Monday, July 8, 2013

நிகாப் மற்றும் புர்கா தேசிய பாதுகாப்புக்கு கு அச்சுறுத்தல்

Commented by nizamhm1944 on
Lankamuslim.org
One World One Ummah

http://lankamuslim.org/2013/07/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87/#comment-9941

நிகாப் மற்றும் புர்கா தேசிய பாதுகாப்புக்கு கு அச்சுறுத்தல்

முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் வெற்றியாளர்கள் என்ற இறை வாக்கை யாரும் பொய்யாக்கிவிட முடியாது. அப்படியே முஃமின்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால், நமது குர்ஆனிய வாழ்க்கையில் பின்னடைவைக் கொண்டுள்ளோம் என்பதை அறிந்து, நமது நடவடிக்கைகள மீள்பரிசோதனை செய்து சீர்செய்து கொள்ள வேண்டும். மாறாக, நிராகரிப் பாளர்கள் நமக்கு உபதேசம் செய்யுமளவுக்கும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு சட்டத்தால் நாம் கட்டுப்படுத்தப்படும் அளவுக்கும் நாம் கீழ்நிலை அடைந்துவிடக் கூடாது. 

இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் உலகில் எவருக்கும் எவ்வகையான இடைஞ்சலும் ஏற்பட்டுவிட முடியாது. அப்படி ஏற்படுவதாக யாராவது  முறையிடுவார்களாயின், இஸ்லாம் என்ற பெயரில் நடைபெறும் பிழைகளாகவே அவை இருக்கும். அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்பு அல்லாஹ்வால் சாட்டப்படுவதே   என்பதைப் பின்வரும் வசனம் விளக்கும். 

விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனையைச் சாட்டிவிடுகிறான் என்பது அல்லாஹ்வின்வார்த்தை. 

விளங்காதவர்கள் நிலையே இப்படியென்றால், வேண்டுமென்றே நாம் இப்படித்தான் நடப்போம் என்று மனம்போன போக்கில் செயற்படுவோர் அவமானங்களையும், அபாயங்களையும் சந்திப்பதோடு அல்லாஹ்வின் தண்டனைக்கும் ஆளாகவே செய்வர். 

இவ்வாறான, குர்ஆன் அனுமதியாதவற்றைச் செய்வதன் மூலம் இந்தப் பிரகிருதிகள் இஸ்லாத்துக்கும் தேவையற்ற களங்கத்தைக் கற்பிக்கும் நிலையை உருவாக்கி, கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு இடமிளித்து, அபகீர்த்தியை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியத் தவறிவிட்டனர். இதற்கும் இறைதண்டனை உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம். 

குர்ஆனை அறிந்தவர்கள், யாரையும் திருப்திப்படுத்துவதற்காக, அன்றி அவர்க‌ளது எதிர்ப்பைச் சம்பாதிக்காதிருப்பதற்காக அன்றி  முகஸ்துதிக்காக குர்ஆனிய உண்மைகளை வெளிப்படுத்தாது இருப்பது அல்லாஹ்வின் தண்‌டனையை வருவிப்பது. 

No comments: