Monday, March 25, 2013

“ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்றம் அடைந்தள்ளது! – பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை”



Commented by nizamhm1944 on Voice of Mannar:

“ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்றம் அடைந்தள்ளது! – பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை”


http://voiceofmannar.com/2013/03/25/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/#comment-849


இதிலிருந்து தெரிய வருவது,
ஒன்று வட பகுதி சிவில் சமூகம் வற்புறுத்திய விடயங்கள் ஆதாரமற்றவை, அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினரால் ஒப்புதல் கொடுக்கப்படாமை, அல்லது திடீரென்று தோற்றம் பெற்ற வட பகுதி சிவில்சமூகம் அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்படாமை
அமெரிக்கா இந்நாட்டின் தமிழர்களில் கொண்டுள்ள கரிசனையைவிட இந்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள, இல்ங்கைப் பிரச்சினையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதான தன்மை, அல்லது
நமது அண்டை நாடான இந்தியாவின் வேண்டுகோள்கள, நிர்ப்பந்தங்கள், நிபந்தனைகள் காரணமாக அமெரிக்காவின் வரைவுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை, அல்லது
இவை அனைத்துமாகவும் இருக்கலாம். இதனை வட பகுதி சிவில் சமூகம் உணராமல் இருக்கின்றதா என எண்ண வேண்டியுள்ளது.
// அத்துடன் கள்வனிடமே களவு தொடர்பில் விசாரணை செய்யும் படி கோருவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்று ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். // இந்தக் கேள்வி யாரோ வடக்கு தமிழர்களுக்கு ஆதரவற்றவர்கள் கள்வனிடம் புகார் கொடுத்து விசாரனை நடத்துமாறு வேண்டியது ‌போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றது. முன்னைய பந்திக்கு முரணானதாகக் காணப்படுகின்றது.
முறைப்பாட்டை முன்வைக்குமுன்னர் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவற்றை விட்டுவிட்டு, பின்னர் விமர்சனங்கள் செய்வதால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. மாறாக கொஞ்ச நஞ்ச ஆதரவுகளையும் இழக்கவே வேண்டிவரும். இவை முட்டிக் குனியும் நடைமுறைகளை ஒத்ததாகவே காட்டுகிறது இச்செய்தி.

Thursday, March 21, 2013

நபிகள் நாயகம் அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்கின்றேன்: நீதியரசர் மொஹான் பீரிஸ்

Commented by nizamhm1944 0n:
Lankamuslim.org

நபிகள் நாயகம் அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்கின்றேன்: நீதியரசர் மொஹான் பீரிஸ்

உண்மையில் மதிப்புக்குரிய பிரதம நீதியரசர் இந்நாட்டின் உண்மை நிலையை நன்கு உணர்ந்தவர் என்பதை அவரது பயன்தரு அறிவுறுத்தல்களும்,  அறிவுரைகளும் வெளிப்படுத்துகின்றன.

அவை  செயற்படுத்தப்படுகினறனவா என்பதையும் பிரதம நீதியரசர் தம் கடமைகளுக்கு மேலாகச் செய்வார் எனபதிலும்  அனைவருக்கும் பூரண நம்பிக்கையுண்டு.

அவரது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்டவர்கள் அனைவரதும் கடமையும் கூட. அமைதி வாழ்வுக்கு நீதித்துறையின் பணி ‌மிக மேலானதும் மிக வேண்டப்படுவதும்.

Wednesday, March 20, 2013

பிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம் சாட்டும் BBS


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

பிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம் சாட்டும் BBS

குர்ஆனிய கருத்துக்கு மாறாக முழு உலகும் எனக்குக் கூறினாலும், அதனை நான் ஏற்கப் போவதில்லை. குர்ஆனே முஸ்லிம்களின் வழிகாட்டி.

“காட்டிக்கொடுத்தேன்”  எனக் கூறியதன் மூலம், ஹலால் சான்றிதழ் முறை பிழையானது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்.

வெளிப்படையாக ஹலால் சான்றிதழ் சம்பந்தமாக நான் எழுதுவதற்கு முன்னரே, தனிப்பட்ட முறையில் குர்ஆனிய ஆதாரங்களுடன் அஇஜஉ வுக்கு விரிவான கடிதம் ஒன்றை ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதியிருந்தேன்.

நான் கூறியவை பிழையாக இருந்திருந்தால் அதனை எனக்குத் தெரிவித்திருக்கலாம்.  பிழையாயின் நான் என்னைத் திருத்தியிருப்பேன்.

தற்போதைய, அஇஜஉ சபைத் தலைவரின் கூற்றுக்கள் நான் கூறியவையில் உள்ள உண்மைகளை ஏதோ வகையில் வெளிப்படுத்துகின்றன.

அஇஜஉ வின் தலைவரின் இறுதி நேரக் கருத்துக்களின்படி,
 1. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தங்களால் உருவாக்கப்பட்டதல்ல. வியாபாரிகளின் வேண்டுகோளை  நிறைவேற்றுவதற்காக தம்மால் ஆரம்பிக்கப்பட்டது.
2. ஹலால் முத்திரை இல்லாமல் முஸ்லிம்கள் தமது உணவைத் தேர்வதில் கஷ்டம் இல்லை, அவர்கள் பொதிகளில் காணப்படும் List of Ingredients ஐப் பார்த்து, தமது உணவைத் தேர்ந்து கொள்வர்.

ஹலால் முத்திரை பொறிககும் பண்பே இன்று பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் அவலத்தை உருவாக்கியுள்ளது என்பதை மறவாதீரக்ள்.

அமைச்சரவை உப குழுவின் முடிவு இன்னும் ஓரிரு தினங்களில்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

அமைச்சரவை உப குழுவின் முடிவு இன்னும் ஓரிரு தினங்களில்

முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சமூகத்தின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து செல்வதற்கு மேலாக, தாம் சமர்ப்பிக்கவுள்ளவை சம்பந்தமான குர்ஆனிய அறிவுறுத்தல்களை அறிந்து செல்வது, சரியான தீர்மானங்களை எடுக்க உதவும். இன்றேல், தமது சமூகத்தை வழிகெடுத்த குற்றத்தை இம்மையிலும் மறுமையிலும் சுமக்க வேண்டிவரும்.

6:119 - “அல்லாஹ்வின் பெயர் எவற்றின் மீது கூறப்பட்டுள்ளதோ அவற்றிலிருந்து நீங்கள் புசிக்காமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?  நீங்கள எதன் பக்கம் நிர்ப்பந்திக்கப்ட்டீர்களோ அதனைத் தவிர, எதை உங்களின் மீது தடுத்துள்ளானோ அதை அவன் உங்களுக்கு விவரித்துக் காட்டியுள்ளான். மேலும், நிச்சயமாக பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும், தங்களது மனோஇச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக வழிகெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன். “

கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை உங்கள் அறிதலுக்காகவும், நடவடிக்கைக்காகவும் பதிவாக்கியுள்ளேன்.
 4:105, 17:36, 49:6, 49:12, 6:116, 29:49. 28:50, 5:3,

அஇஜஉ வின் தலைவரின் இறுதி நேரக் கருத்துக்களின்படி,
 1. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தங்களால் உருவாக்கப்பட்டதல்ல. வியாபாரிகளின் வேண்டுகோளை  நிறைவேற்றுவதற்காக தம்மால் ஆரம்பிக்கப்பட்டது.
2. ஹலால் முத்திரை இல்லாமல் முஸ்லிம்கள் தமது உணவைத் தேர்வதில் கஷ்டம் இல்லை, அவர்கள் பொதிகளில் காணப்படும் List of Ingredients ஐப் பார்த்து, தமது உணவைத் தேர்ந்து கொள்வர்.

மேற்கண்ட நடைமுறையின் மார்க்க ரீதியான தகுதி இவ்வசனங்களின் மூலம் தெரிய வருகிறது. இவையே போதும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண. முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் அண்மைக்காலத்தில் இழைக்கப்பட்ட துன்பங்களின் காரணங்கள் கவனத்திற் கொள்ளப்படுதல், தீர்வுக்கு பக்கபலமாக இருக்கும்.

ஹலால் முத்திரையுடன் பன்றி இறைச்சி விற்கப்படும் நிலையையே அது உருவாக்கியுள்ளமை அதன் பயங்கரத்தை வெளிப்படுத்தப் போதுமானது.

ஆதலால், முஸ்லிம்கள் குர்ஆனிய ஆணைப்படி தமது ஹறாமைத் தவிர்த்து வாழ்ந்த காலங்களில் தற்போது போல்  எநத பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. அதற்கு உலகின் அங்கீகாரமும் கிடைத்திருந்தது. மேலும், முழு உலகுமே முஸ்லிம்கள் இவற்றை உண்ணமாட்டார்கள் என்பதை அறிந்தும் இருந்தது. ஹறாமை அறிநது அவற்றைத் தவிர்த்து நடப்பதே அல்லாஹ்வின் சுன்னா.

முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை அகற்ற முயற்சி


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org

முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை அகற்ற முயற்சி


எவரையும் குறைகூறி, திட்டி  யாருக்குத்தான் எழுதிட முடியாது.  இதனால் யாருக்கு என்ன பயன் ஏறபட்டுவிடப் போகிறது?

சமூகப் பொறுப்பும்,  நல்லெண்ணமும் இருந்தால், குர்ஆனிய கருத்துக்களைப் பின்பற்றுவதில் ஏற்படும் தடங்கல்களாயின், அதனடிப்ப்படையில் வழிவகை‌களை ஆராயந்து, மக்கள் முன் வைக்கலாம்.  மற்றவரைக் குறைகூறி வாழ்வதைவிடுத்து, நம்மாலான வழிகளில், பிரச்சினகளுக்கு சாத்வீக ரீதியில் பரிகாரம் காண விழைய வேண்டும். சில விஷமிகளின் செயற்பாடுகளுக்கு அவர்களின் வழியில் நாம் தீர்வு காண முடியாது. ஏனென்றால் நாம் அல்லாஹ் கூறியவாறு வாழ வேண்‌டியோர்.

இவ்வாறான பிரச்சினைகள் உருவாகக் காரணமாக அமைந்தவற்றை பக்கச் சார்பற்று ஆய்ந்து, அறிந்து, அவற்றைக் களைவதற்கான சீரான முயற்சிகளில் ஈடுபடுவதே சிறப்பான காரியம். அவையே பிரச்சினைகளுக்கு சிறப்பான நிரந்தரமான தீர்வாகவும் அமையும்.

நமது செயற்பாடுகள் அல்லாஹ் கூறியபடி உள்ளனவா என்பதை  உறுதி செய்து கொள்ளல், நம்மைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும். அல்லாஹ்வின் அனுக்கிரகமும் கிடைக்கும்.

மிகச் சிற்ந்த நன்மையகை் ‌கொண்டே தீமையைக் களையும்படி அல்லாஹ் அறிவுறுத்தியள்ளான்.  துன்பங்கள் அனைத்தும் நமது கரங்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை என அல்லாஹ் கூறுவது நம்மைச் சிந்திக்க, நம்மை மீளாய்வு செய்ய வலியுறுத்துவது.

தற்போது பொது பல சேனா என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்படும் துவேஷ நடவடிக்கைகளில், முஸ்லிம்கள்பற்றி அவர்கள் கொண்டுள்ள அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும்  காரணங்களாக அவர்கள் மக்களுக்குக் கூறுவனவற்றை பொய்யானவை என நிரூபிக்க வேண்டும். அதனை அரசைக் கொண்டோ, அன்றி நிதான போக்கைக் கொண்ட அதிகாரபூர்வ பௌத்த பீடாதிபதிகளைக் கொண்டோ வெளிப்படுத்தலாம்.  அத்தோடு அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் , அச்சங்கள், குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதை ஆதாரபூர்வமாக மக்கள் மயப்படுத்த வேண்டும்.  அது ஒன்றே இன்றைய நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படுவது  ஒளியைப் பாய்ச்சி இருளை அகற்றுவது அல்லாஹ்வின் நடைமுறையே!

Tuesday, March 19, 2013

இலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை ஒருபோதும் அரசு அனுமதிக்காது: ஜெனிவாவில்



Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

இலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை ஒருபோதும் அரசு அனுமதிக்காது: ஜெனிவாவில்

// இலங்கையில் ‘முஸ்லிம் பிரச்சினை’ ஒன்று இல்லை. அவ்வாறு பிரச்சினை இருப்பதாக கூறப்படுவது  சில அடிப்படைவாத குழுக்களின் பிரச்சாரமே. முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அரசு ஒரு போதும் அனுமதிக்காது.இலங்கையிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். எனினும் அவர்களுக்கு அரசு பின்புலமாக இருக்கவில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன்//

The above statement is total contradiction, The first sentence says that 'No Muslim Problem' in this country. The third sentence contradicts that the Government will not permit the attacks on the Muslim Masjids.  By this Minister Samarasinga thinks that Masjids under attacked are not the problem of Muslims.

BBS is following a separate Constitution which is not the Country's Constitution. Beside our constitution gives right to follow our Religion, BBS' constituion rejects. Their atrocities against Muslims within this country are not the country's one. They are not Buddhist authorities as per responsible Theros , In that way, Minister's statement in the BBC's interview is correct.  Will the Minster expect the BBS to follow their own constitution?

If he says that 'No Muslim Problem' here, it is total lie.  This may be a stale statement. He has to check up and update his knowledge on the day to day happenings of this country especially on the activities of the BBS.

Monday, March 18, 2013

Bodu bala sena gives up Halal.

Bodu bala sena gives up Halal.


The speech Ven, Thera identifies the credentials of the BBS.

Its time to the Govt to appropriate action  to stop these nonsense of the BBS and strengthen the communal harmony by ensuring the law and order