Tuesday, August 26, 2014

:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக? ஒரு விளக்...

:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக? ஒரு விளக்...: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்படுகின்றது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி..



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதில் கூறப்பட்டவைகளில் பெரும்பாலானவ அப்பட்டமான உண்மைகளே!  ஆனால், அணுகுமு‌றையில் சரியான
‌பே்ாக்கு கடைப்பிடிக்கப்படுவது, இந்த தளத்தின் நோக்கம் மக்களைச் சென்றடையக் கூடியதாக
அமையும். அப்படி இல்லாதவிடதது
, இது சிலருக்குக் கேவலத்தை ஏற்படுத்துவதுடன் தனது கடமையை முடக்கிக்
கொள்ளும்.

உண்மையில் மக்கள் புகட்டப்படுவதன் மூலமே இது போன்ற சீர்கேட்டைக் களைய முடியும்.
அனவரும் வாசிக்கக் கூடிய தரத்தில் ஆக்கங்கள் வெளிவருவது நன்மை பயக்கக் கூடியது. மிகச்
சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களையும்படிதான் அல்லாஹ் கூறியுள்ளான். பொய்யின் மேல்
உண்மையைப் போடுங்கள்
, பொய் தானாக அழிந்து விடும். பொய் இதுவரை எதனையும் செய்ததில்லை. இனியும் செய்யப்
போவதில்லை என்பது இறைகூற்று.

மார்க்கம் அல்லாஹ்வின் பதுகாப்பிலுள்ளதால் எவரும் மார்க்கத்தை அழித்துவிட முடியாது.
மார்க்க விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஃமீனுடையதுமாகும். அல்லாஹ்
குர்ஆனைக் கொண்டே கடுமையாக முயற்சிக்கும்படி கூறுகின்றான்.

குற்றவாளிகளைத் தண்டிக்கும் உரிமையை நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அது நாம்
அல்லாஹ்வுக்காக அவனது பணியைச் செய்வதில் நமக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். அவர்கள்
ஒருவித குற்ற்ததைச் செய்கிறார்கள் எனக கூறும் நாம் இன்னொரு வகையான குற்றச் செயலில்
ஈடுபட்டு விடும் நிலைமையே இன்று முஸ்லிம் தஃவாப்பணி எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட அனைத்துப்
பிரிவுகளிலும் புரையோடிப் போயுள்ளது.

நாம் நடுநிலையுள்ள சமுதாயமாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என அல்லாஹ் தன் அருள் மறையில்
கூறியிருப்பதற்கு ஒப்பவும்
, தீர்ப்புக்கள் யாவும் அல்லாஹ்வுடைய குர்ஆனில் இருந்து மாத்திரமே
கொடுக்கப்படல் வேண்டும் என்பதற்கொப்பவும் நமது செயற்பாடடை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்



No comments: