Saturday, December 21, 2013

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …

Commented by nizam1944 on: http://tinyurl.com/mrvdbpj

Lankamuslim.org

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …


சுதந்திரத்தின் பின்னர், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, சிறுபான்மையர், மொழி என்ற ரீதியிலமைந்த, தமிழர் பிரச்சினை, பல்வேறு யுக்திகளின் மூலம், மதரீதியிலும், பிராந்திய ரீதியிலும், குறுகிய நோக்கிலும், பிரித்தாளும் கொள்கை, தந்திரோபாயங்கள் போன்றவைகளுடன் அரசியல் மயப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, நசுக்க முனைந்ததன் பின்விளைவே, படிப்படியாக ஆயுதப் போராட்டம் என்ற அவலத்துக்கு வழி வகுத்தது.

அதன் பின்னர் கூட பட்டறிவும் வேலை செய்யவில்லை என்பது எதனைக் காட்டுகின்றது! யுத்தம் வெல்லப்படும் வரை, 13 பிளஸ் என்று பகிரங்கப்படுத்தப்பட்டு. பின்னர், பதின்மூன்றே இல்லாமலாக்கும் நிலைமை ஏற்படுத்தப்படும் போது, கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கைக்கும், கடைசி ஆணி அடிக்கப்பட்டது. அதன் பின்னரான நிகழ்வுகள் எழுதத் தேவையற்ற உலகறிந்தவை!

இந்நிலையில், பேச்சுவார்த்தை, தீர்வு என்பதெல்லாம் எட்டாக் கனியே தவிர இல்லை. உடன்பாடுகள், தீர்வுகள் – உண்மை, நல்லிணக்கம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, நம்பிக்கை, மனிதாபிமானம், நாட்டுநலன் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகக் காணும் நிலையிலேயே, சாத்தியப்படுமே தவிர, பேச்சொன்று செயலொன்று என்ற ரீதியில் அமைய முடியாது.

தற்போதைய நிலை படிக்கிறது தேவாரம், இ‌டிக்கிறது கோயில் என்ற நிலையில் உள்ளதாகவே நடப்புகள் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றன.

உண்மையாகக் கூறுவதாயின், சிறுபான்மையினர் பிரச்சினை தீர்வுக்கு இன்றைய நிலையில் யாருடைய உதவியும் தேவை இல்லை, மனிதாபிமானத்துடன், சிறுபான்மையினரும், இந்நாட்டின் பிரஜைகளே, அவர்களும் அவர்களது சுயமரியாதையுட்ன வாழ வேண்டியவர்களே என்ற மனப்பக்கும் மட்டும் இருந்தால், சில தினங்களிலேயே தற்போதுள்ள அரசியல் பலத்தில் மிகச்சிறந்த தீர்வொன்றை செய்து முடிக்கலாம்.

அதற்குரிய அத்தனை தகுதிகளும், தற்போதைய இந்நாட்டின் தலைவருக்கு இருக்கின்றது. அவரால் முடியும். தேவையானது – செய்ய வேண்டும் என்ற உந்தலே! அப்படி அந்தக் கைங்கரியத்தைச் செய்வாராயின் அவர் இவ்வுலகு அழியும் வரை புகழுடன், சாதனையாளராக, உலகத் தலைவர் வரிசையில் வைத்து எண்ணப்படுவார். உலகத் தலைவர் ஒருவரை மீண்டும் வழங்கிய ஒரு பெருமையையும் இந்நாடு பெற்றுக் கொள்ளும்.

No comments: