Tuesday, August 20, 2013

இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/k68fqr2

Lankamuslim.org

இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


தவறுகள் புரியப்படுவதற்கு ஓர் அறிவு தேவை, தன்னடக்கம் தேவை, பொறுப்பு தேவை, சுயவிமர்சனம் செய்யும் பண்பு தேவை, ஏற்கும் மனப்பான்மை தேவை! மேலாக தவறைத் தானே வெளிப்படுத்தும் தைரியம் தேவை.

தெரியாமல் செய்வன மட்டுமே தவறு என்பதும், தெரிந்து செய்பவைகள் குற்றங்கள் என்பதுவும், வேண்டுமென்றே செய்பவைகட்கு இறைவனிடம் மன்னிப்பு இல்லை என்பதும் வேறு!

தங்களது // தலைவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது என்றொரு வரையறை இஸ்லாத்தில் இருப்பதாக நான் அறியேன் ……..// என்ற தொடரில் அமைந்துள்ளவற்றை மறுப்பதற்கில்லை.

ஆயினும், எந்த விமர்சனமும், விமர்சனம் செய்யப்படுபவரது பதவி நிலையிலும், அவர்கள் செயற்பட்ட விதத்தில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதாகவும், அவற்றுக்கு ஆக்கபூர்வமான மாற்றுவழிகளைக் கூறுவதாகவும் இருக்க‌ வேண்டும். தவிர அவரைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிப்பது ஆரோக்கியமற்றது என்பதற்கு மேல், வரம்பு மீறல் என்ற இறைநிராகரிப்பிலும் தள்ளிவிடும். ஒரு முஸ்லிமின் கண்ணியம் மிக முக்கியமானது. நாம் நடுநிலையான சமுதாயம் என அல்லாஹ்வால் பரிந்துரை செய்யப்பட்டோர் என்பதை மறவாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பொது வாழ்வை மேற்கொள்வோர் விமர்சனங்களை எதிர்கொள்ள, அவற்றி லுள்ள நல்ல கருத்துக்களை அலசி ஆராய, தன்னைப் புடம் போட, இன்னும் சிறந்த முறையில் சேவையாற்றும் வழிமுறைகளைக் கண்டறிய தயார் நிலையிலும், மனோபாவத்திலும் இருக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

பதிவுகளில் காணப்படும் விமர்சனங்கள் நமது இழி நிலையை துலாம்பரமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

No comments: