Wednesday, December 11, 2013

இன ஜக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

Commented by nizamhm1944 on: :http://tinyurl.com/lugdao2
பிரச்சினைகளுக்குத் தீர்வு வன்செயல் அல்ல, அது தோற்றுப் போன சித்தாந்தம் என்பதைக் கவனத்தில் நிறுத்தியவனாக இதனைப் பதிவிடுகிறேன்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல் வேறு நியாயப்படுத்தல்கள் இருக்கும். அவைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நடுநிலையில் நின்று, ஆராய்ந்து, உணர்ந்து, மகக்ள் நலன்களை, இனஐக்கியத்தைக் கருத்திலிருத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
சில வேளைகளில் விட்டுக் கொடுக்கும் பண்பு கூட வேண்டப்படுவதாக இருக்கும். அவ்விட்டுக் கொடுப்பு நன்மை பயக்குமாயின், அதனைச் செய்வதை மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்வதில் யாருக்கும் நஷடம் ஏற்பட்டு விடப் போவதில்லை.
ஒரு விடயத்தை அணுகுமுன், மனிதம் ஒன்றைத் தவிர,அங்கு அரசியலோ, மத உணர்வுகளோ முன்னிலைப்படுத்தப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட, நீதி பெற்றுக் கொள்வதற்கான தகுதியாகிவிட முடியாது. தீர்வு காணும் முன் கடந்த கால பின்னணிகள் நுணுக்கமாக ஆராயப்படல் வேண்டும். ஒருவரின் உரிமை, இன்னொருவரின் உரிமைக்கு எவ்வகையிலும் பங்கம் ஏற்படுத்திடக் கூடாது. ஒருவருக்கு செய்யப்படும் நியாயம், இன்னொருவருக்கு அநியாயமாகிவிடக் கூடாது. பிரச்சினைகள் இன்று இருக்கும்.நாளை மறைந்துவிடும். பிரச்சினைக் காலத்தில் நியாயமற்று ஏற்படுத்தபப்ட்ட வடுக்கள் மறைவதில்லை. அதுவே தீராப்பகையாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
பசியால் துடிப்பவனை வீ்ட்டிற்கு அழைத்துச் சென்று உண்டியும் கொடுத்து,, உறஙகவும் இடம் கொடுக்கும் மனநிலை படைத்தவர்கள் மன்னார் மக்கள். அபயம் என வந்து விட்டால், சற்றேனும் பின்னிற்காது வந்தவனை வாழவைக்கும் பண்பு கொண்ட அம்மக்கள் மத்தியில், இன்று இருந்து நாளை போகும் எவரும், பிரிவினைவாதக் கருத்துக்களை ஏற்படுததி மன்னார் மக்க்ளின் ‌ஐக்கியத்தைப் புரிந்துணர்வை அற்றுப் போகும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று சம்பந்த்ப்பட்ட அனைத்து சாராரையும் அன்பாகவும் பணிவாகவும். இறைவன் பெயரால் வே்ணடுகிறேன்.
மனிதத் தீர்ப்புகள் முழுமை பெற்றவை அல்ல. மாற்றப்படக் கூடியவை. இராணுவச் சட்டங்கள் போன்று சிவில் சட்டங்களை அணுக முடியாது. நாம் இன்று கொடுத்த தீர்பபு, சில வருடங்களில் , மாதங்களில், ஏன் நாட்களில்கூட பிழை என்பதை நாமே உணர்வதாக இருக்கும். அப்போது பாதிக்ப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண முடியாது போய் விடும். சரி செய்யா விட்டாலும் பரவாயில்லை. பிழை நடந்து விடாது பேணும் மனப்பான்மையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினை நீதியை நிலை நிறுத்த வேண்டிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்குமாயின், கடிமனங் கொண்டோரின் இழிசெயல்கள், நீதியை வழ்ங்குவத்ற்குத் தடைக் கற்கலாகிவிடக் கூடாது.
இக்ககுருத்துக்களில் வெளிப்பட்டுள்ளவை யாருக்கும். ஆதரவாகவோ, எதிராகவோ, விமர்சனமாகவோ கூறப்பட்டவைகள் அல்ல.
எதில் தீர்க்கமான ஞானமில்லையோ, அதனைப் பின்பற்ற வேணடாம் என்ற இறைகோட்பாட்டை மதித்து அதன்படி எழுதப்பட்டதே! முழுமையாக மன்னார் மக்களின் இன ஒற்றுமை தவிர வேறு மறைமுக எண்ணங்கள் எதுவுமில்லை.

No comments: