Thursday, November 28, 2013

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !

Commented on  : http://tinyurl.com/o8w32ye

Lankamuslim.org

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !

அண்மைக் காலமாக தேரர்கள் சிலரின் அடாவடித்தனம் அத்துமீறியுள்ளமைக்கான காரணம், சட்டம் தூங்கிக் கொண்டு இருப்பதனாலா என்ற நியாயமான கேள்வி மக்களிடையே எழுந்து கொண்டிருக்கின்றது.  இது ஓர் அராஜக நாடு, சட்டமும் ஒழுங்கும் நிலவாத காட்டுமிராண்டிகள் காலநிலை கொண்ட நாடு என்ற பட்டியலில் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேர்தல்களின் தலைவிதி தற்போது வெளியாகியுள்ள நிலையில் நாட்டின் களநிலவரம் உள்ளங்கை செல்லிக்கனி அல்ல வெள்ளிடைமலை ஆகியுள்ளது.

நடந்த தேர்தல் முறையீனங்கள் பற்றிய செய்திகள், கருத்துப்பதிவுகளை ப் பார்க்கும் போது, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் முஸ்லிம்களுடையது என்பதும், அவை புத்தளம் நகர்ப் பகுதிக்கு உரியது என்பதும். 40 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட புத்தளத்தில் ஒரேயொரு முஸலிம் வேட்பாளரே தேர்வாகியுள்ளார் என்பதும், அவர்களால் ஆளும் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸக்கும் வாக்களிக்கப்பட்டவை என்பதைப் பார்க்கும் போது, கண்டைடுக்கப்பட்ட வாக்குச் சீட்’டுக்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக ஏற்பட்டதல்ல, திட்டமிட்ட ஒரு இனத்திற்கு எதிராக நடத்திமுடிக்கப்பட்ட மோசடி என்பதை சிறு பிள்ளைகூட அறிந்து கொள்ளும்.

இதுவும் அடிப்படை மனழத உரிமை மீறலே! சமவுரிமை என்ற பண்பு, ஒரு சமூகத்தால் அனுபிக்கப்படும் அதே நேரத்தில் இன்னொரு சமூகம் சார்ந்தவர்களுக்குத் திட்டமிடப்பட்டு, மறைமுகமாக மறுக்கப்பட்டுளள தன்மையைக் கொண்டுள்ளது. இது யார் குற்றம் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. ஆயினும் குற்றமிழைக்கப்பட்டுள்ளது, அநீதி அரங்கேறி உள்ளது என்பவை நிரூபணமாகியுள்ள ஆதாரங்களுடன் கூடிய, விசாரணை வேண்டப்படாத, மறுதலிக்கப்பட முடியாத உணமையே!!  The fraud it self is SELF EXPLANATORY

ஆதலின், சம்பந்தப்பட்டவர்கள், இது விடயத்தில் சரியான பதில் நடவடிக்கை எடுப்பதன் மூலம், யாப்பின் மானத்தைக் காப்ப‌துடன், யாப்பில் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை, அந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களைப் போன்று அனுபவிக்க வகை செய்ய வேண்டும்.   இன்றேல், அடுத்த பங்குனியில் நடைபெறவுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு நிகழ்வில், இந்த மனித உரிமை மீறல் பிரச்சினையும் குறிப்பிடக்கூ‌டிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்!

வெளிவராமல் தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஒழுங்கீனங்கள் இன்னும் எத்தனையோ! உள்ளுர், வெளியூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இது பற்றி என்ன கூறப் போகின்றார்களா! இவ்வாறான அநியாயங்கள் அவர்கள் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டனவா!

வாககுச் சீட்டும் எண்ணும் நிலையத்தில் இது நடைபெற்றிருந்தால், அந்நிலையத்திற்குப் பொறுப்பான உயரதகாரி, தனது (ஜேர்னலில்) நடப்புக் குறிப்பில் எவ்வாறு தன்னால் பெறப்பட்ட வாக்குகள்  அனைத்தும் எண்ணப்பட்டது என்பதையும், அவைகள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்ட நிலையில் திருப்பிக் கையளிக்கப்படுகின்றன அல்லது பாதுகாப்பில் வைஎன்க்கப்படுகின்றனஎன்பதைபதையும் பதிந்திருப்பார்! ஆக, அந்த நடப்புக்குறிப்பு உண்மைகளுக்குப் புறம்பானது என்பதை, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் நிரூபிக்கவில்லையா! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பதை தேர்தல் ஆணையாளர் அறிந்து கொள்ள வேணடும்!  

No comments: