Monday, September 23, 2013

தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/otxf8gs

Voice Of Mannar

தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி

// இந்த முறையாது மாற்றுச் சிந்தனை வடமாகாணத் தமிழ் மக்களிடம் உருவாகட்டும்.//  
தேர்தலின் போது இக்கட்டுரை மாற்றுச் சிந்தனை பற்றிய கருத்தை முன்வைத்தனால், நான் தேர்தல் முடிந்த பின்னர் இக்கேள்வியை எழுப்பு கின்றேன்.  

இந்த முறையாது மாற்றுச் சிந்தனை வடமாகாணத் தமிழ் மக்களிடம் உருவாகட்டும். என்ற வேண்டுகோள் எதனைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டது. அப்படி பின்னணியுடன் எழுதப்பட்டிருந்தால் அது முற்றாக வடக்கு மக்களால் நிராகரிக்கப்ட்டுள்ளது என்பதைக் கூறிவைக்க விரும்பு கின்றேன்.  

சில சரியான கருத்துக்கள் ஆயினும் பொருத்தமற்ற நேரத்தில் வெளியிடப் படும் போது அவற்றின் பலனை மக்கள் பெற்றுக் கொள்வதில்லை.  உண்மை யில் தங்கள் சிந்தனையில் இருந்து வெளிப்பட்டவை அனேகமாக நடைபெற்ற உண்மைகளே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  ஆனால், நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான தீர்ப்பையே மேற்கொண்டனர் என்றே கூறவேண்டும். 

காரணம் நீதிமன்றுகள் கூட, முன்வைக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டே தீர்ப்புக்களை வெளியிடும் அவலத்தில் உள்ள போன்று, வடக்கு மக்கள் மத்தியில் தமது வாக்குகளை இடுவதற்கு பொருத்தமானவர்கள் இல்லா விடினும் கூட மாற்று வழியின்மையால் தமக்கு முன் நிற்பவர்களில்,  அனர்த்தங்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் நிலை பற்றியே சிந்தித்துள்ளார்கள்.  

அனைத்து காலங்களிலும் அதிகாரப் பரவலாக்கல், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களே தமிழ் மக்களின் முன் வைக்கப்பட்டிருந்தன. அவை களில் எவையும் கிடைத்திருக்காத நிலையிலும், மக்களைத் தம் பக்கலில் வைத்திருக்க வேண்டிய நிலையிலும தனிநாடு கோரிக்கை முன்வைக்கப் பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்று இலங்கைச் சரித்திரத்தையே மாற்றியமைத்து, பிரதான எதிர்க்கட்சியாகவும் மாறியது.  

ஆனால், அக்கட்சி எதைக் கூறி மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்று ஆட்சிக்கு வந்ததோ, அதனை மறந்து செயற்பட்டதன் விளைவே, ஆயுதப் போராட்டத்தில் நுழைத்து, தமிழ் இளைஞர்களைக் காவு கொள்ள வைத்தது. இதனை எல்லாம் பார்ப்பதற்கு தனிநாடு கோரிக்கையை முன்வைத்த,  தந்தையென ஏற்கப்பட்டுள்ள, அமரர் செல்வநாயகம் அவர்கள் உயிரோடு இருக்கவில்லை.

உண்மையில் அக்கட்சி பாராளுமன்றைப் பகிஷ்கரித்திருக்க வேண்டும். 1977இல் பெற்ற அவ்வெற்றியையே தமது ஆயுதமாகக் கொண்டு தமது மக்கள் தனிநாடு ஒன்றுக்காக தமக்கு வாக்களித்துள்ளார்கள் எனக்கூறி போராட் டத்தை முன்வைத்திருக்க வேண்டும்.  அப்படியின்றேல் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, மீண்டும் மக்கள் முன் தோன்றி தனிநாடு கோரிக்கையில் இருந்து விலகிவிட்டதாகக் கூறி அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும. 

அவர்களின் பாராளுமன்ற மீள்  பிரவேசம், தனிநாடு கோரிக்கையை பிசுபிசுக்க வைத்துவிட்டது மற்றுமல்ல,புதிய யாப்பின்படி ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்திற்று. புலிகளின் கை ஓங்கி யிருந்ததன் விளைவாக ஆறாவது திருத்தத்தை நிராகரித்து, அனைவரும் வெளியேறி தமதுயிரைக் காத்துக் கொண்டனர். இதுவே 1987இல் இந்தியத் தலையீட்டுக்கும் வழி வகுத்தது.  

இதே த.வி. கூ யினர், ஆறாவது திருத்தத்தையும், ஒற்றை ஆட்சியைும் ‌ஏற்று, சில போராட்டக் குழுக்களுடன் சேர்ந்து 1989இல் தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கௌவினர், அல்லது புலிகளால் மண்ணைக் கௌவ வைக்கப்பட்டனர்.  

இதன் பின்னர், புலிகளின் அனுசரனையுடனும் கள்ள வாக்குகளின் உதவி யுடனும் பாரளுமன்றக் கதிரைகளை நிறைத்துக் கொண்டனர். அதே வேளை, எந்த 13ஆவது திருத்தத்தையும், மாகாண சபையையும் நிராகரித்து சென்றனரோ அந்த மாகாண சபை போன்ற ஒன்றை வடக்கு கிழக்கு மாகாண சபையின் இடைக்கால நிர்வாக சபை என்ற பெயரில் தமக்குத் தருமாறு கேட்டுத் தோல்வியடையும் நிலைக்குத் தம்மைத் தாழ்த்தியும் கொண்டனர். அத்தோடு  இணைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் இழந்ததே கண்ட மிச்சம். முடிவு, புலிகளும், தமிழர் விடுதலைக் கூட்டணி யினரும், இன்னும் போராட்டக் குழுக்களும் தனிநாடு என்ற பெயரில் தமிழ் மக்களையும், அவர்களின் அனைத்து வளங்களையும் இழக்க வைத்ததே தவிர, அவர்களால் முன்வைக்கப்பட்ட தனிநாடு கோரிக்கையைக் கூட தக்க வைத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. 

ஒற்றை ஆட்சி முறை புலிகளாலும், மற்றைய போராளிக் குழுக்களாலும், த.வி.கூட்டணியினராலும் ஏற்கப்பட்டது. 

மாகாண ஆட்சி முறையும்  புலிகளாலும், மற்றைய போராளிக் குழுக்களாலும், த.வி.கூட்டணியினராலும் ஏற்கப்பட்டது.  

பிரிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் கூட அனைவராலும் ஏற்கப்பட்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அழிவுகள்தான் ஈடுசெய்யப்பட முடியா துள்ளது. 

இவை முதிர்ச்சியற்ற முறையில் முன்வைக்கப்பட்ட, அல்லது முன்னெடுக் கப்பட்ட தீர்மானங்களின் பின்விளைவே. இனியாவது, கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தையும், சிறந்த தலைமையையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வைச் சீரடையச் செய்ய வேண்டும். 

அது போன்றே அரசும் இச்சந்தர்ப்பத்தையே சரியான முறையில் பயன்படுத்தி. இந்நாட்டில் அனைத்து மக்களும் சமவுரிமையுடன், ஒற்றுமையாக, அமைதி யாக,  சகஜீவன வாழ்வு வாழ்வதற்கான வழிகளில் தமது கொள்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே நமது அரசியல் யாப்பும் வேண்டி நிற்பது.

Sunday, September 22, 2013

வடமாகாண சபைக்கு முழுமையான ஒத்துழைப்பு

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/o6wcs4e

Lankamuslim.org

வடமாகாண சபைக்கு முழுமையான ஒத்துழைப்பு


// வெளியாகியுள்ள வட மாகாண சபை தேர்தல் பெறுபேறுகள் வடக்கு மக்களின் தேவையை உணர்த்துமாகவிருந்தால் அதனையொரு பாடமாகக் கொண்டு அவற்றை சரி செய்ய முயற்சி எடுப்போம். அதேவேளை, வடக்கு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கத்திடமுள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுத்துள்தெனவும் அமைச்சர் கூறினார். //

நல்ல சிந்தனை.  இது எதிர் காலத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அரசியல்வாதியிடம் இருக்க வேண்டியது.  ஆதலால்.  இத்தேர்தல் முடிவு உணர்த்தும் செய்தி, வடக்கில் நடைபெற்ற மீள்கட்டமைப்பபு வேலையை மறுப்பதாகவோ, ஏற்றுக் கொள்ளாததாகவோ யாரும் நினைக்கத் தேவையில்லை.  

ஆனால், இவைகளுக்கு அப்பால் அவர்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது. அது நிறைவேற்றப்படாவிடில், என்ன செய்தாலும் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை என்பதை வெளிபபடுத்துவதே அச் செய்தி. தம்மக்களின் மனங்களை வெல்வதற்கான செயற்பாடுகளில் அரசு தன்னை அர்ப்பணிப்பதன் மூலமே இதற்கான தீர்வை எட்டலாம். 
  
13ஆவது திருத்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஷரத்துக்களும் செயற்படுத்தப்பட வேண்டியனவே! முழுமையாக அந்த ஷரத்துக்களையாவது செயன்முறைக்குக் கொண்டு வருமாறு அரசு மாகாண சபைகளைப் பணிப்பது, நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினை‌களை நியாயமான அளவுக்குக் குறைக்கும் என்பதையும் உணர வேண்டும்.  

மாறாக, அவற்றை மறுப்பது, அரசியல் யாப்பை காப்பதில் பயபக்தியோடு செயற்படுவோம் என உரைத்த சத்தியத்தை மீறிச் செல்வதாகும் என்பதை பாராளுமன்ற அங்கத்தவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். யாப்பு அனுமதித்துள்ள தனிமனித சுதந்திரம் மதிக்கப்படாது, நசுக்கப்படும் போதே மக்கள் மாற்று வழிகளைக் காண முயல்கின்றனர். இது ஒரு இயற்கையான செயற்பாடே! 

மாகாண சபை 1987 உருவாக்கப்பட்டதன் நோக்கமே, நாடு பிரிந்து போவதைத் தடுக்கும் ஒரு யுக்தியே! ஆக அதிலுள்ள வற்றைக் குறைக்க முயற்சிப்பதோ, அல்லது செயற்படுத்துவதைத் தடுக்க நினைப்பதோ மீண்டும. ஒரு கரிய காலத்துக்குள் இந்நாட்டைத் தள்ளிவிடும் என்பதைச் சிந்தனையில் கொள்வது, தேசப்பற்றுள்ள ஒவ்வெருவரினதும் கடமையாகும். 

Thursday, September 19, 2013

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து உரிமை போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்: அஸ்மின்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/m9r3fnl
Lankamuslim.org
One World One Ummah

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து உரிமை போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்: அஸ்மின்


ஒரு விடயத்தை உணர்ச்சிகளுக்கு உட்பட்டு அணுகுவதனால் சிறந்த அனுமானங்களுக்கு வரமுடியாது. அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் என்பதை இன்று நாட்டில் கட்டுப்படுத்தப்படாது, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான மதவிரோதச் செயற்பாடுகள் நம்மை இடித்துரைக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வடமாகாண முஸ்லிம்கள் யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.

பொது எதிரியை வீழ்த்துவதற்கு முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைவதே நம்மை அழிவிலிருந்து காப்பாற்றக் சுடியது. எந்த அரசும் முஸ்லிம்களை புலிகள் விரட்டியடித்த போதும் சரி, அதற்குப் பின்னரும் சரி அந்த முஸ்லிம்களுக்கு எதனையும் செய்யவில்லை. அவர்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வஞசிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான எந்த இழப்பீடும் கொடுக்கப்படாதது மட்டுமல்ல, அதற்கான கோரிக்கைகள் கூட பரிசீலிக்கப்பட வில்லை என்பதே.

வடக்கில் காலங்காலமாக, புலிக்ள் முஸ்லிம்களை விரட்டியதற்குப் பின்னர்கூட,இருந்து வந்த இன நல்லுறவை பாதிக்க வைத்ததுடன், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்குமளவிற்கு முரண்பாடுகளை மட்டுமே வளர்த்துள்ளது மீள்குடியேற்றம் . வடக்கு முஸ்லிம்கள் அங்குள்ள தமிழர்களுடன் என்றும் கைகோர்த்து வாழ்ந்தவர்கள், வாழ வேண்டியவர்கள்.

மீள்குடியேற்றப்பட்டவர்கள் உண்மையை உய்த்துணர முடியாதபடி அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதனால், அதிலிருந்து மீளமுடியாமலும், தாம் எந்த நிலையில் விடப்பட்டுள்ளோம் என்பதையும் அறிந்து கொள்ள முடியாமலும் உள்ளனர்.

சரியான திட்டமிடலின் அடிப்படையில் இல்லாமல், ஏதோ சில சில்லறைகளைக் கொடுத்து அந்த அப்பாவி முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டுள்ளது மட்டுமல்ல, மீள்குடியேற்றம் என்ற பெயரில், அவர்கள் 23 வருட அகதி வாழ்வுக்குள்ளளும் தமக்கென உருவாக்கி வைத்திருந்த ஒரு ஸ்திரத் தன்மையயையும் இழக்க வைத்துள்ளது. குடியேற்றப்பட்ட இடங்களிலும் நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற, ஸ்திரமற்ற, வாழ்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களது நிலை என்றுமே கேள்விக் குறியாகாமல் பாதுகாப்பது நமது தலையாய கடமை. அது சேர்ந்து வாழ்வதன் மூலமே சாத்தியாகும்.

ஏற்கனவே முஸ்லிம்கள் அளித்த வாக்குகளின் மூலம் பதவிகளில் இருப்போருக்கே நாட்டு நிலைமையைப் பாராளுமன்றில் பேசுவதற்குக் கூட முடியாது என்ற நிலையில் முஸ்லிம் தலைமைகள் இஸ்லாத்துக்கு எதிராகவே அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்குமளவிற்கு நிலைமை மாறியுள்ளமையை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

Monday, September 16, 2013

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்!

Commented by nizamhm1944 at : http://tinyurl.com/oq3dmze

Lankamuslim.org

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்!


ஒருவரை வீழ்த்தி இன்னெராருவர் தளம் அமைத்து வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது. மற்றவர்களின் குறைகளைக் கூறி,  அபாண்டங்களை அள்ளிவீசி தளம் அமைப்பது நிரந்தரமற்றது.  

மேற்கண்ட கட்டுரை வடக்கு முஸ்லிம்களின் மேல் கொண்ட காதலால் எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவில் இன்று வடக்கு முஸ்லிம்கள் இல்லை. 

மீள் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே அப்பட்டமான உண்மை. சில சில்லறைகளைக் கொடுத்து வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டோம் என்பதனை உலகறியச் செய்வதற்கான எத்தனங்கள் மட்டுமே வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்ற பெயரால் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காலங் காலமாக, புலிகளால் முஸ்லிமகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கூட, மிகவும் நெருக்கமாக, ஒற்றுமையாக வாழ்நத தமிழ் - முஸ்லிம்களிடையே, மீள் குடியேற்றம் என்ற பெயரில் முரண்பாடுகள் மட்டுமே தோற்றிவிக்கப்படடுள்ளன என்பதே உண்மை.  

வடக்கு முஸ்லிம்கள் என்றும் தமிழர்களுடன் சிறப்பான உறவைப் பேணி வந்தவர்கள், உறவைப் பேண வேண்டியவர்கள்.  அதுவே சிறந்த சக வாழ்வுக்கு வழிசமைக்கக் கூடியது. 

ஆதலால், அரசியல்வாதிகள் தங்கள் சுயநல வாழ்வுக்காக தமிழ்- முஸ்லிம்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபட வேண்டாம். இது பிரித்தாளும் தந்திரமே தவிர இல்லை.

வடக்கு முஸ்லிம்களுக்கான பல் வகை இழப்புக்கள் சிறந்த பொறிமுறை ஒன்றின் மூலம் அரசினால் ஆய்வு்க்கு உட்படுத்தப்பட்டு தக்க முறையில்  ஈடு செய்யப்படும் வரை அவர்கள் சுதந்திரம் அளிக்கப்பட்டுவிட்டார்கள்  எனக் கதை விடுவது வெறும் ஏமாற்று வித்தையே என்பதையும் முஸ்லிம்கள் அறிந்தே வைத்துள்ளனர்.  அவர்கள் அதுவரை என்றுமே அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பர்.  

Saturday, September 14, 2013

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: சீமான் ஆவேசம்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/nwymw73

in Paris Tamil

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: சீமான் ஆவேசம்

யார் இந்த அழையாத விருந்தாளி!  இலங்கை பற்றிக் கருத்துக்கூற, இலங்கைத் தமிழருக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்க!

இலங்கைத் தமிழர் மிகத் தெளிவானவர்களும், அறிவானவர்களும். சீமான் இலங்கைத் தமிழர்களின் கோமான் என நினைத்துவிட்டதோ! பாவம் அதை இங்குள்ள தமிழர்கள் கோமாளியாகவே பார்க்கின்றார்கள்.

மத்திய அரசு இலங்கை விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை ஏற்படுத்தித் தந்தது. அதற்கு எதிராகப் புலிகள் யுத்தம் செய்து, மக்களையும். அப்பாவி இளைஞர்களையும், சொத்துக்களையும் காவு கொடுத்து விட்டு, தாங்களே முன்னின்று, அவர்களால் விதேசியத் தேர்தல் என விமர்சித்த அதே தேர்தலில், தமது ஆடக்ளை நிறுத்தி, கள்ள வாக்குப் போட்டு காரியமாற்றிய திலிருந்து, அவர்களே தங்களது எதிர்ப்புக் கொள்கையை, தமிழீழக் கோரிக்கையை கைவிட்டி ருந்தமை எங்கே இந்த மரமண்டைகளுக்குப் புரிகின்றது.

தனது முட்டாள் தனத்தை, மக்கள் புரிந்து கொள்ளாத விதமாக சாதுரியமாக மறைத்து, எதனை வேண்டாம் என மக்களைக் கொன்று குவித்தார்களோ அதனையே வேறு பெயரில், மாகாண சபை வேண்டாமென்றவர்கள், இடைக் கால நிர்வாக சபை வேண்டுமென்று கேட்டுத் தோல்வியடைந்தனர்.

இந்திய அரசு தேர்தலில்லாமல், வடக்கு கிழக்கு மாகாண சபையைப் புலிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. அதனைக் கூட ஏற்காமல் அனைத்து சந்தர்ப்பங்களையும் தவற விட்டு, இறுதியில் இணைந்த இரு மாகாணங்களையும்,  இழந்தவர்கள்தான் புலிகள். இந்த யதார்த்தம் கோமாளிகளுக்கு விளங்குவதில்லை. 

Thursday, September 12, 2013

மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும்

Commented by nizamhm1944 at:  http://tinyurl.com/paxxlma

on Voice Of Mannar

மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும்


.// வடக்கு,கிழக்குக்கு வெளியில் தென்னிலங்கையில் வாழும் எந்த சுதந்திரத்தினையும் அபிவிருத்திகளையும் அனுவிக்கின்றார்களோ,அதனை இந்த வடமாகாண மக்களும் கிழக்கு மாகாண மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதி்ல் நாம் உறுதியாக இருக்கின்றோம்.// 

தெற்கில் புத்தம் அல்லாத குறிப்பாக இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இழைக்கப்படும் பள்ளிவாசல் தகர்ப்பு, ஹிஜாப் அணிய முடியாத நிலை, வர்த்தகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்கம். இஸ்லாத்துக்கும், இஸ்லாமியருக்கும் எதிராக வாரிவீசப்படும் அவதூறுகள், ஏற்படுத்தப்படும் அவமானங்கள், சுதந்திரமாக வாழ முடியமா என்ற அச்ச நிலை போன்ற அக்கிரமங்கள் வடக்கிலும் நிலவ வேண்டும் என்றா அமைச்சர் கூ்றுகின்றார்!

முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்தால் முஸ்லிம்களின் தற்போதைய பிரச்சினை தீர்ரக்கப்படாது அதனால் தமக்கு வாக்களித்தால் மட்டுமே தீர்க்கப்படும் என்பதன் தர்க்கம் என்ன? தற்போது தாம் ஆட்சியில் இல்லை என்ப‌தா? வடக்கையும் வென்று தாருங்கள் உங்கள் பிரச்சினையைத் தீர்க்கிறோம் என்பதா? 

அரசியல் யாப்பில் அனைத்து மதத்தவருக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமையைத் தடுப்பவர்களைக் கைது செய்து தண்டனை கொடுப்பதுடன், அனைவரும் தமது மதத்தை சுதந்திரமாகவம்,  அச்சமின்றியும் பின்பற்றுவதற்கான சுமுக நிலையை ஏற்படுததுவது ஆட்சியில் இருக்கும் உங்கள் கடமை. அதை விட்டு எங்களுக்கு வாக்குத் தாருங்கள் நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்பது வாக்கு வேட்டையே தவிர இல்லை.  

முஸ்லிம்களின், தமிழர்களின் வாக்குகளை வேண்டி நிற்கும் நிலையில் கூட, மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைப் பாராளுமன்றில் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விடுத்து, வடக்கு மாகாண சபையை வென்றுதான பிரச்சினைகளைத் தீர்க்கலாம் எனக் கூறிக் கொண்டிருப்பது கோமாளித்தனத்தை வெளிப்படுத்துகின்றது.  

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு எவ்வித அக்‌கறையும் இல்லை என்பதை, அவர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட இல்லாமல் ஆக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டிருப்பது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

தற்போது அளிக்கப்படும் வாக்குகள், அதற்கு அங்கீகாரம் கொடுத்ததாகவே அமையும். அடுத்து, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்த நவநீதம் பிள்ளையின் செயற்பாட்டைச் செல்லாதாக்கிவிடும். 

அத்தோடு தற்போதே முஸ்லிம் அமைச்சர்களை, ”பள்ளிவாசல் உடைக்கப் படுகின்றது எனபது வெறும் பொய்ப் பிரச்சாரம்”  என்று கூற வைக்கப்ட்டுள்ள நிலையில், அவர்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குகள்  முஸ்லிம்களின் நிலையை அதளபாதாளத்தில் கொண்டு போய்விடும். அத்தோடு நமது பிரச்சினை சர்வதேச மட்டத்தில் கவனத்தில் எடுக்கப்படாது நீர்த்துப் போய்விடும் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். அதன் பின்னர் முஸ்லிம்களைக் காக்கவும் ஆளிரா தூக்கவும் ஆளிரா? 

அரசின் கண்டுங்காணா மனப்பான்மையை மாற்றுவதற்கும், அவர்களது போக்கை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் சந்தர்ப்பமாக இந்த தேர்தல்களை முஸ்லிம்கள் பார்க்க வேண்டும். இரண்டு வருடங்களாகப் பற்றி எரிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மதவிரோத தீயை அணைப்பதா, அன்றி நமக்கு இனி  விடிவு வரும் என எண்ணெய் வார்ப்பது போன்று அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதா என்பதே முஸ்லிம்கள் முன்னுள்ள கேள்வி. 

”எந்த ஒரு சமுதாயத்தவரும் தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக , அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லலை” -  அல்குர்ஆன் 13:11

Tuesday, September 10, 2013

இலங்கையில் எதிர்க்கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமைப்பாடு உண்டு

Commented by nizamhm1944 on:  Lankamuslim.org  at: http://tinyurl.com/o5u5k7t

இலங்கையில் எதிர்க்கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமைப்பாடு உண்டு

மிகச் சிறந்த சிந்தனை. 

எதிர்க் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்கு மேலான காரணமும் உண்டே!  அது, ஆட்சியிலிருக்கும் கட்சியினருக்கு அவர்கள் தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்துகொண்டு, தமது போக்கில் மாறதல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஞாபகமூட்டலாகவும் இருக்கும். 

இந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோற்பதனால் அவர்களுக்கு எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. அடுத்த பொதுத் தேர்தலில். மொத்தமாக மண்ணைக் கௌவும் நிலை ஏற்படாதவாறு தம்மைக் காத்துக் கொள்ள அவர்களின அதிகார பலம் என்ற தூக்கத்தில் இருந்து விழி்ப்படையச் செய்யும். 

அத்தோடு முஸ்லிம், கட்சிகளுக்கும் மக்கள் தமது வாக்குகளை அளிக்கக்க கூடாது என்பதற்கு வேறு காரணங்கள் இருப்பினும் முக்கியமான காரணமாக, மேற்கண்ட தீர்மானத்துக்ககு முரண்பட்டதாக மாறிவிடும். 

மேலும், அண்மைக்கால வரலாறுகள், முஸ்லிம் கட்சிகள் முழமையாக அரசைச் சார்ந்து விட்டமையால், அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் இன்னொரு வகையில் ஆளும் கட்சியை பலப்படுத்தும் வாக்குகளாகவே மாறும்.  தமிழ்க் கட்சிகளுக்கும் இது பொருந்தும். 

மேலும் சிறுபான்மையினரைப் பொறுத்து, தற்போது நடந்து கொண்டிருக்கும் மதவிரோத. இனவிரோதக் கருத்துக்களுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பாக இத்தேர்தல் பயன்படுத்தப் படாவிடில், இதுவரை நடந்து கொண்டிருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் சிறுபான்மை மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டது போலவும், இதுவரை தமக்கு எவ்வித அநீதியும் நடைபெறவில்லை என்பதை வெளிப்படுத்துவதுமாகவே இருக்கும்.  

அத்தோடு, மாகாண அடிப்படையில் சிந்திக்கும் போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம்  பரவலாக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் ‌முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கபப்படாத நிலையில் உள்ள அதிகாரங்களும் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பிராந்திய நலனுக்கு ஊறுவிளைவிப்பதாகும்.  

ஆளும் கட்சியே மாகாணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதால்,  அதிகாரங்கள் குறைக்கப்படும் போது அவை வாளாவிருக்கின்றன அல்லது தமது அங்கீகாரத்தை வழங்கி விடுகின்றன. இது ஓர் அபாயகரமான சூழலை உருவாக்கி உள்ளது. 

எல்லாவற்றில் இருந்தும் மீள, தற்போதைய நிலையில், பிரதான எதிர்க் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும். அதுவே நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் செய்ய வேண்டியதுமாகும்.