Commented by nizamhm1944 on: http://tinyurl.com/m9r3fnl
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து உரிமை போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்: அஸ்மின்
ஒரு விடயத்தை உணர்ச்சிகளுக்கு உட்பட்டு அணுகுவதனால் சிறந்த அனுமானங்களுக்கு வரமுடியாது. அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் என்பதை இன்று நாட்டில் கட்டுப்படுத்தப்படாது, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான மதவிரோதச் செயற்பாடுகள் நம்மை இடித்துரைக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வடமாகாண முஸ்லிம்கள் யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.
பொது எதிரியை வீழ்த்துவதற்கு முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைவதே நம்மை அழிவிலிருந்து காப்பாற்றக் சுடியது. எந்த அரசும் முஸ்லிம்களை புலிகள் விரட்டியடித்த போதும் சரி, அதற்குப் பின்னரும் சரி அந்த முஸ்லிம்களுக்கு எதனையும் செய்யவில்லை. அவர்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வஞசிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான எந்த இழப்பீடும் கொடுக்கப்படாதது மட்டுமல்ல, அதற்கான கோரிக்கைகள் கூட பரிசீலிக்கப்பட வில்லை என்பதே.
வடக்கில் காலங்காலமாக, புலிக்ள் முஸ்லிம்களை விரட்டியதற்குப் பின்னர்கூட,இருந்து வந்த இன நல்லுறவை பாதிக்க வைத்ததுடன், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்குமளவிற்கு முரண்பாடுகளை மட்டுமே வளர்த்துள்ளது மீள்குடியேற்றம் . வடக்கு முஸ்லிம்கள் அங்குள்ள தமிழர்களுடன் என்றும் கைகோர்த்து வாழ்ந்தவர்கள், வாழ வேண்டியவர்கள்.
மீள்குடியேற்றப்பட்டவர்கள் உண்மையை உய்த்துணர முடியாதபடி அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதனால், அதிலிருந்து மீளமுடியாமலும், தாம் எந்த நிலையில் விடப்பட்டுள்ளோம் என்பதையும் அறிந்து கொள்ள முடியாமலும் உள்ளனர்.
சரியான திட்டமிடலின் அடிப்படையில் இல்லாமல், ஏதோ சில சில்லறைகளைக் கொடுத்து அந்த அப்பாவி முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டுள்ளது மட்டுமல்ல, மீள்குடியேற்றம் என்ற பெயரில், அவர்கள் 23 வருட அகதி வாழ்வுக்குள்ளளும் தமக்கென உருவாக்கி வைத்திருந்த ஒரு ஸ்திரத் தன்மையயையும் இழக்க வைத்துள்ளது. குடியேற்றப்பட்ட இடங்களிலும் நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற, ஸ்திரமற்ற, வாழ்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களது நிலை என்றுமே கேள்விக் குறியாகாமல் பாதுகாப்பது நமது தலையாய கடமை. அது சேர்ந்து வாழ்வதன் மூலமே சாத்தியாகும்.
ஏற்கனவே முஸ்லிம்கள் அளித்த வாக்குகளின் மூலம் பதவிகளில் இருப்போருக்கே நாட்டு நிலைமையைப் பாராளுமன்றில் பேசுவதற்குக் கூட முடியாது என்ற நிலையில் முஸ்லிம் தலைமைகள் இஸ்லாத்துக்கு எதிராகவே அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்குமளவிற்கு நிலைமை மாறியுள்ளமையை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
No comments:
Post a Comment