Friday, July 25, 2014

ஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)

ஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)






பிறை பர்ப்போரிடம் ஒரு சந்தேகம் !



பிறையை நாம் கண்ணால் பார்க்காவிட்டால் பிறை தோன்றவில்லை என்றாகிவிடுமா! கண்ணால் காணமுடியாத காற்றை நம்ப முடியுமானால் ஏன் பிறையும் அதன் ஒழுங்கில் தவறாது வந்து கொண்டே இருக்கும் என்ற இறை வார்த்தையை நம்பக் கூடாது!



றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்படட நாட்களில் நோன்பை நோற்கவும் என்ற இறை வசனம் புறந்தள்ளப்படலாமா!



நாயகம் ஸல அவர்கள் பிறை பர்த்துத்தான் நோன்பு நோற்றார்கள் என்று கூறினால், அவர்கள் ஒட்டகத்தைத் தமது வாகனமாகப் பாவித்ததையும் செயற்படுத்த வேண்டுமல்லவா!



பிறையை இன்று காண முடியாததால் நாளை பெருநாள் எனத் தீர்ப்பு வழங்கலாமா! அப்படியாயின் பிறை பார்த்தல் என்ற கருதுகோள் கேலியாகவில்லையா!



இன்று பிiiயைக் காணாது, நாளை பார்க்கும் போது அது இரண்டாவது பிiறாகவிருந்தால் எப்படித் தீர்ப்பு வழங்குவீர்கள்!



அமாவாசைக்குப் பின் புதுப் பிறை என்ற  உண்மையை மறுக்கப் போகின்றவர் யார! நாளை அமாவாசையாயின் அதற்கு அடுத்த நாளை அடுத்த மாதமாகக் கொள்வது அதாவது தலைப் பிறையாகக் கொள்வது  பிழையா!



ஆதலால், நாளை அமாவாசை வரப் போவதை அனைவரும் காணப் போகின்றனர். அதனைத் தொடர்ந்து ஞாயிறு மாலை பிறை தோன்றியே தீரும். நாம் காணமுடியாமற் போனால் பிறை தோன்றவில்லை என்பது கருத்தல்ல. அப்படி நினைப்போமாயின் அது இறை மறுப்பே!

No comments: