Friday, September 27, 2013

சம்சுதீன் காசிமியின் அறியாமை



உமக்கு புதிதாக ஒரு வேதத்தையும் தரவில்லை. உமக்கு முன்னிருந்த நபிமார்களுக்கு எதனைக்கொடுத்தோமோ, அவற்றை மெய்ப்படுத்துவதற் காகவும், சாட்சியம் கூறுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவுமே இதனை நம் இறக்கி உள்ளோம் என்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் சில வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.

ஆதலால், முன்னைய வேதங்களை அறிந்திருந்த கிறிஸ்தவர்கள் வரை நபிகளார் ஸல் அவர்கள் பற்றிக் கூறப்பட் டிருந்ததை அறிந்திருக்கின்றனர். அதற்கு உதாரணமாக, நாயகம் ஸல் அவர்களுக்கு முதன்முதல் ஹிறா குகையில் ஜிப்ரீல் அலை அவர்கள் மூலமாக வஹீ இறங்கிய போது, குழப்பமடைந்த எம்பெருமானார்,தன அருமை மனைவி அன்னை கதீஜா நாயகி அவர்களிடம் கூறியதும், அதன் விளக்கத்தைப் பெற அவர்கள் நாடியது தனது உறவினரும், கிறிஸ்தவ பாதிரியானவருமான வரக்க பின் நௌபல் என்பவரையே என்பதும், அவர்தான் நபிகளார், நபித்துவமும், தூதுத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்‌மையையும், அங்கு வருகை தந்தது வானவர்கோன் ஜிப்ரீல் என்பதையும், அவர் அறிவித்தது புனித குர்ஆன் என்பதையும் வெளிப்படுத்தினார். இது எல்லோராலும் ஏற்கப்பட்ட வரலாறு.

இதிலிருந்து, அந்நாளில் முகம்மது என்ற பெயரில் இறுதி நபி ஒருவ‌ர் வரவுள்ளார் என்பதை அரேபியாவில் வாழ்ந்த அறிஞர்கள் அறிந்திருந்தார்கள் என்பது வெளிப்படை! காஸிம் அவர்களின் மறுப்புரை இதனடிப்படையில் செல்லுபடியாகாது என்பது உறுதியாகின்றது.

No comments: