Commented by nizamhm1944 on : http://tinyurl.com/o6wcs4e
Lankamuslim.org
Lankamuslim.org
வடமாகாண சபைக்கு முழுமையான ஒத்துழைப்பு
// வெளியாகியுள்ள வட மாகாண சபை தேர்தல் பெறுபேறுகள் வடக்கு மக்களின் தேவையை உணர்த்துமாகவிருந்தால் அதனையொரு பாடமாகக் கொண்டு அவற்றை சரி செய்ய முயற்சி எடுப்போம். அதேவேளை, வடக்கு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கத்திடமுள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுத்துள்தெனவும் அமைச்சர் கூறினார். //
நல்ல சிந்தனை. இது எதிர் காலத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அரசியல்வாதியிடம் இருக்க வேண்டியது. ஆதலால். இத்தேர்தல் முடிவு உணர்த்தும் செய்தி, வடக்கில் நடைபெற்ற மீள்கட்டமைப்பபு வேலையை மறுப்பதாகவோ, ஏற்றுக் கொள்ளாததாகவோ யாரும் நினைக்கத் தேவையில்லை.
ஆனால், இவைகளுக்கு அப்பால் அவர்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது. அது நிறைவேற்றப்படாவிடில், என்ன செய்தாலும் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை என்பதை வெளிபபடுத்துவதே அச் செய்தி. தம்மக்களின் மனங்களை வெல்வதற்கான செயற்பாடுகளில் அரசு தன்னை அர்ப்பணிப்பதன் மூலமே இதற்கான தீர்வை எட்டலாம்.
13ஆவது திருத்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஷரத்துக்களும் செயற்படுத்தப்பட வேண்டியனவே! முழுமையாக அந்த ஷரத்துக்களையாவது செயன்முறைக்குக் கொண்டு வருமாறு அரசு மாகாண சபைகளைப் பணிப்பது, நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைகளை நியாயமான அளவுக்குக் குறைக்கும் என்பதையும் உணர வேண்டும்.
மாறாக, அவற்றை மறுப்பது, அரசியல் யாப்பை காப்பதில் பயபக்தியோடு செயற்படுவோம் என உரைத்த சத்தியத்தை மீறிச் செல்வதாகும் என்பதை பாராளுமன்ற அங்கத்தவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். யாப்பு அனுமதித்துள்ள தனிமனித சுதந்திரம் மதிக்கப்படாது, நசுக்கப்படும் போதே மக்கள் மாற்று வழிகளைக் காண முயல்கின்றனர். இது ஒரு இயற்கையான செயற்பாடே!
மாகாண சபை 1987 உருவாக்கப்பட்டதன் நோக்கமே, நாடு பிரிந்து போவதைத் தடுக்கும் ஒரு யுக்தியே! ஆக அதிலுள்ள வற்றைக் குறைக்க முயற்சிப்பதோ, அல்லது செயற்படுத்துவதைத் தடுக்க நினைப்பதோ மீண்டும. ஒரு கரிய காலத்துக்குள் இந்நாட்டைத் தள்ளிவிடும் என்பதைச் சிந்தனையில் கொள்வது, தேசப்பற்றுள்ள ஒவ்வெருவரினதும் கடமையாகும்.
No comments:
Post a Comment