நிருபர் தனது தமிழில் சிறிதளவாவது கவனம் செலுத்துவது, அவர் செய்தியைக் கொடுப்பiதிவிட தமிழுக்குச் செய்யூம் பேருதவியாகவிருக்கும்.
சுத்திகரிப்பை சுற்றிகரிப்பு எனவூம், பராமரிப்பை பராமறிப்பு எனவூம், அனைவரும் என்பதை அணை வரும் எனவூம், மற்றும் னகர ணகர, லகர ளகர ழகர, ரகர றகர பேதங்களாலும் ஏற்படும் அவலங்கள் கருத்தையே மாற்றி விடுகின்றன.
மாணவர்கள் இதுபோன்ற எழுத்துப் பிழைகளைக் கொண்ட செய்திகளை வாசிக்கும் போது தடுமாற்றமடைகின்றனர்.
குறித்த என்ற சொல்லுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எழுத்துப்பிழைகள் வராமல் இருப்பதற்குக் கொடுப்பதன் மூலம் தமிழுக்கு ஏற்படும் அழிவை தடுக்கலாம். மாணவர்களும் மக்களும் குழப்பதத்தில் இருந்து விடுபடுவர்.
No comments:
Post a Comment