Sunday, August 4, 2013

ரம்ஜான் திருநாள்: போப்பாண்டவர் வாழ்த்து செய்தி!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/qc9v3vo

http://berunews.wordpress.com/

ரம்ஜான் திருநாள்: போப்பாண்டவர் வாழ்த்து செய்தி!

The Greeting Message of the Highly Respected Pope is exposes the reality and requests those concerned to avoid such inferior activities, which has to be followed by all to have a peaceful world. Congratulations !

கண்டி: பிரிட்டிஷ் இராணுவ சிப்பாய்களின் கல்லறையை அகற்றுவது தொடர்பில் விவாதம் ?

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/o7f5xrq

 Lankamuslim.org
One World One Ummah

கண்டி: பிரிட்டிஷ் இராணுவ சிப்பாய்களின் கல்லறையை அகற்றுவது தொடர்பில் விவாதம் ?

ஒரு நாடு பற்றிய நல்லெண்ணத்தை அந்நியர் மத்தியில் உருவாக்குவதற்கு அங்கு அமைந்துள்ள நினைவுச்  சின்னங்கள், அந்நாடு பிறரையும், வரலாறையும், மதித்துப் பாதுகாத்துவரும் பண்பாடும் தாராளத் தன்மையும் போன்றவை பெரும் பங்கை ஆற்றவல்லன. 

அவைகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கை எடுப்பது நாட்டிற்கு அபகீர்த்தியையும்,  இந்நாட்டில் அமைந்துள்ள தங்கள் நாட்டைப் பிரதிபலி்க்கும் சின்னங்களைப் பார்வையிடுவதற்காகவே இந்நாட்டைத் தரிசிப்போரின் வரவையும் இல்லாதொழித்துவிடும்.  அதன் மூலம் பெறப்படும் வருவாய் இழக்கும். உல்லாசப் பயணத்துறை வீழ்ச்சியடையும்! என்பதை எல்லாம் அறியாமல் நடவடிக்கைகளை எடுப்பது அவ்வளவு நல்ல போக்கல்ல. 

பிக்குகளின் காவியுடையை கழற்ற மாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் – பிரதமர்!

Commented by nizamhm1944 on:    http://tinyurl.com/lejt4a7

http://berunews.wordpress.com/


பிக்குகளின் காவியுடையை கழற்ற மாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் – பிரதமர்!

A timely action and very good move from the veteran politician, Prime Minister of this country to avoid calamities created in this Island and disrepute to the 2500 old Buddha Dharma and its holy yellow robe  by few disgraceful Theros.  Congratulations! 

Saturday, August 3, 2013

அனுமதி பெறப்படாத பள்ளிவாசல்கள் தொடர்பிலேயே பிரச்சினைகள் உருவாகின்றன – மஹிந்த!

Commented by nizamhm1944 on:..http://tinyurl.com/lzwqka9

http://berunews.wordpress.com/

அனுமதி பெறப்படாத பள்ளிவாசல்கள் தொடர்பிலேயே பிரச்சினைகள் உருவாகின்றன – மஹிந்த!

நல்ல ஆலோசனையை கூறியுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள். அதன் மூலம் மஹிய்ஙகனையிலும் பள்ளிவாசல் ஒன்று இருக்கின்றது. ஆனால் அது உரிய அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி யுள்ளார். அந்த வகையில் ஜனாபதிபதி பாராடடுக்கு உரியவர். காரணம் அங்கு பள்ளிவாசலே இருக்கவில்லை என்றல்லவா ஊடகஙக்ள் மூலம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர்! 

ஆனாலும், பள்ளிவாசல் ஒன்று மெத்தனத்ததால், அல்லது நயவஞ்சகத் தனத்தால் பதிவு செய்யப்டவில்லை என்ற காரணத்தைக் கொண்டு மாகாண அமைச்சர் ஒருவர் அதனை மூடுமாறு பணித்துள்ளமைதான் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  இக்கோட்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயன்றால் நாட்டில் பல மதத் தாபனங்கள் மூடுவிழா வைச் சந்திக்கும்.  

பதிவுகள் பெற்றிராத அனைத்து வணக்க ஸ்தலங்களுக்கும் ஒரு காலக்கெடு வைக் கொடுத்து, அவற்றைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். அத்தோடு தற்போது வணக்கஸ்தலங்களாக இருப்பவற்றை,  பதிவு செய்வ தில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக் குக் கட்டளை பிறப்பிக்கலாம். அல்லது ஒரு கமிட்டியை நியமித்து எங்கெல் லாம் பதிவ செய்யப்படாத வணக்கத் தலங்கள் உள்ளன எனக் கண்டுபிடித்து, அவைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் மதவிரோத சக்திகளால் ஏற்படுத்தப்படும் அநாவசியப் பிரச்சினை களை, அமைதியின்மையை. இனமுரண்பாட்டை இல்லாதொழிக்கலாம்!

மஹிந்தவின் இப்தாரில் சுவாரசிய சம்பவங்கள் – முஸ்லிம் அரசியல்வாதிகள் திரண்டுவந்து பங்கேற்பு!


Commented by nizamhm1944 on:. http://tinyurl.com/m9rkwus

http://berunews.wordpress.com/

மஹிந்தவின் இப்தாரில் சுவாரசிய சம்பவங்கள் – முஸ்லிம் அரசியல்வாதிகள் திரண்டுவந்து பங்கேற்பு!

பூசி மெழுகும் .. சி வேலையைத் தற்போது அரசியல்வாதிகளிடம் இருந்து ஜம்இய்யத்துல் உலமா கடன் வாங்கிக் கொண்டதா? அன்றி குத்தகைக்கு எடுத்துள்ளதா! 

மதஸ்தாபனங்களுக்கு ரூபா 25 தள்ளுபடியும், முதலாவது மரணச் செய்தியை அனுப்புவதும்தானா சகல மதங்களையும் சமமாகப் பேணுவது என்ற கோட்பாடு என ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது! 

இந்த ஜம்இய்யத்துல் உலமா எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக் கின்றதோ! நாளுக்குநாள் இந்நாட்டில் அதிகரித்து வரும் இஸ்லாம் மதவிரோதப் போக்கு இந்த உல மா வுக்கு தெரியவில்லையா!  கண்களுக்கு திரையிடப்பட்டுள்ளதா? காதுகளுக்கு அடைப்பான் போடப்பட்டுள்ளதா? இதயத்துக்குப் பூட்டுப் போடப்பட்டுள்ளதா?  

இஸ்லாத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காடைத்தனங் களை இச்சந்தர்ப்பத்திலாவது எடுத்துக் கூறி தடுக்கும்படி கேட்டிருக்க லாமே! நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலையா? 

அன்றி, இந்த நாட்டில் முஸ்லிம்கள்  பூரண சுதந்திரத்துடன் தமது மத அனுஷ்டானங்களையும், தொழிலையும் செய்து வளமாக, அச்சமின்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்று உலமா கருகிறதா? உலகுக்குக் கூற முனைகிறதா? சுத்த முனாபிக்குத்தனம்.

சிங்களபௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளே – ஞானசார தேரர்!

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/pzku5kz

http://berunews.wordpress.com/

சிங்களபௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளே – ஞானசார தேரர்!

தேரர் தனது குறைபாடுகளை, குற்றங்களை மறைத்துக் கொளவதற்காக அவ்வப்போது ஏதாவது கூப்பாடு போட்டுக கொணடிருக்கின்றார். இது ஓர் வகை மனோவியாதியே தவிர வேறில்லை. ஆங்கிலத்தில் இதனைத் தற்போது ISLAMAPHOBIA  என்றழைக்கின்றனர்.  இது, தனது மதத்தைப் பின்பற்றி ஆன்ம உயர்வைப் பெற்றுக் கொள்ளாத தனால் ஏற்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. அக்குறைபாடு தனது மதம் குறைபாடுகளை உடையது. அதனால் அந்த இடத்தை இன்னொரு மதம் பிடித்துக் கொள்ளப் போகின்றதோ என்ற ம‌னப்பயமே! அதனால்தான் இஸ்லாத்தைக் கண்டதும் சிங்கத்தைக் கண்ட கழுதைகள் வெருண்டோடுவது போன்று குழம்பிப் போய் இல்லாததும் பொல்லாததுமான பொய்களை, அவதூறுகளை, குற்றச்சசாட்டுக்களை இஸ்லாத்தின் மீதும், குர்ஆனின் மீதும் சுமத்திக் கொண்டும், தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணமும் உள்ளார். 

நாட்டுக்கு பௌத்தம் மகிந்த தேரரால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை தேரர் அறியாமல் இருந்தால் அதையாவது முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் அவனது தகப்பனாரால் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டு இந்நாட்டை வந்தடைந்தவர்கள் என்பதும் சரித்திரம். இந்த வரலாறாவது தேரருக்குத் தெரிந்திருக்கிறதோ எனத் தெரியவில்லை. 

ஆனால், ஏகதெய்வ வணக்கவாளர்களான இறைநேசர்கள், மனித உருவம் அறுபது அடியாக இருந்த காலமுதல் இந்நாட்டில் வாழ்ந்து மறைந்ததற்கான தடயங்களாக அவர்களின் கல்லறைகள் தற்போதும் காணப்படுகிறது. இஸ்லாம் தளிர்விடும் முன்னரே இங்கு வாழ்நத் இறைநேசர்களின் சந்ததியினரே இங்கு தற்போது முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்போர். மேலும், அராபியர் சிலரினதும், தென்னிந்திய முஸ்லிகளின் வழ்சாவழியினரில் சிலரும் கூட வாழ்கின்றனர்.  

முஸ்லிம்கள் அவர்களது சட்டத்தைப் பேணுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறும் தகுதியை இந்த தேரருக் கொடுத்தது யார்? இது இந்நாட்டின் யாப்பின் மூலம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை. 

பௌத்தம் அரசியல்வாதிகளால் 1972இல் இந்நாட்டின் பிரதான மதமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது என்பதிலிருந்து இந்நாடு எப்போதும் பல்லினம் மக்கள் வாழும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகின்றது. பெரும்பான்மை சமுதாயமாக பௌத்தர்கள் வாழ்கின்றனர் என்ற கருதுகோள், இந்நாட்டில் வேற்று மதத்தவர் வாழக்கூடாது எ்னபதற்கோ, அவர்கள் தமது கலை, கலாசாரங்களை, மதச்சட்டங்களைப் பின்பற்றக்கூடாது என்பதற்கோ கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

இதுவரை இந்நாட்டில் அமைதிக்குப் பங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் செயல்களையும் செய்து, இந்நாட்டின் ஜீவநாடியான அரசியல் யாப்பை அவமதித்துக் கருத்துக் கூறிக் கொண்டும், மிதித்துக் கொண்டும, இனங்களுக்கிடையே பமைமை உணர்வை வளர்த்துக் கொண்டுமிருக்கும் இந்த தேரருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காதிருப்பதேன்? இவரால இந்நாட்டில் ஏற்படவுள்ள அனர்த்தங்களுக்கு அரசும் பொறுப்பை ஏற்கவேண்டியே வரும் என்தை அறியாதிருக்கின்றனரா ஆட்சியாளர்! இவ்வாறான விடயங் களைக் கையாள வேண்டிய பொலிஸார் மௌனம் சாதிப்பதேன்? இக்கேள்விகள் அமைதி விரும்பும் பற்றாளர்கள் மததியில் எழுந்த வண்ணமேயுள்ளது. 

மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்

Commented by nizamhmq944 on :  http://tinyurl.com/kavzocl

Lankamuslim.org
One World One Ummah

மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்

தேரர் செய்யும் பிழைகள் நிரூபிக்கவா வேண்டும்! அவர் உளறிய கருத்துக்கள் மட்டுமே போதும் அவர் கொண்டிருக்கும் புனித பதவியை துறந்து செல்ல. அவர் செய்யம் பிழைகளுக்கு அந்த அப்பாவி காவியுடை என்ன செய்யும்! அதனை தூக்கி எறிவேன் எனக் கூறுமளவுக்கு அக்காவியுடை செய்த பாவமென்ன! 

மஹியங்கனை புனித பூமி, காவியுடை கழற்றி எறியும் இடமல்ல. அது காவியுடை தரிக்க வைக்கும் புனித விகாரை என்பதைக் கூடவா தேர் அறியாமல் இருக்கிறார்!

அமைச்சர் ஹக்கீம் அவர்கள் 21 வருடங்களாக மஹியங்கனையில் பள்ளிவாசல் இருப்பதாகத்தான் கூறினார். 40 வருடம் என்பது தாங்கள் இட்டுக்கட்டிச் சுமத்தும் அபாண்டம். 

இல்லாத பள்ளிவாசலை மூடும்படி உத்தரவிடும் அமைச்சர் பற்றி என்ன கூறுவது. 

அது பள்ளிவாசல் என்பதால்தானே பன்றியின் கழிவுகளை அங்கு வீசினர் கொடியோர். கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பது போல் பன்றியைத் தின்றுவிட்டு கழிவுகளை பள்ளியில் வீசினால் பாவம் தீர்ந்து விடுகிறதா!

பள்ளிவாசல் என்ற ஒன்று அங்கு இல்லாவிடில், ஒருவரைப் பிடித்து அங்கு பள்ளிவாசல் இருக்கவில்லை. எமது குடும்பத்தவர் தொழுமிடமாகவே அதனப் பாவித்தோம் என ஏன் கடிதம் பெற வேண்டும்!

அங்கு பள்ளிவாசல் இல்லாமல் இருந்திருந்தால், மஹியங்கனையில் பள்ளிவாசல் இருந்ததாகப் பதிவு இல்லை என்பதை ஏன் கூறவேண்டும்?  இல்லாத ஒன்றுக்குப் பதிவிராது. பதிவில்லை எனக் கூறின் பள்ளிவாசல் இருக்கிறது என்றுதானே அர்த்தம். 

மேலும், பிறமதத்தவருக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யுமுன் அவற்றில் மூன்று முறை துப்பிய பின்னரே விற்க வேண்டும் எனக் குர்ஆனில் கூறப்படடுள்ளதாகவும், அதன்படியே முஸ்லிம் வியாபாரிகள் செய்வதாகவும் கூறினீர்களே!  அதனை உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால், இவ்வளவு பெரிய அபாண்டத்தை ஒரு மதத்துக்கு மேல் கூறி, மக்களை வழிகெடுத்து, நாட்டில் இன ஒற்றுமையை அழிக்க முனையும் உங்களுக்குப் பொருத்தமான ஆடையைத் தேடுவதுதான தாங்கள்  சார்ந்த தர்மத்துக்கும், மனித சமுதாயத்துக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது.