Thursday, August 1, 2013

‘வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்’

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/kf28vgc

Lankamuslim.org
One World One Ummah

‘வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்’


வடக்கு முஸ்லிம்கள் ஓர் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். சட்டியில் இருந்து நெருப்பினுள் விழுந்த கதையே தவிர எதுவும் இல்லை. 

அனைவ‌ைராலும் கைவிடப்பட்டு, தேர்தல் காலங்களில் எதைஎதையோ எல்லாம் பேசி, அவர்களை வாக்குகளை சூறையாடித் தம்மை வளர்த்துக் கொண்ட வரலாறு மட்டுமே மிச்சம். நான் சில உண்மைகளை வெளிப்படுத்த முனைந்தால் யாரையும் தாக்குவதாக அமைந்து விடும். 

எப்படியாவது வாக்கு வங்கி‌யைத் தக்க வைத்துக்கொண்டிருந்த தந்திரத்திற்கு மேலாக, தற்போது அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், அவ்வாக்குகளை மீண்டும் உள்வாங்கும் நோக்கில் மட்டுமே மீள் குடியேற்றம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை நடந்து முடிந்தவைகள் மிகவும் துலாம்பரமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட சிலருக்குக் கொடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள், மக்களுக்குக் கிடைத்தது போன்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது. 

அவர்களது இழப்புகள் பற்றி எவ்வித கணிப்புக்கூட நடைபெறவில்லை என்பதைத் தவிர சொல்வதற்கு குறைந்த அளவில்கூட எதுவும் இல்லை. சில சில்லறைகளையும் உணவுப் பொதிகளையும் வீசி, அவர்களின் வறுமையை விலையாக்கிக்  கொண்டு உள்ளனர் சுயநலமிகள். (அதற்கு வக்காளத்து வாங்கும் மாமாக்களுக்கும் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் செக்கிலும் நக்குவர், சிவலிங்கத்திலும் நக்குவோர்.) அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனரே அன்றி எந்த சீரான வேலைத் திட்டங்களும் அவர்களுடைய இழப்புக்களுக்கான ஏற்புடை முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை என்பதே யதார்த்தம்.  விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்படும்  அளவு நிதிகளாவது அம்முஸ்லிம்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா என்பதை எவராவது நெஞ்சில் கைவைத்துக் கூறுவார்களா? 

23 வருடப் பிரிவின் போது கூட ஏற்பட்டிராத கசப்பான, வெறுப்பான சம்பவங்களே தமிழ் முஸ்லிம் மக்களிடையே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன. இந்நிலைக்கு முஸ்லிம் - தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்புக் கூற வேண்டியோர். மதஉணர்வாளர்களும் பங்குதாரர்களே! 

உண்மையில் வடக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் ‌மிக அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தவர்கள். புலிகளால் விரட்டப்பட்ட பின்னர் கூட அவர்களுக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டிருக்கவில்லை. தம்மை விரட்டியதற்காகத் தமிழர்களை அவர்கள் ஒருபோதும் குற்றஞ்சாட்டவில்லை எனபதிலிருந்து அவர்களது புரிந்துணர்வை அறிந்து கொள்ள முடியும்.இதை  அனைவரும் ஏற்றுக்‌ கொள்வர்.

முஸ்லிம்களுக்கோ அன்றி கத்தோலிக்கருக்கோ, இந்துக்களுக்கோ கூட அங்கு பிரச்சினை ஏதாவது ஏற்பட்டிருந்தால் அவை எங்கிருந்தோ வந்து அங்கு குடியேறியவர்களால், தமது சுயநலங்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே. பிரித்தாழும் தந்திரம்.  மதங்கள் கூ்ட அனைத்து சாராராலும் மிக கௌரவமாகப் பின்பற்றப்பட்டன. மன்னாரின் உண்மை நிலையை அறிய விரும்பும் ஒருவர் 1990 க்கு முந்திய மன்னாரையும் அங்கு வாழ்தோரின சமூக இணக்கத்தையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். 

புலிகளின், முஸ்லிம்களை விரட்ட வேண்டும் என்ற சிந்தனை கூட, அங்கு வாழ்ந்த தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறின் அது மிகையாகாது. முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர் மனங்களை வெல்லுவதில் அவர்கள் தோல்வியே கண்டார்கள். அரசுகூட, அந்நேரம் அவ்வின அழிப்பைக் கண்டுங்காணாதிருந்த தற்குக் காரணம், அதனை, முஸ்லிம் - தமிழ் கசப்புணர்வை, கிழக்கில் போல் ஏற்படுத்திட வேண்டுமென்ற இழிசிந்தனையே!

அனைத்துக் கிராமங்களின் பெயர்கள் கூட மதம் சார்ந்தவைகளாக அல்லாது அழகான காரணப் பெயர்களாகவே காணப்பட்டன. இது அங்கு வாழ்ந்தோரின் மனோ நிலையைப் பிரதிபலிக்க வல்லது. அரசு நினைத்திருந்தால், ஒரு சிறிய சுற்றுநிரூபத்தின் மூலம் அவற்றைச் செல்லாதாக்கி விடலாம். ஆனால் அதுவே பிரச்சாரக் கருவிகளாக மாற்றப்படுள்ளது என்பதை அவதானிக்கும் ஒருவர் சீராகச் சிந்திதது உண்மைகளை அறிவார்.

முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களே மக்களை இன்றைய நிலையில் சிந்திக்க வைத்துள்ளன. தமிழ் அரசியல் வாதிகள்கூட துவேஷத்தின் மூலம் வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தமையே துர்அதிர்ஷ்டமாகும். முஸ்லிம்கள் அன்று போல் இன்றும் வாழ, இத்தேர்தலை மிகச் சிறந்த சந்தர்ப்பமாகக் கருதி, தமது தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பேரை இனங்கண்டு கொள்ளுங்கள். 

Tuesday, July 30, 2013

‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/naw8qod

Lankamuslim.org
One World One Ummah

‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது


முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு சமூக உணர்வா? வேண்டவே வேண்டாம். சமூகத்தை ஈடுவைக்காமல் இருந்தால் போதும் என்றே முஸ்லிம்கள் கூறுகின்றனர். வெட்கம்.  


சமூக உணர்வு தேவையில்லை, இஸ்லாமிய உணர்வாவது இருந்தால் போதுமே!!!  அரசியல், சமூகம் என்றது போய், தற்போது மார்க்க வியாபாரம்!!! நாளை மஃஷரில் என்ன பதிலைக் கூறப் போகின்றார்களோ!!! 

முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kwjj7lz

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்


உண்மையில் ததேகூட்டமைப்பினர் புலிகள் காலத்தில் வாய்திறக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர். எம்மைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசுகளும் கூட அந்நிலையில் இருந்தமையை மறந்து விடலாகாது. வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்து அனைவரும் குற்றவாளிகளே! இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

 23 ஆண்டுகள் கழித்தும் முஸ்லி்களின் மீள்குடியேற்றத்தில் அரசு தெளிவான நிலைப்பாட்டில் இல்லை. எப்படியாவது நடக்கட்டும் என்ற பாணியில் காரியமாற்று கின்றது. வெளியேற்றத்தின் போது இடம்பெற்ற இழப்புக்கள், 23வருட கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, வணிகம், சொத்துக்களின் வருவாய், அழிவுக்குள்ளாகிய சொத்துக்கள், மனோரீதியாக ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் போன்ற எதுவும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் மீள்குடியேற்றம் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர். இனமுறுகல்களை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியில் அனைத்துத் தரப்புகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.  முன்னர் அமைதியாக வாழ்ந்த அப்பாவி வடக்கு மக்களுக்குள் குழப்பமே எஞ்சியுள்ளது. 

முஸ்லிம்களின் கிராமங்கள் தமிழ்த் தலைமைகளால் அபகரிக்கப்படுவதை, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அரசு  கைகட்டி வாய்மூடிப் பார்த்துக் கொண்டி ருந்ததா? கிராமங்களின் பெயர்கள் அரச அனுமதியின்றி மாற்றப்பட முடியாது என்பதை மக்கள் அறிவார்கள்.  அரசியல் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்துவோர் நீதிமன்றின் மூலம் முஸ்லிம் கிராமங்களைத் தக்க வைததுக் கொள்ளலாமே! வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தின் போது செய்யப்பட வேண்டியவை பற்றி இப்பந்தியிலும், அரசிற்கும் நேரடியாகவும் எழுதியுள்ளேன். அது 'குறித்துக் கொள்ளப்ட்டது' என்ற பதிலுடன் நின்று கொண்டிருக்கின்றது, இதுதான் முஸ்லிம்கள் நிலை! 

எபபடியோ வடக்கு முஸ்லிம்க்ள அங்குள்ள தமிழ் சகோதரர்களுடன் சேர்ந்து வாழ வேண்டியவர்கள். சேர்ந்து  வாழ்ந்தவர்கள்.  தமிழ்க் கட்சிகள் வேண்டுமானால் துரோகமிழைக்கலாம் ஆனால் அங்குள்ள மக்கள் நல்லதை நினைப்பவர்கள். இது எமது கடந்த கால அனுபவம் மட்டுமல்ல தற்போதைய நிலையும் கூட. எத்தனையோ கட்சிகள் மறைந்துள்ளன. உதாரணமாக தவிகூ தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. பிழை செய்பவர்கள் என்றும் அதற்கான எதிர்விளைவை எதிர்கொள்ளவே ‌வேண்டும். 

Sunday, July 28, 2013

வரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக்கு வைத்த முள்ளும்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/m7gb2pl          Lankamuslim.org

வரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக்கு வைத்த முள்ளும்


தற்போதைய முஸ்லிம் பெயர் கொண்ட கட்சிகளை வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்கள் அதிகமானோர் புரோகிராம் பண்ணப்பட்ட சென்ஸர் பொருத்திய இயந்திர உதிரிப் பாகங்களைப் போன்றவர்களே!

சில வேளைகளில் சென்ஸர் மக்கர் பண்ணும் போது பிழையாக சில உண்மைகளை வெளியிடுவர். பின்னர் சென்ஸர் திருத்தப்பட்டால் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். சென்ஸராக இயங்குவது பதவிகளே!   

அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/qj9zhlq

Lankamuslim.org

அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU


முயற்சிக்கு ஏற்பவே பலனும் தரப்படும் என்பதும், ஒரு சமூகம் தன்னை மாற்றாதவரை அல்லாஹ் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதும் இறை வாக்கே! கையால் எடுத்துக் குடிக்காத வரை நீர் தானாக வாயினுள் நுழைந்து விடுவதில்லை என்பது அருள்வாக்கே!

வெறுமனே சித்தாந்தமாகவல்லாது, நடத்திக் காட்டப்பட்ட ஓரே மார்க்கம் இஸ்லாம் என்பது செயற்படுத்தலை அடிநாதமாகக் கொண்டது என்பதை வெளிப்படுத்துகின்றது. வாளாவிருத்தலை அல்ல! 

செயற்படுத்தலின் உண்மை நிலைக்கேற்ப இறையுதவி கிடைக்கப் பெறுமே தவிர, எல்லாவற்றுக்கும் முஸ்லிம்கள் என்ற ரீதியில் அவனது உதவி கிடைக்கப் போவதில்லை. அதனாலேயே பயபக்தியாளர் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து உதவி தேடுவர் என்று, உதவி தேடுபவரின் தகுதியையும் வெளிப்படுத்தி உள்ளான். 


தங்கையை திருமணம் செய்வதேன்






 ” யார் உங்கள் சொத்துக்களுக்குப் பங்காளியாகின்றாரோ அவர்தான் உங்கள் சகோதரர்.  இது பிஜே அவர்கள், ஒரு தாய்க்கும் அல்லது ஒரு தந்தைக்கும் அல்லது ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே சொந்த சகோதரர்கள்  என்பதற்காக கொடுக்கப்பட்ட முதன்மையான ஒரு விளக்கம்..

மேற்கண்ட  சொந்த சகோதரர்களைத் தீர்மானிப்பதற்கு, சொத்துக்குப் பங்காளர்கள் என்ற கருத்தை அடிப்படை ஆதாரமாகக் கொள்ளுதல், குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றது.  காரணம், யாசிப்போருக்கும் யாசிக்காதோருக்கும், ஏழைகளுக்கும் உங்கள் சொத்தில் பங்குண்டு என்ற அல் குர்ஆனின் வசனமே!

ஆக, சொந்த சகோதரர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு சொத்தில் பங்காளராகவிருப்பது என்ற விளக்கம் முற்றுமுழுதாகப் பிழையான விளக்கமே!


Saturday, July 27, 2013

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி

Commented by nizamhm1944:

http://tinyurl.com/olmoo3z

Lankamuslim.org
One World One Ummah

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி

பள்ளிவாசலாக அக்கட்டடம் இருந்திராவிடில் அதனை மூடும் உத்தரவு, . பொறுப்பும், அதிகாரமுமுள்ள மாகாண அமைச்சர் ஒருவரால் வழங்கப் படுவானேன்! 

பதிவுகள் இல்லாமல் இருந்தால்கூட, வேறு ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் கூட அது ஒரு பள்ளிவாசலாகப் பாவிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு எவரும் வரமுடியாது. நிலத்துக்கடியில் தோண்டிக் கண்ட சில இடிபாடுகள்கூட அங்கு ஒரு வணக்க ஸ்தலம் இருந்தது என நிரூபிக்கப்பட்டு புனித பூமிகளாக மாறும் நிலையில் 21 வருடம் தொழுவதற்காகப் பாவிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை இல்லாத ஒன்றாக கருத்துக் கூற முடியாது. 

இந்த நாட்டில் பிறப்புப் பதிவில்லாமல் எத்தனையோ குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை இந்நாட்டின் பிரஜைகள் இல்லை எனக் கூறுவோமா அன்றேல் அவர்களைப் பதிவை மேற்கொள்ளுமாறு வசதிகள் செய்து கொடுத்து உற்சாகப்படுத்துவோமா. பதிவுகள் என்பது சில தேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்படட்வை மட்டுமே. 

2500 ஆண்டுகளு்க்கு முன்னர் ஆலயங்கள் எந்தப் பதிவைக் கொண்டிருந்தன. அவைகளை நாம் 2500 வருடப் பாரம்பரியம் கொண்டவைகளாக வரலாற்றுப் பெருமை கொண்டவைகளாக ஏற்கவில்லையா.