Tuesday, May 7, 2013

விகாரை விசேட பூஜை வழிபாட்டில் ஆஸாத் சாலியின் குடும்பம் !!


Lankamuslim.org
One World One Ummah

விகாரை விசேட பூஜை வழிபாட்டில் ஆஸாத் சாலியின் குடும்பம் !!


இது ஒன்றும் நம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாழ்வில் புதிய ஒன்றல்ல. மிகப் பிரபலமான அரசியல்வாதிகள் இப்படி மலர்த்தட்டை ஏந்தி விகாரை களில் பூஜை களில் கலந்து கொண்டுள்ளமை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தே இருக்கின்றன.  

இப்படித்தான் நம் மத்தியில் இஸ்லாம் பேணப்படுகின்றது என்பதனால்தான் இத்தனை சோதனைகளும் வந்து கொண்டிருக் கின்றன. இவர்கள்தான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானோ தெரியாது!

புகைப்படம் நிறையவே விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கின்றது. 
mklolo

Monday, May 6, 2013

சிங்களவர்களின் இனப்பெருக்கத்தை தடுக்கவே கருத்தடை ஊசி மருந்துகள் : பொதுபலசேனா


சிங்களவர்களின் இனப்பெருக்கத்தை தடுக்கவே கருத்தடை ஊசி மருந்துகள் : பொதுபலசேனா

பொது பல சேன சொல்வதைப் பார்த்தால், இந்நாட்டில் கருத்தடை மாத்திரைகளோ, ஊசிகளோ இல்லாதது போலவும், கருத்தடைகளே நடைபெறாதது போலவும், யாரோ ஓர் பாகிஸ்தானியர் அவைகளைக் கடத்திக் கொண்டு வந்து சிங்கள மக்களுக்கு கருத்தடை செய்வதாகவும், அதற்கு இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்களே குற்றவாளிகளாகவும் உள்ளது போன்றும் கருத்து வெளிப்படும் விதத்தில் குற்றஞ்சாட்டுகிறார்.
நல்ல காலம் அன்று ETHONOL கடத்தி வந்தது ஒரு முஸ்லிம் பெயருள்ளவராக இருந்திருந்தால், அதுவும் சிங்களவர்களை அழிப்பதற்காக முஸ்லிம்கள் செய்த சதி எனக் கூறியிருப்பார்கள். அன்றேல் மது விற்ப‌னையை முஸ்லிம்கள் செய்திருந்தாலும், அவர்கள்தான் திட்டமிட்டு இவைகளைக் கடத்திக் கொண்டுவரச் செய்திருக்கிறார்கள் எனக் கூறியிருப்பர்.
இனி இந்நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்கள் அனைத்துக்கும் இது போன்ற முலாம் பூசப்பட்டு, முஸ்லிம்கள் மேல் சேற்றைவாரி இறைத்து, இனவிரோத எண்ணங்களை உருவாக்கி, நாட்டின் அமைதிக்கு, சகவாழ்வுக்குப் பங்கம் விளைவித்துக் கொண்டே இருப்பர் இந்த பொது பல சேன.
நாட்டில் குழப்பத்தை, இனங்களுக்கிடையில் விரோதத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது குற்றமென்றால், இவர்கள் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடாது? ஏன் இவ்வமைப்பு தடை செய்யப்படக் கூடாது? என்ற கேள்விகள் மக்கள் மனதில் தோன்றியுள்ளமையை நியாயமானதாகவே கருத வேண்டியுள்ளது.

முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது


தமிழர் பிரதிநிதியாக அறிவுபூர்வமாக, நியாயபூர்வமாக, சகோதர வாஞ்சையுடன் கருத்து வெளியிட்ட சுமந்திரன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

உண்மையில் இது போன்ற சிந்தனைகளாவது, இனச் சுத்திகரிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த அபாக்யவான்களான அப்பாவி வடக்கு முஸ்லிம்களுக்கு, அவர்களது நாட்பட்ட, கால் நூற்றாண்டு ரணத்துக்கு உள்மருந்தாக இல்லாவிட்டாலும், ஒத்தடமாகவாவது அமையும்.

தங்களுக்கு நியாயம் வேண்டும் சந்தர்ப்பத்தில், அதனைப் பெறுவதற்கு தற்போது அன்றைய இனச்சுத்திகரிப்பு பிழையென ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லாது, தமிழர்களுக்குப்பிரச்சினை ஏற்படாதிருந்தாலும், அன்று நடந்தது புலிகளின் அராஜகமே என்பதை, அதைத் தடுத்து நிறுத்தாது, ஏன் என்று கேட்காது விட்டது தமிழர்களின் குற்றமே என்பதை ஏற்க வேண்டும்.

அவ்வினச் சுத்திகரிப்பைத் தமக்குச் சாதகமாகப் பாவித்து, முஸ்லிம்களின் சொத்து சுகங்களைக் கையாடியமை பிழையென்பதும் ஏற்கப்படல் வேண்டும். தற்போதும் அவர்களுக்கு எதிராகப் பேசி, தம்மை வளர்த்துக் கொள்ள, தம்மிருப்பை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் அடிமட்ட அரசியல்வாதிகளுக்கு இதன் பின்னராவது கண்கள் திறக்கட்டும்.

அறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

அறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்

குர்ஆன் முழு மனித குலத்துக்கும் இறக்கியருளப்பட்டது.  அதனை ஏற்று, அறிந்து, அதன்படி நடந்து உய்வடையாது, அதனை எவ்வுருவிலாவது மறுப்போர் நிராகரிப்பாளரே!  

அறிவீனர்களைப் புறக்கணித்துவிடுவீர்களாக 7:99  என்பதும் கூட, அறிவீனர்களில் நான் ஆவதை விட்டும் பா‌துகாப்புத் தேடுகிறேன் எனக் கூறியதை நினைவு கூருமாறு 2:67இல்  பணிப்பதும்  கூட அல்லாஹ்வின் அருள் வாக்கே!

ஈமான் கொள்வதற்கும் அறிதலே அவசியமாகின்றது. அல்லாஹ்வை, வானவர்களை, வேதங்களை, ரசூல்மார்களை, மறுமையை, களா, கத்றை அறியாமல்? ”ஈமான் கொண்டோம்” என்பது கூட அல்லாஹ்மேல் பொய“கூறிய குற்றத்தை வருவிக்குமேயல்லாது, விடிவை ஏற்படுத்தப்ப போவதில்லை.  

கலிமாவில் கூறப்பட்டதை அறியாமல், எப்படி சாட்சியம் கூறுவது? அப்படிக் கூறும் சாட்சியம் ஏற்கப்படக் கூடியதா? அது பொய் சாட்சி சொன்னதாக அமையாதா? இம்மையிலும், மறுமையிலும் தண்டனையைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளதா? 

நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில், தன்னைத் தவிர எதுவுமில்லை என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர் என்ற 3:18 வசனத்தின் மூலம் வெளிப்படுத்தி யதில் இருந்து ,  அல்லாஹ்வை அறிந்து சாட்சியம் கூறுபவன் அறிஞனாகவே இருக்க முடியும் என்பதும், அல்லாஹ்வை யும், மற்றுமுண்டானதையும் அறிதலின் அவசியமும் புலப்படும். 

தொழுகையில் கடமையாக்கிய நினைவுகூர்தலை நிறைவேற்றுவதற்கும்,  நினைவுகூர்வீராக என அடிக்கடி நமக்கு விடுக்கப்படும் அழைப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் பெறப்படுகின்றது. 

அறியாத ஒன்றை நினைவு கூர முடியா‌தென்பதால், அவ்வழைப்பின் மூலம், நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதையும், மறந்திருக்கிறோம் என்பதையு்ம் தெளிவாகவே அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான். அதனால்தான் மனிதர்களை அவன் மறதியாளர் என்றும் அழைக்கின்றான்.  அதனை ஞாபகத்துக்குக் கொண்டு வருவதற்காகவே, நபிமார், ரசூல்மார், வேதங்கள், வேதக்கட்டளைகள் என்றெல்லாம் அனுப்பி நாம் அறிந்திருந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருமாறு தூணடியுள்ளான். இவற்றால்,  அறிதலின் அடிப்படையிலேயே இஸ்லாம் கட்டி எழுப்பப்ப்ட்டுள்ளதை அறியலாம். 

21: 10 - திட்டமாக உங்கள்பால் ஒரு வேதத்தை இறக்கி வைத்தோம். அதில் உங்களுடைய நினைவுகூர்தல் இருக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா? இதுவும் அறிதலை அடிப்படையாகக் கொண“டதே!

அறிவின்றி அல்லாஹ்வின் விடயத்தில் வீண் தர்க்கம் 22:3,8 , அறியாமை காரணமாக மற்றவர்களையும் வழிகெடுத்தல் 6:119 போன்றவை அறிதலை வேண்டி நிற்பதை அவதானிக்கலாம். 

அறிதலின்றேல் இஸ்லாமே இல்லை என்பது மிகை கூற்றல்ல. இதனை வலுப்டுத்த, நபிகளாருக்கே கூறப்பட்டதை அல்லாஹ்வின் வாயால் கேட்போம். 17: 36 - நபியே! எதனைக்  குறித்து உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதனை நீர் பின்பற்றாதீர். மேலாக, அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும் போது பல இடங்களில் யாவும் அறிந்தவன் எனக் கூறியிருப்பது நமக்கு அறிதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்தவல்லது. 

Thursday, May 2, 2013

பொலிசார் கண்டுகொள்ளாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயல்:இளம் வழக்கறிஞர் சங்கம்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

பொலிசார் கண்டுகொள்ளாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயல்:இளம் வழக்கறிஞர் சங்கம்


குற்றச் செயல் ஒன்று பட்டப்பகலில், பகிரங்கமாக, பலரும் பார்த்திருக்க நடைபெறும் போது, தடுத்து நிறுத்தாது பார்த்துக் கொண்டிருப்பது, “சட்டத்தை மீறும் செயல்“ அல்ல. சட்டத்தை மீறியோரைத் தடுத்து நிறுத்தாமை, குற்றச் செயலுக்கு உடந்தையாயிருந்தமை, சட்டத்தைப் புறக்கணித்தமை, கடமை யைச் செய்யத் தவறியமை, பொறுப்பை நிறைவேற்றாமை, உதாசீனம் செய்தமை, இனங்களுக்கிடையே அமைதியின்மை ஏற்படக் காரணமாயிருந் தமை, ஒரு இனம் பாதிப்புக்குள்ளாக உதவியாயிருந்தமை, நாட்டுக்கு அவப்பெயர் உண்டாகக் காரணமாக இருந்தமை போன்ற பல குற்றங்களை உள்ளடக்கிய செயல் என்பதே பொருந்தும். சட்டத்தை மீறவிட்ட செயல் எனவும் கூறலாம்.

ஆனால், பாவம் இந்த போலிஸார், அவர்கள் என்ன செய்வர். ஆட்டுவிப்பவர் ஆட்டுவித்தால் ஆடாதோர் யாரோ? கடமையைச் செய்ய அவர்கள் முற்பட்டால், தண்ணீர் இல்லாத இடங்களில் சேவை செய்ய வேண்டியும் வரலாம்.

Wednesday, May 1, 2013

‘பெசன் பக்’ வழக்கை வாபஸ் பெறச் சொன்னதாக என் மீது பழி சுமத்துகின்றனர்: பைசர் முஸ்தபா



Lankamuslim.org
One World One Ummah

‘பெசன் பக்’ வழக்கை வாபஸ் பெறச் சொன்னதாக என் மீது பழி சுமத்துகின்றனர்: பைசர் முஸ்தபா



குற்றச் செயல் ஒன்று நடை பெற்று பாதிக்கப்பட்டவர் விட்டுக் கொடுப்பதோ, மன்னிப்பதோ ஏற்புடையதே! ஆனால் நாட்டின் சட்டமும், சட்டத்தைப் பாதுகாப்போரும் அதனை விட்டுக் கொடுக்க முடியுமா? 

உதாரணமாக ஒரு கொலை நடந்துள்ளது என வைத்துக் கொண்டால், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர் ஏதோ காரணங்களால், பயமுறுத்தலாகவும் இருக்கலாம், சந்தேகமற்ற அக்கொலையாளியை மன்னிப்பதாகவோ, விட்டு்க் கொடுப்பதாகவோ கூறினால், கொலையாளி விடுவிக்கப்படலாமா! அதனை சட்டம் அனுமதிக்கிறதா?  

குற்றச் செயல் ஒன்றை மன்றுக்குக் கொண்டு சென்ற ‌போலிஸார்,  தமக்குப் போதிய ஆதாரம் இருக்கும் வரை அக்குற்றச் செயலுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை மீளப் பெறாத முடியாதவர்கள் என்ற நிலையில், பாதிக்கப்பட்டவர் விட்டுக் கொடுக்கின்றார் என்பதனால், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால், சட்டமும், அதனைப் பாதுகாப்பவர் நிலையும் பரிதாபத்துக்குரிய நிலை அடையாதா? 

தனிநபர் பதிவு செய்யும் குற்றவியல் வழக்கில், போலிஸார் சம்பந்தப்படாததனால், விட்டுக் கொடுப்புகள் நடைபெற்றால், வேண்டுமாயின், எதிர்த் தரப்பினர் விடுதலை செய்யப்படலாம்.  ஆயினும் அது கூட கோர்ட்டாரின் நேரத்தை வீணடித்த குற்றத்தை வருவிக்கும். 

சட்டமும் ஒழுங்கும் காப்பாற்றப்பட வேண்டுமானால், வழக்கு நடைபெற்று குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட பின்னர், வேண்டுமாயின் அவ்வழக்கை பொது மன்னிப்பு ஒன்றுக்காக சிபாரிசு செய்வது ஏற்கப்பட்ட நியதி. 

குர்ஆனிய சட்டத்தில், நன்மை கருதி பாதிக்கப்பட்டவர் தனக்களிக்கப்பட்ட பழிவாங்கும் உரிமையை விட்டு்க் கொடுப்பது, பாதிப்புக்கு எதிராக உதவி தேடுவதைத் தவிர்ப்பது, மன்னிப்பது, நட்டவீட்டைப் பெற்று விட்டுக் கொடுப்பது போன்றவை ஏற்கப்பட்டு உள்ளன. 

இந்நாட்டின் சட்டத்தில் இதே நடைமுறை உண்டா என்பதை நீதி அமைச்சர் ஒரு நீதித்துறை சார்ந்தவர் என்பதால் விளக்கலாமே! இந்நடைமுறை பேணப்படுமாயின் அது குர்ஆனிய சட்டம் பின்பற்றப்படுவதாகவே அமையும்.  அல்லாஹ் வெகுநுட்பமாக விடயங்களை நடைமுறைப்படுத்தி விடுகிறான். 

இஸ்லாத்தை அழிப்பதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் மூலமே அல்லாஹ் தனது சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளான் என்பது பகுத்துணரத்தக்கது.