Jaffna Muslim: தோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்திருப்பேன், ஜனா...: “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம். இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது”...
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான போட்டியாளர்கள் மத்தியில் நட்த்தப்பட்ட தேர்தல் அல்ல. அது ஒரு ஜனாதிபதியுடன், அவரது முழு அதிகாரத்துடன் போட்டி போடவைவைத்த தேர்தல். சாதாரண தேர்தல்களிலேயே இந்நாட்டில் நிலவிய அத்துமீறல் சிந்தித்துப் பார்க்க முடியாதவையாக இருந்ததென்றால், ஒரு அராஸக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த, ஒரு ஜனாதிபதியுடன் போட்டி போடுவதில் எவ்விதமான அச்சுறுத்தல், மனநிலை பாதிப்பு போன்றவையை முகங் கொள்ள வைத்திருக்கம் என்பது எழுத்தில் வடிக்க முடியாதது.
ஆனாலும், இந்த தேர்தலில் நடந்த ஒரு புதுமைதான், மக்கள் தாமாக முன்வந்து ஆட்சியிலிருப்பவரைத் தூக்கி எறியாமல் விட்டுவிட்டால், தமதும் தமது சந்ததியினருடைய எதிர்காலமே கேள்விக்குரியதாகிவிடும் என்ற மனநிலையில் எதிர் கொள்ளப்பட்ட உத்வேகம் ! இதனை இறை செயல் என்று கூறுவதைத் தவிர வழியில்லை. அதனால் மைத்திரி அவர்களுக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்காகச் செய்யப்பட வேண்டிய முயற்சிகள் வெகுவாகக் குறைந்திருந்தன. ஊடகங்கள், கருத்தாளர்கள், விமர்சகர்கள், சமூக முன்னோடிகள் தாமாகக் களமிறங்கிப் பல்றேு வழிகளில் தமது பங்கை அராஜகத்தை ஒழிப்பதில் செலுத்தினர்.
உண்மையில் இந்த ஜனாதிபதித்அ தேர்தலில் மஹிந்தர் தோற்றிராவிட்டால், மைத்திரி அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரை இன்று இந்நாடு இழந்திருக்கும் என்பது யாவரும் அறிந்ததே! இறைவன் இந்நாட்டையும் மக்களையும் அராஜகத்தின் பிடியிலிருந்து காப்பற்றிவிட்டான்.
இச்செயல், புலிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றியதைவிடப் பல மடங்கு மேலானது. காரணம், புலிகளை அனைவரும் எதிரியாகப் பார்த்தனர். ஆனால், இவர்கள் மக்கள் மத்தியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாகவும், புலிகளை ஒழித்தவர்களாகவும் மக்கள் மத்தியில் அறிமுகமாகிக் கொண்டு சுதந்திரம் பெற்றுத் தந்த புருஷர்கள் எனக் கூறிக் கொண்டு இருந்தனர்.
அதனைத் தகுதியாகக் காட்டி மக்களை இருட்டிலும், மருட்சியிலும், வெருட்சியிலும் வாழ்க்கையை ஓட்ட வைத்தனர். அடிக்கடி புலிக்கதைகளைக் கூறி, அவர்களுக்கு எதிராக சிந்திக்கக் கூட முடியாத நிலையை உருவாக்கிய வண்ணம் இருந்தனர். மேலும், அத்தோடு அபிவிருத்தி என்ற மாய மானை மக்கள் முன்வைத்து மக்களை மயக்க நிலையில் வைத்திருந்தனர். சூறையாடுதலையே தமது முழுமையான இலக்காகக் கொண்டிருந்தனர். இத்தேர்தலில் பழைய நிலை களையப்படாதிருந்தால், இந்நாடும் ஒரு சோமாலியாவாக மாறி இருக்குமென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment