Monday, December 30, 2013

தமிழர்களும் , முஸ்லிம்களும் இணைந்து போராடும் தருணம் இது!

Commented on :  http://tinyurl.com/lh5vqpn
Lankamuslim.org

தமிழர்களும் , முஸ்லிம்களும் இணைந்து போராடும் தருணம் இது!

அப்பட்டமான உண்மைகள் பலவற்றை அள்ளி வீசியிருப்பது குறித்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்தனையும் உண்மை மட்டுமல்ல, இதற்கு மேலும் உள்ளது.

நாசுவன் (நாவிதன்) குப்பையைக் கிளறினால் மயிரைத் தவிர எதுவும் இருக்காது எ்ன்ற நிலையே இலங்கை முஸ்லிம்கள் அரசியல்வாதிகள்எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அரசியல்வியாபாரம் செய்வோர் பற்றிய விமர்சனம்.

இந்த அரசியல்வாதிகள், நக்குண்டார் நாவிழந்தார் நிலையில், கழுவ முடியாத கறைபடிந்த அங்கங்களைக் கொண்டவர்கள், இவர்கள் துதி பாடியேனும், தம் கதியைத் தக்க வைத்துக்கொள்ளாது எதிர்ப்புக் காட்டினால், தமது கோவைகள் அடியில் இருந்து இழுக்கப்பட்டு, தாங்கள் குப்பைகளைவிடக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் எனற் அச்ச நிலையே தவிர இல்லை.

ஆதலால், பட்ட மரம் தளிர்த்துப் பால் வடியும் என எதிர்பார்த்திருப்பதை ஒத்ததே, முஸலிம் அரசியல்வாதிகளால், முஸ்லி்மகளுக்கு விமோசனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது! அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகளை விடுவதையாவது தவிர்ப்பார்களாயின் அதுவே முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

ஆதலால், அனைத்து இனங்களிலுமுள்ள புத்திஜீவிகள், ஆர்வலர்கள், சமூக நலன் நாடுவோர் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாச் சிந்தித்து, செயற்படுவதே நன்மை பயப்பது. பாதிக்கப்ட்டோர் அனைவரும், சிங்களவர் பெளத்தர் உட்பட, கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் காக்கும் முயற்சியில் ஈடுபடுதல் இன்றியமையாதது.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அது அரசியலவாதிகளின் தலைமையில் எ்னபதில் ஏற்கனவே கற்ற பாடங்கள் இரண்டு முறை சிந்திக்க வைக்கின்றது. இது போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கும் வரமாட்டார்கள் எனபதற்கும், இதுவரை வரவில்லை என்பதற்கும் உத்தரவாதமில்லை.

மேலும், எதிர்பார்க்கப்படும் தமிழ் – முஸ்லிம் இணைவு பெரும்பான்மைச் சமூகத்தவர் மத்தியில் விஷவிதையாகத் தூவப்பட்டு பிரச்சினையை சிக்கலாக்கிவிடும்.

சிறுபான்மையினர் பிரச்சினைகள் நியாயமானவை தீர்க்கப்பட வேண்டியவை என சிங்கள சமூகத்தைஉணர வைக்கும் நிலையை ஏற்படுத்துவது, சிரமமாயினும் அதுவே நிரந்தரமான, நியாயமான, கௌரவமான தீர்வை எட்ட வைக்க உதவுவது.

சிங்கள பெரும்பான்மையினரிடம் இருந்து “சிறுபான்மையர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்“ என்ற குரல் காட்டமாக ஒலிக்க வேண்டும்! அதுவே வெற்றிப் பாதையில் அனைவரையும் செலுத்தும். இந்நாடும் சுபிட்சப் பாதையில் பயணிக்கும்.

Saturday, December 28, 2013

சர்வதேச வாக்கு வங்கியை இழந்த நாடாக …. இலங்கை மிகவும் பாரதூரமான சிரமங்களை எதிர்நோக்க வாய்ப்புள்ளது

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/o7vugcs

Lankamuslim.org

சர்வதேச வாக்கு வங்கியை இழந்த நாடாக …. இலங்கை மிகவும் பாரதூரமான சிரமங்களை எதிர்நோக்க வாய்ப்புள்ளது

நாம் செய்வது சரியாயின் எந்த நாடுகளின் உதவியும் தேவைப்படாது. உண்மையில் இவ்வாறான பிரச்சினை ஒன்றே ஏற்பட்டிருக்காது.

போர்க்கால மனித உரிமை மீறல் என்ற பொறிக்குள் இலங்கை தள்ளிவிடப்படுவதற்கு, அரசின் போர்க்கால அணுகுமுறையும் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், போருக்குப் பின்னான ஒவ்வொரு நடவடிக்கையும், புலிகளைத் தோற்கடித்த மமதையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தமையே முக்கிய காரணியாகக் கொள்ளலாம்.  

போரைப் பொறுத்து, போர்நிறுத்தம் பற்றிப் பல நாடுகள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாலும். மறைமுகமாக உதவுவதிலும் அவை அக்கறை கொண்டிருந்தன.  போர் நிறுத்தம் வாயளவில் பேசப்பட்ட ஒன்றாயினும் மனதளவில் அதற்கு பெரும் வலு இருக்கவில்லை. அத்தோடு பயங்கரவாதிகள் என 28 பெரிய நாடுகளால் முத்திரை குத்தப்பட்ட புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்பதனால், அது விடயத்தில எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதும் அது உள்நாட்டுப் பிரச்சினை என்பதுமே!

அதே தந்திரோபாயம், போர்க்கால குற்றங்கள் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பின்னர் செல்லுபடியாகாது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். மனித உரிமை மீறல் என்ற குற்றத்தை அணுக வேண்டிய முறைப்படி அணுகாது, குறைக் குடங்களையும், தரமற்றோரையும் கொண்டு அரசு கருத்து வெளிப்பாடுகளைச் செய்து கொண்டிருந்தமை, போர்க் காலக் குற்றங்கள் இருப்பதான கருத்தையே வெளிப்படுத்தினவே தவிர, பிரச்சினையைத் தவிர்க்கவில்லை.

உள்நாட்டில் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய அதே தந்திரோபாயத்தை, வெளிநாட்டு உயர்மட்டங்களுக்கும் பயன்படுத்த முனைந்ததும், ராஜரீக பாரம்பரியங்களை விடுத்து, வேறு வழிகளைக் கையாள முனைந்ததும், அபிவிருத்தி என்ற மாயையை ஏற்படுத்தி தமக்கு மேல் ஏற்படுத்தப்பட்ட பழியை மழுங்கச் செய்வதற்கும் எடுத்த அனைத்து முயற்சிகளும். அரசுக்கு எதிரான பண்புகளை ஏற்படுத்தி, சாட்டப்பட்ட குற்றங்களில் உண்மை உண்டு என்று எண்ணும் நிலையை ஊக்குவித்தன. 

மேலும், மதத்தலைவர்களையும், வேறு அமைப்புக்களையும் சர்வதேசங்களுக்கு அனுப்பி அந்நாட்டவர்களை இலங்கைக்கு ஆதரவளிக்கும்படி கோரியதும், அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வலுப்பெறவைத்த நடவடிக்கைகளே! அவை வேண்டுமானால் தற்காலிக வெற்றியைத் தந்திருக்கலாமே தவிர, நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டிருக்கவில்லை, ஏற்படுத்திவிடப் போவதுமில்லை. 

அதே வேளை இங்கு மதங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனத்தை அரசு தடுத்து நிறுத்துவதைவிடுத்து. கண்டுங்காணா முறையில் நடந்ததும். போலிஸாரே அவற்றுக்கு அனுகூலமாக நடந்துகொண்டதும். அரசும். அரச தலைவர்களும், ஏன் முஸ்லிம் தலைவர்களும்கூட நடந்த மதவிரோ நடவடிக்கைகளை மறைப்பதிலும், நியாயப்படுதியதிலும், சப்பை கொட்டியதிலும், பின்ணணிகள் இருப்பதாக அரசு கூறிக் கொண்டிருந்ததிலும், உலகுக்கு இந்நாடு, போர்க்காலத்தில் எப்படி எல்லாம் நடந்திருக்கும் என்பதையும், இதன் பின்னர் எவ்வாறான போக்கைக் கைக்கொள்ளும் என்பதிலெல்லாம் கருத்தேற்றங்கள் ஏற்படுத்தியே இருக்கும். 

ஆதாரபூர்வமாக கண்ணொளிகளாக வெளியான பல மதவிரோத நடவடிக்கைகளை, பாதிப்புக்குள்ளான அரசியல் தலைவர்களையும், வேறு பிரபலங்களையும் வைத்து அரசைக் காப்பாற்றும் விதத்தில் அறிக்கைகள் விடப்பட்டமைகூட, நடந்தவற்றை உண்மைப்படுத்துவனவாகவே மாறும் என்பதை அரசு அறிய முடியாமற் போனதேனோ! 

அதற்கு மேலும், திடுதிப்பென உருவாக்கப்பட்ட நிவிநெகும. அதன் தொடர்பில் நடந்த விடயங்கள், 18ஆவது அரசியல் யாப்பு திருத்தம் போன்றவைகூட அரசின் போக்கை பாதகமான நிலையிலேயே உலகுக்கு அறிமுகம் செய்திருந்தன என்பதே யதார்த்தம்.

13பிளஸ் என்றது போய், 13ஆவதே இல்லாமல் ஆக்குவதற்கான முன்னெடுப்புக்கள், அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட கறைகளே தவிர இல்லை! 

இனிமேல், அரசுக்கு எதிரான போர்க்காலக் குற்றங்களை சரியான அணுகு முறையைப் பாவித்து அதிலிருந்து விடுபடுவது ஒன்றே அரசுக்கு உள்ள ஓரே வழி! அன்றேல் இந்நாடே பாரதூரான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். 

தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/n78e6k6

Tamil Circle

தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!

பாவம் தமிழக மக்கள், இலங்கைத் தமிழ் மக்களின் பெயரை வைத்தே பிழைப்பு நடத்தும் ஈனர்களை இனம் கண்டு கொள்ள முடியாது,அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்களே என நினைக்கும் போது, பாவம் என்பதைத் தவிர வேறு தெரியவில்லை.

அண்மையில் ஒரு கார்ட்டூன் பார்த்தேன். அதில் (தமிழ் நாட்டைக் குறிப்பதற்காக) தெற்கில் உள்ள தமிழர்கள பாதையில் மலம் கழிக்கிறார்கள் என்றும், முதலில் அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக் கொடுக்கும் வேலையைப் பார்க்கவும் என இலங்கை  ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் சிலர் அரசியல் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு  இலங்கைத் தமிழ் மக்கள் பற்றிப் பேசும் யோக்கியதையைக் கொடுத்தவர்கள் யார்!  இலங்கையில் கிழக்கு மாகாண மக்கள் அரசை ஆதரித்து,  ஆடசியை அரசிடம் கொடுத்துள்ளது.

இலங்கையின் வடக்கில் தமிழ் கூடடணி ஒன்று ஆட்சி பீடமேறியுள்ளது.  அதன் தலைமையை மிகச் சிறந்த, நேர்மையான, நீதித்துறை சார்ந்த ஒருவர் அலங்ரித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் அவ‌ரோ, அவர்  சார்ந்த கட்சியோ தமிழ் ஈழம் பற்றிப் பேசுவது கூட இல்லை. அது அவர்களது கொள்கையுமல்ல. அப்படி இருக்கும் நிலையில், சீ.....மான்கள்  போன்ற கழிவுகள் அழையா விருந்தாளிகளாக, அடுத்த நாட்டுக்குள் மூக்கை நுழைத்து, ஏன் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகின்றன! இதனைத் தட்டிக் கேட்க வேண்டியது, தமிழக மக்களே! 

Thursday, December 26, 2013

இந்த நாட்டில் நாம் எதை அனுபவ ரீதியாக உணர்கின்றோம்? எப்படி அன்றாடம் வாழுகின்றோம்?

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/opew579

Lankamuslim.org

இந்த நாட்டில் நாம் எதை அனுபவ ரீதியாக உணர்கின்றோம்? எப்படி அன்றாடம் வாழுகின்றோம்?

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எல்லோருக்கும் ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது. குற்றச் செயல்கள்நடைபெறும் பாங்கையும், அதன் எதிர் விளைவுகளையும், உண்மையாக ஆழ்நது சிந்தித்துப் பார்க்கின், எல்லாம் திட்மிட்டமிட்டவாறே நடைபெற்று வருவதும், அதற்காக, நமது கைவிரல்களே, நமது கண்களைக் குத்திக் குருடாக்கப்படுவதிலும் இருந்து தெரியவரும். ( நமது கைவிரல்கள் என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளே)

இங்கு குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டியவர்கள், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை காணப்படும் போது, அனைவரும் தமது நிலையை அஞ்சி வாளாவிருக்கின்றனர். வழமையாக நடப்பதால் குற்றச் செயல்கள் பற்றி யாரும் பெரிதக அலட்டிக் கொள்வதில்லை என்பதைவிடப் பெரிய காரணம். மேற்கண்ட பயமே!

குற்றவாளிகள் இனங்காணப்பட்டமையே அந்தப் பயத்தை உருவாக்கி அனைவரையும் மௌனிகளாக்கி விட்டுள்ளது எ்னபதும் இந்நிலை, புலிகள் யுகத்திற்கு நாடு மீண்டுள்ளதை வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதையும் கட்டியங் கூறுகின்றது.

கருததுக் கணிப்பொன்றில், இந்நாடு ஊழல் கூடிய நாடு என்ற வரிசையில் மிகத்துரித நடைபோடுவது, அனைத்தையும் எடைபோடப் போதுமானது.

இந்நாட்டின் யாப்பின் சில ஷரத்துக்கள் பொல்லாதவர்களின் கைகளினால் சொல்லாக் காசாக்கப்பட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றது.

Saturday, December 21, 2013

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …

Commented by nizam1944 on: http://tinyurl.com/mrvdbpj

Lankamuslim.org

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …


சுதந்திரத்தின் பின்னர், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, சிறுபான்மையர், மொழி என்ற ரீதியிலமைந்த, தமிழர் பிரச்சினை, பல்வேறு யுக்திகளின் மூலம், மதரீதியிலும், பிராந்திய ரீதியிலும், குறுகிய நோக்கிலும், பிரித்தாளும் கொள்கை, தந்திரோபாயங்கள் போன்றவைகளுடன் அரசியல் மயப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, நசுக்க முனைந்ததன் பின்விளைவே, படிப்படியாக ஆயுதப் போராட்டம் என்ற அவலத்துக்கு வழி வகுத்தது.

அதன் பின்னர் கூட பட்டறிவும் வேலை செய்யவில்லை என்பது எதனைக் காட்டுகின்றது! யுத்தம் வெல்லப்படும் வரை, 13 பிளஸ் என்று பகிரங்கப்படுத்தப்பட்டு. பின்னர், பதின்மூன்றே இல்லாமலாக்கும் நிலைமை ஏற்படுத்தப்படும் போது, கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கைக்கும், கடைசி ஆணி அடிக்கப்பட்டது. அதன் பின்னரான நிகழ்வுகள் எழுதத் தேவையற்ற உலகறிந்தவை!

இந்நிலையில், பேச்சுவார்த்தை, தீர்வு என்பதெல்லாம் எட்டாக் கனியே தவிர இல்லை. உடன்பாடுகள், தீர்வுகள் – உண்மை, நல்லிணக்கம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, நம்பிக்கை, மனிதாபிமானம், நாட்டுநலன் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகக் காணும் நிலையிலேயே, சாத்தியப்படுமே தவிர, பேச்சொன்று செயலொன்று என்ற ரீதியில் அமைய முடியாது.

தற்போதைய நிலை படிக்கிறது தேவாரம், இ‌டிக்கிறது கோயில் என்ற நிலையில் உள்ளதாகவே நடப்புகள் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றன.

உண்மையாகக் கூறுவதாயின், சிறுபான்மையினர் பிரச்சினை தீர்வுக்கு இன்றைய நிலையில் யாருடைய உதவியும் தேவை இல்லை, மனிதாபிமானத்துடன், சிறுபான்மையினரும், இந்நாட்டின் பிரஜைகளே, அவர்களும் அவர்களது சுயமரியாதையுட்ன வாழ வேண்டியவர்களே என்ற மனப்பக்கும் மட்டும் இருந்தால், சில தினங்களிலேயே தற்போதுள்ள அரசியல் பலத்தில் மிகச்சிறந்த தீர்வொன்றை செய்து முடிக்கலாம்.

அதற்குரிய அத்தனை தகுதிகளும், தற்போதைய இந்நாட்டின் தலைவருக்கு இருக்கின்றது. அவரால் முடியும். தேவையானது – செய்ய வேண்டும் என்ற உந்தலே! அப்படி அந்தக் கைங்கரியத்தைச் செய்வாராயின் அவர் இவ்வுலகு அழியும் வரை புகழுடன், சாதனையாளராக, உலகத் தலைவர் வரிசையில் வைத்து எண்ணப்படுவார். உலகத் தலைவர் ஒருவரை மீண்டும் வழங்கிய ஒரு பெருமையையும் இந்நாடு பெற்றுக் கொள்ளும்.

சா/த பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்!

Commented on BERU News on: http://tinyurl.com/kp2v8ka

 சா/த பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்!


“இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?” இது வினா என்றால், ஏற்கனவே இதற்கான விடை இருக்க வேண்டும்.  அந்த விடை,  இஸ்லாமிய சட்டத்தில் காணப்பட்டதாகக் கருதப்பட்ட இரு பாதகமான மூலாதாரங்களையும் வெளிபப்டுத்தி, ஆய்வுக்கு, விசாரணைக்கு உட்படுத்தி, குர்ஆனிய அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.  அப்படி ஏதும் உளதா என்பதைப் பொறுப்பான அமைச்சர் வெளியிட வேண்டும். முடியாவிடில், 

இந்த வினாவை,  பரீட்சை வினாத்தாளில் உள்வாங்கியவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அழைக்க்பட்டு, இவ்விடையை அதாவது, விடையாகக் கருதப்படும் தகவலான, ”இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்கள்” எங்கிருந்து பெறப்பட்டதென நிரூபிக்கும்படி பணிக்கப்படல் வேண்டும். 


தவறும் பட்சத்தில்,  சம்பந்தப்பட்ட அனைவரும், பரீட்சை திணைக்கள வேலைகளில், கல்விசார் நடவடிக்கைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதுடன், கடுமையான தண்டனைக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும்.  


இதன் பின்னர், இது போன்ற வினாக்களை எழுப்பு முன்னர், அதன் தகைமைகளை சம்பந்தப்பட்ட உரிமைபெற்ற மதநிறுவனங்களில் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 


Thursday, December 12, 2013

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

Commented by nizamhm1933 on http://tinyurl.com/q2oyk74

Lankamuslim.org


இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

புலிகளால் 1990 கடைப்பகுதியில் பலவந்தமாக, கொலை அச்சுறுத்தலுடன், உடமைகளை அபகரித்துக் கொண்டு, விரட்டியடித்து இனச் சு்த்திகரிப்பை மேற்கொண்டமை உலயேயறிந்த, உலகில் முதன் முதல் நடைபெற்ற கொடுமை. அதற்கே இது வரை தீர்வு இல்லாத போது, தீர்வு பற்றிச் சிந்திக்கவே முற்படாத போது, மறக்கப்பட்ட காரணியாகி, மடமாற்றத்துககு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமற் போனவ்ர்க்ள பற்றி்க கூறி என்ன பயனைப் பெற்றுக் கொள்ளப் போகின்றனர் முஸ்லிம்கள்!

இந்நாட்டில் முஸ்லிம்கள் இனி வாழ முடியுமா என்ற  பரிதவிப்பில் செய்வதறியாது திகில் பூண்டில் மிதித்தவர்களாக இருக்கும் தருணத்தில், தமது பழைய துன்பங்களைப் பற்றி முறைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா!

ஏற்கனவே கட்டவிழ்த்து விடப்பட்ட காடையர்களால் நடத்தி முடிக்கப்பட்ட அராஜகங்களை நியாயப்படுத்தும் வேலையும், அப்படி எதுவுமே  நடக்கவில்லை அத்தனையும் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரங்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் மந்திரிகள் உள்ள இந்நாட்டில்,  காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக எடுக்கும் முயற்சி விழலுக்கிறைத்த நீரே  !

சில புதுமுகங்களால்,  தாய்மார்கள்தம் உறவினர்களைக் காணவில்லை எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்,  ஆதாரமற்றவை எனக் கூறும் அளவிற்கு நிலைமை கீழிறங்கி இருக்கும் போது, இது போன்ற ஆணைக்குழு விவகாரங்கள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கப்  போகின்றது.  முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் அவர்களது இனங்களே துரோகிகளாக இருக்கும் நிலையில் நீதியை எதிர்பார்ப்பது மலடி பிள்ளை பெற்ற கதையாகத்தான் இருக்கப் போகின்றது!

Wednesday, December 11, 2013

இன ஜக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

Commented by nizamhm1944 on: :http://tinyurl.com/lugdao2
பிரச்சினைகளுக்குத் தீர்வு வன்செயல் அல்ல, அது தோற்றுப் போன சித்தாந்தம் என்பதைக் கவனத்தில் நிறுத்தியவனாக இதனைப் பதிவிடுகிறேன்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல் வேறு நியாயப்படுத்தல்கள் இருக்கும். அவைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நடுநிலையில் நின்று, ஆராய்ந்து, உணர்ந்து, மகக்ள் நலன்களை, இனஐக்கியத்தைக் கருத்திலிருத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
சில வேளைகளில் விட்டுக் கொடுக்கும் பண்பு கூட வேண்டப்படுவதாக இருக்கும். அவ்விட்டுக் கொடுப்பு நன்மை பயக்குமாயின், அதனைச் செய்வதை மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்வதில் யாருக்கும் நஷடம் ஏற்பட்டு விடப் போவதில்லை.
ஒரு விடயத்தை அணுகுமுன், மனிதம் ஒன்றைத் தவிர,அங்கு அரசியலோ, மத உணர்வுகளோ முன்னிலைப்படுத்தப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட, நீதி பெற்றுக் கொள்வதற்கான தகுதியாகிவிட முடியாது. தீர்வு காணும் முன் கடந்த கால பின்னணிகள் நுணுக்கமாக ஆராயப்படல் வேண்டும். ஒருவரின் உரிமை, இன்னொருவரின் உரிமைக்கு எவ்வகையிலும் பங்கம் ஏற்படுத்திடக் கூடாது. ஒருவருக்கு செய்யப்படும் நியாயம், இன்னொருவருக்கு அநியாயமாகிவிடக் கூடாது. பிரச்சினைகள் இன்று இருக்கும்.நாளை மறைந்துவிடும். பிரச்சினைக் காலத்தில் நியாயமற்று ஏற்படுத்தபப்ட்ட வடுக்கள் மறைவதில்லை. அதுவே தீராப்பகையாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
பசியால் துடிப்பவனை வீ்ட்டிற்கு அழைத்துச் சென்று உண்டியும் கொடுத்து,, உறஙகவும் இடம் கொடுக்கும் மனநிலை படைத்தவர்கள் மன்னார் மக்கள். அபயம் என வந்து விட்டால், சற்றேனும் பின்னிற்காது வந்தவனை வாழவைக்கும் பண்பு கொண்ட அம்மக்கள் மத்தியில், இன்று இருந்து நாளை போகும் எவரும், பிரிவினைவாதக் கருத்துக்களை ஏற்படுததி மன்னார் மக்க்ளின் ‌ஐக்கியத்தைப் புரிந்துணர்வை அற்றுப் போகும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று சம்பந்த்ப்பட்ட அனைத்து சாராரையும் அன்பாகவும் பணிவாகவும். இறைவன் பெயரால் வே்ணடுகிறேன்.
மனிதத் தீர்ப்புகள் முழுமை பெற்றவை அல்ல. மாற்றப்படக் கூடியவை. இராணுவச் சட்டங்கள் போன்று சிவில் சட்டங்களை அணுக முடியாது. நாம் இன்று கொடுத்த தீர்பபு, சில வருடங்களில் , மாதங்களில், ஏன் நாட்களில்கூட பிழை என்பதை நாமே உணர்வதாக இருக்கும். அப்போது பாதிக்ப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண முடியாது போய் விடும். சரி செய்யா விட்டாலும் பரவாயில்லை. பிழை நடந்து விடாது பேணும் மனப்பான்மையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினை நீதியை நிலை நிறுத்த வேண்டிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்குமாயின், கடிமனங் கொண்டோரின் இழிசெயல்கள், நீதியை வழ்ங்குவத்ற்குத் தடைக் கற்கலாகிவிடக் கூடாது.
இக்ககுருத்துக்களில் வெளிப்பட்டுள்ளவை யாருக்கும். ஆதரவாகவோ, எதிராகவோ, விமர்சனமாகவோ கூறப்பட்டவைகள் அல்ல.
எதில் தீர்க்கமான ஞானமில்லையோ, அதனைப் பின்பற்ற வேணடாம் என்ற இறைகோட்பாட்டை மதித்து அதன்படி எழுதப்பட்டதே! முழுமையாக மன்னார் மக்களின் இன ஒற்றுமை தவிர வேறு மறைமுக எண்ணங்கள் எதுவுமில்லை.

Thursday, December 5, 2013

ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்!: ஜனாதிபதி

Commented by nizamhm1944: http://tinyurl.com/q4hjc5y

Lankamuslim.org

ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்!: ஜனாதிபதி


கடந்த இரு வருடங்களாக நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், உலகத் தலைவர்கள் உட்பட அனைவரதும் கவனத்தை ஈர்த்து, மனித உரிமை ஆணையாளரால்கூட ஐநா வில் பேசப்பட்ட பின்னர், ஜனாதிபதி முஸ்லிம் இராஜ தந்திரிகள் மத்தியில் ஆற்றிய உரை, அந்த இராஜ தந்திரிகளின் உள்ளத்தில்  எவ்வாறான கருத்தை ஏற்படுத்தி இருக்குமோ! 

ஆனால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும், நடுநிலையாளர்கள், அவதானிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அவநம்பிக்கையை, அச்சத்தை, விரக்தியை ஏற்படுத்தியுள்ளமை ஆரோக்கியமானதல்ல! 

குறிப்பாக பொதுபலசேனாவின் பேச்சுக்களையும். ஊடக அறிக்கைகளையும் வாசிப்போர் இங்கு நடப்பது என்ன என்று இலகுவாக அறிந்து கொள்வர். நாட்டின் சட்ட நடைமுறை என்பது, ஜனாதிபதியிடம் நிரூபித்து நீதி பெறுவதாக இருந்தால், இந்நாட்டின் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி, மதவிரோத நடவடிக்கைகளை முன்வைத்த போது, ஜனாதிபதியால் அவர்களுக்கு, இதன் பின்னர் இதுபோன்ற மதவிரோத நடவடிக்கைகள் இடம் பெற்றால், அப்படியானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கத் தேவையில்லை.   

எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டு, அவர்களது பேச்சுக்கள் நாட்டில் பிரச்சினையைத் தூண்டுவதாகக் கூறி அவர்கள் மேல் விசாரனை நடத்தப்படவும், வழக்குகள் பதிவாக்கவும் செய்யும் நடவடிக்கைகள் இந்நாட்டில் இன்றும் இருக்கின்றன. 

இது போன்ற பகிரங்கமாக நடைபெறும், யாப்பு மீறல்கள் கூட, தனி மனிதரால், ஸ்தாபன ரீதியில் நிரூபிக்கப்படுவதில்லை.  மேலும், குற்றச் செயல்களைக் கண்காணிப்பதும்,விசாரணைக்கு உட்படுத்தி, ஆதாரங்களுடன், நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதும், நிரூபிப்பதும் கூட, பொலிஸாரினது கடமையே! அவர்கள், இந்த விடயத்தில், தமது கடமைச் செய்யவில்லை என்பது, மக்களால், பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு. 

1983 ஜூலையில் தெற்கில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்ப்ட்ட அராஜகத்தின் போது, அதனைக் கட்டுப்படுத்த பொலீஸ் படையும் தவறியதுடன், பொறுப்புள்ள அரசும், மெளனித்ததுடன்,  நாட்டின் அதிபரே, பகிரங்கமாக, ஆத்திரம அடைந்த சிங்கள மக்கள் செய்கின்றார்கள் என அப்பாவிச் சிங்களவர் மேல் பழியைப் போட்டதன் பின்னணியால் உருவானதே, அகில உலகிலும் சிங்களவருககும், பௌத்தத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்தியும். மேலும், அதனால் தொடர்ந்த முப்பதாண்டுக் கொடூரங்களும், அழிவுகளும், உயிரிழப்புகளும், மறக்க முடியாதவை.  இன்னும், இற்றைவரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சர்வதேசத் தலையீடுகளும்,  குற்றச்சாட்டுக்களும். ஐநாவில் முன்மொழியப்படுகின்ற தீர்மானங்களும். தொடர் நடவடிக்கைகளும் கூட, அன்றைய நாட்டின் அதிபரின் உரையின் எதிர்விளைவே!

Tuesday, December 3, 2013

ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/omzn2qy

BERU News

         ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு                                           நள்ளிரவு முதல் தடை!


// கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னதாக தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் பரீட்சையில் வந்த அதே கேள்விகளை மாதிரி வினாத்தாளாக அச்சிட்டு வழங்கியிருந்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே பரீட்சைகள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து இத்தீர்மானத்தினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது //

இவ்விடயம் பரீட்சைத் திணைக்களத்தின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்துகின்றது.  பரீட்சைத் திணைக்களத்துள்  மிக மிக அந்தரங்கமாகத் தயாரிக்கப்படும், வினாத்தள்கள் எப்படி வெளியாகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதையும், அதனைச் சீர்செய்வதையும் விடுத்து எடுக்கப்படும் எவ்வித நடவஎக்கையும், பரீட்சை வினாக்கள் வெளியாவதைத் தடுத்துவிடப் போவதில்லை என்பதை அறியாதிருந்தால், நம் நிலை பற்றிச் சிந்திக்கவே வேண்டியுள்ளது.  

உண்மையில், டியூஷன் வகுப்புகளும், மாணாக்கர் நலன் என்ற அடிப்படையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அனைத்துச் செயற்பாடுகளும், பாடசாலைக் கல்வியின் நிலையை வெளிப்படுத்துவன.  பாடசாலைக் கல்வி சீராக மாணவருக்குக் கொடுக்கப்படுமாக இருந்தால் காளாண்களாகப் பெருகியிருக்கும், டியூஷன் வகுப்புகள் தோன்றியிரா! 

தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் தோன்றியிருப்பதாக தெரியவில்லை என்பது, நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ளவும், மாற்று நடவடிககைகள் எடுத்து, பாடசாலைக் கல்வியை மேம்படுத்தவும், அதன் மூலம் படிப்படியாக டியூஷன் தொல்லையையும், பெற்றார், மாணாக்கர் டியூஷன் மோக மனநிலையையும் தீர்க்க, மாற்றக் கூடியதாகவிருக்கும். 

இது மட்டுமல்ல, விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் நடைபெறும் குழறுபடிகளையும், களைவதற்கான மாற்று வழிகனளக் கண்டறிய வேண்டும்.  

உத்தியோகங்கள் வழங்கப்படு முன்னர், சான்றிதழ்களைப் பார்த்து, நியமனங்கள் செய்யாது, அறிவை அளந்து தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும்.  இன்றேல், தராதரப்பத்திரங்களைப் படிக்காமலே பெற்றுக் கொள்ளும் குறுக்கு வழிகளை மாணாக்கரும், பெற்றாரும் தேடிக் கொண்டிருக்கும் அவல நிலைகளை மாற்றியமைத்துவிட முடியாது. 

இதன் மூலம் நடைபெறும் அவலங்களில் இருந்து நாட்டை விடுவிக்கலாம் !

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/nccdegq

Lankamuslim.org

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

புததர் சிலை இல்லாத இராணுவ முகாம்களே இந்நாட்டில்  இருக்காது என்பது உண்மையே! எங்கெல்லாம் முகாம்கள் ஏற்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதவழிபாட்டுத்தலங்களும் உருவாகிவிடுவதைத் தவிர்க்கவும் முடியாது எனக் ககூறலாம். இந்திய அமைதி காக்கும் படை இங்கு இருந்த காலத்தில் அவர்ககும் தமது வழிபாட்டிடங்களை அமைத்தே இருந்தார்க்ள். இது மனிதன் வாழுமிடங்களில் அவை தோன்றுவது நியாயமானதே என்பதை வலியுறுத்துகின்றது. தற்போது அழிக்கப்படும் கணிதம் விடைதராதது.

பாதுகாப்பு வலயங்களாக இருந்த பகுதிகள்ில் காண்ப்படும் மதவழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதே! தற்போது அவை இடிக்கப்படுவதில் இருந்து, யுத்தம் நடைபெற்ற காலங்களில் கூட அவை அங்கு  இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகின்றது. மேலும், பெளத்தர்க்ள் பெரும்பாலோர் இந்துக் கடவுளரை வழிபடுபவர்களே!

அப்போது அவை இருக்க முடியுமானால், தற்போது என்ன காரணத்துக்காக அழிக்கப்படுகின்றன என்பதை, சாதாரண நிகழ்வாக ஒதுக்கிட முடியாதது. அத்தோடு, பொதும்க்கள் செறிந்து வாழும் தெற்கிலும்கூட  மதவழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படும், அகற்றப்படும் அதே வேளை, புதிதுபுதிதாக காரியாலய முற்றங்களிலும்.பொதுச் சந்திகளிலும்,  சுற்றுவட்டங்களிலும், இன்னபிற இடங்களிலும் புத்த சிலைகள் நட்டப்படுகின்றன என்பது, மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சமூக  ஆர்வலர்கள், அமைதி விரும்புவோர், மதவிரோத சிந்தனையற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மத்தியிலும், வெளிநாடுகளிலும் கூட பலத்த சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இது நல்ல சகுனமாகத் தெரியவில்லை.  இறைசாபத்தைக்கூட வருவிப்பது.  யாப்பையும் கேலிப்பொருளாக மாற்றியுள்ளது.