Commented by nizamhm1944 at : http://tinyurl.com/oq3dmze
Lankamuslim.org
Lankamuslim.org
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்!
ஒருவரை வீழ்த்தி இன்னெராருவர் தளம் அமைத்து வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது. மற்றவர்களின் குறைகளைக் கூறி, அபாண்டங்களை அள்ளிவீசி தளம் அமைப்பது நிரந்தரமற்றது.
மேற்கண்ட கட்டுரை வடக்கு முஸ்லிம்களின் மேல் கொண்ட காதலால் எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவில் இன்று வடக்கு முஸ்லிம்கள் இல்லை.
மீள் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே அப்பட்டமான உண்மை. சில சில்லறைகளைக் கொடுத்து வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டோம் என்பதனை உலகறியச் செய்வதற்கான எத்தனங்கள் மட்டுமே வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்ற பெயரால் செய்யப்பட்டுள்ளது.
மேலும் காலங் காலமாக, புலிகளால் முஸ்லிமகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கூட, மிகவும் நெருக்கமாக, ஒற்றுமையாக வாழ்நத தமிழ் - முஸ்லிம்களிடையே, மீள் குடியேற்றம் என்ற பெயரில் முரண்பாடுகள் மட்டுமே தோற்றிவிக்கப்படடுள்ளன என்பதே உண்மை.
வடக்கு முஸ்லிம்கள் என்றும் தமிழர்களுடன் சிறப்பான உறவைப் பேணி வந்தவர்கள், உறவைப் பேண வேண்டியவர்கள். அதுவே சிறந்த சக வாழ்வுக்கு வழிசமைக்கக் கூடியது.
ஆதலால், அரசியல்வாதிகள் தங்கள் சுயநல வாழ்வுக்காக தமிழ்- முஸ்லிம்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபட வேண்டாம். இது பிரித்தாளும் தந்திரமே தவிர இல்லை.
வடக்கு முஸ்லிம்களுக்கான பல் வகை இழப்புக்கள் சிறந்த பொறிமுறை ஒன்றின் மூலம் அரசினால் ஆய்வு்க்கு உட்படுத்தப்பட்டு தக்க முறையில் ஈடு செய்யப்படும் வரை அவர்கள் சுதந்திரம் அளிக்கப்பட்டுவிட்டார்கள் எனக் கதை விடுவது வெறும் ஏமாற்று வித்தையே என்பதையும் முஸ்லிம்கள் அறிந்தே வைத்துள்ளனர். அவர்கள் அதுவரை என்றுமே அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பர்.
No comments:
Post a Comment