Wednesday, March 6, 2013

யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளை நோர்வே தூதுவர் சந்திப்பு

Commented by nizamhm1944 on Lankamuslim.org

யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளை நோர்வே தூதுவர் சந்திப்பு


// புலிகள் விட்டுச் சென்ற பொழுது நல்ல நிலையில் இருந்த வீடுகள், இராணுவ கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த நிலையிலேயே சூறையாடப் பட்டன. வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், நிலைகள், கூரைகள், கல்லுகள் என அனைத்தும் சூறையாடப்பட்டு, சோனகதெரு மயானம் போன்று காட்சியளித்தது. //

மேற்கண்ட கூற்றின்படி, இராணுவமே ‌முஸ்லிம்களின் சொத்துக்களின் அழிவுக்குக் காரணம் என்ற கருத்தைத் தருகின்றது.

 // யாழ்ப்பாணம் சொனகதேருவிற்கு இந்த நிலைமை ஏற்பட யார் காரணம் என்று அயல் பிரதேச தமிழர்களை விசாரித்ததில், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சில முஸ்லிம்கள், தமிழ் கூலித் தொழிலாளிகளைக் கொண்டு வீடுகளை இடித்து, கட்டிடப் பொருட்களை செம்மாதெரு வீதியில் போட்டு விற்றதாக அறிய முடிகின்றது.//

இப்பந்தி, யாழில் ஆதியில் மீள்குடியேறிய சில முஸ்லிம்களைக் குற்றவாளிகளாகக் காட்டுகின்றது.  ஆனால், இந்தச் செய்தியில் உள்ள உண்மைகள் தீர்க்மானவை அல்ல. அவை யாரோ சில அயலூரவர் கூறியதாகக் கூறுகிறது.  இவ்வாறான வதந்திகளை, ஆதாரமற்ற ‌குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகம் பாதிக்கப்பட்ட, இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்ட விடயத்தை விமர்சனம் செய்ய, மதிபீடு செய்ய முனைவது, எரிகிற வீட்டிற்கு எண்ணெய் ஊற்றியதையே ஒத்தது. மொத்ததில், உங்கள் கருத்தின் சாராம்சம்,  புலிகள் யாழ் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை என்பதாகின்றது. இதன் மூலம் தாங்கள் எதைக் கூற விழைகிறீர்கள் என்பதுதான புரியாத புதிராகவுள்ளது.

தாங்கள் கூறுவது உண்மையென்றால், 1990இல் யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 1995வரை புலிகளின் ஆட்சியில் யாழ்ப்பாணம் இருந்தபோது முஸ்லிம்களின் சொத்துக்கள் அப்படியே இருந்ததென்றால், பின்னர், 1997இல் முஸ்லிமகள் 19 பேர் கொண்ட குழு அங்கு சென்ற போது அனைத்தும் நல்ல நிலையில் இருந்திருந்ததென்றால், அதனை காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் முஸ்லிம்கள் அக்கறை எடுக்காத‌தேன் என்ற கேள்வியும் எழுகின்றது.

1990முதல் 1997 வரை யாழ் முஸ்லிம்களின் உடமைகள் அப்படியே இருந்ததென்பது கோமாளித்தனமாக, முரண்பாடாக,   உள்ளெண்ணத்தோடு எழுதப்பட்டதாக இல்லையா!

மேலும், புலிகள் முஸ்லிம்களை விரட்டிய பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்களைப் பகிரங்க ஏலத்தில் விற்று விட்டதாக அப்போதைய செய்திகள் தெரிவித்திருந்தமை பற்றி என்ன கூறுவீர்கள்?

சட்டம் ஒழுங்கை மீறிய பொலிஸார் பணி நீக்கம்


சட்டம் ஒழுங்கை மீறிய பொலிஸார் பணி நீக்கம்

Commented by nizamhm1944 on Lankamuslim.org
வரவேற்கப்பட வேண்‌டிய விடயம்.
இந்த செய்தி, அந்த போலிஸ் அதிகாரிகள் மட்டும்தானா இந்நாட்டின் சட்டத்தை மீறியிருக்கின்றார்கள்? என்ற கேள்வியை தானாகவே எழுப்புகின்றது.
உண்மையில் பொலிஸார்தான் ஒரு நாட்டின் சட்டம், ஒழுங்கை காப்பதற்காக உரிமையளிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் கடமைகளை ஒரு இடைஞ்சலும், இடையூறும், இடையீடுமினறிச் செய்தால், நாடு சுபிட்சப் பாதையில், அமைதியாக, பயங்கள், சந்தேகங்கள் இன்றி வீறு நடை போடும்.
போலிஸாரும் தமக்களிக்கப்பட்ட கடமையினை நிறைவு செய்யும் வகையில் நடக்க வேண்டும், அரசியல் செய்வோரும் பிரஜைகளும், அவர்களைச் சதந்திரமாகச் செயலாற்றி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

Tuesday, March 5, 2013

பொது பல சேனவிற்கு தலைமைத்துவ நிறுவகம்; கோட்டா திறந்துவைப்பார்


Commented by nizamhm1944 on:


Lankamuslim.org

பொது பல சேனவிற்கு தலைமைத்துவ நிறுவகம்; கோட்டா திறந்துவைப்பார்




Teachings of the Buddha

Some of the fundamentals of the teachings of Gautama Buddha are:

* The Four Noble Truths: that suffering is an inherent part of existence; that the origin of suffering is ignorance and the main symptoms of that ignorance are attachment and craving; that attachment and craving can be ceased; and that following the Noble Eightfold Path will lead to the cessation of attachment and craving and therefore suffering.

* The Noble Eightfold Path: right understanding, right thought, right speech, right action, right livelihood, right effort, right mindfulness, and right concentration.

* Love. The Buddha stressed the importance of calming the mind and seeking the peace that each individual has within. With this inner peace, we can react to awkward situations with love, compassion and generosity.

Conquer the angry man by love.
Conquer the ill-natured man by goodness.
Conquer the miser with generosity.
Conquer the liar with truth.

The Dhammapada

* Power of the Mind. The Buddha taught it is our own mind which creates our own suffering, but also we can use this power to create happiness.

"Your worst enemy cannot harm you as much
as your own unguarded thoughts."

- The Buddha

"All that we are is the result of what we have thought.
If a man speaks or acts with an evil thought, pain follows him.
If a man speaks or acts with a pure thought,
happiness follows him, like a shadow that never leaves him. "
- Lord Buddha

From Net.

பொது பல சேனாவின் நடவடிக்கையினால் ஆளுங்கட்சியே அச்சப்பட வேண்டும்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

பொது பல சேனாவின் நடவடிக்கையினால் 
ஆளுங்கட்சியே அச்சப்பட வேண்டும்

பொருள் ஒன்று பார்வை பல.  ஒரு பொருளைப் பார்க்கும் பல்வகை யானோர், ஒவ்வொருவரும் தத்தமது, தேவை, கொள்கை, எண்ணம், சிந்தனை, அறிவு, அனுபவம் போன்ற இன்னோரன்னவற்றின் அல்லது ஏதோவொன்றின் தாக்கத்திற்கேற்ப தமது கருத்தை வெளியிடுவர்.

அப்படியான வெளிப்பாடுகள் பொதுவான, முழுமையான ,அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான உண்மைகளை வெளிப் படுத்துவதில்லை.  தனிநலம் சார்ந்ததாக, சில உண்மைகளை உள்ளடக்கி யதாகவே இருக்கும்.  அதனால் தீர்வுகள் முழுமையாக, நிரந்தரமாக எட்டப் படுவதில்லை. சில காலத்தில் செல்லாத் தன்மையை எட்டி விடும்.

பொ ப சே யின் நடவடிக்கைகளால் ஆளுங்கட்சி அச்சப்பட வேண்டும் என்பதில் சில உண்மைகள் உள்ளதாயினும், தமிழ், முஸ்லிம்கள்கள் அச்சப்படத் தேவையில்லை என்பது பொருத்தமற்றது.  வீடு பற்றி எரியும் போது வீட்டுக்காரன்தான் பயப்பட வேண்டும் என்பதல்ல, வீடுகளையுடைய அனைவரும் பயப்படத்தான் வேண்டும்.

அமைதிக்குக் குந்தகம், சட்டம் ஒழுங்கு மீறப்படும் பயங்கரம், நாட்டின் யாப்பே கேள்விக்குள்ளாக்கப்படுவது போன்ற சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட் டோருக்கு மட்டும் பாதிப்பு, அச்சம் ஏற்படுவதோடு நின்றுவிடுவதில்லை, அமைதி விரும்பும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பாரிய அழுத்தத்தை அவை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நாட்டில் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக இனி நாமே செயற்படுவோம் என ஒவ்வொருவரும் தான்தோன்றிகளாக, தடி எடுத்த தண்டல்காரராக வெளிப்பட்டால், அரசு மட்டும்தான் கவலைப்படுமா அல்லது அமைதி விரும்பும், சட்டத்தை மதிக்கும், தேசப்பற்றுள்ளோர் கலவரமடைய மாட்டார்களா???

Monday, March 4, 2013

நாட்டின் உத்தியோகபூர்வமற்ற போலிஸ் நாமே !

nizamhm1944 commented on Lankamuslim.org
ஒரு நாட்டின் சடடத்தை மதித்துப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள பிரஜையினதும் தலையாய கடமை.
அதற்காக நாம் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் எனக் கூறிக் கொள்ளவோ, பொலிஸார் சட்டபூர்வமாகச் செய்வதை, தாம் தான்தோன்றித்தனமாகச் செய்ய முற்படுவதோ, நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் சீர்குலைத்துவிடும்.
பொலிஸாருக்குக்கூட ஒரு பிரஜையைக் கைது செய்ய, விசாரணை நடத்த சில விதிமுறைகள் உண்டு. போலிஸாரின் வேலையைச் செய்ய முற்படுவது ஏதோ ஒன்றின் வேலையை இன்னொன்று செய்ய முற்பட்ட கதையாகிவிடும்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடிப்பது என இந்த அத்துமீறலைத்தான் கூறுவர். இறுதியாக அரசின் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுப்பது மடடுமல்ல, தாம் தான் உதியோகபூர்வமற்ற பொலிஸ எனக் கூறுவதன் மூலம், புலிகள் எதனைச் செய்தார்களோ? இப்போதும் செய்து கொண்டிருக்கின்றார்களோ அதனையே செய்ய முயல்வதாகவே முடியும்.
இந்நிநலை ஒரு நாட்டின் சீரான ஆட்சிக்குக் குந்தகம் விளைவிப்பதே என்பதால் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

Paristamil Tamil News - உலகத்தை உலுக்கியிருக்கும் பாலகன்

Paristamil Tamil News - உலகத்தை உலுக்கியிருக்கும் பாலகன்


காட்டுமிராண்டிப் புலிகளால், காரணமின்றி சுட்டுத்தள்ளப்பட்ட பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  நூற்றுக்கும் அதிகமானோரில் கணிசமான அளவு சிறுவர்களும் இருந்தார்கள்.  அது இத்துனை காலமும் ஒருவர் கண்ணிலும் கருத்திலும் படாதிருந்து வருவதும்,  உறுத்தாது இருந்து வருவதும், முஸ்லிம் குழந்தைகள் என்பதாலா? அந்தக் குழந்தைகளின் உயிருக்கு மட்டும் உங்கள் அகராதியில்  மதிப்பே கிடையாதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

பாலச்சந்திரன் பற்றி பல்வேறு வியூகங்களை உருவாக்குவோர், கிழக்கின் காத்தான்குடிப் பள்ளிவாசலில் பிரபாகரனால் உண்மையாகக் கொன்றொழிக்கப்பட்ட சிறுவர்களின் படுகொலை பற்றி சிந்திக்காததேனோ!

Sunday, March 3, 2013

Paristamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்

Paristamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்

இறையருள் நிரவிக் கிடக்கும் ஒலிவம், மாதுளை, அத்தி, திராட்சை போன்ற கனிகளில், மிகக் குறைந்த விலையில், அனைவரும் உண்ணக் கூடியதாக, எளிதில் கிடைப்பதாக இருக்கும், பேரீச்சைக் கனியைப் பற்றிய தகவல்கள் வழங்கியமை மக்களுக்கு மிகப் பெரும் நன்மை பயக்கக் கூடியது.