Commented by nizamhm1944 on: Lankamuslim.org at: http://tinyurl.com/o5u5k7t
இலங்கையில் எதிர்க்கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமைப்பாடு உண்டு
மிகச் சிறந்த சிந்தனை.
இலங்கையில் எதிர்க்கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமைப்பாடு உண்டு
மிகச் சிறந்த சிந்தனை.
எதிர்க் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்கு மேலான காரணமும் உண்டே! அது, ஆட்சியிலிருக்கும் கட்சியினருக்கு அவர்கள் தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்துகொண்டு, தமது போக்கில் மாறதல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஞாபகமூட்டலாகவும் இருக்கும்.
இந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோற்பதனால் அவர்களுக்கு எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. அடுத்த பொதுத் தேர்தலில். மொத்தமாக மண்ணைக் கௌவும் நிலை ஏற்படாதவாறு தம்மைக் காத்துக் கொள்ள அவர்களின அதிகார பலம் என்ற தூக்கத்தில் இருந்து விழி்ப்படையச் செய்யும்.
அத்தோடு முஸ்லிம், கட்சிகளுக்கும் மக்கள் தமது வாக்குகளை அளிக்கக்க கூடாது என்பதற்கு வேறு காரணங்கள் இருப்பினும் முக்கியமான காரணமாக, மேற்கண்ட தீர்மானத்துக்ககு முரண்பட்டதாக மாறிவிடும்.
மேலும், அண்மைக்கால வரலாறுகள், முஸ்லிம் கட்சிகள் முழமையாக அரசைச் சார்ந்து விட்டமையால், அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் இன்னொரு வகையில் ஆளும் கட்சியை பலப்படுத்தும் வாக்குகளாகவே மாறும். தமிழ்க் கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
மேலும் சிறுபான்மையினரைப் பொறுத்து, தற்போது நடந்து கொண்டிருக்கும் மதவிரோத. இனவிரோதக் கருத்துக்களுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பாக இத்தேர்தல் பயன்படுத்தப் படாவிடில், இதுவரை நடந்து கொண்டிருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் சிறுபான்மை மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டது போலவும், இதுவரை தமக்கு எவ்வித அநீதியும் நடைபெறவில்லை என்பதை வெளிப்படுத்துவதுமாகவே இருக்கும்.
அத்தோடு, மாகாண அடிப்படையில் சிந்திக்கும் போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பரவலாக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கபப்படாத நிலையில் உள்ள அதிகாரங்களும் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பிராந்திய நலனுக்கு ஊறுவிளைவிப்பதாகும்.
ஆளும் கட்சியே மாகாணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதால், அதிகாரங்கள் குறைக்கப்படும் போது அவை வாளாவிருக்கின்றன அல்லது தமது அங்கீகாரத்தை வழங்கி விடுகின்றன. இது ஓர் அபாயகரமான சூழலை உருவாக்கி உள்ளது.
எல்லாவற்றில் இருந்தும் மீள, தற்போதைய நிலையில், பிரதான எதிர்க் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும். அதுவே நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் செய்ய வேண்டியதுமாகும்.
No comments:
Post a Comment