Saturday, December 21, 2013

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …

Commented by nizam1944 on: http://tinyurl.com/mrvdbpj

Lankamuslim.org

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …


சுதந்திரத்தின் பின்னர், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, சிறுபான்மையர், மொழி என்ற ரீதியிலமைந்த, தமிழர் பிரச்சினை, பல்வேறு யுக்திகளின் மூலம், மதரீதியிலும், பிராந்திய ரீதியிலும், குறுகிய நோக்கிலும், பிரித்தாளும் கொள்கை, தந்திரோபாயங்கள் போன்றவைகளுடன் அரசியல் மயப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, நசுக்க முனைந்ததன் பின்விளைவே, படிப்படியாக ஆயுதப் போராட்டம் என்ற அவலத்துக்கு வழி வகுத்தது.

அதன் பின்னர் கூட பட்டறிவும் வேலை செய்யவில்லை என்பது எதனைக் காட்டுகின்றது! யுத்தம் வெல்லப்படும் வரை, 13 பிளஸ் என்று பகிரங்கப்படுத்தப்பட்டு. பின்னர், பதின்மூன்றே இல்லாமலாக்கும் நிலைமை ஏற்படுத்தப்படும் போது, கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கைக்கும், கடைசி ஆணி அடிக்கப்பட்டது. அதன் பின்னரான நிகழ்வுகள் எழுதத் தேவையற்ற உலகறிந்தவை!

இந்நிலையில், பேச்சுவார்த்தை, தீர்வு என்பதெல்லாம் எட்டாக் கனியே தவிர இல்லை. உடன்பாடுகள், தீர்வுகள் – உண்மை, நல்லிணக்கம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, நம்பிக்கை, மனிதாபிமானம், நாட்டுநலன் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகக் காணும் நிலையிலேயே, சாத்தியப்படுமே தவிர, பேச்சொன்று செயலொன்று என்ற ரீதியில் அமைய முடியாது.

தற்போதைய நிலை படிக்கிறது தேவாரம், இ‌டிக்கிறது கோயில் என்ற நிலையில் உள்ளதாகவே நடப்புகள் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றன.

உண்மையாகக் கூறுவதாயின், சிறுபான்மையினர் பிரச்சினை தீர்வுக்கு இன்றைய நிலையில் யாருடைய உதவியும் தேவை இல்லை, மனிதாபிமானத்துடன், சிறுபான்மையினரும், இந்நாட்டின் பிரஜைகளே, அவர்களும் அவர்களது சுயமரியாதையுட்ன வாழ வேண்டியவர்களே என்ற மனப்பக்கும் மட்டும் இருந்தால், சில தினங்களிலேயே தற்போதுள்ள அரசியல் பலத்தில் மிகச்சிறந்த தீர்வொன்றை செய்து முடிக்கலாம்.

அதற்குரிய அத்தனை தகுதிகளும், தற்போதைய இந்நாட்டின் தலைவருக்கு இருக்கின்றது. அவரால் முடியும். தேவையானது – செய்ய வேண்டும் என்ற உந்தலே! அப்படி அந்தக் கைங்கரியத்தைச் செய்வாராயின் அவர் இவ்வுலகு அழியும் வரை புகழுடன், சாதனையாளராக, உலகத் தலைவர் வரிசையில் வைத்து எண்ணப்படுவார். உலகத் தலைவர் ஒருவரை மீண்டும் வழங்கிய ஒரு பெருமையையும் இந்நாடு பெற்றுக் கொள்ளும்.

சா/த பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்!

Commented on BERU News on: http://tinyurl.com/kp2v8ka

 சா/த பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்!


“இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?” இது வினா என்றால், ஏற்கனவே இதற்கான விடை இருக்க வேண்டும்.  அந்த விடை,  இஸ்லாமிய சட்டத்தில் காணப்பட்டதாகக் கருதப்பட்ட இரு பாதகமான மூலாதாரங்களையும் வெளிபப்டுத்தி, ஆய்வுக்கு, விசாரணைக்கு உட்படுத்தி, குர்ஆனிய அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.  அப்படி ஏதும் உளதா என்பதைப் பொறுப்பான அமைச்சர் வெளியிட வேண்டும். முடியாவிடில், 

இந்த வினாவை,  பரீட்சை வினாத்தாளில் உள்வாங்கியவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அழைக்க்பட்டு, இவ்விடையை அதாவது, விடையாகக் கருதப்படும் தகவலான, ”இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்கள்” எங்கிருந்து பெறப்பட்டதென நிரூபிக்கும்படி பணிக்கப்படல் வேண்டும். 


தவறும் பட்சத்தில்,  சம்பந்தப்பட்ட அனைவரும், பரீட்சை திணைக்கள வேலைகளில், கல்விசார் நடவடிக்கைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதுடன், கடுமையான தண்டனைக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும்.  


இதன் பின்னர், இது போன்ற வினாக்களை எழுப்பு முன்னர், அதன் தகைமைகளை சம்பந்தப்பட்ட உரிமைபெற்ற மதநிறுவனங்களில் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 


Thursday, December 12, 2013

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

Commented by nizamhm1933 on http://tinyurl.com/q2oyk74

Lankamuslim.org


இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

புலிகளால் 1990 கடைப்பகுதியில் பலவந்தமாக, கொலை அச்சுறுத்தலுடன், உடமைகளை அபகரித்துக் கொண்டு, விரட்டியடித்து இனச் சு்த்திகரிப்பை மேற்கொண்டமை உலயேயறிந்த, உலகில் முதன் முதல் நடைபெற்ற கொடுமை. அதற்கே இது வரை தீர்வு இல்லாத போது, தீர்வு பற்றிச் சிந்திக்கவே முற்படாத போது, மறக்கப்பட்ட காரணியாகி, மடமாற்றத்துககு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமற் போனவ்ர்க்ள பற்றி்க கூறி என்ன பயனைப் பெற்றுக் கொள்ளப் போகின்றனர் முஸ்லிம்கள்!

இந்நாட்டில் முஸ்லிம்கள் இனி வாழ முடியுமா என்ற  பரிதவிப்பில் செய்வதறியாது திகில் பூண்டில் மிதித்தவர்களாக இருக்கும் தருணத்தில், தமது பழைய துன்பங்களைப் பற்றி முறைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா!

ஏற்கனவே கட்டவிழ்த்து விடப்பட்ட காடையர்களால் நடத்தி முடிக்கப்பட்ட அராஜகங்களை நியாயப்படுத்தும் வேலையும், அப்படி எதுவுமே  நடக்கவில்லை அத்தனையும் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரங்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் மந்திரிகள் உள்ள இந்நாட்டில்,  காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக எடுக்கும் முயற்சி விழலுக்கிறைத்த நீரே  !

சில புதுமுகங்களால்,  தாய்மார்கள்தம் உறவினர்களைக் காணவில்லை எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்,  ஆதாரமற்றவை எனக் கூறும் அளவிற்கு நிலைமை கீழிறங்கி இருக்கும் போது, இது போன்ற ஆணைக்குழு விவகாரங்கள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கப்  போகின்றது.  முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் அவர்களது இனங்களே துரோகிகளாக இருக்கும் நிலையில் நீதியை எதிர்பார்ப்பது மலடி பிள்ளை பெற்ற கதையாகத்தான் இருக்கப் போகின்றது!

Wednesday, December 11, 2013

இன ஜக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

Commented by nizamhm1944 on: :http://tinyurl.com/lugdao2
பிரச்சினைகளுக்குத் தீர்வு வன்செயல் அல்ல, அது தோற்றுப் போன சித்தாந்தம் என்பதைக் கவனத்தில் நிறுத்தியவனாக இதனைப் பதிவிடுகிறேன்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல் வேறு நியாயப்படுத்தல்கள் இருக்கும். அவைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நடுநிலையில் நின்று, ஆராய்ந்து, உணர்ந்து, மகக்ள் நலன்களை, இனஐக்கியத்தைக் கருத்திலிருத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
சில வேளைகளில் விட்டுக் கொடுக்கும் பண்பு கூட வேண்டப்படுவதாக இருக்கும். அவ்விட்டுக் கொடுப்பு நன்மை பயக்குமாயின், அதனைச் செய்வதை மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்வதில் யாருக்கும் நஷடம் ஏற்பட்டு விடப் போவதில்லை.
ஒரு விடயத்தை அணுகுமுன், மனிதம் ஒன்றைத் தவிர,அங்கு அரசியலோ, மத உணர்வுகளோ முன்னிலைப்படுத்தப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட, நீதி பெற்றுக் கொள்வதற்கான தகுதியாகிவிட முடியாது. தீர்வு காணும் முன் கடந்த கால பின்னணிகள் நுணுக்கமாக ஆராயப்படல் வேண்டும். ஒருவரின் உரிமை, இன்னொருவரின் உரிமைக்கு எவ்வகையிலும் பங்கம் ஏற்படுத்திடக் கூடாது. ஒருவருக்கு செய்யப்படும் நியாயம், இன்னொருவருக்கு அநியாயமாகிவிடக் கூடாது. பிரச்சினைகள் இன்று இருக்கும்.நாளை மறைந்துவிடும். பிரச்சினைக் காலத்தில் நியாயமற்று ஏற்படுத்தபப்ட்ட வடுக்கள் மறைவதில்லை. அதுவே தீராப்பகையாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
பசியால் துடிப்பவனை வீ்ட்டிற்கு அழைத்துச் சென்று உண்டியும் கொடுத்து,, உறஙகவும் இடம் கொடுக்கும் மனநிலை படைத்தவர்கள் மன்னார் மக்கள். அபயம் என வந்து விட்டால், சற்றேனும் பின்னிற்காது வந்தவனை வாழவைக்கும் பண்பு கொண்ட அம்மக்கள் மத்தியில், இன்று இருந்து நாளை போகும் எவரும், பிரிவினைவாதக் கருத்துக்களை ஏற்படுததி மன்னார் மக்க்ளின் ‌ஐக்கியத்தைப் புரிந்துணர்வை அற்றுப் போகும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று சம்பந்த்ப்பட்ட அனைத்து சாராரையும் அன்பாகவும் பணிவாகவும். இறைவன் பெயரால் வே்ணடுகிறேன்.
மனிதத் தீர்ப்புகள் முழுமை பெற்றவை அல்ல. மாற்றப்படக் கூடியவை. இராணுவச் சட்டங்கள் போன்று சிவில் சட்டங்களை அணுக முடியாது. நாம் இன்று கொடுத்த தீர்பபு, சில வருடங்களில் , மாதங்களில், ஏன் நாட்களில்கூட பிழை என்பதை நாமே உணர்வதாக இருக்கும். அப்போது பாதிக்ப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண முடியாது போய் விடும். சரி செய்யா விட்டாலும் பரவாயில்லை. பிழை நடந்து விடாது பேணும் மனப்பான்மையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினை நீதியை நிலை நிறுத்த வேண்டிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்குமாயின், கடிமனங் கொண்டோரின் இழிசெயல்கள், நீதியை வழ்ங்குவத்ற்குத் தடைக் கற்கலாகிவிடக் கூடாது.
இக்ககுருத்துக்களில் வெளிப்பட்டுள்ளவை யாருக்கும். ஆதரவாகவோ, எதிராகவோ, விமர்சனமாகவோ கூறப்பட்டவைகள் அல்ல.
எதில் தீர்க்கமான ஞானமில்லையோ, அதனைப் பின்பற்ற வேணடாம் என்ற இறைகோட்பாட்டை மதித்து அதன்படி எழுதப்பட்டதே! முழுமையாக மன்னார் மக்களின் இன ஒற்றுமை தவிர வேறு மறைமுக எண்ணங்கள் எதுவுமில்லை.

Thursday, December 5, 2013

ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்!: ஜனாதிபதி

Commented by nizamhm1944: http://tinyurl.com/q4hjc5y

Lankamuslim.org

ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்!: ஜனாதிபதி


கடந்த இரு வருடங்களாக நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், உலகத் தலைவர்கள் உட்பட அனைவரதும் கவனத்தை ஈர்த்து, மனித உரிமை ஆணையாளரால்கூட ஐநா வில் பேசப்பட்ட பின்னர், ஜனாதிபதி முஸ்லிம் இராஜ தந்திரிகள் மத்தியில் ஆற்றிய உரை, அந்த இராஜ தந்திரிகளின் உள்ளத்தில்  எவ்வாறான கருத்தை ஏற்படுத்தி இருக்குமோ! 

ஆனால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும், நடுநிலையாளர்கள், அவதானிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அவநம்பிக்கையை, அச்சத்தை, விரக்தியை ஏற்படுத்தியுள்ளமை ஆரோக்கியமானதல்ல! 

குறிப்பாக பொதுபலசேனாவின் பேச்சுக்களையும். ஊடக அறிக்கைகளையும் வாசிப்போர் இங்கு நடப்பது என்ன என்று இலகுவாக அறிந்து கொள்வர். நாட்டின் சட்ட நடைமுறை என்பது, ஜனாதிபதியிடம் நிரூபித்து நீதி பெறுவதாக இருந்தால், இந்நாட்டின் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி, மதவிரோத நடவடிக்கைகளை முன்வைத்த போது, ஜனாதிபதியால் அவர்களுக்கு, இதன் பின்னர் இதுபோன்ற மதவிரோத நடவடிக்கைகள் இடம் பெற்றால், அப்படியானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கத் தேவையில்லை.   

எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டு, அவர்களது பேச்சுக்கள் நாட்டில் பிரச்சினையைத் தூண்டுவதாகக் கூறி அவர்கள் மேல் விசாரனை நடத்தப்படவும், வழக்குகள் பதிவாக்கவும் செய்யும் நடவடிக்கைகள் இந்நாட்டில் இன்றும் இருக்கின்றன. 

இது போன்ற பகிரங்கமாக நடைபெறும், யாப்பு மீறல்கள் கூட, தனி மனிதரால், ஸ்தாபன ரீதியில் நிரூபிக்கப்படுவதில்லை.  மேலும், குற்றச் செயல்களைக் கண்காணிப்பதும்,விசாரணைக்கு உட்படுத்தி, ஆதாரங்களுடன், நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதும், நிரூபிப்பதும் கூட, பொலிஸாரினது கடமையே! அவர்கள், இந்த விடயத்தில், தமது கடமைச் செய்யவில்லை என்பது, மக்களால், பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு. 

1983 ஜூலையில் தெற்கில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்ப்ட்ட அராஜகத்தின் போது, அதனைக் கட்டுப்படுத்த பொலீஸ் படையும் தவறியதுடன், பொறுப்புள்ள அரசும், மெளனித்ததுடன்,  நாட்டின் அதிபரே, பகிரங்கமாக, ஆத்திரம அடைந்த சிங்கள மக்கள் செய்கின்றார்கள் என அப்பாவிச் சிங்களவர் மேல் பழியைப் போட்டதன் பின்னணியால் உருவானதே, அகில உலகிலும் சிங்களவருககும், பௌத்தத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்தியும். மேலும், அதனால் தொடர்ந்த முப்பதாண்டுக் கொடூரங்களும், அழிவுகளும், உயிரிழப்புகளும், மறக்க முடியாதவை.  இன்னும், இற்றைவரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சர்வதேசத் தலையீடுகளும்,  குற்றச்சாட்டுக்களும். ஐநாவில் முன்மொழியப்படுகின்ற தீர்மானங்களும். தொடர் நடவடிக்கைகளும் கூட, அன்றைய நாட்டின் அதிபரின் உரையின் எதிர்விளைவே!

Tuesday, December 3, 2013

ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/omzn2qy

BERU News

         ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு                                           நள்ளிரவு முதல் தடை!


// கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னதாக தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் பரீட்சையில் வந்த அதே கேள்விகளை மாதிரி வினாத்தாளாக அச்சிட்டு வழங்கியிருந்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே பரீட்சைகள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து இத்தீர்மானத்தினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது //

இவ்விடயம் பரீட்சைத் திணைக்களத்தின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்துகின்றது.  பரீட்சைத் திணைக்களத்துள்  மிக மிக அந்தரங்கமாகத் தயாரிக்கப்படும், வினாத்தள்கள் எப்படி வெளியாகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதையும், அதனைச் சீர்செய்வதையும் விடுத்து எடுக்கப்படும் எவ்வித நடவஎக்கையும், பரீட்சை வினாக்கள் வெளியாவதைத் தடுத்துவிடப் போவதில்லை என்பதை அறியாதிருந்தால், நம் நிலை பற்றிச் சிந்திக்கவே வேண்டியுள்ளது.  

உண்மையில், டியூஷன் வகுப்புகளும், மாணாக்கர் நலன் என்ற அடிப்படையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அனைத்துச் செயற்பாடுகளும், பாடசாலைக் கல்வியின் நிலையை வெளிப்படுத்துவன.  பாடசாலைக் கல்வி சீராக மாணவருக்குக் கொடுக்கப்படுமாக இருந்தால் காளாண்களாகப் பெருகியிருக்கும், டியூஷன் வகுப்புகள் தோன்றியிரா! 

தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் தோன்றியிருப்பதாக தெரியவில்லை என்பது, நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ளவும், மாற்று நடவடிககைகள் எடுத்து, பாடசாலைக் கல்வியை மேம்படுத்தவும், அதன் மூலம் படிப்படியாக டியூஷன் தொல்லையையும், பெற்றார், மாணாக்கர் டியூஷன் மோக மனநிலையையும் தீர்க்க, மாற்றக் கூடியதாகவிருக்கும். 

இது மட்டுமல்ல, விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் நடைபெறும் குழறுபடிகளையும், களைவதற்கான மாற்று வழிகனளக் கண்டறிய வேண்டும்.  

உத்தியோகங்கள் வழங்கப்படு முன்னர், சான்றிதழ்களைப் பார்த்து, நியமனங்கள் செய்யாது, அறிவை அளந்து தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும்.  இன்றேல், தராதரப்பத்திரங்களைப் படிக்காமலே பெற்றுக் கொள்ளும் குறுக்கு வழிகளை மாணாக்கரும், பெற்றாரும் தேடிக் கொண்டிருக்கும் அவல நிலைகளை மாற்றியமைத்துவிட முடியாது. 

இதன் மூலம் நடைபெறும் அவலங்களில் இருந்து நாட்டை விடுவிக்கலாம் !

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/nccdegq

Lankamuslim.org

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

புததர் சிலை இல்லாத இராணுவ முகாம்களே இந்நாட்டில்  இருக்காது என்பது உண்மையே! எங்கெல்லாம் முகாம்கள் ஏற்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதவழிபாட்டுத்தலங்களும் உருவாகிவிடுவதைத் தவிர்க்கவும் முடியாது எனக் ககூறலாம். இந்திய அமைதி காக்கும் படை இங்கு இருந்த காலத்தில் அவர்ககும் தமது வழிபாட்டிடங்களை அமைத்தே இருந்தார்க்ள். இது மனிதன் வாழுமிடங்களில் அவை தோன்றுவது நியாயமானதே என்பதை வலியுறுத்துகின்றது. தற்போது அழிக்கப்படும் கணிதம் விடைதராதது.

பாதுகாப்பு வலயங்களாக இருந்த பகுதிகள்ில் காண்ப்படும் மதவழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதே! தற்போது அவை இடிக்கப்படுவதில் இருந்து, யுத்தம் நடைபெற்ற காலங்களில் கூட அவை அங்கு  இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகின்றது. மேலும், பெளத்தர்க்ள் பெரும்பாலோர் இந்துக் கடவுளரை வழிபடுபவர்களே!

அப்போது அவை இருக்க முடியுமானால், தற்போது என்ன காரணத்துக்காக அழிக்கப்படுகின்றன என்பதை, சாதாரண நிகழ்வாக ஒதுக்கிட முடியாதது. அத்தோடு, பொதும்க்கள் செறிந்து வாழும் தெற்கிலும்கூட  மதவழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படும், அகற்றப்படும் அதே வேளை, புதிதுபுதிதாக காரியாலய முற்றங்களிலும்.பொதுச் சந்திகளிலும்,  சுற்றுவட்டங்களிலும், இன்னபிற இடங்களிலும் புத்த சிலைகள் நட்டப்படுகின்றன என்பது, மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சமூக  ஆர்வலர்கள், அமைதி விரும்புவோர், மதவிரோத சிந்தனையற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மத்தியிலும், வெளிநாடுகளிலும் கூட பலத்த சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இது நல்ல சகுனமாகத் தெரியவில்லை.  இறைசாபத்தைக்கூட வருவிப்பது.  யாப்பையும் கேலிப்பொருளாக மாற்றியுள்ளது.