப்பிக்கின்ற எல்லாவற்றையும்,  இவர்களையும்,  இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். மனித உற்பத்தியின் படிநிலையை மிகத் துல்லியமாக பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றது குர்ஆன் என nடீhறிஸ் மைக்கேல் என்பார் கூறும் கூற்றை விஞ்ஞானிகளும் ஏகமனதாக ஏற்றுள்ளனர். 22:5. மனிதர்களே! மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர் களானால், நாம் நிச்சயமாக உங்களை மண்ணில் இருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும்.......

கண்.... எழுபது இலட்சம் வர்ணங்களை வகைப்படுத்தும் தன்மை கொண்டதெனவும், அது தன்னிச்சையாக ஓரே சமயத்தில் பதினைந்து இலட்சம் தகவல்களை வியத்தகு முறையில் கண்டும்; கையாண்டு கொள்ளும் தன்மை கொண்டதெனவும் அறியப்பட்டுள்ளது. உயிர்வாழும் ஒன்றின் பரிணாம மாற்றங்களைக் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியது. 16:78 அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு -  அவனே அமைத்தான். கண்ணின் அமைப்பு, அது சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும், அசைவதை நிற்பது போலவும், நிற்பதை அசைவது போலவும், தூரத்தில் இருப்பதை கிட்ட இருப்பது போவும், கிட்ட இருப்பதை தூரத்தில் இருப்பது போலவும் காட்டும் தன்மையுடன் அமைந்திருப்பதன் மூலம் நாம் எதனையும் கண்டு கொள்ள உதவுகிறது. உதாரணம்- சூரியன், அதன் பருமன், அமைந்துள்ள தூரம், அதன் அசைவு எதுவும் நமக்கு அப்படியே தெரிவ தில்லை. கண்ணின் அமைப்பே நம்மால் அதனைக் காண உதவுகிறது. மேலும், நாம் காணும் காட்சிகள் சில வினாடிகள் கண்ணினுள்ளே அகப் படுத்தப்படும் தன்மையைக் கொண்டிருப்பதால் ஓர் நிகழ்வை தொடர்பாகக் காணமுடிகிறது. அன்றேல் துண்டு துண்டாகவே தெரியும். இருப்பினும் உயிருள்ள, உயிரற்றவற்றின் பரிணாமங்களை மட்டும் ஆரம்ப நிலையில் முழுமையாகக் கண்ணாலோ, மூளையாலோ விவரிக்க முடியாமலிருக்கும். கண் அமைந்துள்ள இடம், அதன் பாதுகாப்புக் கருதி அமைக்கப்பட்டுள்ள இமை, அதன் இயக்கத்துக்கும், விழியின் சுழற்சிக்கும், தூய்மைக்கும், பாதுகாப்புக்கும்  ஏதுவாக சுரக்கப்படும் கண்ணீர், சுருங்கி விரியும் தன்மை இப்படி எத்தனையோ!

இப்பேரண்டத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது? தற்போது டீபை டீயபெ எனப்படும்; பெருவெடிப்பால் உண்டான சக்தியிலும்; ஒளியிலும் நமது பேரண்டம் உருவானதாக விஞ்ஞானிகள் கருத்துக் கொண்டுள்ளனர். இன்று இருக்கின்ற அனைத்துக்கும் இந்த பெருவெடிப்பே காரணமாகும். பேரண்டத்தின் ஆரம்பம், விண்வெளியின் (ளுpயஉந) தொடக்கம்,  ஆரம்ப  நேரத்தின் (வiஅந) தொடக்கம் போன்றவை. இப்பெருவெடிப்புக்கு முன்னர் நேரம் என்ற ஒன்றே இல்லாதிருந்தது. ஆனாலும் நேரம் இறைவனிடம் இருந்துள்ளமையை குர்ஆன் வசனங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. 25:59. அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கு இடையில் உள்ளவற் றையும் ஆறு நாட்களில் படைத்தான்;.  இப்ரேண்டம் விரிவடைந்துகொண்டு போவதாகக் கண்டறியப்பட்;டுள்ளது. அதையே குர்ஆன் 51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.

ஆரம்பத்தில் எதுவும் இல்லாமல் இருந்ததென்ற கொள்கையை உடைய வான்பௌதிகவியலாளர் றொபர்ட் ஜெஸ்ட்ரோ என்பார், அனைத்துக்கும் காரணமாக நடைபெற்ற பெருவெடிப்பு ஒன்றின் மூலமே இப்பேரண்டத்தில் முதல் தடவையாக ஒவ்வோர் நட்சத்திரமும் ஒவ்வோர் கிரகமும், ஒவ்வோர் உயிரினமும் தோன்றவும் ஓர் அசைவும், இயக்கமும் ஏற்படவும் செய்தது எனக் கூறுகிறார். ஆனாலும் அந்த பெருவெடிப்பு எப்படி உண்டானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய முடியாதுள்ளது.  2:117. வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி தானே உண்டாக்கினான்;. 

பௌதிகத்தில் நோபல் பரிசு பெற்றவரான ஸ்டீவன் வெய்ன்பேர்க்  என்பார், அந்த வெடிப்பு நடைபெற்ற ஷணத்திலேயே பல நூறாயிரம் பாகை வெப்பத்துடன் கூடிய ஒளி இப்பேரண்டத்தை நிறைத்தாகக் கூறுகிறார். இப்பேரண்டம் முன்பு இருக்கவில்லை. அது என்றோ தொடங்கியதே.... அதன் தொடக்கத்துக்குக் காரணமானது எது? 30:27. அவனே படைப்பைத் துவங்குகின்றான் இந்த பெருவெடிப்பும் ஒளியும் சடப் பொருளுக்குமான காரணத்தை விளக்குவதற்கு விஞ்ஞானிகளால் முடியவில்லை. அவர் களிடம் அப்படி விளக்குவதற்கான தகவல்கள் எதுவுமில்லை.

பேரண்டம் குறிப்பிட்ட இயற்கைக் கோட்பாட்டுடன் சீராக இயங்குவது எப்படி? வாழ்க்கை நிலையற்றது. ஆனாலும் அறிந்து கொண்டே தினமும் நாட்களை எண்ணிக் கொண்டுள்ளோம். சுடச்சுட வைக்கப்பட்ட ஒரு கோப்பைத் தேநீர் சிறிது நேரத்தில் குளிர்ந்துவிடும் அதே வேளை, புவியின் ஈர்ப்பு எவ்வித  மாற்றமுமற்று அப்படியே உள்ளது. பூமி அதே 24 மணிநேர அளவில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஒளியின் வேகம் பூமியிலும் சேய்மையிலுள்ள அண்டத்திலும்,  அன்றுபோல் இன்றும் உள்ளது. இது எப்படி? இயற்கைச் சட்டங்கள் ஒரு போதும் மாறுவதில்லை. ஏன் அவை ஓர் ஒழுங்கிலும், நம்பகமாகவும் இயங்குகின்றன? குர்ஆன் 36:40. சூரியன் சந்திரனை  பிடிக்க முடியாது. இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

இந்த இடத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் தடுமாறுகின்றனர். என்ன புதுமை என வியக்கின்றனர்! இப்பேரண்டம் சட்டதிட்டங்களுக்கமைவாக இயங்க எவ்விதத் தர்க்கமும் தேவை இல்லை. அது தானாகவே ஒரு கணித சட்டத்துக்கேற்கு பணிந்து இயங்குகிறது. 72:28 அவன் சகல பொருட்களையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான். 10:31 காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?

பேரண்டம் இவ்வண்ணம் பணிந்து நடக்கத் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போது வியப்பு மேலிடுகின்றது. ஒவ்வோர் ஷணமும் இப்பேரண்டத்தின் நிலை யாரும் எதிர்வு கூற முடியா வண்ணம் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. இன்னும் பேரண்டத்தில் புதிது புதிதாக ஏதேதோ தோன்றிய வண்ணம் உள்ளது. குர்ஆன் 13:2. அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தி யுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே  காரியத்தையும் நிர்வகிக் கின்றான். குவான்டம் இலக்ட்ரோ டைனமிக்ஸ் உக்கான நோபல் பரிசு பெற்றவரான றிச்சர்ட் பெய்ன்மென், இவ் இயற்கை ஓர் கணித ஒழுங்கில் இருப்பதில், ஏதோ சூட்சுமம் இருப்பதாகவும், அனைத்து அற்புதங்களும் நமக்கு ஆச்சரியம் தருபவையாக இருப்பினும் அவை அனைத்தும் ஓர் நெறிக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்பதே உண்மை எனவும்  கூறுகிறார். குர்ஆன் 39:5 இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது . அறிந்து கொள்வீராக!

25:54. இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான். கலன்கள் செயல் திட்டப்படியே இயங்குகின்றன என  னுNயு குறியீடு தகவல் தருகிறது. ஓர் குறிக்கோள் உடனேயே அனைத்து அறிவுறுத்தல்களும், கற்பித்தல்களும், பயிற்சிகளும் வருகின்றன. யாரோ ஒருவர் எழுதியுள்ள  ஓர்  அறிவுறுத்தற்கையேடு குறிக்கோளோடு கூடியது. நமது உடலில் காணப்படும் ஒவ்வோர் கலனும் ஒரு சிறு கணனியைப் போன்ற  மிக விரிவான அறிவுறுத்தல் நெறியைக் கொண்டுள்ளது. 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதான தேயாகும். கணனி செயல் திட்டம் இவ்வாறான 110010101011000 ஒன்றுகளாலும்  பூஜ்யங்களாலும் என ஆக்கப்பட்டுள்ளது என்பதை நாமறிவோம். இந்த வழியில் ஒழுங்குபடுத்திக் கூறப்பட்டுள்ள செயல் திட்டம் Pசழபசயஅஅந கணனி என்ன செய்ய வேண்டுமெனக் கூறுகிறது. 

இது போன்றதே நமது உடற் கலன்களின் னுNயு குறியீடும். நான்கு இரசாயனங்களின் குறுக்கங்களான யுஇவுஇபுஇஊ  என்ற எழுத்துக்களைக் கொண்டு இவ்விதம் ஊபுவுபுவுபுயுஊவுஊபுஊவுஊஊவுபுயுவு  ஆக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றனர். ஒவ்வோர் மனித கலனிலும் 300கோடி எழுத்துக்கள் இருப்பதாக அறிவியல் கூறுகின்றது!!! இந்த நுட்பம்  நமது தொலை பேசியில், குறிப்பிட்ட காரணங்களுக்காக பீப் சத்தத்தை உருவாக்குவதற்காக ஆக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தைப் போன்றதே னுNயு அறிவுறுத்தலும்.  முந்நூறு கோடி எழுத்துக்களால் ஆக்கப்பட்டுள்ள னுNயு Pசழபசயஅஅந  செயல் திட்டம் கலன் எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. இது ஓர் முழு அளவிலான அறிவுறுத்துல் கையேடே. 22:5 மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.

அந்த தகவல் திட்டம் எப்படி ஒவ்வொரு கலனிலும் முடிவுறுகின்றது என்பதே இங்கு எழவேண்டிய  கேள்வியாகும். 76: 1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? இவைகள் வெறும் இரசாயனங்கள் அல்ல இந்த இரசாயனங்கள், எவ்வாறு மனித உடலில் கலன்கள் உருவெடுக்க வேண்டும் என்பதை எப்படி மிக விரிவாக அறிவுறுத்துகின்றன என்பதுவே, நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கை, உயிரியல் போன்ற ஒரு தகவலை திட்டமாக எழுதும்போது முழுமையான விளக்கக் குறைவையே கொண்டிருக்கும். இதுபற்றிக் கூறப்படும் தகவல் போன்றதில், யாரோ ஒருவரது நோக்கோடு கூடிய அமைப்பு ஒன்றின்றி அறிவுறுத்தலை அறிய முடியாது. 30:8. அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையில் உள்ளவற்றை யும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை.

விண்ணிலும் மண்ணிலும் புதையுண்டு கிடக்கும் அனைத்து வியத்தகு அற்புதங்களை, உண்மைகளை இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் வெளிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த உண்மைகளைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைவதற்கு மாறாக,  இறைவனின் இருப்பை ஏற்றுக் கொள்கின்றனர். காரணம், தமது நீண்ட கால ஆய்வில் கண்டறிந்தவை என்றோ எங்கோ கூறப்பட்டுள்ளமையே. அத்தோடு,  தாம் என்றுமே கண்டு கொள்ள முடியாது எனத் தீர்க்கமாக அறிந்த எத்தனையோ கேள்விகளுக்கான விடை,  இறைவனால் அகில உலக மாந்தருக்கும் அருட்கொடையாக 1400 வருடங்களுக்கு முன்னர் பாலைவனத்தில் பிறந்த, எழுத்தறிவற்ற ஓர் அநாதை மூலம் இறக்கியருளப்பட்ட அவனது இறுதியும், அறுதியுமான மாமறையாம் புனித குர்ஆனில் பல இடங்களில் அநாயாசமாகக் கூறிச் சென்றுள்ளமையைக் காணக் கூடியதாயுள்ளதே. 

27:75. வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப் படாமல் இல்லை.   விஞ்ஞான வளர்ச்சியின் அதியுன்னத காலமான 20, 21ஆம் நூற்றாண்டுகளிலே கண்டு கொள்ள முடியாதுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையை,  விஞ்ஞானமே குழந்தையாகப் பரிணமிக்காத காலமான கிபி ஆறாம் நூற்றாண்டில்- 14நூற்றாண்டுகளுக்கு முன்- இறை மறை கூறிச் சென்று உள்ளமை இறைவனின் இருப்பை மிகத் உறுதிப்படுத்தி இருப்பதாக சாட்சி பகர்கின்றனர். 3:18.அல்லாஹ் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். ஆம் இன்று விஞ்ஞானிகள் தமது அறிவியல் நிரூபணங்கள் மூலமாகத் தாங்களே சாட்சி கூறுகின்றனர்.

12.05.2010                                                                                                    - நிஹா -

No comments: