வாழ்வாங்கு வாழ இயற்கை நமக்களித்த வாழ்வாதாரச் சட்டம்; ஓர் கண்ணோட்டம்
1. இன்று உலகில் காணப்படும் முளைப்பன> வளர்வன> துளிர்ப்பன. பூப்பன. காய்ப்பன. கனிவன.
வாழ்வன. மடிவன. போன்ற பண்புகளைக் கொண்ட தாவரங்கள். செடி
கொடிகள். மரங்கள் போன்றவையும் பிறப்பன. நகர்வன. ஊர்வன.
நீந்துவன. பறப்பன. நடப்பன போன்ற
அனைத்தும் உயிருள்ளவையென அனைவரும் அறிவர். இதற்கு மாற்றுக்; கருத்துக்கள் இல்லை.
இல்லை. இல்லவே இல்லை.
2. உயிருள்ள அனைத்துப் படைப்புகளும் ஓரறிவையோ. ஈரறி வையோ. மூவறிவையோ. நாலறிவையோ> ஐயறிவையோ> ஆறறி வையோ கொண்டுள்ளவை என்பதும் ஏற்கப்பட்ட உண்மையே. இவை யனைத்தும் விண். மண். தண்ணீர் போன்றவற்றிலிருந்து தமக்கான காற்றை. நீரை. உணவைப் பெற்றே உயிர்
வாழ்கின்றன என்பதிலும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
3. இவ்வுயிரினங்கள் அனைத்தும் தாம்
வாழும் இடங்களில் காணப்படு வனவற்றை மட்டுமல்ல தம்மால் வாழமுடியாத பிற இடங்களில் உள்ள வற்றையும் ஏதோவோர் வகையில் பெற்றுத் தம் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளுகின்றன.
இதையே நாம்
இயல்பு வாழ்வென்றோ> இயற்கைச் சட்டமென்றோ அறிகிறோம்.
பின்வரும் பத்திகளில் அவை பற்றி
ஆராயலாம்.
அவற்றினை அறிவதும். அதன்படி நடப்பதும் நம் இன்றியமையாத கடமை யாம். நம்
எதிர்காலம் சிறப்புற மட்டுமல்ல இனி வரப்போகும் நம் இரத்த
பந்தங்களினதும் வாழ்வும் சிறப்பாக அமை வதற்கான அவர் தம் உரிமையை நாம் பாதுகாப்பதுடன் அதனை அவர் களும் அநுபவிப்பதற்காக விட்டுச் செல்லவேண்டியதும் நம் பொறுப்பும். கடமையுமாம். இது
இயற்கையால் நமக்களிக்கப்பட்ட அமானிதம். அதனை
அழிக்கும் உரிமை
எவருக்கும் இல்லை.
அநுபவிக்கலாம் நியதி தவறாது. நியதி
தவறின் அது
நம்மையே அழித்து விடும்.
4. இதனை விளங்கவைக்க 'ஓசோன்
படையின் ஓட்டை'யை ஒன்றாகக் கூறலாம்.. அண்மைக் காலங்களில் நம்மால் இயற்கைக்கு ஏற்படுத்தப்பட்ட பேரனர்த்தங்களில் ஒன்றால் உண்டான காயமே இது.
இதன் விளைவால் காலநிலையில் பெருத்த மாற்றம் உண்டாகியுள்ளது.
அதன் பயனாக
நமக்கேற்பட்ட நேரடித் தாக்கமான வெப்ப மாற்றம்> சருமப் புற்று> கண்ணோய் என்பவை எண்ணிறந்தன! இதற்கு மூலகாரணம் நாம்
அன்றாடம் பாவிக்கும் ஏரோசல் (குளோரோ புளோரோ கார்பனின் அதிகரித்த பாவனை) போன்றவை தானென அறியும் போது நம் உள்ளம் ஒரு கணம்
உறைந்தே போகிறது.
5. இயற்கையில் காணப்படும் இவ்வமைப்புமுறை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் அதியுயர்ந்தது. அது
பேணப்பட வேண்டியது. அதாவது. உலகில். எச்சந்தர்ப்பத்திலும். எவ்விடத்திலும் உயிரினங்களின் வாழ்வுக்கும். வாழ் வாதாரத்துக்கும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதுடன். எக்காலத்தும். எச்சந்தர்ப்பத்திலும்.எவ்விடத்திலும். எக்காரணங் கொண்டும் உலகின் தட்பவெப்பநிலை பாதுகாக்கப்படுவதுடன் சமநிலை பாதிக்கப்படா திருக்க வேண்டும் என்பதுவுமே. இது முற்றும் உணர்ந்த இறைவனின் அமைப்பு.
இதில் மாற்றங் காண முனைவது நம் சிற்றறிவினைப் பறை யடித்துப் பகிரங்கப்படுத்துவதையே வெளிப்படுத்தும். இவ்வமைப்பு முறையை யாராலும் மாற்ற முடியாது. அப்படியே மாற்ற முயன்றால் அல்லது முடிந்தால் அது
உலகில் பேரழிவொன்றையே மாறாய்த் தரும்.
6. இப்படியிருக்க மிருகவதை. உயிர்வதை. மாமிசம் விலக்கல். தாவரம் மட்டுமே உண்ணல். கொல்லாமை பற்றி எல்லாம் பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றன. மேலும் தாவரம் உண்பதற்கெதிரான பிரச்சாரம் மிக மோசமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாமிசம் உண்பவர்கள் பெரும்பாவச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களாகவும்
உருவகப்படுத்தப்படுகின்றனர்.
இவைக்கான தக்க
ஆதாரங்கள் நியாயபூர்வமாகவோ. இயற்கையின் அடிப்படையிலோ. விஞ்ஞான ரீதியாகவோ. மதரீதியாகவோ காட்டப் படுவதில்லை. இப்பிரச்சாரங்களும். கொள்கைகளும் சிறந்த நோக்கங் களைக் கொண்டிருந்தாலும்கூட வெற்றியளிக்காது. அப்படியே வெற்றி யளித்தாலும் இயற்கை எமக்களித்துள்ள அருட்கொடையான வாழ்வா தாரத் திட்டத்துக்கு மாறானதாகவே உள்ளது. அதனால் இயற்கைச் சட்டத்தின் இன்றியமையாமையும். முரண்படின் ஏற்படும் அனர்த்தங் களும் அறியப்படுவது நமது சிந்தனையைத் தூண்டுவதுடன் சிறப்பாகச் செயற்படவும் உதவும்.
7. 'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி; எல்லா
உயிரும் தொழும்' என்ற வள்ளுவப் பெருந்தகையின் ஏகத்துவக் கொள்கையையே மாற்றிப் பொருள் கொண்டுள்ளவர்களல்லவா நாம். உயிர்களைக் கொல்லாதவன. புலால் உணவை மறுத்து எதையும் உண்ணாதவன் உலகில் இறைவனைத் தவிர வேறு
யாரும் உள்ளனரா? எல்லா உயிரும் தொழுவது இறைவனைத் தானே! மனிதனைத் தவிர.
அனைத்து உயிரி னங்களும் இறைவனை
விடுத்து வேறொன்றைத் தொழுகின்றனவா? அல்லது மனிதனயாவது தொழுகின்றனவா? அப்படி எல்லா
உயிர்களும் தொழும்- உயிர்களைக் கொல்லாத உணவை மறுத்து எதையும் உண்ணாத.- மனிதன் உலகில் இதுவரை தோன்றவே இல்லையா? அப்படியானால் வள்ளுவர் நடவா
ஒன்றைக்கூறிச் சென்றாரா? நடவா ஒன்றைக் கூறும் நூலைப் பொதுமறை> உலகமறை> தமிழ்மறை என்பதெல்லாம் வெறும் வார்த்தைதானா? இது
வள்ளுவத்தையும். வள்ளுவரையும் கொச்சைப்படுத்தியதாகாதா? புலால் தவிர்க்கச் சொல்லி யிருந்தால். மீண்டும் தான்
இறந்தபின் தன் உடலைப் பறவைகட்கு இரையாக்குமாறு கூறியிருப்பாரா? எல்லா உயிரும் என்பதில் புலால் மட்டுமே உண்ணும் சிங்கம். புலி
மற்றும் எண்ணிலடங்கா மிருகங்கள். பறவைகள். ஊர்வன போன்ற
இன்னோரன்னவையும் அடங்குமே. இவை
தாமே புலால் உண்டு
புலால் உண்ணாதவரை எப்படித்; தொழும்? ஆக வள்ளுவர் இறைவனை மட்டுமே தொழச் சொன்னாரென்பதும். நம்மைப் புலால் மறுக்குமாறு பணிக்கவும் இல்லை
என்பதே உண்மை.
இறைவன்கூட இப்பிரபஞ்சத்தின் சம
நிலையைப் பாதுகாக்கவும். நம்மைப் பக்குவப்படுத்தி. செழுமைப்படுத்தி. சிறப்பான பேரின்பத்தைத் தரவு மல்லவா கொல்லும் தொழிலைத்தன் கடமையாக்கிக் கொண்டுள்ளான். மேற்போந்த பந்தியிற் கூறப்பட்ட கொள்கை மேற்கொள்ளப்பட்டால்; இறைவனைக்கூடத் தொழ
முடியாது! இந்த அடிப்படையில் நோக்கின் குறளையும் மறுப்பதாகவே அமையும் மொத்ததில் இறைமறுப்பே.
8. இன்று உலகில் பெரிதும் பேசப்படும் பிரச்சினை 'சூழல்
மாசு படுதல்; என்பதே! இதில்
காற்று மாசடைவதே உடனடியான பெரும் பாதிப்பாகிறது.
இதனால் உயிரினங்கள். தாவரம் உட்பட.
நோய்க்காளா கின்றன. வாடி
வதங்குகின்றன.
காற்றைச் சுத்திகரிப்பதில் மழையும் தாவரங்களும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. வானம் புகை மண்டல மாகக் காணப்படும் காலத்தில் பெய்யும் மழைநீர் கறுப்பு நிறமடை வதிலிருந்து இதை அறியலாம். தாவரங்கள் இரவில் மாசடைந்த காற்றை> தன்
உணவாக்கிக் கொள்வதன் மூலம்;
சுத்திகரிப்புத் தொழிலைச் செய்கின்றன. ஆதலால் உணவுக்காக பெருமளவில் காடு களும் தாவரங்களும், அழிக்கப்படுமாயின் மழை
பெய்யும் சாத்தியங்கள் குறைகிறது. தாவர உற்பத்தியும் தடைப்படுகிறது. இவையிரண்டும் செய்து வரும் சுத்திகரிப்புத் தொழிலும் நடைபெறாது. காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பருவ மாற்றத்தால் பனிமலைகள் உருகுவதாகவும். அதனால் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படவுள்ளதாகவும் கூறப்படுகிறதே? அதனால் கடல் மட்டம் உயர்வடைந்து நிலப்பரப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதே? அடிக்கடி வெள்ள அபாயம்> நம்மையெல்லாம் கடந்து வந்த
பாதையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளதே? தாவரம் மட்டும் உண்டு
வாழ்ந்தால் இன்னும் இவ்வபாயம் அதிகரிக்குமே?
9. ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்க்கையும் இன்னோரினத்தின் அழிவில் அமைந்துள்ளதைக் குறுகிய நோக்குடைய சிறுமதியாளர் அறிவதில்லை. அழிவுகள் இல்லாது ஆக்கம்தான் ஏது?
ஆக்கமில்லாது அழிவுதான் ஏது? அழிவுகளில்லாத ஆக்கத்தை, அதன்
பின் விளைவுகளை நினைக்கவே முடியாதுள்ளது. ஆக்கமில்லா அழிவும் அத்தகைத்தே! நீர் நிலைகளிலுள்ள மீன்கள் தாவரங்களையும்> பூச்சி> புழுக்களையும் தின்று நீரைச் சுத்தி கரித்துப் பின்தாமும் பிறர்க்கு உணவாகின்றன. தாயின் கருவிலுள்ள குழந்தை தாயிடமிருந்தே அனைத்தையும் பெறுகின்றது. அதனால் கர்ப்ப காலங்களில் தாய் நலிவடைவதும் கண்கூடு. ஆகாரத்துகாக குழந்தை தாயின் சூதகத்தை உண்ணவில்லை என்றால் தாயே
அழிந்துவிடுவாள். நம்
உடலுள்ளே ஒவ்வொரு ஷணமும் நடைபெறும் யுத்தமும் அழிவு களும் இன்றேல் நம்மால் வாழத்தான் முடியுமா? இவையெல்லாம் நடை பெற்றேயாக வேண்டியுள்ளது. வதை>
கொலை எனும் எண்ணக் கரு. இயற்கைச் சட்டத்துக்கு முன் செல்லாக் காசாகி விடுகிறது.
துன்பத்தில் இன்பமும், இன்பத்தில் துன்பமும்; இயற்கை வகுத்துத் தந்த சட்டமே.
10. காற்றும்> நீரும் இன்றேல்> மனிதனின். ஏன் அனைத்து உயிரி னங்களினதும்> வாழ்வே கேள்விக் குறியாகிடும். காற்றில்கூட கோடிக் கணக்கான கண்ணுக்குத் தெரியா உயிரிகள் உள்ளனவே? நீரிலும் இந்நிலைதானே? கொல்லாமை பற்றிப் பேசுவதாயின் எதைத்தான் உங்களால் உள்வாங்க முடியும். எச்சிலிலும் காற்றிலும்; கூட உயிரினங் களுள்ளனவே! உயிர்வதை பற்றிப் பேசும் பெரியோரே சற்று சிந்திப்போம்;;; ஓரிரு நிமிடமாவது நம்மால் உயிர்வாழ முடியுமா? உயிர்
வாழாக் கிரகங்களில் ஒன்றாய் இவ்வுலகும் மாறிடாதா?
11. மேலும்; உயிராபத்தை உண்டுபண்ணும் ஈ> கொசு>
நுளம்பு> எலி>
பாம்பு> வைரஸ்>
பக்டீரியாக்கள் போன்றவற்றைக் கொல்வது உயிர்
வதை> கொலை இல்லையா? இவைகளைக் கொல்லாமல் விட்டால் நம்மால் எவ்வளவு நேரம் நிம்மதியாய் வாழ்ந்திட முடியும். உடலின்பத்தைப் பெறத் தினமும் கோடானுகோடி உயிரணுக்களைக் கொன்று குவிக்கின் றோமே! இதை நிறுத்தத்தான் முடியுமா? முடிந்தால் உயிரினம் தோன்றிடுமா? அண்டங்களிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் உயிர் ஒன்றென்பதை அறிவீர்களா?
12. தாவரங்களிலும் பிற உயிரினங்களிலுமிருந்து நாம் வாழத்
தேவையான மருந்துகளும் மற்றும் பலவும் கிடைக்கின்றனவே? மனிதன் உயிர் காக்கப் பயன்படுத்தப்படும் பெரும்பன்மை மருந்துகள் மிருகங்களில் தான் பரீட்சிக்கப்படுகின்றன என்பதை அறிவீரோ? இவற்றுக்கெல்லாம் மாற்று வழி கூறத்தான் முடியுமா? அன்றேல் மாற்று வழிதான் என்ன?
13. தடையிலா> இடையறாத உலக இயக்கத்துக்கு வழிசமைக்கும் ஓர்
உயர்வான அடிப்படை நோக்கோடேயே> அனைத்து உயிரினங்களும் இயற்கையிலேயே அவ்வாறு படைக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. அவைகளின் பற்கள்> வெட்டும்> கிழிக்கும்> அரைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. அவைகளின் நாக்குகூட அவை களின் உணவு முறைமைக்கேற்ப நீளமாகவும்> குட்டையாகவும்> ஒடுங்கி யும் அகன்றும்> வழுவழுப் பாகவும்> சொரசொரப்பாகவும்> பசைத் தன்மை கொண்டும்> இரட்டையாகவும்> ஒற்றையாகவும் உள்ளன. கால் நகங்களை யும்> சொண்டுகளின்; அமைப்புக்களையும் பாருங்கள். நீரை
உறிஞ்சி குடிக்கும் சொண்டுகள்> நீரினுள் உணவைப் பிடித்ததும் நீரை வெளியேற்றி டும் வகைச் சொண்டுகள். சமிபாட்டு உறுப்புக்கள் கூட
அப்படியே.
14. பாலைவனக் கப்பலான ஒட்டகத்தைப் பாருங்கள். அவற்றின் அமைப்பு அங்குள்ள வெப்ப நிலைக்கேற்றவாறு தம்முடலிலேயே நீரைச் சேமித்துக் கொள்வதுடன்> வெப்பப் பாதுகாப்பிற்காகத் தம் ஏரியில் கொழுப்பைச் சேமித்து வைத்துக் கொள்கின்றது. முட்களைக்கூட உணவாக்கும் அமைப்பு முறை. நாம்
அன்றாடம் நம் வீட்டிலே பார்க்கும் கோழி
எதையும் விழுங்கிவிடுமே. இவ்வுணவுகளை அரைப்பதற்கென்றே அவற்றினுள்ளே கல்
நிறைக்கப் பெற்ற
பை காணப்படுகிறதே. காகத்தைப் பாருங்கள். அது
எதைத்தான் மிச்சம் வைக்கின்றது. இவ்வாகாயத் தோட்டி தன்
கடமையைச் செய்யாவிட்டால், தெருவெல்லாம் பிணவாடை தானே! மலவாடைதானே! சைபீரியாவிலிருந்து உணவுக்காக வரும்
வாத்துக் களைக் காணவில்லையா? காலநிலைக் கேற்ப தம்
உணவை நாடிப் பல்லாயிரம் மைல்களைப் பறந்து> கடந்து> சென்று> உண்டு தாமும் பிறர்க்கு உணவாகின்றனவே? இவையெல்லாம் இயற்கை நமக்களித்த வாழ்வாதார விதிகளே. அவற்றை எல்லாம் விவரிக்கப் புகின் அதுவே
ஓர் தனிக் கட்டுரையாகிவிடும்.
15. தாவரங்களிற் சில மாமிசத்தை நேரடியாக உண்பவைகள்;> மற்ற அனைத்துத் தாவரங்களும் மறைமுகமாகத் தம்மினத்தையும்> மாமிசத்தையும் உண்டு வாழ்பவைகள்;. பறவை இனங்களிற் சில மாமிசம் உண்பவை; சில
தாவரம் உண்பவைகள்> மற்றும் சில
இரண்டையும் உண்பவைகள். ஊர்வன> நீந்துவன> மிருகங்கள்; இவ்வகைத்தனவே. எறும்புண்ணிகள்> மலம்
உண்ணிகள்> பிணம்
உண்ணிகள்> குருதி யுண்ணிகள்> மரம் உண்ணிகள்> விதையுண்ணிகள்> வேருண்ணிகள்> இலையுண்ணிகள்> தேனுண்ணிகள்> மண்ணுண்ணிகள்> ஓட்டுண்ணிகள் போன்ற இன்னோரன்னவையும் இன்னும் நாமறியா எண்ணிலடங்கா உண்ணிகள் ஐம்பூதங்களிலும் விரவிக்கிடக்கின்றன. சுருங்;கக் கூறின்> உயிரைத் தவிர அனைத்தையும் உண்பவைகளாகக் காணப்படுகின்றன.
16. ஆகாயத்தில் வாழும் சில
உயிரினம் நிலத்திலும்> மேலும் சில
நிலத்திலும் நீரிலும் உணவைப் பெறுகின்றன. நீர் வாழ்வன சில மண்ணிலும் உணவைப் பெறுகின்றன. முதலை> ஆமை
போன்றவை. சில
நீரினங்கள் விண்ணிலும் தம் உணவைப் பெறுகின்றன என்றால் வியப்பையே ஏற்படுத்தும். ஒரு மீனினம் நீர்நிலைகளையொட்டி மரங்கள் காணப்படும் பகுதியில் தம் உணவைத் தேடுகின்றது. அவை நீரின் மேற்பரப்பிலிருந்தவாறே மரங்களில் தாம்
காணும் சிறு
பூச்சிகளை> தம்
வாயிலிருந்து வெளிப்படும் திரவமொன்றினைப் பீச்சி> பூச்சிகளை நீரில் விழுத்தி> உண்டு மகிழ்கின்றன. என்னே விநோதம்! சில மனிதனிலும் உறிஞ்சி வாழும்> மனிதருள்ளும் சென்று வாழும். நிலத்தில்> மரத்தில் மட்டுமல்ல மனிதனிலும் உறிஞ்சி வாழும் தாவரங்களும் உள்ளதாக வரலாறு கூறுகின்றது.
17. சிலந்தியினம் வலைபின்னி அதன்
மூலம் தமக்கான உணவைத் தேடுகின்றன. கறையான் இனம் இறத்துபோன மரம்> மட்டை>
காகிதம் போன்ற
இன்னோரன்னவற்றை உண்கின்றன. எறும்பைப் பாருங்கள் அவை
உண்ணாதவை ஏதுமுண்டா? மிருகங்களின் உடலில் ஒட்டி இருந்து கொண்டு உறிஞ்சி வாழும் உண்ணிகளைக் காண்பதில்லையா? ஏன் அவ்வுண்ணிகளையே தம் உணவாக்கிக் கொண்டு மிருகங்களுக்கும் உதவும் பறவைகளைப் பார்த்ததில்லையா?
18. தேனீக்கள் தம் உணவுக்காக எத்தனை ஆயிரம் மலர்களைக் கொஞ்சிக் குலவுகின்றன. அவை
அதன் மூலம் மலர்களின் மகரந்த சேர்க்கைக்கு மட்டற்ற சேவை
புரிகின்றனவே? இல்லையேல் காய்> கனி
ஏது? அவைகளின் பரம்பல்தான் ஏது? இப்படிச் சேர்த்துத் தயாரித்த தேனை
கரடிகளும்> மனிதர்களும் கொள்ளையடித்து> உண்டு>
உவகை அடைவ தில்லையா? முதலைகளின் பற்களில் காணப்படும் மாமிசத் துணிக்கை களையும் பூச்சி புழுக்களையும் சில
பறவைகளின் உணவாக இயற்கை அமைத்துள்ளதைக் கேள்விப்பட்டதே இல்லையா? அத்தோடு அது
முதலைக்குச் செய்யும் உதவியாகவும் அமைந்துள்ளதே. இவை யாவும் வதைகளும்> கொலைகளும்> கொள்ளைகளுமா? இப்புதுமைகளை யெல்லாம் எழுதப்புகின் நம்
வாழ்நாளே போதாது. இந்த
அளவில் இதனை
விளங்கிக் கொள்வது நமது கருத்தை விளக்கப் போதுமானது.
19. ஓர் உயிரைக்
கொன்று பல உயிர்கள் வாழ்வது கொடுமை எனக் கொண்டால்> ஒருவர் வாழ ஒரு நேரத்திற்கு எத்தனை தாவரத்தை முறித்து> வெட்டி> சித்திரவதை செய்து ஈற்றில் கொன்று குவித்து உண்கின்றோம்;? ஒரு ஷணம்
உற்று நோக்குங்கள்> அன்பு
பற்றிப் பேசும் பண்பாளரே. தாவரங்களையே நம்பிவாழும் உயிரிகளின் ஓரே உணவைக் கூட கொள்ளையிடுவது தகுமா?
உயிரினங்களைக் கொல்லக் கூடாதென் றால் மண்ணைக்கூடத் தின்ன முடியாது? அவற்றிலும் உயிரினங்கள் நிறைந்து காணப்படுகின்றனவே? பலரின் உணவுக்காக ஓருயிரைக் கொல்வது கூடாதென்றால்> எத்தனை கோடி நுண்ணுயிர்களை ஒருவர் உணவுக்காகக் கொல்கிறோம்,; சிற்றுயிர் என்பதாலா? அன்றி
வாய் பேசா தென்பதினாலா? அன்றி
உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவை என்பதனாலா? அன்றி அவை
நம்மைப் பார்த்திடாது> முறையிடாது என்பதினாலா? நம் உறவினரில் புலன்கள் குறைந்தோரை வதைக்கிறீர் களா> கொல்கிறீர்களா? மனித நடைப்பிணங்கள் கூட> கிடப்பில்கூட விடப் படாமல் பராமரிக்கப்படுகின்றனரே!
20. பால் குடிக்கலாம் எனக்கூறும் பக்தி சிகாமணிகளே> நாமருந்தும் ஒரு
கோப்பைப்; பாலில் எத்தனை கோடி
உயிரணுக்கள் உள்ளன
என்பதை அறியீரோ? மேலும் பால்
வேறோர் உயிரின் உணவல்லவா? அதனை
நாம் உண்ண நினைப்பது கொள்ளை> களவு>
அன்றேல் அநியாயமாகாதா? பாலைத் திரித்துத் தயிராக்கி (உயிர் களை உண்டாக்கி) உண்ணும் (கொல்லும்) உடன்
பிறப்புக்களே> எத்தனை கோடி உயிர்களை உயிரோடே உண்டு
தொலைக்கிறோம்;? நீங்கள் பிறந்ததும் முதலில் உண்டது பாலல்லவா?அப்போதே உயிர்க் கொலை தொடங்கி விட்டதே? அல்லாமல் நம் தாய்மார் எதனை ஊட்டியிருக்க முடியும்? நாமெல்லாம் பிறந்த அன்றே
இறந் திருப்போமே? மிருகப்பாலை வாங்கி நாம்
அருந்தலாம் என்றால் தாய்ப் பாலையும் வாங்கி அருந்தலாமே? அல்லது விற்கலாமே? அப்படி நடந்ததாக இதுவரை சான்றுகளில்லையே? முட்டை சாப்பிடலாம் எனும்
முழுமதியாளரே. அதனுள்ளும் ஓருயிருள்ளதை அறியீரோ? முட்டையை அவித்தோ> பொரித்தோ> சித்திரவதை செய்தல்;லவா
கொன்று உண்கிறோம். இது வதை
இல்லையா? கொலை
இல்லையா? ஆக>
இவை தவிர்க்கப்பட முடியாத இயற்கை நியதிகள்.
21. மிருகங்கள்> பறவைகள் போன்ற ஊண் உண்ணிகள் கொல்லப் படாவிடத்து அவைகளின் பெருக்கத்தால் யாருமே கால் வைத்து நிற்;கக்கூட முடியாதளவு இடத் தட்டுப்பாடும்> இன்னல்களும் ஏற்படுமே. ஏற்படாதா? வனங்கள்; அனைத்தும் மிருகங்களால் உண்ணப்பட்டு காடு களும் பாலை
நிலங்கள் ஆகிவிடாதா? காடுகள் அழிந்தால் மழை பெய்யும் சாத்தியமே அற்றுப் போய்விடுமே? மழையின்றேல் மீண்டும் உண்ணத் தாவரமேது? உயிரினங்கள் ஏது? தாவரத்தை மட்டுமே தின்று வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்கள் பல்கிப் பெருகி நீர்நிலைகள்கூட உயிரினங் களால் நிறைந்து நீரும் புக்கிடம் தேடி
நிலத்தினை ஆக்கிரமித்தால்> நீர் வாழ் உயிரினங்கள் யாவும் அழிந்திடுமே. நிலவாழ்வு நடத்தும் நாமும் அழிந்திடுவோமே? இவற்றையெல்லாம் கற்பனை செய்யவும்; முடியா துளதே. எங்கும் பிணக்காடாகிடுமே?
22. தாவரங்கள் மட்டுமே பகலில் கரியமல வாயுவையும்> இரவில் பிராணவாயுவையும் உட்கொள்கின்ற அமைப்பு முறையே இயற்கை எமக்களித்த வரப்பிரசாதமும்> வாழ்வுக்கான உத்தரவாதமும் ஆகும்.
தாவரத்தை மட்டுமே அனைவரும் தின்று வாழ்ந்தால்> தாவரங்கள் அழிந்து விடும். தாவரம் தவிர்ந்த மற்றைய உயிரினங்கள் அத்தனையும் தாவரத்தை மட்டுமே தின்று வாழ்ந்தால் உலகே பாலைவனமாகிடாதா? தாவரம் தவிர்ந்த மற்றைய உயிரினங்கள் அத்தனையும்; தாவரத்தை மட்டுமே தின்று வாழ்ந்தால் உலகே
பாலைவனமாகிடாதா? தாவரங்களற்ற நிலையில் உயிரினங்கள் வெளிவிடும் கரியமில வாயுவின் அளவு
காற்றில் கூடி
உயிரினமே அழிந்துவிடும் நிலை தோன்றாதா? அதன்பின் எதைச்
சாப்பிடுவது? கேலிக்கூத்தாகத் தெரிய வில்லையா? தாவரமே வளராத துருவங்களிலும்> பாலை நிலங்களிலும்; வாழ்வோரின் நிலை என்ன?
செத்து மடிவதா? அங்குள்ள மற்றைய உயிரினங்கள் எதையுண்டு வாழ்வது? அங்குள்ளவற்றைத் தின்று வாழும் அமைப்புத்தானே நம்மிடம் உள்ளது. தாவரங்கள்கூட உயிரினங்கள் தானே?
அவற்றைக் கொல்வது பாதகமில்லையா? அப்படியே தாவரங்களை உண்டாலும் அங்கும் முடிவு மேற்கண்டவாறுதானே.
23. உயிரனங்கள் கொல்லப்படக் கூடாதென்றால் மலம்கூட பாது காக்கப்பட வேண்டுமே?
அனைத்து உயிரினங்களும் வெளிப்படுத்தும் கழிவுகளின் (கழிவுகளிலும் உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாதுள்ளன) பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறையென்ன வழியென்ன? எங்கும் மலக் காடும்>பிணக்காடாகவும் அல்லவா மாறும். பின்னர் கூட ஊண்
உண்ணும் வேலை
மட்டும்தானே நடைபெறும். நிலம் கூட
ஊண் உண்ணாவிடில்? அப்பப்பா என்னே கொடுமை? அந்நிலையை சற்று
சிந்தித்துப் பாருங்கள் ஜீவகாருண்யம்> மிருகவதை பற்றி
வாய்கிழியக் கத்தும் ஜாம்பவான்களே!
24. அடுத்து உடையின் பக்கம் சிறிது பார்வையைச் செலுத்துவோம். உடைக்காக நாம் சித்திரவதை செய்தும் கொன்றுமுள்ள பருத்திச் செடிகளை சற்றே எண்ணிப்பாருங்கள். பட்டு நூலைப் பெறுவதற்காகக் கொல்லப்படும் பட்டுப்பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுக் கடங்
காதே! கம்பளிக்காகத் தினமும் செய்யும் சித்திரவதைதனை எண்ணிப் பார்த்ததுண்டா? போக்குவரத்துக்காக வதைசெய்யப்படும் கால்நடை
களைக் காண்பதில்லையா? உயிரில்லாக் கடவுளரை இழுக்கும் தேரில் இன்றும் கூட காளை மாடுகள்தானே வதைக்கப்படுகின்றன. அவைகள் விடும் கண்ணீரைக்கூட யாரும் கண்டு
கொள்வதில்லையே! வேள்வி களில் நாளும் கொடுமைப் படுத்தப்படுபவை உயிரற்றனவா? கடவுள்கள் கூட மிருகங்களையும் பறவைகளையும் வாகனங்களாகக் கொண் டுள்ளனரே! மதவழிபாட்டு இடங்களில் பாவிக்கப்படும் மேளம்> மிருதங்கம்> தப்பட்டை போன்ற இன்னோரன்ன தோற்கருவிகள்> மிருகங்கள் கொல்லப்;படாமல் பெறப்பட்ட னவா? இல்லையே? அவற்றைப் பொருத்துவதற்குத் தேவையான மரமும்> வீணை> நாதஸ்வரம்> புல்லாங்குழல் போன்றவைக்கான மரமும் எப்படிப் பெறப்பட்டன? இவ்விசைக் கருவிகள்; அதிர்வதால் உண்டாகும் ஒலியில் வலியின்; ஓர் ஈனஸ்வரம் வெளிப்பட வில்லையா?
25. கடவுளர்க்கும் மதக்கடமையென்ற அடிப்படையில்> மிருகபலி கொடுக்கப்படுவது- தேவைக்குக் கொன்று தின்னுவதற்கான அங்கீகாரம் இல்லையென்றால்- கடவுளர் தமது விளையாட்டுக்காக உயிர்ப்
பலிகளை விரும்புகின்றார்கள் என்றல்லவா அர்த்தமாகும். கடவுள்கள் உயிரினங் களின் தோலையும்> எலும்புகளையும்> இறகுகளையும் ஆடை அணிகலன் களாகக் கொண்டு நமக்கும் வழி காட்டி உள்ளனரே! இவையெல்லாம் கடவுளர்க்குத் தேவைதானா? இல்லையே? அப்படியானால் அவர்கள் ஏன் தோலை
ஆடையாகவும்>
மிருகங்களையும்> பறவைகளயும் வாகனங் களாகவும் கொண்டார்கள்? நமது படிப்பினைக்காக முன்மாதிரியாகச் செய்து காட்டியதல்லவா? இவைகளைப் புறந்தள்ளின் அது யதார்த்தத்தை ஏற்க மறுப்பதாகாதா?
26. மேற்கண்ட உணவு வட்டத்தையும்> அதன் பயனையும் அதனை மறுப்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்த சிலரும் மேற்கண்ட உண்மையை மறைப்பதும்> மறுத்துரைப்பதும்> பொய்
சொல்வதும்> புனைந்துரைப்பதும் புதுமையாயுள்ளது. தாம் கொண்ட
கொள்கைகளைப் பரப்புவதற்காகவும் இப்படிச் சிலர்
நடந்து கொள்கின்றனர். வேறு சிலர்
தம்மதத்தில் கூறப்பட்டுள்ளதாக - தாமே இல்லாத ஒன்றை -
உண்மைக் குப் புறம்பான புதிர்க்; கருத்துக்களைக் கூறி உலகைத் திசை திருப்ப முயன்று வருகின்றனர். இன்னும் சிலர்
மிருகவதை> ஜீவகாருண்யம் என்றெல்லாம் கூறி
அதன் மூலம் சுயலாபம் பெற முனைகின்றனர்;. இவை வெற்றியளிக்காது என்பதையும் அறிந்தே உள்ளளனர். வேறு
சிலரோ> இந்நூற்றாண்டில் கூட>
தாவரங்கள்> முட்டை> பால் போன்ற வற்றிற்கு உயிரில்லை என்பது போன்ற மாயையில் உள்ளனர். இப்படி எத்தனையோ! இதனை
ஆய்வது நம்
நோக்கமல்ல.
27. இயக்கங்களின்> மதங்களின்> மற்றும் இன்னோரன்னவற்றின் பேரால் பல்வேறு முறைகளில் நம்மத்தியில் பரப்பப்படும் இயற்கைக்கு> மதங் களுக்கு> மனித வாழ்வுக்கு> இறைவனுக்கு மாறான கருத்துத் திணிப்புக் களை நாம்
புறந்தள்ளுவதே அறிவுடமை. நம்
உடலுள வளர்ச்சிக்கு ஒத்துவரக்கூடிய> உதவக்கூடிய> ஊறுதராதனவற்றை நாம் உண்பதே சிறந்தது. அது
நம் உரிமை. அதுவே
நாம் இவ்வுலகிற்குச் செய்யும் கடமையும் நன்றியும்> அனைத்து உயிரினங்களுக்கும் செய்யும் நன்மையும் ஆகும்.
28. நமது உணவுத்
தேவைக்கு மேலாக வெட்டுவது> கொல்வதையும்> நண்டு
போன்றவை உயிரோடு சமைக்கப்படுவதையும்> புகைப்பதற் காகவும்> மதுபானத்திற்காகவும் மரங்கள்> செடி கொடிகள் வெட்டி> எரித்து> வதைக்கப்படுவதையும்>
கேளிக்கைகள்> பொழுது போக்கு> பந்தயம் என்ற பெயரில் செய்யப்படும் மிருகவதைகளையும்> மலர்க்காட்சிகளின் பேரால் செய்யப்படும் வதைகளையும்> உழவு>
செக்கிழுப்பு>
தேரிழுப்பு களில் நடைபெறும் வதைகளையும்;> உணவுண்பதற்குப் பாவிக்கப்படும் இலைக்காக மரங்கள் வெட்டப்படுவதால் ஏற்படும் வதைகளையும், அலங்காரங்களுக்காகவும்> அகங்காரங்களைக் காட்டுவதற்காகவும் (பட்டு)>
மாலை மரியாதைகளுக்காகவும்> மங்கலங்களிலும்> அமங்கலங்களிலும் பாவிப்பதற்காகவும்> அநாவசியமாகவும்> நமது இன்ப உணர்வுகளுக்குத் தீனி போடுவதற்காகவும்> மதத்தின் பேராலும்> செய்யப்படும் சித்திரவதை களையும்> கொலைகளையும்> அழிவுகளையும் முற்றாகத் தவிர்க்கலாம். இவை இறைசட்டத்துக்கு மாறானவை> தவிர்த்துக் கொள்ளக் கூடியவை. முயலுங்கள்.
29. இறைவன் கொல்லும் தொழிலைவிட்டால்> சற்றே உங்கள் சிந்தனையை முன்னோக்கி ஓடவிடுங்கள். ஏற்படவுள்ள சனத் தொகை> இடப் பற்றாக்குறை> உணவுப் பற்றாக்குறை>
உலகின் நிலை
போன்ற வற்றைப் புறந்தள்ளி உங்களைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள். நோய்வாய்ப் பட்டு> படுக்கையில்> பார்க்கவும் ஆளின்றி..... தேவையா? ஆக> சிலவற்றின் அழிவில்> - ஓர்
உயிரின் அழிவில் பல்லுயிர் வாழக் கூடியவாறு இறை சட்டத்தைப் பாவித்து> அழிவினை முடிந்த வரை குறைத்து> நிறைந்த பயனைப்பெறும் வழிகளைக்காண வேண்டியதே நாம் பெற்றுள்ள ஆறாவதறிவின் பயனும், பெருமையும் இறைவனின் எதிர்பார்ப்பு மாகும். நாம் வாழும் இப்புவியின் சமநிலை பாதுகாக்கப்பட இறைவன் அமைத்துள்ள விதிமுறையையும் அவன் நமக்களித்துள்ள மேலான
நுண்ணறிவையும் பாவிக்க வேண்டும்;.
No comments:
Post a Comment