Tuesday, July 30, 2013

முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kwjj7lz

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்


உண்மையில் ததேகூட்டமைப்பினர் புலிகள் காலத்தில் வாய்திறக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர். எம்மைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசுகளும் கூட அந்நிலையில் இருந்தமையை மறந்து விடலாகாது. வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்து அனைவரும் குற்றவாளிகளே! இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

 23 ஆண்டுகள் கழித்தும் முஸ்லி்களின் மீள்குடியேற்றத்தில் அரசு தெளிவான நிலைப்பாட்டில் இல்லை. எப்படியாவது நடக்கட்டும் என்ற பாணியில் காரியமாற்று கின்றது. வெளியேற்றத்தின் போது இடம்பெற்ற இழப்புக்கள், 23வருட கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, வணிகம், சொத்துக்களின் வருவாய், அழிவுக்குள்ளாகிய சொத்துக்கள், மனோரீதியாக ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் போன்ற எதுவும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் மீள்குடியேற்றம் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர். இனமுறுகல்களை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியில் அனைத்துத் தரப்புகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.  முன்னர் அமைதியாக வாழ்ந்த அப்பாவி வடக்கு மக்களுக்குள் குழப்பமே எஞ்சியுள்ளது. 

முஸ்லிம்களின் கிராமங்கள் தமிழ்த் தலைமைகளால் அபகரிக்கப்படுவதை, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அரசு  கைகட்டி வாய்மூடிப் பார்த்துக் கொண்டி ருந்ததா? கிராமங்களின் பெயர்கள் அரச அனுமதியின்றி மாற்றப்பட முடியாது என்பதை மக்கள் அறிவார்கள்.  அரசியல் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்துவோர் நீதிமன்றின் மூலம் முஸ்லிம் கிராமங்களைத் தக்க வைததுக் கொள்ளலாமே! வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தின் போது செய்யப்பட வேண்டியவை பற்றி இப்பந்தியிலும், அரசிற்கும் நேரடியாகவும் எழுதியுள்ளேன். அது 'குறித்துக் கொள்ளப்ட்டது' என்ற பதிலுடன் நின்று கொண்டிருக்கின்றது, இதுதான் முஸ்லிம்கள் நிலை! 

எபபடியோ வடக்கு முஸ்லிம்க்ள அங்குள்ள தமிழ் சகோதரர்களுடன் சேர்ந்து வாழ வேண்டியவர்கள். சேர்ந்து  வாழ்ந்தவர்கள்.  தமிழ்க் கட்சிகள் வேண்டுமானால் துரோகமிழைக்கலாம் ஆனால் அங்குள்ள மக்கள் நல்லதை நினைப்பவர்கள். இது எமது கடந்த கால அனுபவம் மட்டுமல்ல தற்போதைய நிலையும் கூட. எத்தனையோ கட்சிகள் மறைந்துள்ளன. உதாரணமாக தவிகூ தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. பிழை செய்பவர்கள் என்றும் அதற்கான எதிர்விளைவை எதிர்கொள்ளவே ‌வேண்டும். 

No comments: