Sunday, June 30, 2013

முஸ்லிம் பெண்களில் ”கோணிபில்லா” (புர்கா / நிகாப்) முறை நாட்டின்தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: முஸம்மில்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம் பெண்களில் ”கோணிபில்லா” (புர்கா / நிகாப்) முறை நாட்டின்தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: முஸம்மில்


//  சுமார் 700 வருட கால வாரலாற்றைகொண்ட இந் நாட்டின் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டே இந் நாட்டின் சிங்கள பாரம்பரிய கலாசாரத்தை அடியோட்டியே தமது முஸ்லிம் கலாசார தனித்துவத்தை பேணி வந்துள்ளார்கள். // 

யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போன்றுள்ளது தங்கள், “700 வருட கால வரலாறு கொண்ட இந்நாட்டின் முஸ்லி்ம்கள்“ என்ற கருத்து.  

எதில் உங்களுக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதனைப் பின்பற்றாதீர்கள் என்பது குர்ஆனின் போதனை. அத்தோடு  மெய்யோடு பொய்யைக் கலக்காதீர்கள் என்பதும் குர்ஆன் மொழியே! அப்படி இருக்க,  முகத்திரை பற்றிப் பேச வந்த நீங்கள்  முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழத் தொடங்கிய காலம் என்ற பிழையான சிந்தனையை உருவாக்க முயல்வது சமூகத்துக்குத் தாங்கள் இழைக்கும் பெரும் துரோகமாகும்.  

முஸ்லிம்கள் கிபி 600 களில் இங்கு மினாரா என அழைக்கப்படும் நெடிய மாடங்களைக் கட்டி  வெளிச்ச வீடுகளாகப் பாவித்துள்ளார்கள். இதனை ஆங்கிலத்தில் “Minarets'  அழைப்பர். அவை இன்னும் இலங்கையின் கடற்கரைப் பிர‌தேசங்களான மன்னார் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.  இது பற்றி பேராசிரியர் கலாநிதி சு.ிவித்தியானந்தன் கூ்ட தனது ஆராய்ச்சி நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும். இன்றும் கடற்கரைப் பிரதேசங்களான, மன்னார், சிலாபம், திரிகோணமலை, போன்ற பல இடங்களில் காணப்படும் (40) நாற்பது முழ நீளமான அவ்லியாக்கள் என அழைக்கப்படும், அல்லாஹ்வின் நேசர்களின் அடக்க ஸ்தலங்கள், முஸ்லிம்களின் இருப்புக்குரிய காலத்தை நிர்ணயிக்க உதவுவது. அப்படி இருக்க தாங்கள், உங்கள் அரசியல் காரணங்களுக்காக புதிய பொய்களை அவிழ்த்து விடாதீர்கள்.  முதல் மனிதன் ஆதம் அலை அவர்கள் பூமியில் காலடி வைத்ததும் இலங்கையிலே என்பதை மறந்து விடாதீர்கள். 

தென்னிந்திய இந்துப் பாரம்பரியங்கள் சில முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருவது உண்மையே  தலையை மறைத்து முக்காடு போடுவது இந்து பாரம்பரியம். இன்றும் இந்துப் பெண்கள் முக்காடு  போடுவதை இந்தியாவில் காணமுடியும்.  

நிகாப் அரேபியரின் பாரம்பரியம். அங்கு காலத்திற்குக் காலம் வீசும் மண் புயலில் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக அவர்கள் அணிந்து கொண்டவை.  தலைப்பாகை ஜுப்பா எல்லாம் அதே பாணியில் அணியப்பட் ட‌வையே!

இவ்வுடை அணிந்து கொண்டிருந்த அரேபியர் மத்தியிலே, குர்ஆன், பெண்களுக்கான ஆடையைப்  பரிந்துரை செய்துள்ளது. அதனால், முகத்திரை பேடுவோர் தாம் குர்ஆன் கூறியதையா அல்லது அரேபியர் செய்து, குர்ஆனால் முஸ்லிம்களுக்கு அங்கீகரிக்கப் படாத ஆடையை பின்பற்றப் போகின்றார்கள் என்பதுவே  நம்முன் நிற்கும் கேள்வி!

நிகாப் பற்றி,  அல் அஷ்ஹர் இமாம் அவர்கள்,  Nikab is only a tradition. It has nothing to with Islam'  என பத்வா கொடுத்துள்ளதுடன், அதனை அணிவதைத் தடையும் செய்துள்ளார். 

குர்ஆன் பரிந்துரைத்த பெண்களுக்குரிய  ஆடையுமல்ல நிகாப், என்பதுடன், அதற்கு மாறானதும் கூட.  “அடையாளம் காணப்படுவதற்கு நெருக்கமாகும்“ எ்னற  குர்ஆனின் நிய‌தியை முகத்திரை மீறுகிறது.  

சமூகத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காக மத விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டு்ம் என்ற அடிப்படையில் நாம் நடக்க விழைவோமானால் இஸ்லாத்தில் இருந்து பிறழ்ந்து விடுவோம். குர்ஆனை் புறக்கணித்தவர்களாகி விடுவோம்.  மேலும், அதுவே, முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பமாகவும் அமைந்து விடும் என்பதைசற்று சிந்தித்தால் புரியும். 

No comments: