Saturday, December 28, 2013

சர்வதேச வாக்கு வங்கியை இழந்த நாடாக …. இலங்கை மிகவும் பாரதூரமான சிரமங்களை எதிர்நோக்க வாய்ப்புள்ளது

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/o7vugcs

Lankamuslim.org

சர்வதேச வாக்கு வங்கியை இழந்த நாடாக …. இலங்கை மிகவும் பாரதூரமான சிரமங்களை எதிர்நோக்க வாய்ப்புள்ளது

நாம் செய்வது சரியாயின் எந்த நாடுகளின் உதவியும் தேவைப்படாது. உண்மையில் இவ்வாறான பிரச்சினை ஒன்றே ஏற்பட்டிருக்காது.

போர்க்கால மனித உரிமை மீறல் என்ற பொறிக்குள் இலங்கை தள்ளிவிடப்படுவதற்கு, அரசின் போர்க்கால அணுகுமுறையும் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், போருக்குப் பின்னான ஒவ்வொரு நடவடிக்கையும், புலிகளைத் தோற்கடித்த மமதையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தமையே முக்கிய காரணியாகக் கொள்ளலாம்.  

போரைப் பொறுத்து, போர்நிறுத்தம் பற்றிப் பல நாடுகள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாலும். மறைமுகமாக உதவுவதிலும் அவை அக்கறை கொண்டிருந்தன.  போர் நிறுத்தம் வாயளவில் பேசப்பட்ட ஒன்றாயினும் மனதளவில் அதற்கு பெரும் வலு இருக்கவில்லை. அத்தோடு பயங்கரவாதிகள் என 28 பெரிய நாடுகளால் முத்திரை குத்தப்பட்ட புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்பதனால், அது விடயத்தில எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதும் அது உள்நாட்டுப் பிரச்சினை என்பதுமே!

அதே தந்திரோபாயம், போர்க்கால குற்றங்கள் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பின்னர் செல்லுபடியாகாது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். மனித உரிமை மீறல் என்ற குற்றத்தை அணுக வேண்டிய முறைப்படி அணுகாது, குறைக் குடங்களையும், தரமற்றோரையும் கொண்டு அரசு கருத்து வெளிப்பாடுகளைச் செய்து கொண்டிருந்தமை, போர்க் காலக் குற்றங்கள் இருப்பதான கருத்தையே வெளிப்படுத்தினவே தவிர, பிரச்சினையைத் தவிர்க்கவில்லை.

உள்நாட்டில் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய அதே தந்திரோபாயத்தை, வெளிநாட்டு உயர்மட்டங்களுக்கும் பயன்படுத்த முனைந்ததும், ராஜரீக பாரம்பரியங்களை விடுத்து, வேறு வழிகளைக் கையாள முனைந்ததும், அபிவிருத்தி என்ற மாயையை ஏற்படுத்தி தமக்கு மேல் ஏற்படுத்தப்பட்ட பழியை மழுங்கச் செய்வதற்கும் எடுத்த அனைத்து முயற்சிகளும். அரசுக்கு எதிரான பண்புகளை ஏற்படுத்தி, சாட்டப்பட்ட குற்றங்களில் உண்மை உண்டு என்று எண்ணும் நிலையை ஊக்குவித்தன. 

மேலும், மதத்தலைவர்களையும், வேறு அமைப்புக்களையும் சர்வதேசங்களுக்கு அனுப்பி அந்நாட்டவர்களை இலங்கைக்கு ஆதரவளிக்கும்படி கோரியதும், அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வலுப்பெறவைத்த நடவடிக்கைகளே! அவை வேண்டுமானால் தற்காலிக வெற்றியைத் தந்திருக்கலாமே தவிர, நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டிருக்கவில்லை, ஏற்படுத்திவிடப் போவதுமில்லை. 

அதே வேளை இங்கு மதங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனத்தை அரசு தடுத்து நிறுத்துவதைவிடுத்து. கண்டுங்காணா முறையில் நடந்ததும். போலிஸாரே அவற்றுக்கு அனுகூலமாக நடந்துகொண்டதும். அரசும். அரச தலைவர்களும், ஏன் முஸ்லிம் தலைவர்களும்கூட நடந்த மதவிரோ நடவடிக்கைகளை மறைப்பதிலும், நியாயப்படுதியதிலும், சப்பை கொட்டியதிலும், பின்ணணிகள் இருப்பதாக அரசு கூறிக் கொண்டிருந்ததிலும், உலகுக்கு இந்நாடு, போர்க்காலத்தில் எப்படி எல்லாம் நடந்திருக்கும் என்பதையும், இதன் பின்னர் எவ்வாறான போக்கைக் கைக்கொள்ளும் என்பதிலெல்லாம் கருத்தேற்றங்கள் ஏற்படுத்தியே இருக்கும். 

ஆதாரபூர்வமாக கண்ணொளிகளாக வெளியான பல மதவிரோத நடவடிக்கைகளை, பாதிப்புக்குள்ளான அரசியல் தலைவர்களையும், வேறு பிரபலங்களையும் வைத்து அரசைக் காப்பாற்றும் விதத்தில் அறிக்கைகள் விடப்பட்டமைகூட, நடந்தவற்றை உண்மைப்படுத்துவனவாகவே மாறும் என்பதை அரசு அறிய முடியாமற் போனதேனோ! 

அதற்கு மேலும், திடுதிப்பென உருவாக்கப்பட்ட நிவிநெகும. அதன் தொடர்பில் நடந்த விடயங்கள், 18ஆவது அரசியல் யாப்பு திருத்தம் போன்றவைகூட அரசின் போக்கை பாதகமான நிலையிலேயே உலகுக்கு அறிமுகம் செய்திருந்தன என்பதே யதார்த்தம்.

13பிளஸ் என்றது போய், 13ஆவதே இல்லாமல் ஆக்குவதற்கான முன்னெடுப்புக்கள், அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட கறைகளே தவிர இல்லை! 

இனிமேல், அரசுக்கு எதிரான போர்க்காலக் குற்றங்களை சரியான அணுகு முறையைப் பாவித்து அதிலிருந்து விடுபடுவது ஒன்றே அரசுக்கு உள்ள ஓரே வழி! அன்றேல் இந்நாடே பாரதூரான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். 

No comments: