Tuesday, November 19, 2013

தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு

Commented on  தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு  Voice of Mannar -  http://tinyurl.com/omd9eqo

இதனைத் தடுத்து நிறுத்துவதாயின், பல் வேறு நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அதிற் பிரதானமானதாக் கொள்ளக் கூடியது, பாடசாலை அபிவிருத்திச் சபை ( SCHOOL DEVELOPMENT SOCIETY) யின் நிதிக்கட்டுப்பாடு,

வருட ஆரம்பத்திலும், மாணவர் அனுமதி நடை பெறும் காலங்களிலும் வந்து குவியும் பணம், எப்படி வந்தது என்பதைக் கண்டறியவே தேவையில்லை.

அடுத்தது, பெற்றாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. எப்படியாவது நல்ல பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலில், அவர்களே களவாக இலஞ்சம் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

தடுப்பதாயின், மிக இலகுவாகச் செய்ய வேண்டியவை.

மாணாக்கர் வதியும் இடங்களிலுள்ள பாடசாலைகளிலேயே அனுமதி  வழங்க வேண்டும்.

குறித்த பாடசாலை்யில் இடமில்லாத நிலை ஏற்படின், அதற்கடுத்ததாகவுள்ள பாடசாலைகளில் அனுமதி வழங்கல்.

பெற்றார் தொழில் செய்யும் இடங்களிலுள்ள பாடசாலைகளில் அனுமதி பெறல்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்துவோருக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே சிறந்த பாடசாலைகளில் அனுமதி வழஙகல்.  மாவட்டத்தில் ஒரு பாடசாலையாவது, மிகச் சிறந்த தரத்தை கொண்டதாக அமைவது உறுதி செய்யப்படல்.

இவற்றுக்குப் புறநடையாகவுள்ள சந்தர்ப்பங்களின் போது அனுமதிகள் வழங்க விஷேட திட்டங்கள் உருவாக்கப்படலாம்.

மேலாகப் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தும் கட்டமைப்புக்களுடன், ஆசிரியர்களின், பொருளாதார மேம்பாட்டையும கருத்திலிருத்த வேண்டும்.

சிறந்த பெறுபேறுகளை மாணவர் அடைவதற்குக் காரணமான பாட ஆசிரியர்களை, வலய மட்டத்திலாவது தெரிவு  செய்து, சிறந்த ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.  ஆசிரிய தரத்திலேயே சிறப்பான மேலதிகக் கொடுப்பனவுத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.

சிறந்த ஆசிரியர்களுக்கான வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா போன்றவை,  அவர்களின் குடுமபங்களுடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலா வசதிகள் செய்யப்படல் வேண்டும்.

ரயில் பயணச் சீட்டுக்களைப் பாவியாதோருக்கு, அவற்றுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படல் வேண்டும.

அவர்களுக்கு உரிய லீவுகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வ‌ிஷேட கொடுப்பனவுகள் அறிமுகம் செய்யப்படல் வேண்டும்.

அவர்தம் தரத்தை மேம்படுத்துவதற்கான இலகு கடன் வசதிகள் மூலம், வீடு, வாகனம் போன்ற இன்னோரன்னவை பெற்றுக் கொள்ள உதவி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்த வேண்டும்.

மற்றும் வைத்திய வசதிகள் போன்றவை

புலமைப் பரிசிற் பரீட்சைக்குக்கூட நல்ல புள்ளிகளைப் பாடசாலை மட்ட்த்தில் பெறுபவர்களை மட்டுமே அனுமதித்தல். இதனால்,  திணைக்களத்திற்கு ஏற்படும் செலவு குறைக்கப்படும். அப்பணத்தை பாடசாலை அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்தலாம். அத்தோடு, இது பாடசாலையின் கல்வித் தரத்தை அிறிந்து கொளளும் ஒரு சாதனமாகவும். பயன்படும்.  ஆசிரியர்களும் பொதுவாகக் கல்வித் தரத்த‌ை மேம்படுத்தும் மனநிலை உருவாகும்.  புலமைப் பரிசிலுக்காக மாணவர்களை ஆயத்தப்படும் அவல நிலை மாறும்.

இவ்வகையான மாற்றங்கள் ஏற்படுமாயின், 90 வீதத்திற்கும் அதிகமான பெற்றார் கல்விக்காக நல்ல பாடசாலை ‌தேடுவது,  அதனை வழங்க இலஞ்சம் பெறப்படுவதும் நீங்கும்.














No comments: