Commented by nizamhm1944 on: http://tinyurl.com/q8hgkm3
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
தீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கேலிக்கூத்து: PMGG
பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் அடாவடித்தனங்களும், கட்டுமீறிய காவாலித்தனங்களும் அவற்றைச் செய்பவர்கள் இழிபிறப்புக் களாகவே இருப்பர் என்பதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அரசுக்கும், அவற்றைச் செய்வோருக்கும் நமது முஸ்லிம் அரசியல்வாதி களின் கையாலாகாத்தனம் அல்லது அடிமைத்தனம் மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதனாலேயே, காவாலிகளும் தமது கைவரிசையைக் காட்டுகின்றார்கள், அரசும் தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை வெறும் அறிக்கைகளை மட:டும் விடுத்துச் செய்து கொண்டிருக்கின்றது.
இனிமேல் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதும், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் அற்று, அதனைவிட பெரும் தாக்குதல்கள் நடைபெறு வதும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளியோம் என்பதும், அது தொடருவதும் என்பது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன செய்தியாகி விட்டது.
மினசாரத்தைத் தமது அராஜகங்களுக்காக துண்டித்து விட்டு செயற்படு மளவுக்கு செல்வாக்குடன், பகிரங்கமானதாகவே மஹியங்கனை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால், குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு நீண்ட நேரமோ, சாதுரியமோகூட அவசியமில்லை. மின்சாரத்தைத் துண்டித்தவர்களிடம் இருந்து உண்மைக் கள்வர்களை அறிந்து கொள்ள முடியும்.
இனி மேல் இவ்விதம் நடக்காது என்பதற்கு அரசால் இதுவரை உறுதியான உத்தரவாதம் கொடுக்கப்படவில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வகை யிலான பதில்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இதன் பின்னணி, நமது அரசியல்வாதிகளைக் காப்பாற்றுவதற்கானதாகவே கருத இடமுண்டு. அது போன்றே எமது அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் யாரையோ காப்பாற்றுவதற்காக விடப்படுபவையாகவே காணப்படுகின்றன.
எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும், அரசின் தரப்பிலிருந்தோ, எம் அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்தோ எடுத்ததற்கான எவ்வித அறிகுறிகளும் இதுவரை காணப்படவில்லை என்பது, இந்த விடயத்தை எவரும் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை என்பதையும், அவர்களுக்கு இதைவிட முக்கியமான நிகழ்ச்சி நிரல்கள் உண்டு என்பதையும் பட்டவர்த்தனமாகப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment