மன்னார் நகர சபை எல்லையூள் மழை காலங்களில் நீர் வெளியேறாத நிலை ஏற்படும் போது தூர்ந்து போன வாய்க்கால்களைச் சீர் செய்வதே அவ்வப்போது மன்னார் நகர சபையால் மேற்கொள்ளப்படுவது.
தற்போதைய நிலையில் புதிதாகப் போடப்பட்டுள்ள பாதைகள் இயற்கையாகத் தண்ணீர் வெளியேற முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.
எவ்விதத் தீர்க்கதரிசனமோ, மக்கள் நலனில் அக்கறையோ இன்றி ஏற்கனவே இருந்த பாதைகளுக்கு மேல் பாதைகள் போடப்படுவதால், வீடுகள் இருக்கும் பகுதிகள் தாழ்நிலமாகி வெள்ளம் வெளியேறாது மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இயற்கையாக மழை காலங்களில் நீர் வெளியேறும் பகுதிகளில் எவ்வித முன்னறிவூமின்றி புதிதாக வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளதும் நீர் வெளியேறுவதைத் தடைசெயயூம் காரணமாக உள்ளது.
மன்னார்ப் பட்டினத்துக்கு ஒரு சிறப்பான பொறிமுறையிலமைந்த வடிகால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்பது நீண்ட கால தேவையாகவூம், கோரிக்கையாகவூம், முயற்சியாகவூம் இருந்து வந்துள்ளது.
ஆயினும் யூத்தம் காரணமாகவூம் 40 வருடங்களுக்கு மேல் நகர சபைக்கான தேர்தல் நடத்தப்படாது விசேட ஆணையாளர் ஆட்சி நடைபெற்றதும் இவ்வாறான இன்றியமையாத தேவைகள் புறக்கணிக்கப்பட காரணமாகின.
ஆதலால் இப்போது நகரசபை உள்ளுர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாலும், அரச கவனம் ஓரளவூ மன்னாரிலும் திரும்பியூள்ளதாலும், ஒரு சிறப்பான வடிகாலமைப்பை உருவாக்கி மக்களின் கழிவூ நீர்ப் பிரச்சினைக்கும், மழை வெள்ளங்களால் ஏற்படும் அசௌகரியங்களுக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்க முடியூம்.
இதற்கான ஆதரவை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் கொடுத்து மக்களை இந்தத் துயரில் இருந்து விடபட வகை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment