Thursday, September 12, 2013

மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும்

Commented by nizamhm1944 at:  http://tinyurl.com/paxxlma

on Voice Of Mannar

மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும்


.// வடக்கு,கிழக்குக்கு வெளியில் தென்னிலங்கையில் வாழும் எந்த சுதந்திரத்தினையும் அபிவிருத்திகளையும் அனுவிக்கின்றார்களோ,அதனை இந்த வடமாகாண மக்களும் கிழக்கு மாகாண மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதி்ல் நாம் உறுதியாக இருக்கின்றோம்.// 

தெற்கில் புத்தம் அல்லாத குறிப்பாக இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இழைக்கப்படும் பள்ளிவாசல் தகர்ப்பு, ஹிஜாப் அணிய முடியாத நிலை, வர்த்தகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்கம். இஸ்லாத்துக்கும், இஸ்லாமியருக்கும் எதிராக வாரிவீசப்படும் அவதூறுகள், ஏற்படுத்தப்படும் அவமானங்கள், சுதந்திரமாக வாழ முடியமா என்ற அச்ச நிலை போன்ற அக்கிரமங்கள் வடக்கிலும் நிலவ வேண்டும் என்றா அமைச்சர் கூ்றுகின்றார்!

முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்தால் முஸ்லிம்களின் தற்போதைய பிரச்சினை தீர்ரக்கப்படாது அதனால் தமக்கு வாக்களித்தால் மட்டுமே தீர்க்கப்படும் என்பதன் தர்க்கம் என்ன? தற்போது தாம் ஆட்சியில் இல்லை என்ப‌தா? வடக்கையும் வென்று தாருங்கள் உங்கள் பிரச்சினையைத் தீர்க்கிறோம் என்பதா? 

அரசியல் யாப்பில் அனைத்து மதத்தவருக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமையைத் தடுப்பவர்களைக் கைது செய்து தண்டனை கொடுப்பதுடன், அனைவரும் தமது மதத்தை சுதந்திரமாகவம்,  அச்சமின்றியும் பின்பற்றுவதற்கான சுமுக நிலையை ஏற்படுததுவது ஆட்சியில் இருக்கும் உங்கள் கடமை. அதை விட்டு எங்களுக்கு வாக்குத் தாருங்கள் நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்பது வாக்கு வேட்டையே தவிர இல்லை.  

முஸ்லிம்களின், தமிழர்களின் வாக்குகளை வேண்டி நிற்கும் நிலையில் கூட, மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைப் பாராளுமன்றில் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விடுத்து, வடக்கு மாகாண சபையை வென்றுதான பிரச்சினைகளைத் தீர்க்கலாம் எனக் கூறிக் கொண்டிருப்பது கோமாளித்தனத்தை வெளிப்படுத்துகின்றது.  

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு எவ்வித அக்‌கறையும் இல்லை என்பதை, அவர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட இல்லாமல் ஆக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டிருப்பது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

தற்போது அளிக்கப்படும் வாக்குகள், அதற்கு அங்கீகாரம் கொடுத்ததாகவே அமையும். அடுத்து, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்த நவநீதம் பிள்ளையின் செயற்பாட்டைச் செல்லாதாக்கிவிடும். 

அத்தோடு தற்போதே முஸ்லிம் அமைச்சர்களை, ”பள்ளிவாசல் உடைக்கப் படுகின்றது எனபது வெறும் பொய்ப் பிரச்சாரம்”  என்று கூற வைக்கப்ட்டுள்ள நிலையில், அவர்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குகள்  முஸ்லிம்களின் நிலையை அதளபாதாளத்தில் கொண்டு போய்விடும். அத்தோடு நமது பிரச்சினை சர்வதேச மட்டத்தில் கவனத்தில் எடுக்கப்படாது நீர்த்துப் போய்விடும் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். அதன் பின்னர் முஸ்லிம்களைக் காக்கவும் ஆளிரா தூக்கவும் ஆளிரா? 

அரசின் கண்டுங்காணா மனப்பான்மையை மாற்றுவதற்கும், அவர்களது போக்கை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் சந்தர்ப்பமாக இந்த தேர்தல்களை முஸ்லிம்கள் பார்க்க வேண்டும். இரண்டு வருடங்களாகப் பற்றி எரிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மதவிரோத தீயை அணைப்பதா, அன்றி நமக்கு இனி  விடிவு வரும் என எண்ணெய் வார்ப்பது போன்று அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதா என்பதே முஸ்லிம்கள் முன்னுள்ள கேள்வி. 

”எந்த ஒரு சமுதாயத்தவரும் தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக , அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லலை” -  அல்குர்ஆன் 13:11

No comments: