Wednesday, August 8, 2012

http://www.seithy.com/breifNews.php?newsID=64426&category=TamilNews&language=tamil

http://www.seithy.com/breifNews.php?newsID=64426&category=TamilNews&language=tamil


1990உக்கு முன்னர் வடக்கு பௌதிக அடிப்படையில் எப்படி இருந்ததோ? என்ன விகிதாசாரத்தில் மக்கள் வாழ்ந்தனரோ? என்ன பெயர்களில் கிராமங்கள் வழங்கப்பட்டனவோ? யார் யாருக்குக் காணிகள் சொந்தமாக இருந்தனவோ? அப்படி ஓர் நிலையை உருவாக்குவது அரசின் கடமை?

காரணம் 1990 இல் வட பகுதி முஸ்லிம்களும் அதற்கு முன்னர் பரம்பரையாக அங்கு வாழ்ந்த சிங்கள சகோதரர்களும் புலிப் பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டபோது வாழாவிருந்த அரசே அதற்கு மருந்து போட வேண்டும்!

முன்னர் நடந்ததற்கு தற்போதைய அரசு நாம் என்ன செய்வது எனக் கையை விரிக்க இயலாது. அரசுகள் விட்ட பிழைகளுக்காக அப்பாவிப் பொது மக்கள் பாதிக்கப்பட முடியாது.

அது சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் எவராகவூம் இருக்கலாம் நாம் இங்கு மூன்று வகையானோரைக் காண்கிறௌம். ஒன்று: குற்றமற்ற மக்கள். இரண்டு: அழிவூக்கு வழிகோலும் பயங்கரவாதம்.  மூன்று:  நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அரசும் அரசியல்வாதிகளும்.

எவ்வகைப் பயங்கரவாதமாயினும்இ அது யாரிடமிருந்தாயினும்இ  அப் பயங்கரவாதத்தால் மக்கள் பாதிப்படைய இடமளிக்க முடியாது. இன்னோர் அழிவை இந்நாடும் அப்பாவி மக்களும் எக்காரணத்துக்காகவூம் சந்திக்க முடியாது. ஆதலால் மக்களைப் பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியது அரசினது தலையாய கடமை.

அனைவரும் அவரவர் உரிமைகளுடன் வாழ்வதும்இ வாழவிடுவதும் அரசினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். மாறான எவையூம் பலத்த தண்டனைக்கு உட்படுத்ததப்படல் வேண்டும்.இவ்விடயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் கட்சி பேதமின்றி சமய சார்பின்றி ஒது;துழைப்புக்கொடுக்க வெண்டும்;.

மக்கள் இல்லாத நிலையில் ஊர்களில் தேர்தல் நடத்துவது அக்கிரமத்துக்கு அங்கீகாரம் கொடுப்பதைப் போன்றதே! விசேடமாக வடக்கில் இருந்த முஸ்லிம்களும்இ சிங்களவர்களும்இ தமிழர்களும் அங்கு இல்லாமல் நடத்தப்படும் தேர்தல் ஜனநாயக மரபைக் குழிதோண்டிப் புதைக்கும் படுபாதகச் செயலே!

அந்த வகையில் ஜனாதிபதியின் கருத்து செயற்படுத்தப்படல் வேண்டும் என்பதை நாம் வலியூறுத்துகிறௌம்.

அதே வேளை தமிழர் பிரச்சினைக்கு எவருக்கும் பாதிப்பில்லாவாறான சுமுகமான நீடித்து நிலைக்கக்கூடிய நீதியான கௌரவமான தீர்வூ காதணப்படல் வேண்டும். அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படல் புலியை அழித்து யூத்தத்தை முடிவூக்குக் கொண்டு வந்த தலைமைகளின் கடமை. இன்றேல் இந்நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாகும் நிலையேற்பட்டுஇ தாங்கள் செய்ததும் பெறுமதியற்றுப் போகும்.

புதிதாக எதையூம் செய்வதைவிட அடைந்த வெற்றியைக் கட்டிக்காக்க அதன் மூலம் இந்த நாட்டடில் சமாதான சனவாழ்வூ ஏற்பட வேண்டிய அனைத்தையூம் செய்வது ஜனாதிபதி அவா;களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதை அவர் செய்வார் என அமைதி விரும்பு:ம் சிங்கள தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை அவரும் காப்பாற்றுவார் எனவூம் எதிர்பார்க்கிறௌம்.

No comments: