Saturday, March 16, 2013
Post-war Sri Lanka marked by "state-sponsored Sinhala Buddhist triumphal...
Dambulla Masjid problem raised Geneva by Christian Organization
Tuesday, March 12, 2013
உள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை பொறிக்கப்படமாட்டாது
Commented by nizamhm1944 on lankamuslim.org
உள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை பொறிக்கப்படமாட்டாது
மிகச் சரியான கருத்து.
முஸ்லிம்கள் இப்போதாவது, குர்ஆன் என்ன கூறியிருக்கிறது என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். முஸ்லிம்களின் வழிகாட்டி குர்ஆனே தவிர வேறெதுவும் இல்லை. முஸ்லிம்களின் பாதுகாவலன் அல்லாஹ்வே தவிர இல்லை. நமது கண்மணி நாயகம் பின்பற்றியதும், அவர்களுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதுகாப்பளித்ததும், அவர்களின் எதிரிகளை அழித்ததும கூட அல்லாஹ்தான் என்பதை நம்ப வேண்டும். அந்த ஈமான நமக்கு வருமாயின் நம்மை உலகில் வெல்ல முடியாது. அவனது சொல்லில் அவர்களே வெற்றியாளர்.
”அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவு படுத்துகின்றான்……“ 6:125
குர்ஆனிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உலகில் யாராலும் இடைஞ்சலையோ, தடையையோ ஏற்படுத்திவிட முடியாது. அப்படியான சட்டங்களையே அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். யாராவது நமக்கு குர்ஆனை நடைமுறைப் படுத்துவதில் இடைஞ்சல் தருகின்றார்கள் என்றால், அது நாம், அதனைச் செயற்படுத்தியதில் ஏற்பட்ட தவறின் காரணமாகவே இருக்க வேண்டும் என்பதை ஏற்று, நமது நடவடிக்கைகளை மீளாய்வு செய்து, உண்மையை உணர்ந்து, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, நமது பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
குர்ஆனியச் சட்டங்கள் முழு மனித சமுதாயத்திற்கும், உலக அழிவு வரை செயற்படுத்தப் படுவதற்காக பூரணத்துவம் பெற்றதாக, தெளிவானதாக, இலகுபடுத்தப்பட்டதாக, நடைமுறைச்சாத்தியமானதாக, நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டதாக, மாற்றங்களை ஏற்படுத்த முடியாததாக, யாரும் பங்களிப்புச் செய்ய முடியாததாக, உதாரணங்களுடன் இலகுவில் விளங்கிக் கொள்ளும் முறையில் அமைக்கப்பட்டதாக, இயற்கையோடு ஒட்டியதாக, அதனை பின்பற்றுவோர் துன்பத்துக்கு ஆளாகாத தன்மை கொண்டதாக, சிரமத்தைத் தராததாக, உய்த்துணர்வோருக்கு படிப்பினைகள், அத்தாட்சிகள் கொண்டதாக, சிந்திப்போருக்கு சிறந்தவற்றை கண்டுகொள்ளக் கூடியதாக, நாம் பின்பற்றுவதால் அடுத்தவருக்கு இடர்பாடுகள் ஏற்படுத்தாததாக ….. அல்லாஹ் நமக்கு அருளி, அவற்றை ஏற்று நடக்கும் தன் அடியார்கள் தன் பாதுகாப்பில் உள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கின்றான். அதனால் அது யாராலும் தடைக்கு உள்ளாக்கப்பட முடியாதது.
மேலாக, இந்த மார்க்கத்தைக் காப்பது தனது கடன் என 15:9 வசனத்தில் கூறியபடி தனது மார்க்கத்தைக் காத்துக் கொண்டான். “நிச்சயமாக நாமே இவ்வேதத்தை – நினைவூட்டலை – இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்.“ அல்லாஹ்வை எவரும் இயலாமல் ஆக்கிவிட முடியாது என்பதையும் வெளிப்படுத்திவிட்டான்.
நல்லவை போல் தெரிவதில் தீமையையும், தீமை போல் தெரிவதில் நன்மையையும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருப்பதை அறிவோர், அவனது நுண்ணறிவை, அவன் காரியங்களை செயற்படுத்துமாறைக் கண்டு கொள்வர். அவன் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் புகுத்துபவனல்லவா!
“என்னையும் உங்களோடு சேருங்கள்!” பொது பல சேனாவிடம் ஒரு கோரிக்கை.
Commented by nizamhm1944 in lankamuslim.org
“என்னையும் உங்களோடு சேருங்கள்!” பொது பல சேனாவிடம் ஒரு கோரிக்கை.
கூறப்பட்ட பெரும்பான்மை விடயங்கள் பௌத்த தர்மத்துக்கு ஏற்ப செயற்படுத்தப்படுமாயின், அவை இஸ்லாமிய போதனைகளைச் செயற்படுத்தியதாகவே இருக்கும்.
ஆனால், மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், உலகின் சமநிலை பாதிக்கப்படாமலும் இருப்பதற்காக ஆகுமாக்கப்பட்ட உயிரினங்களைக் கொல்வதைத் தடை செய்தல், தாவர உணவை மட்டுமே உண்ணல் என்ற மனித தத்துவம், குர்ஆனை மீறுவதோடு நின்று விடாமல் இந்நாட்டையே அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும். சொல்லொணா துன்ப, துயரங்களை விளைத்து மனித வாழ்வையே கேள்விக் குறியாக்கிவிடும். நடைமுறைச் சாத்தியமற்றது. காரணம் இயற்கை தன் இரும்புக் கரங்கைள நீட்டி வரட்சியை, அல்லது வேறு வகையில் தாவரங்களுக்கு அழிவை ஏற்படுத்திவிட்டால் அச்சமயத்தில் உண்பதற்கின்றி நாமும், கால்நடைகளும் கூட உயிரையே விடவேண்டி வரும். உயிரினங்கள் கொல்லப்படாத நிலையால், அல்லது அவைகளின் இறப்பால், இயற்கை சமநிலையில் ஏற்படும் மாற்றத்தை, அபாயத்தை சிந்திப்போர் உணர்ந்து கொள்வர். இது பற்றி விரிவாக எழுத இது இடம் அல்ல.
ஹலால் சான்றிதழ் வழங்கல் குர்ஆனிய நடைமுறை அல்ல. ஆயினும், அது இஸ்லாமிய ஸ்தாபனமாகக் கருதப்படும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதனை வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க நடைமுறைப்படுத்தி வந்ததாகக் கூறுகிறது. அதனால், ஹலால் முத்திரை பொறித்தலை இஸ்லாமிய செயற்பாடாகக் கருதி, தடை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொது பல சேனா செயற்பட்டது. தற்போது அதனைத் தடைக்கும் உள்ளாக்கி விட்டது. எந்த ஒரு நல்ல விடயம் உலகில் யாரால் செயற்படுத்தப்பட்டாலும், அது இஸ்லாம் கூறிய செயற்பாடாகவே இருக்கும்.
அந்த வகையில், தற்போது, மது, விபச்சாரம், சூது, சிறுவர் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், ஆபாசமான மானத்தை மறைக்கா ஆடை போன்ற இன்னோரன்னவற்றைத் தடை செய்வதை நடைமுறைப்படுத்தி பௌத்த தர்மத்தை காப்பதில் பொது பல சேனா ஈடுபட்டால் (ஈடுபடவே வேண்டும்), அந்த நடைமுறை, அவை குர்ஆனிய கருத்துக்களை செயற்படுத்திய தன்மையையே வெளிப்படுத்தும் இந்நிலை ஏற்படுமாயின் இந்நாடு இஸ்லாமிய நாடு போன்று ஒழுக்க சீலங்களையே கொண்டிருக்கும். அச்சந்தர்ப்பத்தில் பொது பல சேனா, இவை “இஸ்லாமியச் சட்டங்கள்“ அல்லது 'இஸ்லாமிய நாடு' போன்றுள்ளது என அவற்றை நிராகரிக்கப் போகின்றதா! அவர்களின் பெளத்த போதனைகளைச் செயற்படுத்தாமல் விடப் போகின்றதா?
Sunday, March 10, 2013
Saturday, March 9, 2013
அரசையும் வர்த்தகர்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள பொது பலசேனா
Comment of nizamhm1944 on Lankamuslim.org
அல்லாஹ் பொய்களின் மேல் உண்மையைப் போட்டுவிடுகிறான்.
Friday, March 8, 2013
Paristamil Tamil News - ஹூகோ சாவேஸின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Paristamil Tamil News - ஹூகோ சாவேஸின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
End of a Saga. World lost the great two leaders Gadhafi and Hugo.
End of a Saga. World lost the great two leaders Gadhafi and Hugo.
Thursday, March 7, 2013
போப் இராஜினாமா - மறைக்கப்பட்ட உண்மைகள்
Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
போப் இராஜினாமா - மறைக்கப்பட்ட உண்மைகள்
இஸ்லாமியருக்கு, தம்மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு இப்படியான ஓர் ஆய்வு தேவைதானா? கத்தோலிக்க உயர்பீட, ஆத்மீக தலைவர் போப்பாண்டவர் அவர்கள் பதவி விலகியதில் மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டென அறிவதிலும், அது பற்றி எழுதுவதிலும் இஸ்லாமோ, இஸ்லாமியரோ, அன்றி கத்தோலிக்கரோ கூட என்ன நன்மையை அடைந்துவிடப் போகிறார்கள்?
எதில் நமக்கு தீர்க்கமான ஞானம் இல்லையோ அதில் தீர்ப்புக் கூற முனைவதும், எவனோ ஒரு தீயவன் (பததிரிகைகள்) கொணர்ந்த செய்தியை வைத்துக் கொண்டு, ஓர் மதத் தலைவரது பதவி விலகலில் மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டு எனக் கூறுவதும், துருவித் துருவி ஆராயாதீர்கள் என்ற குர்ஆனிய அறிவித்தல்களை மீறுவதாக மாறிவிடும். புறம் பேசிய குற்றமாகவும் ஆகிவிடும்.
மேலும், தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்து கொடுக்கப்பட வேண்டுமே தவிர, யாரோ எழுதியதை வைத்துக் கொண்டல்ல. அதுவும் தீர்ப்புக்காக அவை நம்மிடம் வந்திருக்க வேண்டும். அல்லாஹ் பொய்களுக்கு மேல் உண்மையை போட்டுவிடுகிறான் என்றே கூறகிறான். மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவதனுள் இந்நடவடிக்கை அமையாது, தேவையற்ற பிரச்சினைகளையே உருவாக்கும்.
மேலும், போப்பாண்டவர் இஸ்லாம் பற்றிக் கூறிய கருத்துக்கள் வெளிப்படையாக இஸ்லாத்துக்கு ஆதரவானது போல் தோற்றமளித்தாலும், குர்ஆன் அதிகமன இடங்களில் கூறிக் கொண்டிருக்கும், இந்த குர்ஆனை பெரும்பான்மையானோர் ஏற்க மாட்டார்கள் என்ற கருத்துக்கு எதிரானதே!
கத்தோலிக்கர் புரியாததேனோ என்ற கேள்வியை எழுப்பு முன், குர்ஆன் கூறும், “வழிகாட்டல் அல்லாஹ்விடம் இருந்தே தவிர இல்லை“ என்பதை அறியதாததேனோ?
யேசு நாதர் பிறப்பு பற்றிய செய்திகள் அதிகமானோர் கத்தோலிக்கர்அறிந்த செய்திகளே. அவரது பிறந்த திகதியும் கூட திருச்சபை அக்காலத்தில் தீர்மானித்ததே தவிர யாதார்த்தமல்ல. அந்த உண்மையைத்தான் அவர் கூறினார். அதில் புரட்சி எதுவுமில்லை. ஆதலால் அவை எல்லாம் அவருக்கு எதிர்புண்டானது என்று கூறுவதற்கான காரணமாகிவிடாது.
மொத்தத்தில் மறைந்துள்ள, பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட குர்ஆனியக் கருத்துக்களை மக்கள் முன் வைப்பதை விடுத்து, அடுத்த மதத்தவர்கள் பற்றிய ஆராய்வில், விமர்சனத்தில எவ்வித பயனையும் முஸ்லிம்கள் அடையப் போவதில்லை.
குர்ஆனிலுள்ள நல்ல கருத்துக்கள் வெளியானால், அல்லாஹ் நாடினால் இஸ்லாமியரும் இஸ்லாமல்லாதவருங்கூட வழிகாட்டப்படுவர்.

Subscribe to:
Posts (Atom)