Monday, September 23, 2013

தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/otxf8gs

Voice Of Mannar

தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி

// இந்த முறையாது மாற்றுச் சிந்தனை வடமாகாணத் தமிழ் மக்களிடம் உருவாகட்டும்.//  
தேர்தலின் போது இக்கட்டுரை மாற்றுச் சிந்தனை பற்றிய கருத்தை முன்வைத்தனால், நான் தேர்தல் முடிந்த பின்னர் இக்கேள்வியை எழுப்பு கின்றேன்.  

இந்த முறையாது மாற்றுச் சிந்தனை வடமாகாணத் தமிழ் மக்களிடம் உருவாகட்டும். என்ற வேண்டுகோள் எதனைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டது. அப்படி பின்னணியுடன் எழுதப்பட்டிருந்தால் அது முற்றாக வடக்கு மக்களால் நிராகரிக்கப்ட்டுள்ளது என்பதைக் கூறிவைக்க விரும்பு கின்றேன்.  

சில சரியான கருத்துக்கள் ஆயினும் பொருத்தமற்ற நேரத்தில் வெளியிடப் படும் போது அவற்றின் பலனை மக்கள் பெற்றுக் கொள்வதில்லை.  உண்மை யில் தங்கள் சிந்தனையில் இருந்து வெளிப்பட்டவை அனேகமாக நடைபெற்ற உண்மைகளே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  ஆனால், நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான தீர்ப்பையே மேற்கொண்டனர் என்றே கூறவேண்டும். 

காரணம் நீதிமன்றுகள் கூட, முன்வைக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டே தீர்ப்புக்களை வெளியிடும் அவலத்தில் உள்ள போன்று, வடக்கு மக்கள் மத்தியில் தமது வாக்குகளை இடுவதற்கு பொருத்தமானவர்கள் இல்லா விடினும் கூட மாற்று வழியின்மையால் தமக்கு முன் நிற்பவர்களில்,  அனர்த்தங்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் நிலை பற்றியே சிந்தித்துள்ளார்கள்.  

அனைத்து காலங்களிலும் அதிகாரப் பரவலாக்கல், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களே தமிழ் மக்களின் முன் வைக்கப்பட்டிருந்தன. அவை களில் எவையும் கிடைத்திருக்காத நிலையிலும், மக்களைத் தம் பக்கலில் வைத்திருக்க வேண்டிய நிலையிலும தனிநாடு கோரிக்கை முன்வைக்கப் பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்று இலங்கைச் சரித்திரத்தையே மாற்றியமைத்து, பிரதான எதிர்க்கட்சியாகவும் மாறியது.  

ஆனால், அக்கட்சி எதைக் கூறி மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்று ஆட்சிக்கு வந்ததோ, அதனை மறந்து செயற்பட்டதன் விளைவே, ஆயுதப் போராட்டத்தில் நுழைத்து, தமிழ் இளைஞர்களைக் காவு கொள்ள வைத்தது. இதனை எல்லாம் பார்ப்பதற்கு தனிநாடு கோரிக்கையை முன்வைத்த,  தந்தையென ஏற்கப்பட்டுள்ள, அமரர் செல்வநாயகம் அவர்கள் உயிரோடு இருக்கவில்லை.

உண்மையில் அக்கட்சி பாராளுமன்றைப் பகிஷ்கரித்திருக்க வேண்டும். 1977இல் பெற்ற அவ்வெற்றியையே தமது ஆயுதமாகக் கொண்டு தமது மக்கள் தனிநாடு ஒன்றுக்காக தமக்கு வாக்களித்துள்ளார்கள் எனக்கூறி போராட் டத்தை முன்வைத்திருக்க வேண்டும்.  அப்படியின்றேல் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, மீண்டும் மக்கள் முன் தோன்றி தனிநாடு கோரிக்கையில் இருந்து விலகிவிட்டதாகக் கூறி அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும. 

அவர்களின் பாராளுமன்ற மீள்  பிரவேசம், தனிநாடு கோரிக்கையை பிசுபிசுக்க வைத்துவிட்டது மற்றுமல்ல,புதிய யாப்பின்படி ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்திற்று. புலிகளின் கை ஓங்கி யிருந்ததன் விளைவாக ஆறாவது திருத்தத்தை நிராகரித்து, அனைவரும் வெளியேறி தமதுயிரைக் காத்துக் கொண்டனர். இதுவே 1987இல் இந்தியத் தலையீட்டுக்கும் வழி வகுத்தது.  

இதே த.வி. கூ யினர், ஆறாவது திருத்தத்தையும், ஒற்றை ஆட்சியைும் ‌ஏற்று, சில போராட்டக் குழுக்களுடன் சேர்ந்து 1989இல் தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கௌவினர், அல்லது புலிகளால் மண்ணைக் கௌவ வைக்கப்பட்டனர்.  

இதன் பின்னர், புலிகளின் அனுசரனையுடனும் கள்ள வாக்குகளின் உதவி யுடனும் பாரளுமன்றக் கதிரைகளை நிறைத்துக் கொண்டனர். அதே வேளை, எந்த 13ஆவது திருத்தத்தையும், மாகாண சபையையும் நிராகரித்து சென்றனரோ அந்த மாகாண சபை போன்ற ஒன்றை வடக்கு கிழக்கு மாகாண சபையின் இடைக்கால நிர்வாக சபை என்ற பெயரில் தமக்குத் தருமாறு கேட்டுத் தோல்வியடையும் நிலைக்குத் தம்மைத் தாழ்த்தியும் கொண்டனர். அத்தோடு  இணைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் இழந்ததே கண்ட மிச்சம். முடிவு, புலிகளும், தமிழர் விடுதலைக் கூட்டணி யினரும், இன்னும் போராட்டக் குழுக்களும் தனிநாடு என்ற பெயரில் தமிழ் மக்களையும், அவர்களின் அனைத்து வளங்களையும் இழக்க வைத்ததே தவிர, அவர்களால் முன்வைக்கப்பட்ட தனிநாடு கோரிக்கையைக் கூட தக்க வைத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. 

ஒற்றை ஆட்சி முறை புலிகளாலும், மற்றைய போராளிக் குழுக்களாலும், த.வி.கூட்டணியினராலும் ஏற்கப்பட்டது. 

மாகாண ஆட்சி முறையும்  புலிகளாலும், மற்றைய போராளிக் குழுக்களாலும், த.வி.கூட்டணியினராலும் ஏற்கப்பட்டது.  

பிரிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் கூட அனைவராலும் ஏற்கப்பட்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அழிவுகள்தான் ஈடுசெய்யப்பட முடியா துள்ளது. 

இவை முதிர்ச்சியற்ற முறையில் முன்வைக்கப்பட்ட, அல்லது முன்னெடுக் கப்பட்ட தீர்மானங்களின் பின்விளைவே. இனியாவது, கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தையும், சிறந்த தலைமையையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வைச் சீரடையச் செய்ய வேண்டும். 

அது போன்றே அரசும் இச்சந்தர்ப்பத்தையே சரியான முறையில் பயன்படுத்தி. இந்நாட்டில் அனைத்து மக்களும் சமவுரிமையுடன், ஒற்றுமையாக, அமைதி யாக,  சகஜீவன வாழ்வு வாழ்வதற்கான வழிகளில் தமது கொள்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே நமது அரசியல் யாப்பும் வேண்டி நிற்பது.

No comments: