Wednesday, January 15, 2014

எமது பிளவால் சிறுபான்மை சமூகங்கள் மேம்மையடைந்து வருகிறது: பொதுபலசேனா

Commented  by nizamhm1944 on:  http://tinyurl.com/pqj5amy

Lankamuslim.org


எமது பிளவால் சிறுபான்மை சமூகங்கள் மேம்மையடைந்து வருகிறது: பொதுபலசேனா

உலகிலேயே ஓர் இனம் முன்னேறுவதால் தமது இனம் அழிந்து கொண்டிருக்கின்றது என முட்டாள்தனமாகக்  கூறும் முதல் மனிதன் இந்த தேரையைத்தவிர இருக்க முடியாது.  எவரும், மற்றவரை வீழ்த்தி தன்னை உயர்த்திக் கொண்ட வரலாறே கிடையாது. அப்படியான சிந்தனை கொண்டவர்கள் அழிவுகளையே சந்தித்துள்ளனர். 

தனது கருத்தைக் கூறுவதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் முழு உரிமையுண்டு. ஆனால், மற்றைய சமூகங்களைத் தாக்கும், அழிக்க முயலும், தூஷிக்கும், நசுக்க முனையும் உரிமை எவருக்கும் கிடையாது. கடந்த நான்கு வருமங்களாக நாடளாவிய ரீதியில் தூண்டிவிடப்பட்டு நடைபெற்று வரும் மதவிரோத நடவடிக்கைகளை அவதானிக்கும் எவரும், இவை மதத்தின் பெயரால் இரகசியமாக முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்ட அரசியல நிகழ்வுகளே என்பதைக் கண்டுகொள்வ்ர். 

இலங்கை அரசியல் யாப்பு தனது 111 ஆவது அத்தியாயமான அடிப்படை உரிமைகள் என்பதன் 10ஆம் பத்தியின் மூலம் அனைத்து சுதந்திரததையும் கொடுத்துள்ள அதேவேளை, பத்தி 12 (1) இல் சட்டத்தின்முன் அனைவரும் சமம எனவும், அத்தோடு அவர்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்படுவார்கள் எ்னறு விதந்துரைக்கின்றது.  ஆனால் நடப்பவையோ
எதிர்மாறான விடயங்களே!

”111 அடிப்படை உரிமைகள்:  12 (1)  -  சட்டத்தின் முன்பு ஆட்கள்  எல்லோரும் சமமானவர்கள்; அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்.”

இந்நிலையில், இந்நாட்டில் மதததின் பெயரால் மற்றைய மதங்களின் கடமைகள், விழுமியங்கள் ஒடுக்கப்பப்படவும், அவர்களின் வணக்கத்தலங்கள் கூட அழிக்கப்படவும் செய்யும் காடைத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வணண்மே உள்ளன பொருட்களின் விலைவாசியைப் போன்று!  ஆனால், சட்டம் அந்த சிறுபான்மை மக்கள் சுத்ந்திரத்தைப்  பாதுகாக்கத் தவறிவிட்டது. 

அநத சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிக் கலவரத்தை உண்டாக்கும் சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் தடுதது நிறுத்தி, இந்நிலை ஏற்படுவதற்கு வழிவகுப்போரைக் கைது செய்திருக்க வேண்டும்.  இந்த அடாவடித்தனத்தை, யாப்பினால் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்குத் தடையாகவுள்ள சக்திகள் யாருடையவோ ஆசீர்வாதத்ததுடன் பகிரங்கமாகவே இயங்கும் நிலையை அண்மைக் காலமாக இலங்கைப் பொலிஸ கைகட்டி, வாய் பொத்திப் பார்த்துக் கொண்டு இருப்பதுமல்லாமல், அந்தக் குழப்பங்களுக்கே அனுசரனையாகவும் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

இச்செயல் இலங்கையின் அரசியல் யாப்பை மீறுவது மட்டுமல்ல, அதனைச் துச்சமென மதிக்கும் அடாவடித்தனம். இதற்கு உடந்தையானோர் யாராக இந்தாலும், சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள். அவர்கள் தேசத்துரோகிகளே!  

சட்டம், ஒழுங்கைத் தக்க வைத்துக் கொள்ளாத எந்த நாடும். அமைதிப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கின்றது எனவோ, மக்களைக் காக்கின்றது எனவோ,  நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்கின்றது எனவோ கூற முடியாது. 

அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இந்நாட்டுக்கு எதிராகக் உலகளாவிய ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கைகளைக் கண்டுணங்காணாது, நியாயப்படுத்தும் வண்ணம், குழப்பங்களுக்குப் பின்னணி உண்டென ஒருவரும், காரணங்கள் உண்டென இன்னொருவரும் கூறிச கொண்டிருக்க முடியாது. அப்படிக் கூறுவதுகூட தமது கடமையில் இருந்து தவறிய குற்றத்தை வருவித்து, நம்பிக்கைக்குப் பங்கம் விளைவித்துள்ளது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அது அழிவின் பாதையே! 

No comments: