Wednesday, October 30, 2013

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kh9hgun

Beru News

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!


// மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து விடுவித்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொடுத்துள்ளது.//

மக்களைப் பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்ததை மக்கள் நன்றியுடன் எப்போதும் நினைவு கூருகின்றார்கள். அது பலம் வாய்ந்த ஜேஆர், பிரேமதாஸ, சந்திரிகா முதலியோராலேயே செய்ய முடியாமற் போன் ஒன்று ! ஏன் அண்டை நாடான இந்தியாவின் அமைதி காக்கும் படை கூட அந்தப் புலிகளிடம் மண்ணைக் கவ்விச் சென்றது.

ஒன்றைக் கூறாமல் இருக்க முடியவில்லை.  உண்மையில் பயங்கரவாதப் பிடியில் இருந்த மக்கள் வடக்கு மக்கள்தான். ஆனால் அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவதை மட்டும் ஏற்க முடியாதுள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர்.  உண்மையும் அதுவே! போர் முடிந்தது என்பதனால், புலிகள் அழி்நததனால் மக்கள் மத்தியில் நிம்மதி வந்துவிட்டது என நினைப்பது பிழையான கணிப்பீடே! சமன்பாடே !!

எதற்காக மக்கள் இத்தனை தொல்லைகளுக்கும் முகங் கொடுக்க வேண்டி வந்ததோ அது களையப்படல் வேண்டும். அதன் பின்னரே மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்படும் சூழல் உருவாகும்.

வடக்கு முஸ்லிம்களின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வெறும் அறிக்கைகள் மட்டும் எதனையும் அவர்களுக்கு நல்வாழ்வைக் கொடுத்து விடாது. அவர்களது இழப்புகள் அனைத்தும் சீர் செய்யப்படல் மிக மிக முக்கியம்.  அதுவே மனிதாபிமானதும், நீதியானதும், நியாயமானதும், வேண்டப்படுவதும் கூட !

புலிகளால் வெறுங்கையோடு விரட்டி அடிக்கப்பட்டவர்களை, அரசும் வெறுங்கையோடு மீள் குடியறே்றம் செய்து விடலாம் என நினைத்தால், அது புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் எவ்வித வித்தியாசத்தையும் காட்டப் போவதில்லை. 

Tuesday, October 29, 2013

‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’

Commented by nizamhm1944 on : http://tinyurl.com/l5lmtfj

Lankamuslim.org


‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’



புனித பூமி என்ற வார்த்தை விவஸ்தை அற்றுப் போய்விட்டது.  எவரும் ஒரு இடத்தைப் புனித பூமி என்று கூறுவதன் மூலம் அது புனித பூமி ஆகிவிடப் போவதி்ல்லை!

கோயிலை இடித்து ஒரு புனித பூமியா! கோமாளித்தனமாக இருக்கிறது! புனித ‌பூமியில் கோவில்  இருக்கக் கூடாதா! இந்துக்கோவிலுக்குப் போய் கும்பிடாத பௌத்தர்கள் எத்தனை பேர் இந்நாட்டில் உள்ளனர் என விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இது அராஜகம் தவிர்த்து இல்லை.  

புனித பூமியில்தான் புத்த பெருமான் இருக்க வேண்டும் என்றால்,  புனிதமற்ற தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் புத்த பெருமான் சிலைகள் எப்படி வைக்கப்படுகின்றன !

Saturday, October 26, 2013

கீழை இளையவன் பக்கம்: ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரை...

கீழை இளையவன் பக்கம்: ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரை...: மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S யில் வந்து நிற்கும் இந்த காலம் வரை தொடர்ந்து மனித நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாய்  ...

Thursday, October 24, 2013

நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/n97m5yy

Lankamuslim.org

நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா

1990இல் வடக்கு முஸ்லிம்கள் காரணமின்றி புலிகளால் வெளியேற்றப்பட்டமை, புலிகள் செய்த பாரி பிழை (BLUNDER) என புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அது தமது பிழைதான் என்பதை புலிகளின் தலைவர் பிரபாகரனும், தமது இயக்கம் முழுப்பலத்துடன் இருந்த காலத்தில் எவருடைய அழுத்தமும் இன்றி, அப்பிழையின் தாக்கத்தையும், தமது பின்னடைவின் காரணத்தையும், அதாவது, முஸ்லிம்களற்று வடக்கு கிழக்குக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது என்ற யதார்த்தத்தை நன்குணர்ந்து, முதலும் கடைசியுமாக அவர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஊடக மாநாட்டில் ஏற்றுக் கொண்டமை சர்வதேச ரீதியாக பதிவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவே! தமது அடைவுக்கு தேவையாயிருந்த சர்வதேசத்தின் பங்களிப்பு கிடைக்கத் தடையாகவிருந்த மறைமுக உண்மை. 

மேற்கண்ட உண்மையை எவரது மறுப்பும் இல்லாதாக்ககிவிடப் போவதில்லை.  இதனை மறுப்பவர்கள், புலிகளையும் மறுப்பவர்களே ! மட்டுமல்ல தமிழர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களே! முஸ்லிம்களின் பங்களிப்பற்ற ஒரு தீர்வு சிறுபான்மையினருக்கு என்றும் கிடைக்கப் போவதில்லை. அது குதிரைக் கொம்பே ! இந்நிலை இரு இனங்களுக்கும் பாதிப்பையே தரும்.

புலிகளின் போராட்டத்துக்கு முழுமையான சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் முட்டுக்கட்டையாக இருந்தது, தமிழ் பேசும் சிறுபான்மையினராக வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்தவர்களை ஆயுத முனையில் வெளியேற்றி இன அழிப்பைச் செய்தமையே.  மட்டுமல்ல சிறுபான்மையினருக்கான புலிகளின் உரிமைப் போராட்டத்த‌ை  மலினப்படுத்தியதுடன், நலிவடையவும் செய்திருந்தது அச்செய்கை. அதுவே அவர்களாலேயே அதனை ஓர் Great Blunder of the Tigers என்ற விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. 

Wednesday, October 23, 2013

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது

Commented by nizamhm1944 on :   http://tinyurl.com/qazgtu3

Lankamuslim.org

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது


முஸ்லிம்களுக்கு எதிரா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மதவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதை முதலில் செய்வதுவதுதான், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்  என்ற நல்லெண்ணம் கொண்டோரின் முதற்கட்ட செயற்பாடாக இருக்கும். 

அதன் பின்னரே அடுத்த கட்டமாக ஏன் இவ்வாறான அராஜகங்கள் நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிந்து, அப்படி பிரச்சினைகள் ஏதுமிருந்தால் அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். 

அதைவிடுத்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாகி சட்டத்தைத் தனது கையில் எடுத்து, யாப்பைக் காலால் மிதித்துக் காட்டுமிராண்டித் தனமாக அடுத்வர் மீது தாக்குதலை நடத்துவதும், அதையே நியாயப்படுத்துவதாக, அப்படி நடப்பதற்குக் காரணங்கள் இருக்கும் அதனால்தான் இவ்வாறான மிலேச்சத்தனமான காரியங்கள் நடக்கின்றன, எல்லா நாடுகளிலும் இவ்வாறு நடக்கின்றன என்றெல்லாம் கூறி நியாயப்படுத்துவதும், சட்டமும் ஒழுங்கும் நிலவுவதாகக் கூறும் ஒரு நாட்டில் நடைபெறுவதா?  

பொறுப்புள்ள தலைவர்களாக இருந்தால் அவர்களிடமிருந்து இவ்வாறான ஊக்குவிக்கும் கருத்துக்கள் வெளிவராது ! இவை அழிவின் தொடக்கமாகவே மக்கள் கருதுகின்றனர்.

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு

Commented by nizamhm1944 on http://tinyurl.com/llqbj2w

Lankamuslim.org

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு


ரூபா 154 ஆயிரத்துக்கும் அதிகமான கோடிகள் அடுத்த ஆண்டு பாதுகாப்புக்காகச் செலவிட ஒதுக்கப்பட்டுள்ளது.  இது ஏறத்தாழ நாளொன்றிற்கு 422 கோடிக்கு மேல். 

உண்மையில், எந்த நாடும் இந்த நாட்டைப் பிடித்துவிடப் போகின்றது என்ற நிலையிலோ, வல்லரசாக வேண்டும் எ்னற நிலையிலோ இந்நாடு இருக்கவில்லை.  இந்நாட்டின் சிறுபான்மையினர் பிரச்சினை மனிதாபிமானமாகத் தீர்த்து வைக்கத் தவறியதாலும், அவர்களது உரிமைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி அழித்து விடலாமென நினைத்ததாலும் உருவானதே  தமிழர்களின் ஆயுதப் போராட்டம். அதனைத் தொடர்ந்த பயங்கரவாதமும், உயிரழப்புக்களும். 

அதன் காரணமாகவே பாதுகாப்புக்காக் இவ்வளவு பெருஞ்சுமை மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. இதில் கோடிகளை கொள்ளை கொள்ளும் கேடிகளும் இலாபமடைகின்றனர். ஆனால் மக்கள் தினந்தினம் வெந்து வேகுகின்றனர், வாழ்ககையை ஓட்டிக் கொள்ள முடியாமல்.   

தமிழர்களின் பிரச்சினை தாராள மனங் கொண்டு தீர்க்கப்பட்டு விட்டால் இப்பணம் அப்படியே மிச்சமாகிவிடும். இதனால் மீதப்படுத்தப்படும் 150, 000 கோடி ரூபாய்களை, இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதாயின், ஒரு மாவட்டத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாய்கள் சென்றடையும். ஒரு வருடத்திலேயே இந்நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிடலாம். 

வேண்டியதெல்லாம் நல்லெண்ணமும், தமிழரும் இந்நாட்டவர்களே, அவர்களுக்கும் சரிசமாமாக வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே! 

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS

Commented by nizamhm1944 on  http://tinyurl.com/m2j9ta9

Lankamuslim.org

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS


// அல்லாஹ்வுக்கு  அர்ப்பனிக்கப்பட்ட உணவு வகைகளை மற்ற மதத்தினருக்கு  சாப்பிட முடியாது. //

இந்த தேரர் ஒரு ”ஞான சூன்யம்” . தனக்குத் தெரியாத விடயங்களை, பிழையாக விளங்கி வைத்திருப்பவற்றை, தனது காவியுடைக்குள் இருந்து மக்கள்மயப்படுத்துகின்றார்.  அதனால், அப்பாவிச் சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து, நாட்டின் அமைதியை, சமாதானத்தை அழிக்கும் வேலைகளைச்  செய்கிறார்.

பொய் சொல்லக் கூடாது என்ற பௌத் தர்மக் கோட்பர்டை மீறுகிறார். முன்னொரு போது, முஸ்லிம் கடைகளில் முஸ்லிம் அல்லாதவர்களு்க்கு விற்கப்படும் உணவுப் பண்டங்களில், மூன்று முறை எசசிலைத் துப்பிவிட்டுக் கொடுக்க  வேண்டும் என்று புனித குர்ஆனில் கூறியிருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். அதனை நிரூபிக்குமாறு விடுக்கப்பட்ட சவாலை அவரால் நிறைவேற்ற முடியாத பொய்யனாக ஆகிவிட்டார். இவரை இன்னும் மக்கள் பொறுமையாக அங்கீகரிப்பது பௌத்த தர்மத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பது போன்று, ஒவ்வொரு மதமாக தாக்கிவிட்டு, தற்போது அவர் தாம் பின்பற்றும் புத்த தர்மத்தையே தாக்க முனைந்து விட்டார்.