இம்மாதிரியான விபத்துகளுக்கெல்லாம் போலிஸாரைக் குறைகூறுவது பொருத்தமற்றது.
உண்மையில் போலிஸார் அவர்களைப் பிடித்திருந்தாலும், அதுவூம் குற்றமாகும் அல்லது மேலிடத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும்படி கட்டளைகள் பறந்திருக்கும்.
தற்போது கூட விபத்திற்கு உள்ளானவர்கள் தங்களது பெற்றாரின் பெயரைக் கூறியே பொலிஸ் கெடுபிடியில் இருந்து விடுபட்டிருப்பர்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழி;க்க முடியாது என்பது போல், தாமாக உணர்ந்து நடந்து கொண்டால் இது போன்ற அவலங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.
வாழ வேண்டிய வயதில் தம்மை முடித்துக் கொண்டவர்களுக்காக பிரார்த்திப்பதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியூம். இதனை ஒரு பாடமாக எடுத்து தம்மை திருத்திக் கொள்வதே அறிவூடமை.
No comments:
Post a Comment